10 ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஆப்கானிஸ்தானில் இருந்தேன். அல் ஜசீரா தொலைகாட்சியின் நிருபராக அங்கு நடந்து கொண்டிருந்த போரை பற்றி செய்தி சேகரித்து கொண்டிருந்த நான், இது போன்ற யுத்தத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும், அழிவுகளையும் முழுமையாக உணர்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், ஈராக்கில் நிகழ்ந்த இன்னொரு யுத்தத்தின் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டேன். நான் யுத்தகளத்தின் மையமான ஈராக்கின் வடக்கு பகுதியில் இருந்தேன். நான் யுத்தகளத்தின் மையமான ஈராக்கின் வடக்கு பகுதியில் இருந்தேன். நான் யுத்தகளத்தின் மையமான ஈராக்கின் வடக்கு பகுதியில் இருந்தேன். யுத்தம் முடிந்து ஆப்கானிஸ்தானை போல இங்கும் ஆட்சி மாற்றம் நடந்தது. இங்கும் ஆட்சி மாற்றம் நடந்தது. கவிழ்க்கப்பட்ட அந்த ஆட்சி பல ஆண்டுகளாக நாட்டு மக்களிடையே பல ஆண்டுகளாக நாட்டு மக்களிடையே மோசமான இயலாமையை விதைத்து கொண்டிருந்த மோசமான இயலாமையை விதைத்து கொண்டிருந்த சர்வாதிகார தன்னிச்சையான கொடுங்கோலாட்சி ஆகும். சர்வாதிகார தன்னிச்சையான கொடுங்கோலாட்சி ஆகும். இருந்தாலும், அந்நிய நாட்டின் தலையீட்டில் உருவான மாற்றம் இந்த பகுதி மக்களிடையே இருந்த இயலாமையையும், தாழ்வு உணர்ச்சியையும் இயலாமையையும், தாழ்வு உணர்ச்சியையும் அதிகப்படுத்தியது.
மத்திய கிழக்கு அரபு நாடுகள் பல ஆண்டுகளாக சர்வாதிகார தன்னிச்சையான ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது. இது எங்களிடையே ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. எனக்கு தற்போது 43 வயதாகிறது. கடந்த 40 ஆண்டுகளாக, ஒரே வகையான வயது முதிர்ந்த, தன்னிச்சையான, ஊழல் மிகுந்த தன்னிச்சையான, ஊழல் மிகுந்த அரசர்களையும், ஜனாதிபதிகளையுமே பார்த்துள்ளேன். அரசர்களையும், ஜனாதிபதிகளையுமே பார்த்துள்ளேன். அந்நிய தலையீடு இன்றி, அடுத்த நாடு ஊடுருவல் இன்றி, மக்களின் தாழ்வு உணர்ச்சியையை அதிகப்படுத்தாத ஒரு உண்மையான மாற்றத்தை நம் வாழ்நாளில் காண்போமா என சில நேரங்களில் நம் வாழ்நாளில் காண்போமா என சில நேரங்களில் நான் எண்ணியதுண்டு. ஈராக்கியர்கள்: சதாம் ஹுசைனை ஒழித்தார்கள். ஆனால், அவர்களது தேசம் அந்நிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டதை பார்க்கும் பொழுது, அவர்கள் கவலையுற்றனர், தங்கள் சுயமரியாதை இழந்ததாக துயரமுற்றனர். அதனாலேயே கிளர்ச்சி ஏற்பட்டது. அதனாலேயே அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. பிற ஆட்சிகள், இதையே தம் மக்களை கேட்க தொடங்கின "ஈராக் போன்ற நிலை ஏற்பட வேண்டுமா?" "உள் நாட்டு போரும், இனவாத படுகொலைகளும் அரங்கேற வேண்டுமா?" "நீங்கள் அழிவை காண வேண்டுமா?" "அந்நிய படைகளை நமது மண்ணில் காண வேண்டுமா?" இது மக்களை சிந்திக்க வைத்தது.. "இது போன்றதொரு நிலைமையை விட தற்போது இருக்கும் கொடுங்கோலாட்சியே மேல் என எண்ணச் செய்தது" அந்த எண்ணமே கனவிலும் எண்ணாத ஒரு நிலைக்கு நம்மை தள்ளி விட்டது
