நாம் வளர்ந்தபோது வாழ்வில் நிறைய பொருட்களுடன் ஊடாடுகிறோம் நமது தினசரி வாழ்வில் அவ்வாறு உபயோகபடுத்துபவை ஏராளமானவை ஆகும். நமது கணினி கருவிகள் போல் இல்லாமல் இப்பொருட்கள் உபயோகப்படுத்த மிகவும் இனிமையானவை இப்பொருட்களை பற்றி பேசும் போது மற்றொரு விஷயமும் நம் நினைவிற்கு வருவது அது சைகை ஆகும் எவ்வாறு அப்பொருட்களை கையாள்வது எவ்வாறு அப்பொருட்களை நமது தினசரி வாழ்வில் பயன்படுத்துவது என்பவையாகும் நாம் இந்த சைகை பாஷை இப்போருட்களுடன் மட்டுமல்லாது மற்றவர்களுடன் உரையாடும் போதும் உபயோகப்படுத்துகிறோம். "வணக்கம்" எனப்படும் இந்த சைகை ஒருவருக்கு மதிக்கும் சின்னமாக கருதப்படுகிறது. அல்லது இந்தியாவில் எந்த குழந்தைக்கும் சொல்லித்தர தேவை இல்லை இந்த சைகையானது கிரிக்கெட்-ல் "four"என்பதாகும் . இது தினசரி வாழ்வின் கல்வி அறிவாக வருகிறது.
ஆகையால், நான் மிக்க ஆர்வமானேன், முன்பிலிருந்தே எனக்கு எவ்வாறு நமது அறிவு தினசரி பொருட்களையும் அதன் சைகையைப் பற்றியும் நாம் அதைஉபயோகப்படுத்தும் விதத்தையும் ஏன் மின்னணு உலகத்தோடு ஊடாட பயன் படுத்தக்கூடாது கணணி விசைபலகை மற்றும் சுட்டி காட்டிலும் நான் ஏன் கணிப்பொறியை உலகத்தில் இருக்கும் மற்ற பொருட்களைப் போலவே இயக்க கூடாது?
ஆகையால், இந்த ஆராய்ச்சியை எட்டு வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்தேன் எனது மேசையில் இருந்த சுட்டி-யில் ஆரம்பித்தேன். எனது கணிபொறியுடன் உபயோகப் படுத்தாமல் அதை திறந்தேன். உங்களில் அநேகமானவர்க்கு தெரிந்து இருக்கும், அன்றைய நாட்களில் சுட்டி உள்ளே ஒரு பந்து இருக்கும் மற்றும் இரண்டு சக்கரங்கள் பந்து எவ்வாறு நகர்கிறது என்று கணிபொறிக்கு வழிகாட்டும் மற்றும், அதன் விளைவாக, சுட்டியும் நகர்கிறது ஆக, நான் சுற்றும் பந்தில் ஆர்வமானேன், எனக்கு இன்னும் தேவையாக இருக்க, எனது நண்பனின் சுட்டியும் இரவல் வாங்கினேன் மீண்டும் அவனிடம் தரவே இல்லை -- இப்பொழுது என்னிடம் நான்கு சக்கரங்கள் இருந்தன. சுவாரசியமாக, அந்த சக்கரங்கள் வைத்து அதை சுட்டியில் இருந்து எடுத்து ஒரு கோட்டில் வைத்தேன். சில நூல்களும், கப்பியும் மற்றும் சுருளி வில்லும் இருந்தன. எனக்கு சைகையை புரிந்து கொள்ளும் கருவி கிடைத்தது அக்கருவி நகர்வதை உணரும் கருவியாக இரண்டு டாலர்களில் கிடைத்தது. இதன் மூலம், நான் செய்யும் அசைவுகளை கணினி உலகத்தில் பிரதி எடுக்க முடிந்தது எட்டு வருடங்களுக்கு முன் நான் செய்த இந்த சின்ன கருவி மூலம் இது 2000 சாத்தியமானது.
