பயணம் செய்வதின் கடுமையான சந்தோஷங்களில் ஒன்றும் பூர்வீகம் சார்ந்த ஆராய்ச்சியின் மகிழ்ச்சிகளின் ஒன்றும், பழமையான வழிகளை மறக்காமல் இருப்பவர்களின் மத்தியில் வாழ்வதற்கான வாய்ப்பே என்பது உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் இன்னமும் தங்கள் கடந்த காலத்தை காற்றுவாக்கில் உணருகிறார்கள், அதை மழையால் தேய்க்கப்பட கற்களில் தொட்டுப் பார்க்கிறார்கள், தாவரங்களின் கசப்பான இலைகளில் சுவைத்துப் பார்க்கிறார்கள். ஜாக்குவார் ஷாமன்ஸ் இன்னமும் பால்வெளித் திறளைத் தாண்டி பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்பதையோ, அல்லது பழங்கால முதியவர்கள் அர்த்தத்தோடு ஒத்தாடுவதின் இரகசியத்தையோ, அல்லது இமயமலையிலுள்ளதையோ, தெரிந்து கொள்வதற்காகத் தான், இப்போதும் புத்தர்கள் தர்மத்தின் சுவாசத்தையே தொடர்கிறார்கள் என்பது, பழமையியலின் மத்திய வெளிப்பாட்டை நினைவில் கொள்வதற்கானதே, மேலும் நாம் வாழ்கிற இந்த உலகமும் சில தனிப்பட்ட காரணத்தில் நிலைத்திருக்கவில்லை என்பது தான் அந்த யோசனை, ஆனால் அது உண்மையின் ஒரு மாதிரிதான், இருந்த போதும் வெற்றிகரமாக, பல சந்ததிகளுக்கு முன்பாக, நமது பாரம்பரியம் உண்டாக்கிய ஏற்றுக் கொள்ளக்கூடிய விருப்பங்களின் ஒரு குறிப்பிட்ட தொகுப்பின் பின் விளைவே அது.
மேலும் உண்மையிலேயே, நாம் அனைவரும் அதே ஏற்றுக் கொள்ளக்கூடிய நோக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். நாம் அனைவரும் பிறந்திருக்கிறோம். நாம் அனைவரும் நமது குழந்தைகளை உலகிற்குள் கொண்டுவருகிறோம். நாம் அனைவரும் ஆரம்பித்து வைக்கும் சடங்குகளின் வழியாகச் செல்கிறோம். நாம் அனைவரும் மரணம் என்ற தாங்கிக் கொள்ளமுடியாத பிரிப்போடு போராட வேண்டியிருக்கிறது, எனவே நாம் அனைவரும் பாடுகிறோம், நாம் அனைவரும் ஆடுகிறோம், நாமனைவருக்கும் கலை இருக்கிறது என்பதை அது ஆச்சரியப்படுத்தக் கூடாது.
ஆனாலும் ஆர்வத்தைத் தூண்டுவது என்னவென்றால், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இருக்கிற பாடலின் தனித்துவமான சாராம்சம், நடனத்தின் ஒத்திசைவு போன்றவையே. மேலும் அது போர்னியோ காடுகளிலுள்ள பீனன் ஆக இருந்தாலும் சரி, அல்லது ஹெய்ட்டியிலுள்ள ஊடூ புரதான மக்களாக இருந்தாலும் சரி, அல்லது வடக்கு கென்யாவின் கெய்சூர் பாலைவனத்திலுள்ள போர் வீரர்களாக இருந்தாலும் சரி, ஆண்டிஸ் மலைத்தொடர்களில் உள்ள குராண்டிரோவாக இருந்தாலும் சரி, அல்லது சகாராவின் மத்தியிலுள்ள கேராவன்சேராயாக இருந்தாலும் சரி. இவர் ஒரு மாதத்திற்கு முன்பாக பாலைவனத்திற்குள் நான் பயணம் செய்தபோது தற்செயலாக என்னோடு இருந்தவர், அல்லது உண்மையிலேயே உலகின் தெய்வத்தாய், எவரெஸ்டின், குமோலாங்மா சரிவுகளில் ஒரு யாக் எருமை மந்தையை மேய்ப்பவர் தான்.
இத்தகைய அனைத்து மக்களும் உலகில் இருப்பதிற்கான மாற்று வழிகளையும், சிந்திப்பதின் மாற்று வழிகளையும், இந்த உலகில் உங்களை நீங்களே நிலைநாட்டுவதின் மாற்று வழிகளையும் நமக்குப் போதிக்கிறார்கள். மேலும் இது தான் ஒரு யோசனை, நீங்கள் அதைப்பற்றி சிந்திப்பீர்களானால், அப்போதுதான் உங்களை நீங்கள் நம்பிக்கையினால் நிரப்பிக் கொள்ள முடியும். இப்போது, உலகின் பல்வேறு பலங்கால கலாச்சாரங்கள் ஒன்றாக இணைத்து இந்த கிரகத்தையே மூடுகிற அளவிற்கு ஆவிக்குறிய வாழ்க்கையினாலும் கலாச்சார வாழ்க்கையினாலும் ஒரு வலையை உண்டாக்குகின்றன, மேலும் அது உண்மையிலேயே உயிர்கோளம் என்று நீங்கள் அறிந்திருக்கிற உயிரியல் வலையைப் போலவே இந்த கிரகம் நலமுடன் இருப்பதற்கு அது முக்கியமானதாகும். மேலும் நீங்கள் இந்த வாழ்க்கையின் கலாச்சார வலையை ஒரு பூர்வீகக் கோளமாக இருப்பதாக நீங்கள் சிந்தித்துப் பார்க்கக் கூடும் மேலும் அந்த பூர்வீகக் கோளத்தை மனசாட்சியின் விடியலில் இருந்து மனிதனின் கற்பனாசக்தியால் உயிரோட்டமாகக் கொண்டு வரப்பட்ட அனைத்து சிந்தனைகள் மற்றும் கணவுகள், புராணங்கள், யோசனைகள், ஆர்வங்கள், உள்ளுணர்வுகள் ஆகியவற்றின் ஒட்டு மொத்தக் கூட்டுத் தொகையாக இருப்பதாக நீங்கள் குறிப்பிடலாம். அந்த பூர்வீகக் கோளம் என்பது தான் மனிதத்துவத்தின் மிகப்பெரிய வரலாறு. ஒரு பிரமிக்கத்தக்க தனிப்பட்ட இனமாக நாம் இருக்கிற மற்றும் இருக்க முடிகிறதின் ஒரு அடையாளம் அது தான்.
