லேமா குவோபீ

பெண்களின் அறிவாற்றலை, திறமையை அவர்களின் பெருமையை வெளிக்கொணருங்கள்.

1,068,511 views • 14:39
Subtitles in 34 languages
Up next
Details
Discussion
Details About the talk
Transcript 34 languages
Translated by Poongothai Subramanian
Reviewed by Vijaya Sankar N
0:11

பல நேரங்களில் உலகெங்கிலும் பல இடங்களில் நான் உரையாற்ற செல்லும் போது, மக்கள் என்னிடம் பல கேள்விகளைக் கேட்கின்றனர். அவை என் சவால்களைப் பற்றியும், என் தருணங்கள் பற்றியும், என் துயரங்கள் சிலவற்றையும் பற்றியதே. 1998: தனி ஒரு ஆளாக, நான்கு குழந்தைகளுக்கு அன்னையாக, நான் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்த மூன்றே மாதங்களில் உதவி ஆராய்ச்சியாளராக வேலைக்குச் சென்றேன். வடக்கு லிபேரியாவுக்குச் சென்றேன். வேலை செய்யும் இடத்தில் அந்த கிராமத்தில் தங்க இடவசதி செய்து தரப்பட்டது. அந்த இடத்தை நான் ஒரு பெண்மனியுடனும், அவரது மகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.

0:55

அவரது மகள் தான் அந்த ஒட்டு மொத்த கிராமத்திலேயே 9 -ம் வகுப்பு வரை படித்த ஒரே பெண். அவள் கிராமத்தில் ஒரு ஏளனச் சின்னமாக பார்க்கப்பட்டாள். அந்த ஊர்ப் பெண்மணிகள், அவளது அம்மாவிடம் "நீயும் உன் பெண்ணும் ஏழ்மையிலேயே இறந்து போவீர்கள்" என்று கூறினார்கள். அந்த கிராமத்தில் இரண்டு வாரங்கள் வேலை செய்த பின்பு நான் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. அவள் தாய் என்னிடம் மண்டியிட்டுக் கேட்டாள், "லேமா, என் பெண்ணையும் உடன் அழைத்துச் செல்லுங்கள் நான் அவளை ஒரு செவிலியாகப் பார்க்க விரும்புகிறேன்." என்று. ஏழ்மையில் நானும் என் பெற்றோரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிலையில் நான் அதைச் செய்ய இயலவில்லை. என் கண்களில் கண்ணீருடன், நான் "இயலாது" என்று கூறினேன்.

1:45

இரண்டு மாதங்கள் கழித்து, இன்னுமொரு கிராமத்திற்கு அதே ஆராய்ச்சியின் பேரில் சென்றேன். அந்த கிராம மக்கள் என்னை கிராம தலைமை நிர்வாகியுடன் தங்கச் சொன்னார்கள். தலைமை நிர்வாகியான அந்த பெண்மணிக்கு ஒரு சிறிய மகள் இருந்தாள். என்னை போல் நிறமுடையவள். மிகவும் அழுக்கான மேனி. நாள் முழுவதும் அவள் ஒரு உள்ளாடையை மட்டுமே அணிந்து சுற்றித் திரிந்து கொண்டிருந்தாள். நான் "இவள் யார்?" என்று கேட்டதற்கு "இது வேய்" என்று அவர் சொன்னார். அந்த பெயரின் பொருள் பன்றி என்பதாகும். அந்தப் பெண்ணின் அம்மா இவளை பிரசிவிக்கும் போது இறந்து போனாள். இவளின் தந்தை யார் என்பது யாருக்கும் தெரியாது." இரண்டு வாரங்களுக்கு அவள் என் கூட்டாளியானாள். என்னுடன் உறங்கினாள். நான் அவளுக்கு பழைய ஆடைகளைக் கொண்டு வந்து கொடுத்தேன். அவள் விளையாட முதல் பொம்மையைக் கொடுத்தேன். புறப்படுவதற்கு முதல் நாள் இரவு, அவள் என் அறைக்கு வந்து என்னிடம் "லேமா, என்னை இங்கு விட்டுச் செல்லாதீர்கள். நான் உங்களுடன் வர விரும்புகிறேன். நான் பள்ளி செல்ல விரும்புகிறேன்" என்று கூறினாள். பணமில்லாத, ஏழையான, பெற்றோருடன் வசிக்கும் நான் மீண்டும் கூறினேன் "என்னால் இயலாது" என்று. இரண்டு மாதங்கள் கழித்து, அந்த இரண்டு கிராம மக்களும் மற்றொரு போருக்கு உள்ளானார்கள். இந்த நாள் வரை அந்த இரண்டு பெண் குழந்தைகளும் எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது.

