New talks are released daily. Be the first to know!
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this video you
need to get the latest Flash player.
If you are on a mobile device, you may be able to download the video to play.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
TED Conversations
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation, or join one of these:
-
How does one decide to chase a dream?
Started by Michael South 3 Comments -
What is the best advice you received in your life?
Started by Vlad Fiscutean 73 Comments -
If you could teach the world 1 valuable thing you learned, what would it be and why?
Started by Mike L 307 Comments -
What is the best advice you've ever received?
Started by Tarek Seif el nasr 14 Comments -
What advice would you give for someone's first week in their new job?
Started by Tarek Seif el nasr 10 Comments
Interactive Transcript
Click on any phrase to play the video from that point.
உண்மையில் உயர்கல்லூரி மாணவர்களுக்கு நான் நிகழ்த்தும் 2 மணித்தியால செற்பொழிவு இது. இங்கு 3 நிமிடங்களுக்குள் நிகழ்த்தவுள்ளேன். இது ஒரு நாள் நான் விமானத்தில் டெட்டுக்கு போகும் போது தொடங்கியது. 7 ஆண்டுகளுக்கு முன்பு. எனது இருக்கைக்கு அருகில் ஒரு உயர்கல்லூரி மாணவி, பதின்ம வயது, அவள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். அவளுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டியிருந்தது, அவள் எளிமையான கேள்வி ஒன்றை என்னிடம் கேட்டாள். அவள் கேட்டாள், ”வெற்றிக்கு வழிவகுப்பது என்ன?” என்று நான் மிகவும் கூனிக்குறுகிப்போனேன், ஏனென்றால் என்னால் நல்ல பதிலை வழங்கமுடியாமல் போய்விட்டது. நான் விமானத்தில் இருந்து இறங்கி டெட்க்கு போனேன். அப்போது யோசித்தேன், ஜிஸ், நான் வெற்றியாளர்கள் கூடியிருக்கும் இடத்துக்கு நடுவில் அல்லவா இருக்கிறேன். அவர்கள் வெற்றி பெற உதவியது எது என்று அவர்களிடம் கேட்டு ஏன் அந்த சிறுவர்களுக்கு சொல்லகூடாது? ஆகவே நாங்கள் இங்கே, ஏழு ஆண்டுகள், 500 நேர்காணல்களுக்கு பிறகு, வெற்றிக்கு வழியமைப்பன எவை என நான் உங்களுக்கு சொல்லுவதோடு எது டெட் ஜ சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கிறது என்பதையும் சொல்கிறேன். மிகையான ஆர்வமே முதலாவது. பிரிமான் தொமஸ் சொல்வார், ”நான் எனது மிகுந்த ஆர்வத்தினாலேயே உந்தப்பட்டுள்ளேன்”. டெட் ஜ சேர்ந்தவர்களும் ஆர்வத்தினாலேயே வேலை செய்கிறார்கள், அவர்கள் பணத்துக்காக செய்யவில்லை. கரோல் கொலேட் சொல்வார்,”நான் செய்யும் வேலையை யாராவது செய்து தருவதாயின் அவர்களுக்கு பணக்கொடுப்பனவு செய்யத்தயார்.” சுவாரசியமான விடயம் என்னவென்றால், நீங்கள் விருப்பத்துடன் வேலை செய்வீர்களானால், பணம் எவ்வகையிலேனும் வந்து சேரும். உழைப்பு! ருபட் முர்டொச் எனக்கு சொன்னார், ”இங்கு எல்லாமே கடின உழைப்பு தான். சுலபமாக எதுவும் வராது. ஆனால் இதில் நான் கேளிகையடைகிறேன்.” அவர் கேளிகை எனறா சொன்னார்? ருபட்? ஆம்! டெட் ஜ சேர்ந்தவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் அதோடு வேலையில் கேளிகையும் கொள்கிறார்கள். அவர்கள் வேலைக்கு அடிமையானவர்கள் அல்ல. வேலையில் ஆர்வமுள்ளவர்கள் என நான் அனுமானித்தேன். நல்லது! அலெக்ஸ் கார்டன் சொல்வார், ”வெற்றியாளர் ஆக உங்களை ஏதாவது ஒன்றினில் ஈடுபடுத்துங்கள் அதில் நல்ல தேர்ச்சியைப் பெறுங்கள்”. அங்கு ஒரு