மேலும் உயிர்கோளமானது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதைப் போல கலாச்சாரக் கோளமும் கூட அப்படித்தான் பாதிக்கப்பட்டிருக்கிறது – சொல்லப்போனால் மிக அதிகமான வீதத்தில். எந்த உயிரியலாளருமே, உதாரணமாக, அனைத்து உயிரினங்களிலும் 50% அல்லது அதற்கு மேலானவைகள் பூமியில் இல்லாமற் போயிருக்கும் எனவோ அல்லது இல்லாமற் போவதின் எல்லையில் இருந்திருக்கும் எனவோ சொல்வதற்குத் தைரியம் கொண்டிருக்க மாட்டார் ஏனென்றால் அது உண்மையல்லவே, மேலும் இன்னமும் கூட, உயிரியல் சார்ந்த பரவலின் பிரிவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிற காட்சியானது – மிகவும் நேர்மறைச் சிந்தனை காட்சியாக இருப்பதாக நாம் அறிகிற கலாச்சார பரவலின் பிரிவை அரிதாகவே நெருங்கிச் செல்கிறது. மேலும் அதன் மிகப்பெரிய அறிகுறியானது, உண்மையிலேயே, மொழி இழப்புதான்.
இந்த அறையிலிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் பிறக்கும் போது இந்தக் கிரகத்தின் மீது 6:00 மொழிகள் பேசப்பட்டன. இப்போது, ஒரு மொழி என்பது அருஞ்சொற்பொருட்களின் ஆக்கமும் அல்ல அல்லது இலக்கண விதிகளின் தொகுப்புமல்ல. ஒரு மொழி என்பது மனித ஆவியின் ஒரு திடீர் எழுச்சி தான். ஒவ்வொரு தனிப்பட்ட கலாச்சாரத்தின் ஆன்மாவின் இந்த உலகிற்குள் வருகிற ஒரு வாகனம் தான் அது. ஒவ்வொரு மொழியும் மனதின் பழமையான-வளர்ந்த காடுதான், ஒரு நீர்நிலைதான், ஒரு நினைவு, ஆவிக்குரிய சாத்தியக்கூறுகளின் ஒரு இயற்கையமைப்பு.
மேலும் இத்தகையை 6:00 மொழிகளில், மோண்டேரியில் நாம் அமர்ந்திருப்பதை போல, முழுமையாக பாதி அல்லது அந்தளவுகூட நமது குழந்தைகளின் காதுகளில் முணுமுணுக்கப்படுவதில்லை. குழந்தைகளுக்கு அவைகள் ஒருபோதும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை, அதன் அர்த்தமென்னவென்றால், திடமாக, ஏதாவது மாறுகிற வரையில், அவைகள் ஏற்கெனவே மரித்துப் போய்விட்டன. அமைதியில் கட்டப்பட்டு இருப்பதை விட தனிமை எதுவாக இருக்க முடியும், உங்கள் மொழியை பேசுவதில் கடைசி ஆளாக இருப்பது, முன்னோர்களின் ஞானத்தை கொண்டுசெல்வதற்கு அல்லது குழந்தைகளின் வாக்குறுதிகளை எதிர்பார்ப்பதற்கு எந்த வழியையும் கொண்டிராமல் இருப்பது? இருந்தும், அந்தப் பயங்கரமான விதி தோராயமாக ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும் பூமியில் எங்கோ யாருடையதாகவோ உண்மையிலேயே இருந்து கொண்டிருக்கிறது, ஏனென்றால் ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும், யாராவது ஒரு முதியவர் இறந்து போகிறார் மேலும் அவரோடு ஒரு பழமையான மொழியின் கடைசி உச்சரிப்பை கல்லறைக்குள் கொண்டு சென்று விடுகிறார்.
“அது நல்லதாக இருக்காதா?”, எனக் கேட்கும் சிலர் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் நாம் அனைவரும் ஒரே மொழியைப் பேசினால் இந்த உலகம் ஒரு சிறந்த இடமாக இருக்காதா?" மேலும் நான் சொல்கிறேன், “நல்லது தான், நாம் அந்த மொழியை யோருபா-வாக உண்டாக்குவோம். நாம் அதைப் கேண்டோனீஸாக உண்டாக்குவோம். நாம் அதைப் கோகியாக உண்டாக்குவோம். மேலும் அது உங்களால் பேசமுடியாத உங்கள் சொந்த மொழியாக இல்லாமல் இருப்பதை திடீரென நீங்கள் கண்டுகொள்வீர்கள்.
அதுபோல, நான் இன்று உங்களோடு என்ன செய்யப் போகிறேனென்றால், பூர்வீகக் கோளத்தின் ஊடாக உங்களை ஒரு பயணத்தில் எடுத்துக் செல்லப் போகிறேன் – காணாமற் போவது என்றால் என்ன என்பதின் அர்த்தத்தை உங்களுக்குக் கொடுப்பதை ஆரம்பிப்பதற்கான முயற்சியைச் செய்வதற்காக ஒரு சுருக்கமான பயணம். ‘இருப்பதின் வெவ்வேறு வழிகள்” என நான் சொல்லும் போது அதை மறந்து போகிறவர்கள் நம்மில் இருக்கிறார்கள், நான் உண்மையிலேயே இருப்பதின் வெவ்வேறு வழிகள் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்.
உதாரணமாக, வடமேற்கு அமேஸானில் உள்ள பாராசானாவின் இந்தக் குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள், அனகோண்டாவின் மக்களான, இவர்கள் கிழக்கிலிருக்கும் புனிதமான பாம்புகளின் வயிற்றிலுள்ள பாலாற்றிலிருந்து வந்ததாக புராண ரீதியாக நம்புகிறார்கள். இப்போது, இந்த மக்கள் பிறவியிலேயே நீல நிறத்தை பச்சை நிறத்திலிருந்து பிரித்தறிய முடியாது ஏனென்றால் வானத்தின் நிறமும் இந்த மக்கள் சார்ந்துள்ள காடுகளின் நிறமும் சமப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வித்தியாசமான மொழியையும் திருமண விதியையும் கொண்டுள்ளார்கள், அது மொழிக் கலப்புத் திருமணம்: நீங்கள் வேறொரு மொழியைப் பேசும் ஒருவரைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மேலும் இது எல்லாமே கடந்த கால இதிகாசங்களில் தான் வேறூண்றியுள்ளது, இருந்தும் கவனிக்க வேண்டிய காரியம் என்னவென்றால், கலப்புத் திருமணங்களால் இத்தகைய ஆறு அல்லது ஏழு மொழிகள் பேசப்படுகிற இத்தகைய நீண்ட வீடுகள், யாராவது ஒரு மொழியைப் பயிற்சி செய்கிறதை நீங்கள் ஒரு போதும் கேட்க முடியாது. அவர்கள் சாதாரணமாகக் கவனித்து அதன் பின் பேச ஆரம்பிக்கிறார்கள்.