2:58

2004-ல் எங்கள் சீர்திருத்தப் பணியில் தீவிரமாக இருக்கும் போது, லிபேரியாவின் மகளிர் பாலின மேம்பாட்டு அமைச்சர் என்னை அழைத்து "லேமா, என்னிடம் 9 வயது சிறுமி இருக்கிறாள். அவளை நீ உன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், இங்கு பாதுகாப்பு விடுதி ஏதும் இல்லை" என்றார். அந்த சிறுமியின் கதை இதுதான்: அந்த சிறுமி தன் அம்மா வழி தாத்தாவினால் ஒவ்வொரு நாளும் 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாள். அவள் என்னிடம் வந்த போது மிகவும் வெளிறிப் போய், உடல் வீங்கி இருந்தாள். தினமும் இரவு வேலையிலிருந்து வந்து வெறும் தரையில் படுத்திருப்பேன். அவளும் என்னருகில் படுத்திருப்பாள். ஒரு முறை என்னிடம், "அத்தை, நான் நலமாக விரும்புகிறேன். பள்ளிக்கு செல்ல விரும்புகிறேன்." என்றாள்.

3:38

2010: ஒரு இளம் பெண்மணி ஜனாதிபதி சிர்லீஃப் முன்னிலையில் சத்திய வாக்குமூலம் அளித்தாள். அவள் தன்னுடன் பிறந்தவர்களுடன் போரில் தன் பெற்றோர்கள் கொல்லப்படும் போது எப்படி வாழ்ந்தார்கள் என்று கூறினள். அவளுக்கு வயது 19 . கல்லூரிக்குச் செல்வதே அவள் கனவு. உடன்பிறந்தவர்களைப் பேணுவதற்காகவே அக்கனவு. அவள் மிகச் சிறந்த விளையாட்டு வீராங்கனை. அதனால் அவள் படிப்பதற்கு உதவித்தொகை கிடைத்தது. அவளுக்கு முழுமையான உதவித்தொகை கிடைத்தது. பள்ளிக்குச் செல்ல வேண்டும், படித்த பெண்ணாக வர வேண்டுமென்ற அவள் கனவு பலித்தது. முதல் நாள் அவள் பள்ளிக்குச் சென்றபோது விளையாட்டுத் துறை இயக்குனர், யாரால் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததோ, அவர் இந்தப் பெண்ணை வகுப்பறையிலிருந்து அழைத்தார். அடுத்த 4 வருடங்கள் அவள் விதி அவர் செய்த உதவிக்கு இது நன்றிக்கடனாக, அவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதே.

4:29

உலகெங்கிலும், நாம் பல கொள்கைகளை, பல தொண்டு நிறுவனங்களை, பல தலைவர்களைக் கொண்டிருக்கிறோம். பல உயரிய மனிதர்கள் செயல் திட்டங்களை வகுத்துள்ளனர். நம் குழந்தைகளை பயத்திலிருந்தும், பாலின தொந்தரவிலிருந்தும் காப்பாற்றுவதற்காக. ஐ.நா. குழந்தைகள் உரிமைகள் குறித்த உடன்படிக்கையை உருவாக்கியது. அமெரிக்கா போன்ற நாடுகளில் எந்த குழந்தையும் புறக்கணிக்கப் படுவதில்லை. மற்ற நாடுகள் வேறுவிதமான கொள்கைகளை வகுத்துள்ளன. ஐ.நா.வின் Millennium Development எனப்படும் கொள்கையின் மூன்று முக்கிய சாரம் பெண்களை மையமாகக் கொண்டதாகும். மாபெரும் மனிதர்களால் வகுக்கப்பட்ட இக்கொள்கைகள் யாவும் இளம் பிள்ளைகள் இவ்வுலகில் எவ்வாறு அறியப் படவேண்டும் என்று நாம் விரும்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. இவை தோல்வியில் முடிந்ததாகவே நான் கருதுகிறேன்.