ஏனெனெனில், இந்த இரண்டு உலகத்தையும் இணைப்பதில் ஆர்வமானேன் ஒட்டக்கூடிய குறிப்பு பற்றி யோசித்தேன். இதை ஏன் நாம் மின்னணு உலகத்தோடு இணைக்க கூடாது என்று நான் நினைத்தேன் ஓட்டும் குறிப்பு தலை ஏன் மின்னணு உலகத்துடன் இணைக்க கூடாது? என் தாய்க்கு தாள்ளில் எழுதிய செய்திக் குறிப்பு குறுஞ்செய்தியாக வர இயலும் அல்லது நினவு படுத்தும் செய்தியாகலாம் தானாக எனது நாள்காட்டி கருவிக்கு அல்லது எனது செயல் பட்டியலுக்கு வர இயலும். மேலும் நாம் மின்னணு உலகத்தில் தேட முடியும் மேலும் மின்னணு உலகத்தில் வினவ கேள்விகேட்க முடியும் Dr.ஸ்மித் வீட்டு விலாசம் எது? இந்த அமைப்பு எனக்கு அச்சுப்ரதி எடுத்துகொடுக்கும் இதை காகித உள்ளிடு வெளியீடு அமைப்பாக உபயோகிக்க முடிந்தது காகிதத்தால் ஆனது
எனது இன்னொரு தேடுதலில் முப்பரிமாணத்தில் வரைய கூடிய பேனாவை செய்ய நினைத்தேன் இந்த பேனாவை உருவாக்கினேன் இது கட்டிட வரைபட கலைஞர்களுக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும் முப்பரிமாணத்தில் எண்ண மட்டும் அல்லாது வரையவும் மிகவும் உள்ளுணர்வு மிக்க வழியாக இருக்கும்
பிறகு நினைத்தேன் நாம் ஏன் கூகிள் வரைபடத்தை உலகில் இருக்கும் மற்ற பொருட்களை வைத்து தேடக்கூடாது, கணினியின் விசைப்பலகு இல்லாமல் என்னுடைய பொருட்களை அதன் மேல் வைத்தேன் என்னுடைய கடவு சீட்டை அதன் மேல் வைக்க எனது விமானம் எந்த வாசல் கதவிலிருந்து புறப்படும் என்ற தகவலை எனக்கு தரும் காபி கப்பை வைத்தால் மேலும் காபி எங்கு கிடைக்கும் அல்லது இந்த காபி கப்பை எங்கு குப்பையில் போடவேண்டும் என்ற செய்தியை தரும்♪
இவை அனைத்தும் நான் முன்பு செய்த சில ஆராய்ச்சிகள், இதை செய்ததற்கு காரணம் இந்த இருவுலகயும் சிரமமில்லாமல் இணைப்பது தான் எனது எல்லா ஆராய்ச்சிகளிலும் ஒரு பொதுவான விஷயம் அன்றாட பொது பொருட்களை மின்னணு உலகத்திற்கு எடுத்து செல்வததிற்கான முயற்சி நான் சில பொருட்களை அல்லது உள்ளுனர்வுமிக்க வாழ்வியல் விஷயங்களை மின்னணு உலகத்திற்கு எடுத்து செல்ல முயன்றேன் மின்னணு சாதனங்களை உள்ளுனர்வுமிக்கவயாக மாற்றுவதே லட்சியம்
பிறகு எனக்கு புரிந்தது நாம் அனைவரும் கணக்கு செய்வதில் ஆர்வம் அதிகம் இல்லாமல் தகவலில் தான் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறோம் நமக்கு நம்மை சுற்றியுள்ள பொருட்களை பற்றி தெரிய வேண்டும் நமக்கு நம்மை சுற்றி இயங்குகின்ற பொருட்களை பற்றி தெரிய வேண்டும்
அதனால் கடந்த வருட ஆரம்பித்தில் நாம் ஏன் இதை மாற்று வழியில் சிந்திக்க கூடாது என்று நினைத்தேன் ஏன் மின்னணு உலகத்தின் சாந்தை எடுத்து அன்றாட உலகத்தில் பூசக்கூடாது ஏன் மின்னணு உலகத்தின் சாந்தை எடுத்து அன்றாட உலகத்தில் பூசக்கூடாது ஏனென்றால் தற்போது புள்ளியம் செவ்வக சாதனத்தில் அடைக்கப்பட்டுள்ளது நமது சட்டை பைகளுக்குள் புகுமாறு ஏன் இந்த அடைந்த மின்னணு புள்ளியத்தை விசாலமாக நாம் அனுதினம் உபயோகிக்கக்கூடிய பொருட்களுடன் இணைக்க கூடாது அதனால் நான் புதிய மொழியை கற்க வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் இந்த புள்ளியதொடு உறவாட முடியும்