அல்லது, நான் அவர்களோடு வாழ்ந்ததிலேயே மிகவும் ஆச்சரியமூட்டும் ஆதிவாசிகள், 1958-ல் முதன்முதலாக அமைதி முறையில் தொடர்பு கொள்ளப்பட்ட வடகிழக்கு ஈக்குவெடாரின் வாராணி இன மக்கள். 1957-ல், 5 மிஷனரிகள் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்து, கடுமையான தவறை செய்தார்கள். நான் நட்பு ரீதியான அனுமானம் எனச் சொல்லுகிற வகையில், அவர்களின் எட்டுக்கு பத்து பளபளப்பான புகைப்படங்களை வானத்திலிருந்து கீழே போட்டனர், இத்தகைய மழைக்காடுகளின் மக்கள் தங்களின் வாழ்க்கையில் மழைக்காடுகளின் மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு போதும் இது போன்ற இரு-பரிமான பொருட்கள் எதையும் கண்டதில்லை என்பதை மறந்து விட்டு. காட்டின் தளத்திலிருந்து இத்தகைய புகைப்படங்களை அவர்கள் எடுத்து, முகத்தின் பின்பக்கமாக வடிவத்தை அல்லது உருவத்தைப் பார்ப்பதற்காக பார்க்க முயற்சித்தார்கள், ஒன்றையும் காணாமல், இவைகள் பிசாசிடமிருந்தான அழைப்பு அட்டை எனறு முடிவு செய்து, அந்த ஐந்து மிஷனரிகளையும் குத்திக் கொன்றார்கள். ஆனால் வாராணி இன மக்கள் வெளியாட்களை குத்திக் கொல்வதில்லை. அவர்கள் ஒருவரையொருவர் குத்திக் கொள்வார்கள். அவர்களின் 54% மரணமானது அவர்கள் ஒருவருக்கொருவர் குத்திக் கொள்வதால் தான். நாங்கள் அவர்களின் பூர்வீகத்தை எட்டு சந்ததிகளுக்கு முன்பாக தேடினோம், மேலும் இயற்கையான மரணத்தின் இரண்டு நிகழ்வுகளை நாங்கள் கண்டுபிடித்தோம் மேலும் அதைப் பற்றி மக்களை இன்னும் கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டபோது, அவர்களில் ஒருவர் மரணமடையும் அளவிற்கு அதிகம் வயதாகிவிட்டதால் அவர் மரணமடைந்தார், எனவே எப்படியும் நாங்கள் அவரைக் குத்திதான் கொன்றோம் என அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். (சிரிப்பு) ஆனால் பிரம்மிக்கத்தக்க வகையில் அவர்கள் காட்டினைப் பற்றிய தெளிவான அறிவைக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வேட்டைக்காரர்கள் விலங்குகளின் சிறுநீரை 40 விதங்களில் மோப்பம் பிடிக்கக் கூடியவர்கள் மேலும் அதனை எந்த விலங்கு விட்டுச் சென்றது என்று உங்களுக்கு அவர்களால் சொல்ல முடியும்.
80-களின் ஆரம்பத்தில், ஹார்வர்டிலுள்ள எனது பேராசிரியரால் ஹெயிட்டிக்குச் செல்ல நான் விருப்பப்படுவேனா என என்னிடம் கேட்கப்பட்ட போது நான் உண்மையிலேயே ஒரு பிரம்மிக்கத்தக்க வேலையைக் கொண்டிருந்தேன், துவாலியர்களின் பலமும் டோண்டன் மாக்கவுட்களின் அடித்தளமுமான இரகசியமான சமுதாயங்களுக்குள் ஊடுறுவுவது, மேலும் ஸோம்பிக்களை உண்டாக்க உபயோகிக்கப் பயன்படும் விஷத்தைக் கைப்பற்றுவது. உண்மையிலேயே உணர்ச்சியிலிருந்து அர்த்தத்தை உண்டாக்குவதற்கு, வோடோனின் குறிப்பிடத்தக்க நம்பிக்கையைப் பற்றி சிலவற்றை நான் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது, மேலும் ஊடூ என்பது ஒரு கருப்பரின மாயாஜால மதக்குழுவல்ல. மாறாக, அது ஒரு சிக்கலான மெட்டாபிசிக்கல் உலகப் பார்வை. அது ஆச்சரியமூட்டுவது தான். உலகின் மிகப்பெரிய மதங்களை பெயரிடுமாறு உங்களை நான் கேட்டுக் கொண்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? கிறிஸ்தவம், இஸ்லாம், புத்தமதம், யூதமதம், எதுவேண்டுமானாலும்.
எப்போதும் ஒரு கண்டம் விடுபட்டேயுள்ளது, கணிப்பு என்னவென்றால் துணை-சஹாரா ஆப்ரிக்கா கண்டம் எப்போதுமே மத நம்பிக்கை கொண்டிருந்ததில்லை. நல்லது, உண்மைதான், இத்தகைய மிகவும் தனித்தன்மையான மதரீதியான யோசனைகளின் பிரித்தெடுப்புதான் ஊடூ அது அடிமைத்தன காலகட்டத்தின் கொடுமையான ஆட்சியினூடே வெளிவந்தது. ஆனால், ஊடூவை மிகவும் ஆச்சரியமூட்டுவதாக ஆக்குவது என்னவென்றால் செத்துப் போனவர்கள் மற்றும் உயிரோடுள்ளவர்களுக்கு இடையிலான இந்த உயிருள்ள உறவுதான். ஆகவே, உயிரோடுள்ளவர்கள் ஆவிகளுக்கு குழந்தை பெறுகிறார்கள். ஆட்டத்தின் அசைவிற்கு இணங்கி கன நேரத்தில் உயிருள்ளோர்களின் ஆன்மாவை இடம்பெயரச் செய்து, ஆழமான தண்ணீருக்கடியிலிருந்து ஆவிகள் எழுப்பப்பட முடியும், அந்த குறுகிய பளபளப்பான நேரத்தில், அந்த ஆவி புகுந்த சரீரம் தெய்வமாகிறது. எனவே தான் ஊடூ மக்கள் சொல்கிறார்கள், “வெள்ளையர்கள் நீங்கள் ஆலயத்திற்குச் சென்று கடவுளைப் பற்றிப் பேசுகிறீர்கள். நாங்கள் கோவிலில் நடனமாடி கடவுளாகவே ஆகிறோம்”. நீங்கள் பீடிக்கப்படுவதால், நீங்கள் ஆவியால் எடுத்துக் கொள்ளப்படுகிறீர்கள், பின் எப்படி நீங்கள் காயப்பட முடியும்? எனவே நீங்கள் இது போன்ற பிரம்மிப்பான செயல்முறைகளை பார்க்கிறீர்கள்: ஊடூ இனத்தவர்கள் ஒரு மாறுகிற நிலையில் எரிகிற மரக்கட்டைகளை தங்கள் கையில் எந்தவிதப் பாதிப்பில்லாமல் கையாளுகிறார்கள், அதைவிட, உச்சகட்டமாகத் தூண்டப்பட்ட நிலையில் ஊக்குவிக்கப்பட்ட போது மனது தன்னைக் கொண்டிருக்கும் உடலைப் பாதிக்கச் செய்யும் திறமை அதைவிட ஒரு பிரம்மிப்பூட்டும் செயல்பாடாகும்.