5:10

உதாரணத்திற்கு லிபேரியாவில், பதின்வயது மகப்பேறு 10 பெண்களுக்கு 3 என்ற விகிதத்தில் உள்ளது. பதின்வயது விபச்சாரம் இதைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஒரு சமூகத்தில் எங்களுக்கு சொன்னதாவது, நீங்கள் காலையில் எழுந்திருக்கும் போது கருத்தடை உறைகளை ஏதோ மெல்லும் கோந்தைப் போல சுலபமாக பார்க்க இயலும் என்பதாகும். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் $1-க்கும் குறைவான பணத்திற்காக விபச்சாரத்தில் உட்படுத்தப்படுகிறார்கள். இது வருத்தத்திற்குரியது. மனவலிமையை குன்றச் செய்கிறது. ஒருவர் என்னிடம் TEDTalk - ல் நான் உரையாற்றுவதற்கு சில நாட்களுக்கு முன்னால் கேட்டார், "நம்பிக்கை எங்கே உள்ளது?" என்று.

5:46

பல வருடங்களுக்கு முன்னால் என் நண்பர்கள் சிலர், தலைமுறை இடைவெளியை நீக்க வேண்டுமென முடிவுசெய்தனர். நம் தலைமுறைக்கும் இளம் பெண்களின் தலைமுறைக்கும் இனிமேலும் நீங்கள் லிபேரியக் குடியரசின் சார்பில் இரண்டு நோபல் பரிசு பெற்றவர் என்று சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல. ஏனெனில் நம் பெண் பிள்ளைகள் இன்னும் நம்பிக்கை இல்லாமல், வெளிப்படையான எதிர்காலம் இல்லாமல் இருக்கிறார்கள். நாங்கள் இளம் மகளிர் புனரமைப்பு இயக்கம் என்கிற ஒரு வெளியை உருவாக்கியுள்ளோம். நாங்கள் கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று அவர்கள் பேசுவதற்கு இது போன்ற, ஒரு வெளியை உருவாகுகிறோம். அந்த பெண்கள் அமர்ந்து பேசும்போது, அவர்கள் அறிவாற்றல் வெளிப்படுகிறது. அவர்கள் உணர்ச்சி வெளிப்படுகிறது. அவர்கள் செயலாற்றல் வெளிப்படுகிறது. அவர்கள் ஈடுபாடு வெளிப்படுகிறது. அவர்களில் ஒளிந்துள்ள தலைவர் வெளிப்படுகிறார்கள். நாங்கள் 300 -க்கும் மேற்ப்பட்ட பெண்களுடன் பணியாற்றி இருக்கிறோம். சில பெண்கள் இங்கே வரும் போது அச்சத்துடன் இருந்தார்கள். ஆனால் துணிச்சலாக இந்த இளம் தாய்மார்கள், வெளி உலகிற்கு வந்து தன்னைப்போலுள்ள மற்றவர்களுக்காகப் போராடுகிறார்கள்.

6:50

நான் சந்தித்த இளம் பெண்களில் ஒருத்தி, நான்கு குழந்தைகளுக்கு தாயான அவள், பள்ளிக்கு செல்வதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்காதவள். அனால் பள்ளிக்கல்வியை வெற்றிகரமாக முடித்துவிட்டாள். கல்லூரிக்குச் செல்வதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்காதவள். கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருக்கிறாள். ஒரு நாள் அவள் என்னிடம், "நான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு என் பிள்ளைகளைக் காப்பாற்றுவதே என் விருப்பம்" என்றாள். அவள் பள்ளிக் கல்வியைத் தொடர பணம் இல்லாத நிலையில் இருக்கிறாள். அவள் தண்ணீர், குளிர் பானம் மற்றும் கைத்தொலைபேசிக்கான மருசெறிவு அட்டைகளை விற்பனை செய்கிறாள். நீங்கள் நினைப்பீர்கள் அவள் அந்தப் பணத்தை அவள் படிப்பிற்காக செலவளிப்பாள் என்று. அவள் பெயர் ஜுவானிடா. அவள் அந்தப் பணத்தை அவள் சமூகத்தைச் சார்ந்த ஆதரவற்ற இளம் தாய்க்கு கொடுத்து அவளை பள்ளிக்கு அனுப்புகிறாள். அவள் "லேமா, என் விருப்பம் கல்வி அறிவு பெறுவதே. அது என்னால் இயலாவிட்டலும், என் சகோதரி ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில் என் விருப்பம் பூர்த்தி அடைவதாக நான் எண்ணுகிறேன். நான் மேலான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். என் குழந்தைகளுக்கு உணவு வேண்டுமென விரும்புகிறேன். பள்ளிகளில் நடக்கும் பாலியல் வன்முறை மற்றும் சுரண்டல் முடிவுக்கு வர விரும்புகிறேன்." என்றாள். ஆப்பிரிக்க பெண்களின் கனவு இது தான்.