கடந்த 10 ஆண்டுகளாக, மிக கொடூரமான அழிவுகளையும், கொலைகளையும், வன்முறைகளையும், இனவாத பிரச்சனைகளையுமே பார்க்க வேண்டிய அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த நிலை பல்லாயிரம் ஆண்டுகளாக நாகரிகம், கலை மற்றும் கலாச்சாரத்தின் பிறப்பிடமாக திகழ்ந்த ஒரு பிராந்தியத்தில் பிறப்பிடமாக திகழ்ந்த ஒரு பிராந்தியத்தில் நிகழ்வது வேதனை அளிக்கிறது. இப்பொழுது நாம் கனவு கண்ட அந்த தருணம் வந்து விட்டது என அறிவிக்கவே நான் உங்கள் முன்னால் வந்துள்ளேன். படித்த, ஒருங்கிணைந்த ஒரு புதிய தலைமுறை பொதுவான உணர்வுகளோடும், உலகளாவிய புரிதலோடும் ஒரு நிதர்சனமான உலகளாவிய புரிதலோடும் ஒரு நிதர்சனமான உண்மை நிலையை நமக்காக உருவாக்கியுள்ளனர். நமது உணர்வுகளை, கனவுகளை வெளிப்படுத்த ஒரு புதிய வழியை கண்டுள்ளோம். இந்த இளைய தலைமுறையினர் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளனர், சுதந்திரத்துக்கு புதிய அர்த்தம் தந்துள்ளனர், சுதந்திரத்துக்கு புதிய அர்த்தம் தந்துள்ளனர், நம்மை களத்தில் இறங்கி போராட உந்தியுள்ளனர். நம்மை களத்தில் இறங்கி போராட உந்தியுள்ளனர். வன்முறை எதுவுமில்லை.. வீட்டிற்கு வெளியே வந்து குரல் எழுப்புங்கள் "உங்கள் ஆட்சி முடிய வேண்டும் என விரும்புகிறோம்."
இது தான் துனிசியாவில் நடந்தது. துனிசியா அரசாங்கம் கோடிகணக்கான பணத்தை பாதுகாப்பு என்ற பெயரில் செலவழித்து காக்க முயன்ற சிறைகள் செலவழித்து காக்க முயன்ற சிறைகள் மக்கள் எழுச்சியால் சில நாட்களிலேயே மக்கள் எழுச்சியால் சில நாட்களிலேயே சிதறின, இருந்த தடம் தெரியாமல் தொலைந்து போயின. விழிப்புணர்வு பெற்ற மக்கள் தெருவில் இறங்கி குரல் கொடுத்தனர். அரசாங்கம் அவர்களை கொல்லப் பார்த்தது. உளவு நிறுவனங்கள் மக்களை கைது செய்ய நினைத்தது. மக்கள் பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்களை கண்டனர். அரசாங்கம் இது போன்ற புதிய உத்திகளால் அதிர்ந்து போனது. "இந்த குழந்தைகள் தவறாக வழிநடத்த படுவதாக குற்றம் சாட்டியது" "இந்த குழந்தைகள் தவறாக வழிநடத்த படுவதாக குற்றம் சாட்டியது" ஆகவே அவர்களை வீட்டிற்கு திரும்ப அழைக்குமாறு அவர்கள் பெற்றோரை அறிவுறித்தியது. அழைக்குமாறு அவர்கள் பெற்றோரை அறிவுறித்தியது. "இந்த குழந்தைகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.எனவே, அவர்களை வீட்டிற்கு அழையுங்கள்" இதுவே அரசாங்க பிரச்சாரமாக இருந்தது. ஆனால், பொதுவான கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இந்த இளைய சமுதாயத்தினர் ஒரு அற்புதமான எதிர்காலத்தை அனுமானிக்கவும், ஒரு அற்புதமான எதிர்காலத்தை அனுமானிக்கவும், அந்த அனுமானத்தை அறப்போர் மூலம், வன்முறை எதுவும் இன்றி, மக்கள் மத்தியில் எந்த குழப்பமும் ஏற்படுத்தாமல் அடைய மக்கள் மத்தியில் எந்த குழப்பமும் ஏற்படுத்தாமல் அடைய தேவையான வழிமுறைகளை தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் இந்த இளைஞர்கள் தங்கள் வீட்டிற்கு செல்லவில்லை. மாறாக அவர்கள் பெற்றோர் வீதிகளில் இறங்கி இளைஞர்களுக்கு ஆதரவளித்தனர். இப்படிதான் துனிசியாவில் புரட்சி பிறந்தது.