மாயமும் இல்லை, தேவையானது பயிற்சி, பயிற்சி, பயிற்சி. மனஒருமைப்பாடு!. நோர்மன் யுவிஸன் அப்படித்தான் எனக்கு சொன்னார், ”நீங்கள் ஒரு விடயத்தில் கவனமெடுப்பதே செய்யவேண்டியது என நான் நினைக்கிறேன்.” தள்ளு! டேவிட் கால்லோ சொல்வார், ” உங்களை தள்ளுங்கள். நீங்கள் உங்களை உடல்ரீதியாக, மனரீதியாக தள்ள வேண்டும்.” உங்களை பயந்த சுபாவம் மற்றும் சுய-சந்தேகங்களில் இருந்து தள்ளுங்கள். கோல்டீ கவன் சொல்வார், ”எனக்கு எப்பவுமே சுய சந்தேகம் இருந்தது. நான் போதுமான அளவு நல்லாயில்லை, நான் போதுமான அளவு திறமையாகவில்லை. நான் இதை செய்திருப்பேன் என்று நினைக்கவில்லை.” இதுபோல் உங்களை எப்போதும் தள்ளுவதும் இலகுவானது அல்ல, அதுதான் அவர்கள் அம்மாவை கண்டுபிடித்துள்ளார்கள். (சிரிப்பு) ”என் அம்மா என்னை தள்ளினார்.” என்று பிராங் கிகெரி எனக்கு சொன்னார். சேவை! சேர்வின் நுலண்ட் சொல்வார், ”வைத்தியராக சேவையாற்றுவது என்பது ஒரு வரப்பிரசாதம்.” தற்போது அனேக சிறுவர்கள் தாம் கோடிஸ்வரர்களாக வேண்டும் என என்னிடம் சொல்கிறார்கள். நான் அவர்களிடம் முதலாவதாக சொல்லும் விடயம், ”சரி, நல்லது நீங்கள் உங்களுக்காக சேவை செய்யமுடியாது, நீங்கள் மற்றவர்களுக்கு சேவையாற்றுவதினால் ஏதாவது பெறுமதியை வழங்கவேண்டும். ஏனென்றால் உண்மையில் செல்வந்தர்கள் அப்படித்தான் உருவானார்கள்.” எண்ணங்கள். டெட் இல் உள்ளவர் பில் கேட்ஸ் சொல்வார், ”எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. முதலாவது மைக்ரோ-கணணி மென்பொருள் நிறுவனத்தை நிறுவுவது.” நான் சொல்வேன் அது ஒரு அழகான நல்ல எண்ணம். படைப்பாற்றலினால் எண்ணங்களை உருவாக்குவதில் எந்த மாயமுமில்லை, இது சில சின்ன விடயங்களைச் செய்வது மட்டுமே. இதோ நிறைய சான்றுகளைத் தருகிறேன். விடாமுயற்சி. ஜோ றூஸ் சொல்வார், ”எங்களது வெற்றிக்கு விடாமுயற்சியே முதலாவது காரணம்.” என்று தோல்வியிருந்து விடாமுயற்சியினால் மீளவேண்டும். சி.ஆர்.ஏ.பி இலிருந்து விடாமுயற்சியினால் மீளவேண்டும். அது கருதுவது என்னெவெனில் ”குற்றச்சாட்டு, மறுக்கப்படல், அலட்சியப்படுத்தல் மற்றும் அழுத்தம்.” (சிரிப்பு) ஆகவே, அந்த பெரிய கேள்விக்கான விடை இலகுவானது: 4000 டொலரைக் கொடுத்து டெட்டுக்கு வாருங்கள். அல்லது அப்படி முடியாவிட்டால், இந்த எட்டு விடயங்களையும் செய்யுங்கள் -- என்னை நம்புங்கள், இந்த பெரிய எட்டு விடயங்களும் வெற்றிக்கு வழிவகுக்கும். டேட்டைச் சேர்ந்தவர்களே! உங்களது நேர்காணல்களுக்கா நன்றி
About The Speaker
A self-described average guy who found success doing what he loved, Richard St. John spent more than a decade researching the lessons of success -- and distilling them into 8 words, 3 minutes and one successful book.
Full bio and more links
About This Talk
ஏன் பலர் வெற்றியடைகிறார்கள்? அவர்கள் திறமைசாலிகள் என்பதினாலா? அல்லது அவர்கள் அதிர்டசாலி என்பதாலா? இல்லை. வெற்றியின் உண்மையான இரகசியங்களை ஆய்வாளரான றிச்சாட் சென். ஜோன்ஸ், அவர் செய்த பலவருட நேர்காணல்களை சுருக்கமாக 3 நிமிட படவில்லைக்காட்சியாக தருகிறார். இது தவிர்க்கக் முடியாத ஒன்று.
Translated into Tamil by Balachandran Ramesh
Reviewed by Suthanthirapalan Gowrishankar
Comments? Please email the translators above.
What to Watch Next
Subscribe to TED
Related Themes And Tags
We want you to share our Talks!
Just follow the guidelines outlined under our Creative Commons license.

Email This



This comment will be attributed to . Not ? Sign out.