7:56

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஆப்பிரிக்க பெண்மணியின் மகன் கேக் சாப்பிட வேண்டுமென விரும்பினான். ஏனெனில் அவன் மிகவும் பசித்திருந்தான். கோவம், நிராசை மற்றும் எரிச்சல் வந்தது அவளுக்கு அந்த சுமுதாயத்தை எண்ணி, அந்த பிள்ளைகளின் நிலைமையை எண்ணி, அந்த இளம் பெண் ஒரு இயக்கத்தைத் தொடங்கினாள், சாதாரண பெண்களைக் கொண்டு துவங்கப்பட்ட அந்த இயக்கம், இவை அனைத்தையும் தடுத்து நிறுத்தி அமைதியை உருவாகும் முயற்சியே அது. நான் அதை நிறைவேற்றுவேன். இது இன்னுமொறு ஆப்பிரிக்க பெண்ணின் விருப்பமாகும். நான் அந்த இரு பெண்களின் விருப்பத்தை நிறைவேற்ற தவறிவிட்டேன். நான் இந்த முயற்சியிலும் தோல்வியடைந்து விட்டேன். இந்த இரண்டு நினைவுகளை மட்டுமே இந்த ஆப்பிரிக்க பெண்ணின் மனதில் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தாள் .. நான் தோற்றுவிட்டேன். நான் தோற்றுவிட்டேன். நான் தோற்றுவிட்டேன். ஆகையால் நான் இதை செய்தே தீருவேன். அந்தப் பெண் வெளியே வந்தாள். கொடும் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடினாள். பயமின்றிப் பேசினாள். கேக் சாப்பிடவேண்டுமென்ற விருப்பம் மட்டுமல்லாது அமைதி வர வேண்டுமென்ற அவள் விருப்பமும் நிறைவேறியது. அந்த இளம் பெண் பள்ளிக்குச் செல்ல வேண்டுமெனவும் விரும்பினாள். பள்ளிக்குச் சென்றாள். மற்ற பல நல்ல நிகழ்வுகள் நடக்க வேண்டுமென விரும்பினாள். அவை யாவும் நிகழ்ந்தன.

9:08

இன்று அந்த இளம் பெண்மணி நான்தான். நோபல் பரிசு பெற்றவள். நான் இப்பொழுது ஒரு பயணத்தில் இருக்கிறேன். என்னால் இயன்ற அளவுக்கு அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதே ஆகும். இளம் ஆப்பிரிக்க பெண்களின் — படிக்க வேண்டும் என்ற விருப்பமே அது. நாங்கள் ஒரு அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம். நாங்கள் திறமைவாய்ந்த கிராமப்புற பெண்களுக்கு கல்வி கற்க நான்கு வருட இலவச உதவித்தொகை வழங்குகிறோம்.

9:31

நான் உங்களிடம் கேட்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. நான் U.S-ல் பல இடங்களுக்குச் சென்றுள்ளேன். எனக்குத் தெரியும் இந்த நாட்டுப் பெண்களுக்கும் விருப்பங்கள் பல இருக்கின்றன. பிஃரான்க்ஸ்-ல் மேலான வாழ்க்கை வாழ வேண்டும், மேம்பட்ட வாழ்க்கையை லாஸ் ஏன்ஜெல்ஸ்-ன் பரபரப்பான நகரத்தில் வாழ வேண்டும், டெக்சாசி-ல் மேலான வாழ்க்கை வாழ வேண்டும், நியூயார்க்-ல் மேலான வாழ்க்கை வாழ வேண்டும், மேலும் நியூஜெர்சி-ல் மேலான வாழ்க்கை வாழ வேண்டும் என்று.