அல் ஜசீரா தொலைகாட்சி துனிசியாவில் பல ஆண்டுகளாக தடை செய்ய பட்டிருந்தது. துனிசியா அரசாங்கம் அல் ஜசீரா நிருபர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் வீதிகளில் இறங்கி போராடிய மக்களே நிருபர்களாக மாறி செய்தி, புகைப்படம் மற்றும் காணொளிகளை எங்கள் நிறுவனத்திற்கு அனுப்பினர். தோகாவில் இருந்த எங்கள் செய்தி மையம் நொடிப்பொழுதில் சாதாரண குடிமக்களின்- இணைந்த, குறிக்கோளுடைய, தாழ்வு நிலையிலிருந்து எழுச்சி பெற்ற மக்களின் கருத்துக்களை தெரிவிக்கும் முக்கிய நிலையமானது. நாங்கள் அப்பொழுது ஒரு முடிவு எடுத்தோம்: நாங்கள் செய்திகளை ஒளிபரப்புவோம். ஒடுக்கப்பட்ட இந்த மக்களுக்கு குரலாக இருப்போம். இந்த செய்தியை பரப்புவோம். சில இளைஞர்களுக்கு இணையத்தொடர்பு இருந்தாலும், பல்வேறு பிரச்சனைகளால் அரபு நாடுகளில் இருக்கும் இணையத்தொடர்பு மிகவும் சிறிதே. மிகவும் சிறிதே. ஆனால், அல் ஜசீரா இந்த மக்களின் அந்த மெல்லிய குரலினை பெற்று அதை பெருக்கியது. அந்த செய்தியை அரபு நாடு மட்டுமல்லாது உலகத்தின் உள்ள அனைத்து வீட்டின் வரவேற்பு அறைக்கும் கொண்டு சென்றது.
மக்கள் புதிதாக சில நடப்பதாக உணரத் தொடங்கினர். இதனால் சைன் அல்-ஆபிதீன் பென் அலி பதவி இறங்கினார். இதன் தொடர்ச்சியாக எகிப்தில் புரட்சி வெடித்தது. ஹோசினி முபாரக் பதவி இறங்கினார். இப்பொழுது லிபியாவில் புரட்சி நடக்கின்றது. ஏமனிலும் கூட.. இன்னும் பல நாடுகளில் மக்கள் "அமைதியும், சகிப்புத்தன்மையும் கொண்ட வளமான எதிகாலத்தை பெற என்ன வழி?", என எண்ணத் தொடங்கி விட்டனர். இணையமும், இணையத்தொடர்பும் மக்களிடையே ஒரு புதிய மனநிலையை உருவாகியுள்ளது. ஆனால் இந்த மனநிலை எங்கு உதித்ததோ, அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் உண்மையானதாக இருப்பது அவசியம். முன்னர் மாற்றங்களை பெற நடந்த நிகழ்வுகளுக்கும், தற்போதைய நிகழ்வுக்கும் இது தான் வேறுபாடு. இந்த மாற்றம் அரசு சில நேரங்களில் சொல்வது போல், எங்கள் மீது திணிக்கப்பட்டது. மக்கள் அதை இப்போது நிராகரித்துள்ளனர். ஏனென்றால் அவை அவர்களது கலாசாரத்துக்கு ஒவ்வாதவை. நாங்கள் எங்கள் கலாச்சாரம், கலாசார வேறுபாட்டுடன் ஒத்த எங்கள் மரபுகளிலும், வரலாற்றிலும் நம்பிக்கையுடைய மாற்றம், அதே சமயம் உலக எங்கள் ஆழ்மனதில் நம்பிக்கையுடைய மாற்றம், அதே சமயம் உலக எங்கள் ஆழ்மனதில் இருந்து வெளிவரும் என நம்பினோம். இருந்து வெளிவரும் என நம்பினோம். அதே சமயம், நாங்கள் சகிப்புத்தன்மையையும், உலகோடு ஒத்து வாழ்வதையும் ஏற்று கொண்டுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்த அந்த தருணம் இப்பொழுது அரபு நாடுகளில் நிகழ்ந்து கொண்டுள்ளது. நாங்கள் காண விழைந்த எல்லா எண்ணங்களும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய யுகத்தை இந்த பிராந்தியத்தில் உருவாக்க இதுவே சரியான தருணம். இதுவே சரியான தருணம்.