இப்போது, நான் உடன் இருந்திருக்கிற மக்கள் அனைவரிலும், மிகவும் சிறப்பானவர்கள் வடக்கு கொலம்பியாவிலுள்ள சியாரா நெவடா நெவடா டி சாண்டா மார்டாவின் கோகி இன மக்களேயாவர். வெற்றியின் காரணமாக கொலம்பியாவின் கரீபிய கடற்கரைச் சமவெளிப்பகுதிகள் விரிந்து பரந்திருந்த புரதான டைரன்னஸ் நாகரிகத்தின் சந்ததிகள், கரீபியக் கடற்கரைச் சமவெளிக்கு மேலாக பொங்கிவழிகிற ஒரு தனியான எரிமலை சாம்பல் மேடுகளுக்குள் கூடிச் சேர்ந்தார்கள். இரத்தம் தோய்ந்த ஒரு கண்டத்தில், இந்த மக்கள் மட்டுமே ஸ்பானியர்களால் ஒரு போது வெற்றிகொள்ளப்படாதவர்கள். இன்றைய நாள்வரைக்கும், அவர்கள் சடங்காச்சார பூசாரிகளால் ஆளப்பட்டிருக்கிறார்கள் ஆனால் பூசாரியாவதற்கான பயிற்சியானது கடுமையானதாகும். மூன்று அல்லது நான்கு வயதில் அந்தப் பழங்குடிகளின் இளைஞர்கள் அவர்கள் குடும்பத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறார்கள், பனிப்பாறைகளின் தளத்தில் கற்கூடாரங்களில் நிழலான இருண்ட உலகில் 18 ஆண்டுகள் பதுக்கி வைக்கப்படுகிறார்கள். இயற்கையான அவர்கள் தாய்மார்களின் கர்ப்ப காலத்தில் அவர்கள் செலவழித்த ஒன்பது மாதங்களை பிரதிபலிக்கிற வகையில் வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ஒன்பது-வருட காலகட்டங்கள், இப்போது அவர்கள் வெளிப்படையாக மிகப்பெரிய தாயின் கர்ப்பத்தில் இருக்கிறார்கள் மேலும் இந்த முழு காலத்திற்கும், அவர்கள் அவர்களின் சமுதாயத்தின் மதிப்புகள் பற்றி போதிக்கப்படுகிறார்கள், அவர்களின் ஜெபங்கள் அவர்கள் ஜெபங்கள் மட்டுமே இந்த உலகைக் காப்பாற்ற முடியும் என்ற நோக்கத்தைப் காப்பாற்றும் மதிப்புகள் – அல்லது நாம் சொல்லலாம் சுற்றுச்சூழல் சார்ந்த – சமச்சீர் என்று. இந்த ஆச்சரியமான துவக்கத்தின் முடிவில், ஒரு நாள் அவர்கள் திடீரென்று வெளியே எடுக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கையில் முதல் முறையாக, 18 வயதில், சூரியோதயத்தை அவர்கள் பார்க்கிறார்கள். மேலும் அந்த முதல் வெளிச்சத்தின் விழிப்புள்ள பளிங்குகரமான நேரத்தில், மிகவும் ஆச்சரியப்படத்தக்க அழகான அந்த நிலப்பரப்பை சூரியக்கதிர்கள் ஸ்பரிசிக்க ஆரம்பிக்கையில், அவர்கள் மொத்தமாக கற்றுக்கொண்ட அனைத்தும் அந்த ஆச்சரியப்படத்தக்க மகிமையில் திடீரென்று உறுதி செய்யப்படுகிறது. அப்போது அந்த பூசாரி ஒரடி பின்வைத்து சொல்கிறார், “பார்த்தீர்களா? நான் உங்களுக்குச் சொன்னமாதிரியே இது இருக்கிறது. இது அந்த அளவிற்கு அழகானது. இதைப் பாதுகாப்பது உங்கள் கையிலுள்ளது. அவர்கள் தங்களையே மூத்த சகோதரர்கள் என அழைத்துக் கொண்டு அவர்கள் சொல்கிறார்கள், இளைய சகோதரர்களான நாங்கள் தான் உலகை அழித்ததற்குப் பொறுப்பானவர்கள் என்று.
இப்போது, இந்த அளவிலான உள்ளுணர்வு மிக முக்கியமானதாக ஆகிவிடுகிறது. ஒரு தனிப்பட்ட மக்களையும் நிலப்பரப்பையும் நாம் எண்ணிப்பார்க்கும் போது, நாம் ரோஸ்ஸியாவையும் பழமையான நேர்மையான அடிமைக்காலத்தின் புரளி கதைகளையும் நாம் பயன்படுத்துகிறோம், எளிமையாகச் சொல்வோமானால் அது ஒரு இனவெறி யோசனை, அல்லது மாற்றாக, நாம் தோரியாவை பயன்படுத்தி இத்தகைய மக்கள் நம்மை விட பூமிக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்கிறோம். நல்லதுதான், தனிப்பட்ட மக்கள் உணர்வுப்பூர்வமானவர்களுமல்ல அல்லது கண்ணைக்கசக்குவதினால் பலவீனப்படுத்தப்பட்டுப் போவதுமில்லை. அஸ்மாத்தின் மலேரிய சதுப்புநிலங்களிலோ அல்லது திபேத்தின் குளிர்ச்சியான காற்றிலோ அதிகமான இடமில்லை, ஆனால் இருந்தபோதும் அவர்கள் காலத்தின் வழியாகவும் சடங்காச்சாரங்கள் வழியாகவும், அது சுய-உணர்வுள்ளவர்களா அதற்கு நெருக்கமாக இருப்பதின் யோசனையின் அடிப்படையில் இல்லாமல், அதைவிட அதிகமான உள்மனதின் உள்ளுணர்வின் மீது, பூமியின் ஒரு பாரம்பரிய மாயத்தோற்றத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். மனிதனின் மனசாட்சியினால் இருப்பதற்கென சுவாசிக்கப்படுவதாலேயே பூமி தானும் நிலைத்திருக்க முடியும் என்ற யோசனை.