9:57

நீங்கள் அனைவரும் என்னுடன் பயனிப்பீர்களா? அந்த பெண்களுக்கு உதவுவதற்கு, அவள் ஆப்பிரிக்க பெண்ணாகவோ, அமெரிக்க பெண்ணாகவோ அல்லது ஜப்பானிய பெண்ணாகவோ இருக்கலாம், அவள் விருப்பத்தை பூர்த்தி செய்ய, அவள் கனவை நனவாக்க, அவள் இலட்சியத்தை அடைய உதவி செய்வீர்களா? ஆகையால் இந்த அனைத்து கண்டுபிடிப்பாளர்களையும், புதுமை செய்பவர்களையும் நான் சந்தித்து பேசியதிலிருந்து இந்த ஓரிரு நாட்களில் நமக்கு தெரியவந்தது என்னவெனில் அவர்களும் நம்மைப் போலவே உலகின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு அவர்கள் நம்மைக் கேட்பது, ஒரு வெளியை உருவாக்குவது பற்றியே. அது அவர்களுக்குள் ஒளிந்திருக்கும், அறிவாற்றலை வெளிப்படுத்தும், உணர்சிகளை வெளிப்படுத்தும் மற்ற எல்லா திறமைகளையும் வெளிப்படுத்தும். நாம் அனைவரும் ஒன்றாக பயணிப்போம். நாம் அனைவரும் ஒன்றாக பயணிப்போம்.

10:43

நன்றி

10:45

(கரகோஷம்)

11:08

கிரிஸ் ஆண்டர்சன்: மிக்க நன்றி. தற்பொழுது லிபேரியாவில், நீங்கள் பார்க்கும் உங்களை வருத்தும் பிரச்சனை எது?

11:17

LG: என்னைத் தலைமை ஏற்று லிபேரியா மறுபுனரமைப்பு இயக்கத்தை நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டனர். என் பணியின் ஒரு பகுதியாக, இது போன்ற சுற்றுப் பயணங்களை நான் பல கிராமங்களிலும், நகரங்களிலும் மேற்கொள்கிறேன் — 13 , 15 மணி நேரம் புழுதி மண்ணில் பயணிக்கிறேன் — நான் சென்ற எந்த ஒரு பகுதியிலாவது ஒரு புத்திசாலிப் பெண்ணைப் பார்த்ததில்லை. ஆனால் துயரமானது என்னவெனில், பிரகாசமான எதிர்காலத்திர்கான தோற்றமும் அதைப் பற்றிய கனவும் இன்னும் கனவாகவே உள்ளது. ஏனெனில் அங்கு பல தீய செயல்கள் நடக்கின்றன. நான் சொன்னதைப் போல பதின்வயது மகப்பேறு என்ற கொள்ளை நோய் உள்ளது.

11:54

என்னை வருத்தும் பிரச்சனை என்னவென்றால், நானும் அது போன்றதொரு இடத்தில் இருந்தவள் தான். தற்செயலாகத்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நான் மட்டும் இந்த இடத்தில் இருக்க எனக்கு விருப்பமில்லை. அந்த பெண்கள் அனைவரும் இங்கே வருவதற்கான வழிமுறைகளை நான் காண விழைகிறேன். இன்னும் 20 ஆண்டுகள் கழித்து பின்னோக்கிப் பார்த்தல் இன்னும் ஒரு லிபேரியப் பெண், கானானிய நாட்டுப் பெண், நைஜீரியப் பெண், எதியோப்பியப் பெண் TED மேடையில் நின்று பேசுவதைக் காண விரும்புகிறேன். ஒரு வேளை அவர்கள் கூறலாம், "நோபல் பரிசு பெற்ற இவரால் தான் நான் இன்று இங்கிருக்கிறேன்" என்று. நான் மிகவும் வருந்துகிறேன். ஒரு நம்பிக்கை இல்லாமல் வாழும் அவர்களைக் கண்டு. ஆனால் நான் ஒன்றும் அவநம்பிக்கை உடையவள் அல்ல ஏனெனில் அவர்களுக்கு ஊக்கமளித்து வெளிக்கொணர நிறைய நேரம் தேவை இல்லை என்பதை நான் உணர்வேன்.