இந்த நிலையை அரசியல் பிரமுகர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? பேஸ்புக்கிற்கு எதிராக தஹ்ரிர் சதுக்கத்தில் ஒட்டகங்களை கொண்டு வந்து நிறுத்தினர். அல்ஜசீரா தொலைகாட்சிக்கு எதிராக காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டனர். அதில் அவர்கள் தோற்றதால் அரபு நாடுகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்த டெல் அவிவ் மற்றும் வாஷிங்டன் சதி வேளைகளில் ஈடுபடுவதாக சொல்லத் தொடங்கினர். மேற்கத்திய நாடுகளிடம், "அல்-கொய்தா எங்கள் பகுதிகளை ஆக்கிரமிக்க பார்க்கிறார்கள். எச்சரிக்கை. இந்த இஸ்லாமியர்கள் புதிய இம்ரான்களை உருவாக்கப் பார்க்கிறார்கள். உங்களின் சீர்மிகுந்த வாழ்க்கைமுறையை சீரழிக்க முயலும் இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்", எனக் கூறினர். ஆனால், மக்கள் விழித்துக் கொண்டனர். ஏனெனில், மக்களை ஏமாற்றும் திறமையை கூட இங்கு வாழும் ஊழல் பெருச்சாளிகள் இழந்து விட்டனர். அவர்களால் இந்த நிதர்சன உண்மையை கனவிலும் எதிர்கொள்ள முடியாது. அவர்கள் மக்கள் முன்பாக ஒன்றன் பின் ஒன்றாக தோற்று ஒன்றன் பின் ஒன்றாக தோற்று வெளியேறி கொண்டுள்ளனர். வெளியேறி கொண்டுள்ளனர்.
அல் ஜசீரா புரட்சியை தூண்டும் கருவி அல்ல. நாங்கள் புரட்சியை உருவாக்குவதில்லை. ஆனால், அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போது, அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை செய்கிறோம். எங்களை எகிப்தில் தடை செய்தனர். எங்கள் நிருபர்களில் சிலரை கைது செய்தனர். ஆனாலும் எங்களின் பல நிருபர்களும், புகைப்பட வல்லுநர்களும் தன்னிச்சையாக மறைந்திருந்து தஹ்ரிர் சதுக்கத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தினர். எங்கள் தொலைக்காட்சி தொடர்ந்து 18 நாட்கள் தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்த மக்களின் எண்ணங்களை நேரடியாக ஒளிபரப்பியது. ஒரு நாள் இரவில், தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்து எனக்கு தெரியாத ஒரு சாதாரண மனிதர் என் செல்லிடைபேசியில் அழைத்தார். "தயவு செய்து நேரடி ஒளிபரப்பை நிறுத்தி விடாதீர்கள். நீங்கள் ஒளிபரப்பை நிறுத்தினால் இங்கு ஒரு பெரிய பிரளயமே நடக்கும். தஹ்ரிர் சதுக்கத்தில் நடப்பதை நேரடியாக ஒளிபரப்பி எங்களை காத்து கொண்டிருக்கிறீர்கள்", என்றார். நான் எனது நிருபர்களையும், நிறுவன ஊழியர்களையும் தொலைபேசியில் அழைத்து "உங்களால் இயன்றவரையில் இரவில் கூட நேரடி ஒளிபரப்பை நிறுத்தாதீர்கள். ஏனெனில் நாம் ஒளிபரப்புவது அங்குள்ள மக்களுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பும் வழங்குவதாக உணருகின்றனர்"
இந்தப் பகுதியில் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மொத்த உலகத்திற்கும் கிடைத்துள்ள ஒரு தெளிவான எதிர்காலத்தை நாமும் எண்ண ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஈரானில் மிஷ்டாக் புரட்சியில் செய்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம். மற்றவர்கள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் இந்தப் பகுதியின் எண்ணெய் வளங்கள், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போன்ற மாயைகளை விட்டு வெளியே வர வேண்டும். சர்வாதிகார ஆட்சியின் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும் வன்முறை, தீவிரவாதம்,அழிவைத் தவிர வேறு எதையும் உருவாக்க முடியாது. மக்களின் விருப்பத்தை