இப்போது, அதன் பொருளென்ன? ஆண்டிஸ் மலைகளிலிருந்து, அந்த மலையானது ஒரு அப்பு ஆவி என்றும் அது அவன் அல்லது அவளை நித்தியத்திற்கு கொண்டு செல்வதற்கானது என்றும் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன், மலையென்பது சுரங்கம் தோண்டப்படுவதற்காக தயாராக உள்ள பாறைகளின் குவியல் என்று நம்புவதற்காக வளர்க்கப்பட்ட மோண்டெனாவில் இருந்த ஒரு சிறுவனை விட நிச்சயமாக வித்தியாசமான மனிதனாக இருப்பான் மேலும் அந்த வளத்திற்கு அல்லது அந்த இடத்திற்கு வித்தியாசமான உறவைக் கொண்டிருப்பான். அது ஒரு ஆவியின் தங்குமிடம் அல்லது அது ஒரு கனிமங்களின் குவியல் என்பதைப் பற்றி ஒன்றுமில்லை. ஆர்வத்தைத் தூண்டுவது என்னவென்றால் தனிப்பட்ட மனிதனுக்கும் இயற்கையான உலகிற்குமான உறவைக் குறிக்கும் நிலைப்பாடுதான். நான் பிரிட்டிஷ் கொலம்பியாவின் காடுகளில், அந்தக் காடுகள் வெட்டப்படுவதற்கே இருக்கின்றன என்று நம்புகிற வகையில் வளர்க்கப்பட்டேன். அது காடுகளானது ஹுக்குக்கின் தங்குமிடமாகவும் வானத்தின் கோணல்மானலான ஓசைகள் மற்றும் உலகின் வடக்குக் கடையாந்திரங்களில் குடியிருந்த இரத்தம் குடிக்கும் ஆவிகளின் தங்குமிடமாக நம்பிய, குவாய்கிட்டிலின் மத்தியில் இருக்கும் எனது நண்பர்களை விட என்னை வித்தியாசமான மனிதனாக ஆக்கியது. இப்போது, இத்தகைய கலாச்சாரங்கள் வித்தியாசமான
உண்மைகளை உருவாக்க முடியும் என்ற யோசனையின் மீது நீங்கள் கவனம் செலுத்துவீர்களானால், நீங்கள் அவர்களின் தனிச்சிறப்பான கண்டுபிடிப்புகளின் சிலவற்றை புரிந்து கொள்ள ஆரம்பிக்க முடியும். இந்த கிரகத்தை இங்கே எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த ஏப்ரல் மாத்தில் நான் வடமேற்கு அமேசானின் எடுத்த ஒரு புகைப்படம் தான் இது. இது தான் அயஹாஸ்க்கா, இதைப் பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஷாமானின் ரெபெர்டாயிரின் மிகவும் சக்தியுள்ள மனநிலை செயலுள்ள தயாரிப்பு. அயஹாஸ்காவை ஆச்சரியப்படவைப்பது இந்தத் தயாரிப்பின் திறமையான மருந்தியல் ரீதியான திறமையல்ல, ஆனால் அதன் விளக்கமே. அது உண்மையிலேயே இரண்டு வித்தியாசமான மூலங்களை உண்டாக்கியிருக்கிறது. மற்றொரு பக்கம், இந்த மரப்பொருளான லியானா உள்ளது, அது தன்னிடத்தில் வரிசையான பீட்டா-கார்போலின்கள், ஹார்மைன், ஹார்மோலின், மிதமான மாயாஜால வஸ்துக்கள் ஆகியவைகளைக் கொண்டுள்ளது. இந்த ஒயினை தனியாக எடுத்துக் கொள்வது உங்கள் மனசாட்சியில் ஒருவிதமான நீலநிற மங்கலான புகை சுழல்களைக் கொண்டிருப்பதற்கே, ஆனால் அது சைக்கோட்ரியா விரிடிஸ் என்றழைக்கப்படுகிற காஃபி குடும்பத்திலுள்ள ஒரு மூலிகையின் இலைகளோடு கலக்கப்படுகிறது. அந்தச் செடி தன்னில் சில மிக அதிக சக்தியுள்ள டிரிப்ட்டமைன்களைக் கொண்டுள்ளது, மூளையின் செரோடோனினை மிகவும் ஒத்ததாக இருக்கும் ஒன்று, டைமெத்தைல்ட்ரிப்ட்டமைன்-5, மீத்தாக்ஸிடைமெத்தைல்ட்ரிப்ட்டமைன். யோனோமாமி அந்தப் புகையை அவர்கள் மூக்கின் வழியாக ஊதுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருப்பீர்களானால், வெவ்வேறுவிதமான மசாலாக்களால் அவர்கள் உருவாக்கும் அந்தப் பொருளும் மீத்தாக்ஸிடைமெத்தைல்ட்ரிப்ட்டமைனைக் கொண்டுள்ளது. அந்தப் பொடியை நீங்கள் உறிஞ்சுவீர்களானால் உங்கள் மூக்கு பாரோக் ஓவியங்களோடு வரிசையாக வைக்கப்பட்ட துப்பாக்கி குழாயிலிருந்து சுடப்பட்டத்தை போலவும் ஒரு மின்சாரக் கடலில் குதித்ததைப் போலவும் இருக்கும். (சிரிப்பு) அது உண்மையானவற்றின் மங்கலானவற்றை உருவாக்குவதில்லை; உண்மையானவைகளின் கலவையை அது உருவாக்குகிறது.
உண்மையில், நான் ரிச்சர்டு இவான் ஷூல்டெஸ் என்ற எனது பேராசியரோடு வாதிப்பது வழக்கம் -- 1930 களில் மெக்ஸிகோவில் தனது மாயாஜால காளான்களின் கண்டுபிடிப்பால் சைக்கிடெலிக் வரலாற்றில் ஒரு முத்திரை பதித்த ஒரு மனிதர் அவர். இத்தகைய ட்ரிப்டமைன்களை ஒரு மாயாஜால வஸ்துக்களாக நீங்கள் வகைப்படுத்த முடியாது என்பதாக நான் வாதாடுவது வழக்கம் ஏனென்றால் அதன் தாக்கத்தின் கீழ் நீங்கள் இருக்கும் வேளையில், ஒரு மாயாஜாலத்தை உணர்வதற்கு யாருமே அங்கு வீட்டில் இருக்கமாட்டார்களே. (சிரிப்பு)
ஆனால் டிரிப்டமைன்களைப் பற்றிய காரியமானது அவைகள் வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்பட முடியாதது ஏனென்றால் மனிதர்களின் குடலில் இயற்கையாகக் காணப்படும் மோனோஅமைன் ஆக்ஸிடேஸ் என்ற நொதியினால் அவைகள் மறுபடியும் இயற்கை தன்மையடையச் செய்யப்படுகின்றன. எம்ஏஓ-வை மறுபடியும் இயற்கைத் தன்மையடையச் செய்யும் வேறு ஏதாவது வேதிப்பொருட்களின் சேர்க்கையோடு சேர்த்தால் மட்டுமே அவைகள் வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்பட முடியும். இப்போது, அந்த லியானாவிற்குள் காணப்பட்ட பீட்டா-கார்போலைன்கள், டிரிப்ட்டமைனை திறனுள்ளவைகளாக்க தேவைப்படும் துல்லிய விதமான எம்ஏஓ கட்டுபடுத்திகள் தான் என்பதே ஆச்சரியமூட்டும் காரியங்கள். எனவே நீங்களே உங்களுக்குள் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்கிறீர்கள். 80:00 வகைகளிலான இந்த போதையூட்டும் தாவரங்களில், பகுதிகளின் கூட்டுத்தொகையைவிட அதிகமான முழுமையின் ஒருவித உயிர்வேதியியல் முறையை உண்டாக்கிய, இந்த வழியில் ஒன்றாகச் சேர்க்கப்படக்கூடிய இந்த இரண்டு உடலமைப்பு சார்ந்து சம்பந்தமில்லாத தாவரங்களை எவ்வாறாக இத்தகைய மக்கள் கண்டுபிடித்தார்கள் என்று?