12:40

CA: இந்த வருடம் நிகழ்ந்த நம்பிக்கை கொடுப்பதாக உள்ள ஒரு நிகழ்வை நீங்கள் கண்டீர்களா?

12:46

LG: நான் பார்த்த நம்பிக்கை கொடுக்கும் நிகழ்வுகள் பலவற்றை நான் கூற இயலும். ஆனால் கடந்த வருடம், ஜனாதிபதி சிர்லீஃப் - ன் சொந்த கிராமத்தில் நாங்கள் இம்மாதிரியான பெண்களுடன் வேலை செய்துகொண்டிருந்தோம். 25 பெண்களை கூட நாங்கள் பள்ளிக்கூடத்தில் பார்க்கவில்லை. அவர்கள் அனைவரும் தங்கச் சுரங்கத்தில், விபாச்சரத்திலும் மற்ற செயல்களிலும் ஈடுபடுத்தப் பட்டிருந்தார்கள். அவர்களில் 50 பேரை மீட்டு அவர்களுடன் பணியாற்றினோம். அது தேர்தல் நேரமாக இருந்தது. இந்தப் பகுதியில் தான் பெண்கள் ஒரு போதும் ஆண்களுக்கு இணையாக அமர்ந்து பேசியதில்லை. இந்தப் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு அமைப்பை உருவாகினார்கள். அவர்கள் ஒரு பிரச்சாரத்தைத் துவக்கினார்கள் வாக்களிக்கும் உரிமை கோரி. இந்தப் பகுதி பிற்படுத்தப்பட்ட கிராமம் ஆகும். அவர்கள் பயன்படுத்திய தாரக மந்திரம் என்வென்றால்: "அழகான பெண்களும் வாக்களிக்கலாம்." அவர்களால் மற்ற இளம் பெண்களை ஒன்று திரட்ட முடிந்தது.

13:35

அவர்கள் அதை மட்டும் செய்யவில்லை. மேலும் அவர்கள் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களைப் பார்த்து "நீங்கள் வெற்றி பெற்றால் இந்தப் பகுதிப் பெண்களுக்கு என்ன செய்வீர்கள்?" என்று கேட்டனர். வேட்பாளர்களில் ஒருவரான ஏற்கனவே சட்டசபை உறுப்பினரான அவர் — லிபேரியாவில் மிகவும் வலிமையுள்ள பாலியல் சட்டங்களை, சட்டசபையில் போராடி நீக்கப் போவதாகக் கூறினார். ஏனெனில் அவை இதனை காட்டுமிராண்டிதனம் என்றார். கற்பழிப்பு காட்டுமிராண்டிதனம் இல்லையாம். அதற்கெதிரான சட்டமே காட்டுமிராண்டிதனமானது என்கிறார். அந்தப் பெண்கள் அவரிடம் விடாமல் கேள்வி கேட்டதனால் அவர் அந்தப் பெண்களை ஒரு எதிரியைப் போல் பார்க்கலானார். அந்தப் பெண்கள் அவரிடம் "உங்களை விரட்டவே நாங்கள் வாக்களிப்போம்" என்றனர். அவர் விரட்டப்பட்டும் விட்டார்.

14:14

(கரகோஷம்)

14:20

CA : லேமா, நன்றி. TED -ற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி.

14:23

LG : உங்களை வரவேற்கிறேன். (CA : நன்றி)

14:25

(கரகோஷம்)

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லேமா குவோபீ நம்மிடம் இரண்டு கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஒன்று அவர் சொந்த வாழ்கையில் நிகழ்ந்த மிகப் பெரிய மாற்றங்களைப் பற்றியது. மற்றொன்று உலகெங்கிலும் உள்ள பயன்படுத்தப்படாத உள்ளார்ந்த ஆற்றல் மிக்க பெண்களைப் பற்றியது. நாம் பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலம் இந்த உலகை மாற்றியமைப்போமா?

About the speaker
Leymah Gbowee · Peace activist, Nobelist

Leymah Gbowee is a peace activist in Liberia. She led a women's movement that was pivotal in ending the Second Liberian Civil War in 2003, and now speaks on behalf of women and girls around the world.

Leymah Gbowee is a peace activist in Liberia. She led a women's movement that was pivotal in ending the Second Liberian Civil War in 2003, and now speaks on behalf of women and girls around the world.