ஏற்போம். அவர்கள் எதிர்காலத்தை ஆள்பவர் யார் என நாம் தீர்மானிக்க வேண்டாம். இப்பொழுது இந்த குரல்கள் நம்மை பயமுறுத்தினாலும், எதிர்காலத்தில் மக்களை ஆள்பவர் மக்களாகவே இருக்கட்டும். மக்களாட்சி, தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வழியாக மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நடக்கும் இந்த நிகழ்வு, மொத்த உலகுக்கும் அரபு நாடுகளில் தோன்றும் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, நட்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றை காண கிடைத்த வாய்ப்பாகும். அதை விடுத்து, இதை வன்முறை அல்லது தீவிரவாதம் என்ற கண்ணோட்டத்தில் காண கூடாது. இந்த மக்களை ஆதரிப்போம். அவர்களுக்கு தோள் கொடுப்போம். நமது குறுகிய சுயநலத்தை விடுத்து மாற்றங்களை வரவேற்போம். இந்தப் பகுதி மக்களின் புதிய எதிர்காலத்தையும், கனவையும், சகிப்புத்தன்மையையும் கொண்டாடுவோம். எதிர்காலம் வந்து விட்டது. அந்த எதிர்காலம் இக்கணம் தான். நன்றி. வணக்கம்.
க்ரிஸ் அன்டர்சன்: உங்களிடம் ஒரு சில கேள்விகள். இங்கு வந்தமைக்கு முதலில் நன்றி!! இப்போது நடக்கும் இந்த நிகழ்வின் வரலாற்று முக்கியத்துவத்தை எப்படி சித்தரிப்பீர்கள்? இது இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வா அல்லது கடந்த பத்து ஆண்டின் நிகழ்வா? அல்லது அதற்கும் மேலானதா?
வாதா கான்பர்:நாங்கள் தொகுத்த செய்திகளிலேயே இது தான் தலையானது. நாங்கள் பல யுத்தங்களை பற்றி சொல்லியிருக்கிறோம். பல இன்னல்களை, பிரச்சனைகளை, சிக்கலான பகுதிகளை, இப்பகுதியின் முக்கிய நிகழ்வுகளை. ஆனால், இது வேறு. ஒரு அழகான, மிகப் பெரிய சம்பவம். நாங்கள் இதை அதன் மையத்தில் இருந்து சொன்னோம். இது ஒரு பெரிய நிகழ்வை பற்றி சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்லப்பட்டதல்ல. வரலாற்றின் ஒரு மாற்றத்தை நம் கண்முன்னே காண்கிறோம். ஒரு புதிய யுகத்தின் பிறப்பை காண்கிறோம். இந்த சம்பவம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.
க்ரிஸ் அன்டர்சன்: இன்னும் மேற்கத்திய நாட்டு மக்களிடம் ஒரு வித சந்தேகமும், பின்னால் வரப்போகும் ஒரு குழப்பமான நிலையின் முன்னோட்டம் தான் இந்த சம்பவம் என்ற எண்ணமும் இருக்கிறது. எகிப்தில் இப்போது நடக்கும் பொதுத்தேர்தல் மூலம் ஒரு அரசாங்கம் உருவாகி இப்போது நீங்கள் உணர்வு பொங்க பேசிய கருத்துக்களில் சிலவற்றையாவது நிறைவேற்றும் என நீங்கள் நம்புகிறீர்களா?
வாதா கான்பர்:ஹாசினி முபாரக்கின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பல கூட்டங்களாகவும், குழுக்களாகவும் ஒருங்கிணைந்து இந்த மாற்றங்களை நெறி தவறாமல், இந்த மாற்றங்களை நெறி தவறாமல், குடியரசின் மேன்மை நழுவாமல் குடியரசின் மேன்மை நழுவாமல் நிறைவேற்ற பாடுபடுகின்றனர். அதே சமயம், இந்த மாற்றங்கள் சரியானதாகவும், ஏற்று கொள்ளக் கூடியதாகவும் நெறி தவறாததாகவும் பார்த்து கொள்வர். தற்போது மக்கள் அரசியல் வல்லுநர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தற்போது மக்கள் அரசியல் வல்லுநர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், அறிவார்ந்த மேதைகளை விட புத்திசாலிகளாக இருக்கின்றனர் என்பது எனது கருத்து. இத்தருணத்தில், அரபு நாடுகளின் இளைஞர்கள் வயது முதிர்ந்த அரசியல், கலாச்சார, தத்துவ மேதைகளை விட புத்திசாலிகளாகவும், மாற்றங்களை உருவாக்கும் திறமை நிறைந்தவர்களாகவும் திகழ்கிறார்கள்.