நல்லது, நாம் அந்த பெரிய உவமானத்தை உபயோகப்படுத்துவோம், சோதித்துப் பார்ப்பது, அது அர்த்தமில்லாததாக வெளிக்காட்டப்பட்டது. ஆனால் நீங்கள் இந்தியர்களைக் கேளுங்கள், அவர்கள் சொல்கிறார்கள், “தாவரங்கள் எங்களோடு பேசுகின்றன.”
நல்லது, அதன் பொருளென்ன? கோஃபன் என்ற இந்த பழங்குடியினர், 17 வகைகளான அயஹாஸ்காக்களைக் கொண்டுள்ளார்கள், அவைகள் அனைத்தையும் காட்டில் ஒரு பெரிய தூரத்தால் வித்தியாசப்படுத்துகிறார்கள், அவைகள் அனைத்தும் எங்கள் கண்களுக்கு ஒரே இனங்களாகக் காணப்படக் கூடியவை என்று. மேலும் நீங்கள் அவர்களைக் கேட்கலாம், எப்படியாக அவர்கள் அவைகளின் மருத்துவக் குணதிசங்களை ஏற்படுத்துவீர்கள் என்று, அவர்கள் சொல்கிறார்கள், “உங்களுக்கு தாவரங்களைப் பற்றிக் கொஞ்சம் தெரியும் என்று நினைத்தோம். நாங்கள் என்ன சொல்கிறோமென்றால், உங்களுக்கு எதுவுமே தெரியாதா?” நான் சொன்னேன், “இல்லை.” நல்லது, ஒரு பவுர்ணமி நாளின் இரவில் அந்த ஒவ்வொரு 17 வகைகளையும் நீங்கள் எடுக்கிறீர்கள், மேலும் அது ஒரு வித்தியாசமான ஒரு குறியீட்டில் உங்களுக்கு அடையாளமளிக்கிறது. இப்போது, அதுவொன்றும் ஹார்வர்டில் உங்களுக்கு ஒரு பிஎச்டி பட்டத்தைப் பெற்றுத் தரப்போவதில்லை, இருந்தாலும் அது ஸ்டேமென்களை எண்ணிக்கொண்டிருப்பதைவிட அதிகமாக ஆர்வத்தைத் தூண்டுவது.
இப்போது, (கைதட்டல்) பிரச்சினை -- பிரச்சினையென்னவென்றால் நம்மில் தனிப்பட்ட மக்களின் இடம்பெயர்தலைக் குறித்து கரிசனையுள்ளவர்கள் கூட அவர்களை ஒரு கூட்டமாகவும் வர்ணமயமானவர்களாகவும் பார்த்திருக்கிறோம் ஆனால் ஒரு உண்மையான உலகம், நமது உலகை நினைத்துக் கொண்டு, ஓடிக்கொண்டிருக்கும் போது எப்படியோ வரலாற்றின் எல்லையை குறைத்து விட்டோம். நல்லது, இப்போதிருந்து 300 ஆண்டுகளில், 20-ம் நூற்றாண்டு அதன் போர்கள் அல்லது அதன் தொழிற்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்காக நினைத்துப் பார்க்கப்படப் போவதில்லை, அதைவிட உயிரியல் மற்றும் கலாச்சார பரவலாக்கம் இரண்டின் பெருவாரியான அழிவை செயல்பாட்டோடு ஆதரித்த அல்லது நேர்மறையாக ஏற்றுக் கொண்ட நாம் நிற்கும் இன்றைய காலகட்டம் தான் நினைத்துப் பார்க்கப்படப் போகிறது. இப்போது, இப்போது, மாற்றம் என்பது பிரச்சினையல்ல. அனைத்துக் கலாச்சாரங்களும் அனைத்துக் காலங்களினூடே வாழ்க்கையின் புதிய சாத்தியக்கூறுகளோடான ஆட்டத்தில் மாறாத ஈடுபாட்டைக் கொண்டிருந்திருக்கின்றன.
மேலும் பிரச்சினை தொழிற்நுட்பம் தானுமல்ல. ஒரு அமெரிக்கன் குதிரையையும் சுமையையும் விட்டுவிட்டவுடன் ஒரு அமெரிக்கனாக இருப்பதை கைவிட்டதைப்போல, சியோக்ஸ் இந்தியர்கள் அவர்களது வில் அம்புகளைக் விட்டுவிட்டவுடன் ஒரு சியோக்ஸாக இருப்பதை கைவிடவில்லை. ஒரு பூர்வீகக் கோளத்தின் ஒருமைப்பாட்டை மிரட்டுவது மாற்றமோ அல்லது தொழிற்நுட்பமோ அல்ல. அது ஒரு சக்தி. ஆதிக்கம் செலுத்துவதின் ஒரு முரட்டு முகம். நீங்கள் உலகைச் சுற்றிப் பார்க்கும் போதெல்லாம், இவைகள் மங்கிப் போவதற்கான கலாச்சாரங்கள் அல்ல என்பதை நீங்கள் கண்டு கொள்ள முடியும். ஏற்றுக் கொள்வதற்கு அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக அடையாளப்படுத்தக் கூடிய சக்திகளால் இருப்பதை விட்டுத் துரத்தப்படுகிற இவர்கள் இயங்கிக் கொண்டே வாழ்கிற மக்கள். பீனானின் தாயகத்தில் பெருவாரியாக காட்டினை அழிப்பதாக இருந்தாலும் சரி, -- சரவாக்கில் இருந்து, தென்கிழக்கு ஆசியாவிலிருந்தான ஒரு பழங்கால மக்கள் -- ஒரு சந்ததிக்கு முன்பு வரை சுதந்திரமாக காடுகளில் வாழ்ந்து வந்த ஒரு மக்கள், ஆறுகளின் கரைகளில் வேலையாட்களாகவும் வேசிகளாகவும் வாழுமளவிற்கு தற்போது அனைத்தும் குறைக்கப்பட்டுவிட்டது, பாதியளவு போர்னியோவையே அந்த ஆறு தெற்கு சீனக் கடலுக்குக் கொண்டுபோவதைப் போல அந்த ஆறு மண்ணால் சரிந்திருப்பதை நீங்கள் பார்க்க முடியும், அங்கு ஜப்பானிய சரக்கு போக்குவரத்துக் காரர்கள் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகளை நிரப்பிக் கொள்வதற்குத் தயாராக தங்கள் விளக்குகளைத் தொங்க விடுகிறார்கள். அல்லது யானோமாமியின் நிலையில், தங்கத்தின் கண்டுபிடிப்பின் விளைவாக அவர்களுக்குள் வந்த நோயின் ஆதிக்கத்தால் தான்.
அல்லது நாம் திபேத்தின் மலைகளுக்குள் செல்வோமானால், அங்கு சமீபத்தில் நான் வெகுவான ஆராச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறேன், அதை ஒரு அரசியல் ஆதிக்கத்தின் ஒரு முரட்டு முகமாக நீங்கள் காண முடியும். உங்களுக்குத் தெரியுமா, இனப்படுகொலை, ஒரு மக்களை உடற்பூர்வமாக அழிப்பது உலகளாவிய அளவில் கண்டிக்கப்படுகிறது, ஆனால் பூர்வீகக்கொலை, மக்களின் வாழ்க்கைமுறையின் அழிப்பு, கண்டிக்கப்படாதது மாத்திரமல்ல, அது உலகளாவிய அளவில் -- பல பகுதிகளில் வளர்ச்சி வியூகத்தின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படுகிறது. திபேத்தின் ஊடாக தரை நிலையில் நீங்கள் கடந்து செல்லாத வரையில் அதன் வலியை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. நான் ஒரு முறை மேற்கு சீனாவிலுள்ள செங்க்டுவிலிருந்து நிலம் வழியாக தென்கிழக்கு திபேத்தின் ஊடாக லாசாவிற்கு ஒரு இளம் கூட்டாளியோடு 6:00 மைல்கள் பயணம் செய்தேன், லாசாவை அடைந்த பின்பே நீங்கள் கேள்விப்படுகிற புள்ளிவிபரங்களுக்குப் பின்பாக உள்ள முகத்தை நான் புரிந்துகொண்டேன். புழுதியிலும் சாம்பலிலும் சிதிலமடைந்த 6:00 புனிதமான நினைவிடங்கள். கலாச்சார புரட்சியினூடே சேவகர்களால் 1.2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த இளைஞனின் தந்தை பஞ்சேன் லாமாவிற்கு பலி கொடுக்கப்பட்டிருந்தார். அதன் அர்த்தமென்னவென்றால் சீன ஆக்கிரமிப்பின் போது அவர் கனப்பொழுதில் கொலைசெய்யப்பட்டார். அவரது மாமா நேபாளுக்கு மக்களைக் கொண்டு சென்ற சாமியாரோடு சென்றுவிட்டார். அவரது தாயார் உயிருடன் புதைக்கப்பட்டார் – சொத்துள்ளவராக இருந்த குற்றத்திற்கான விலையாக. அவர் இரண்டு வயதில் அவரது சகோதரியின் பாவாடையின் தொங்கல்களுக்கு அடையில் மறைத்து சிறைச்சாலைக்குள் கடத்திச் செல்லப்பட்டார் ஏனென்றால் அவரில்லாமல் அவளால் இருக்க முடியாது. அந்த வீர சாகசத்தைச் செய்த சகோதரி கல்வி முகாமிற்குள் போடப்பட்டாள். ஒரு நாள் மாவோவின் ஆயுதபட்டையின் மேல் தெரியாமல் கால் பட்டுவிட்டது, அந்தப் பாவத்திற்காக, அவளுக்கு ஏழு ஆண்டுகள் கடுமையான வேலை கொடுக்கப்பட்டது. திபேத்தின் வலியானது தாங்கிக்கொள்ள இயலாதது, ஆனால் அந்த மக்களின் உயிர்த்தெழுகிற ஆவியானது நாம் உற்றுப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம்.
முடிவில், அது ஒரு வாய்ப்பிற்கு இறங்கி வருகிறது. நாம் ஒற்றைத் தன்மையின் ஒரு ஒற்றை நிர உலகில் வாழ விரும்புகிறோமா அல்லது பல்வேறு வேற்றுமைகளின் பலவர்ண உலகைத் தழுவிக்கொள்ள விரும்புகிறோமா? மார்க்ரெட் மேட், சிறந்த பழமையியல் நிபுணர், அவர் மரிப்பதற்கு முன்பாகச் சொன்னார் அவரது மிகப் பெரிய பயமானது, இந்தப் பொதுவான உலகப் பார்வையை நோக்கி நாம் வழிமாறிச் செல்கையில், முழுமையான மனிதக் கற்பனா சக்தியானது குறுகலான சிந்தனையின் நன்னெறிகளுக்கு குறைக்கப்படுவதைக் காண்பதோடு மட்டுமல்லாமல், , மற்ற அனைத்து சாத்தியக்கூறுகளையும் மறந்து போன கனவிலிருந்து ஒரு நாள் விழிக்கப் போகிறோம் என்பதுதான்.
நமது இனமானது, ஒரு வேளை, சுமார் 600:00 ஆண்டுகளாக இருந்திருக்கிறது என்பதை நினைப்பதற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது. நியோலித்திக் புரட்சி -- நமக்கு விவசாயத்தைக் கொடுத்தது, அதில் நாம் விதைகளின் குழுக்களுக்கு அடிபணிந்தோம், ஷாமானின் பாடல்களானது ஆசாரியத்துவத்தின் உரைநடைகளால் காட்சியிடப்பட்டன, நாம் முடியாட்சி சிறப்புத்துவத்தை உருவாக்கினோம் அதிகமாக -- 10:00 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான். நாம் அறிந்திருக்கிற இந்த நவீன தொழிற்துறை உலகமானது 300 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. இப்போது, இந்த குறுகலான வரலாறானது வரப்போகிற நூற்றாண்டில் முரண்படவிருக்கிற அனைத்து சவால்களுக்குமான அனைத்து பதி்ல்களையும் நாம் கொண்டிருக்கிறோம் என்று எனக்குச் சொல்கிறதில்லை. உலகின் இத்தகைய பல்வேறுவிதமான கலாச்சாரங்கள் மனிதனாக இருப்பதின் அர்த்தத்தைக் குறித்துக் கேட்கப்படும் போது, அவைகள் 10:00 வெவ்வேறு விதமான குரல்களில் பதிலளிக்கின்றன.
மேலும் அந்தப் பாடலுக்குள் தான் நாம் யாராக இருக்கிறோமோ அவராக இருப்பதின் சாத்தியத்தை மறுபடியும் கண்டுபிடிப்போம். ஒரு முழுமையாக உணர்வுள்ள இனம், அனைத்து மக்களும் அனைத்து தோட்டங்களும் மலர்வதற்கான ஒரு வழியைக் கண்டுகொள்ள உறுதி செய்ய முழுமையாக விழிப்புணர்வுள்ளவர்களாக. மேலும் நேர்மறையான எண்ணத்திற்கான பெரிய தருணங்கள் உள்ளன.