க்ரிஸ் அன்டர்சன்: நாங்கள் இதில் அரசியல் ரீதியாக நுழைய விரும்பவில்லை. TEDல் இருக்கும் மேற்கத்திய மக்கள் உங்களோடு இணையவும், தங்களுடைய பங்களிப்பை தரவும் எண்ண செய்ய வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
வாதா கான்பர்: நாங்கள் அரபு நாடுகளில் முக்கியமான ஒன்றை கண்டுள்ளோம் என நான் நினைக்கிறேன். உலக மக்கள் இந்த மிகப் பெரிய மாற்றத்தில் அக்கறை கொண்டுள்ளனர். நம்மோடு அமர்ந்திருக்கும் அல்ஜசீரா இணையதளத்தின் தலைவரான முஹமது நானாபாய், எமது இணையதளத்தை பார்க்கும் பல்வேறு நாட்டவரின் எண்ணிக்கை 2500 சதவிகிதம் பார்க்கும் பல்வேறு நாட்டவரின் எண்ணிக்கை 2500 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக கூறுகிறார். 50 சதவிகிதம் அமெரிக்காவில் இருந்து பார்க்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அக்கறையும், ஆர்வமும் இருப்பதால் தான் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்கின்றனர் என கண்டறிந்தோம். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை தவிர பிற பகுதிகளை அல் ஜசீராவின் ஆங்கில தொலைக்காட்சி சேவை தற்போது கவரவில்லை. வீதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்கிறோம் என உணர்த்தவும் உலகம் முழுவதும் இத்தருணத்தை கொண்டாட வேண்டும் என சொல்லிக் கொள்கிறேன். இது நலிந்த ஒடுக்கப்பட்ட மக்களின் சீரிய எதிர்காலத்திற்கு நாம் கொடுக்கும் ஆதரவாகும்.
க்ரிஸ் அன்டர்சன்:TEDX கைரோ பகுதியின் குழு நண்பர்கள் க்ரிஸ் அன்டர்சன்:TEDX கைரோ பகுதியின் குழு நண்பர்கள் இப்பொழுது கூடி இருக்கின்றனர் அவர்கள் அறையில் சில ஒலிப்பெருக்கிகள் இருக்கின்றன. கண்டிப்பாக உங்கள் உரையை அவர்கள் கேட்டிருப்பார்கள். அவர்களையும், எங்கள் அனைவரையும் ஈர்த்தமைக்கு மிகவும் நன்றி. நன்றி. வணக்கம்.
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
தொழில்நுட்ப வளர்ச்சியால் எழுச்சி கண்டுள்ள இளைஞர்கள் தலைமையில் அரபு நாடுகளில் நிகழ்ந்து வரும் மக்கள் புரட்சிக்கு மத்தியில், வாதா கான்பர், அல் ஜசீரா தொலைகாட்சியின் தலைவர் எகிப்து, துனிசியா, லிபியா போன்ற நாடுகளில் நிகழ்ந்து வரும் நம்பிக்கை தரும் மாற்றங்களை, இந்த சக்தி வாய்ந்த தருணத்தில் தங்கள் இயலாமையை விட்டு வெளிவந்து மாற்றங்களுக்கு குரல் கொடுக்கலாம் என்ற மக்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார்.
As the Director General of Al Jazeera from 2003-2011, Wadah Khanfar worked to bring rare liberties like information, transparency and dissenting voices to repressive states and political hot zones. Full bio »
Translated into Tamil by Saravana kumar Sankaramoorthy
Reviewed by vidya raju
Comments? Please email the translators above.
17:50 Posted: Jul 2007
Views 282,903 | Comments 85
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.