நார்வல் வேட்டைக்குச் செல்லும் போது சில புரதான மக்களோடு பாஃபின் தீவின் வடக்கு முனையில் நான் எடுத்த புகைப்படம் தான் இது, இந்த ஆள், ஓலயா, அவரது தாத்தாவைப் பற்றிய ஒரு அற்புதமான கதையை என்னிடம் சொன்னார். அந்த கனடா அரசாங்கம் புராதன மக்களுக்கு எப்போதுமே இரக்கமுள்ளதாக இருந்ததில்லை, மேலும் 1950களினூடே, எங்களது உரிமையை நிலை நாட்டுவதற்காக, நாங்கள் அவர்களை குடியிருப்புகளுக்குள் தள்ளினோம். இந்த முதியவரின் தாத்தா போவதற்கு மறுத்திருக்கிறார். அந்தக் குடும்பம், அவரது உயிருக்குப் பயந்து, அவரது ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டது, அவரது அனைத்துக் கருவிகளையும். இப்போது, நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும், அந்த புராதனமானவர் குளிருக்குப் பயப்படவில்லை; அதனை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் சறுக்குகளின் அடிகள் உண்மையிலேயே கரிபோ மறைவில் சுற்றப்பட்ட மீன்களால் செய்யப்பட்டது. எனவே, இந்த மனிதனின் தாத்தா அந்த ஆர்க்டிக் இரவினாலோ அல்லது வீசிக்கொண்டிருந்த கடுங்குளிர் காற்றாலோ அச்சுறுத்தப்பட முடியவில்லை. அவர் எளிமையாக வெளியேறி நடந்தால், அவரது மூடப்பட்ட கால்சட்டைகளை இழுத்து விட்டுக்கொண்டு அவரது கைகளை மறைத்துக் கொண்டார். முகங்களானது உறைந்து போக ஆரம்பித்தவுடன், அவர் அதை ஒரு கத்தியின் வடிவத்திற்கு மாற்றிவிட்டார். அந்த தோல் கத்தியின் முனையில் எச்சிலைத் துப்பினார், அது இறுதியாக திடமாக உறைந்தவுடன், ஒரு நாயை அதனால் குத்திக் கொன்றார். அந்த நாயை அவர் தோலுறித்து ஒரு கச்சையை இறுக்கிக் கொண்டார், அந்த நாயின் மார்பெலும்புக் கூடை எடுத்து ஒரு பனிச்சறுக்கை மேம்படுத்திக் கொண்டு, இன்னொரு நாயைக் கட்டி அந்த பனி குவியல்களில் மறைந்து போனார், அவரது இடுப்புப் பட்டையில் ஒரு கத்தியோடு. ஒன்றுமே கொண்டிராமல் பெற்றுக்கொள்வதைப் பற்றிய பேச்சு. (சிரிப்பு)
மேலும், இது இன்னும் பலவழிகளில், (கைதட்டல்) புரதான மக்கள் மற்றும் உலகமுழுதுமுள்ள தனிப்பட்ட மக்களின் தற்சார்பு வாழ்வின் ஒரு அடையாளம். 1999 ஏப்ரலில் கனடா அரசாங்கம் கலிஃபோர்னியா டெக்ஸாஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்தால் கிடைக்கக் கூடிய நிலப்பகுதியை விடப் பெரிதான, புரதான பகுதியின் மொத்த கட்டுப்பாட்டையும் திரும்பக் கொடுத்துவிட்டது. அது எங்களது புதிய தாய்நாடு. அது நுனாவுட் என அழைக்கப்படுகிறது. அது ஒரு சுதந்திரமான பிராந்தியம். அவர்கள் அனைத்து கனிம வளங்களையும் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு நாடு – அரசாங்கத்தை எப்படி அடைய முடியும் என்பதற்கான ஒரு அற்புதமான உதாரணம் – அதன் மக்களோடு உடன்பாட்டை தேடுதல்.
மேலும் இறுதியாக, முடிவில், நான் நினைக்கிறேன் இந்தக் கிரகத்தின் இத்தகைய தொலைதூர எல்லைகளுக்கு பயணம் செய்திருக்கிற நாமெல்லாரிலும் குறைந்த பட்சம் அனைவருக்கும், அவைகள் ஒரு போதும் தூரமானவைகள் அல்ல என்பதை உணர்வதற்கு அது கொஞ்சம் தெளிவாகத் தான் தெரிகிறது. அவைகள் யாரோ ஒருவருடைய தாய்நாடு தான். காலத்தின் விடியலுக்குச் செல்லும் மனித கற்பனாசக்தியின் கிளைகளை அவைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும் நாமெல்லாருக்கும், இத்தகைய குழந்தைகளின் கனவுகள், நமது சொந்தக் குழந்தைகளின் கனவுகளைப் போலவே, நம்பிக்கையின் நிர்வாணப் புவியியலின் ஒரு பகுதியாக அமைகின்றன.
எனவே, நேஷனல் ஜியோகிரபிக்கில் இறுதியாக நாங்கள் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோமென்றால், அரசியல்வாதிகள் எதையும் செய்து முடிக்கமாட்டார்கள். நாங்கள் தேர்தல் தந்திரங்களை நினைக்கிறோம்- (கைதட்டல்) தேர்தல் தந்திரங்கள் தொடரக்கூடியவையல்ல என்பதாக நாங்கள் நினைக்கிறோம், ஆனால் கதை சொல்வது உலகத்தை மாற்ற முடியும் என நாங்கள் நினைக்கிறோம், எனவே தான் நாங்கள் உலகின் தலைசிறந்த கதை சொல்கிற ஸ்தாபனமாக இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களது வலைத்தளத்தில் 35 மில்லியன் ஹிட்களைப் பெறுகிறோம். 156 நாடுகள் எங்களது தொலைக்காட்சி சேனலை எடுத்து நடத்துகின்றன. எங்களது பத்திரிக்கைகள் லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறது. மேலும் நாங்கள் செய்து கொண்டிருப்பது பூர்வீகக் கோளத்திற்கான வரிசையான பயணங்கள் அங்கு நாங்கள் எங்களது சப்தங்களை அது போன்ற கலாச்சார ஆச்சரியங்களின் இடங்களுக்கு எடுத்துச் செல்லப் போகிறோம், அவைகள் உதவிசெய்ய முடியாது ஆனால் அவைகள் என்னத்தைப் பார்த்திருக்கிறதோ அவைகளால் திருப்பியடிக்கப்பட்டு வருகின்றன, மேலும் நம்பிக்கையாக, எனவே, ஒன்றன் பின் ஒன்றாக, பழமையியலின் மத்திய வெளிப்பாட்டினை, கொஞ்சம் கொஞ்சமாகத் தழுவிக்கொள்கிறோம். இந்த உலகம் ஒரு வேற்றுமையான வழியில் நிலைத்திருக்கிறதற்கு தகுதியடைகிறது, நமது கூட்டான நல-வாழ்வில் அனைத்து மக்களின் அனைத்து ஞானமும் பங்களிக்கக் கூடிய ஒரு உண்மையான பன் கலாச்சார பன்மையான உலகில் நாம் வாழ்வதற்கான ஒரு வழியை நம்மால் கண்டு கொள்ள முடியும்.
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
தேசீய புவியில் அகழ்வாராய்ச்சியாளர் வேட் டேவிஸ் அவர்கள், கவலையடையச் செய்கிற வேகத்தில் இந்தப் பூகோளத்தை விட்டுக் காணாமற் போய்க்கொண்டிருக்கிற, உலகின் தனித்துவமான கலாச்சாரங்களின் அசாதாரணமான பரவலாக்கங்களை, ஆச்சரியமூட்டும் புகைப்படங்களோடும் கதைகளோடும் பிரபல்யப்படுத்துகிறார்.
A National Geographic Explorer-in-Residence, he has been described as “a rare combination of scientist, scholar, poet and passionate defender of all of life’s diversity.” Full bio »
19:12 Posted: Jun 2008
Views 442,610 | Comments 164
16:17 Posted: Apr 2007
Views 558,692 | Comments 124
18:35 Posted: Jan 2007
Views 268,299 | Comments 53
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.