இந்த கனவு மெய்பட நான் ஒரு படம் கட்டும் கருவியை என் தலையில் மாட்டி கொண்டேன் அதனால் தானோ என்னவோ இதை தலை கவச படக்கருவி என்று அழைத்தார்களோ என்னவோ நான் இதை மிகவும் நேரிடையாக எடுத்துக்கொண்டேன் எனது இரு சக்கிர வாகன தலை கவசத்தை எடுத்துக்கொண்டேன் அதில் சிறிய ஓட்டை இட்டு படக்கருவியை மாட்டினேன் தற்போது என்னால் என்ன செய்ய முடியும் நான் என்னை சுற்றி உள்ள பொருட்களை இந்த மின்னணு படகருவியை வைத்து விரிவு செய்ய முடியும்
ஆனால், பின்னர் இந்த மின்னணு புள்ளியங்களுடன் உறவாட வேண்டும் என்று உணர்ந்தேன் அதனால் ஒரு சிறிய புகைப்படக்கருவியை பொருத்தினேன் இது ஒரு மின்னணு கண்ணை போல வேலை செய்யும் பின்னர் இதை விட ஒரு படி மேலே சென்றோம் அனைவரும் எளிதில் உபோயோகபடுதகூடிய சிறிய அளவிலான கழுத்தில் தொங்கும் புகைப்பட கருவி தங்கள் அனைவருக்கும் தெரிந்த ஆறாவது அறிவு சாதனம் தான் அது
இந்த தொழில்நுட்பத்தின் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் உங்களுடன் உங்கள் மின்னணு உலகத்தை எடுத்து செல்கிறீர்கள் எங்கு சென்றாலும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எந்த சுவரிலும் அல்லது எந்த பரப்பிலும் ஒரு திரையாக இடைமுகமாக புகைப்பட கருவி தங்களின் அணைத்து செய்கைகளையும் கவனித்து கொண்டு இருக்கிறது தங்கள் கைகளால் என்ன செய்து கொண்டு இருக்கிறிர்கள் என்று தங்களின் செய்கைகளை அது புரிந்து கொள்கிறது நீங்கள் பாருங்கள் சில வண்ண குப்பிகள் நாம் ஆரம்ப காலத்தில் உபயோகபடுத்தினோம் தாங்கள் எந்த சுவரையும் வைத்து கொண்டு வண்ணம் தீட்டலாம் ஒரு சுவரின் முன்பு நின்று கொண்டு சுவரில் வண்ணம் தீட்டலாம் நாம் ஒரே ஒரு விரலின் தடத்தை மட்டும் இங்கு பார்க்கவில்லை தங்களின் இரண்டு கைகளையும் உபயோகிக்க சுதந்திரம் தரப்படுகிறது அதனால் தங்களின் இரண்டு கைகளையும் உபயோகபடுத்தி படத்தை விரிவாக்கவும் சுருக்கவும் முடியும் இரு விரல்களை வைத்து கிள்ளி பெரிது படுத்தலாம் புகைப்படக்கருவி தங்களின் எல்லா பிம்பங்களையும் உணர்கிறது பிம்பத்தின் நிறம் மற்றும் அதன் வெளி கோட்டையும் மற்றும் பல நெறி முறைகளும் அதனுள்ளே சென்று கொண்டு இருக்கிறது தொழில்நுட்ப ரீதியாக இதை விளக்குவது கடினம் ஆனால் இது ஒரு உள்ளுணர்வுமிக்க வெளியீடு வழங்குகிறது நாம் நம்மை உணர்த்த
ஆனால்இதை வெளியில் எடுத்து செல்வதில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன் தாங்கள் தங்கள் பையிலிருந்து புகைப்பட கருவியை எடுக்காமலேயே படம் எடுக்க முடியும் தங்களுக்குக இது படம் எடுத்து தரும்
பின்னர் எதாவது ஒரு சுவரின் மீது எடுத்த இந்த புகைப்படங்களை பார்க்க முடியும் அல்லது இந்த புகைப்படத்தை மாற்ற முடியும் அல்லது நண்பனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடியும் நாம் நமது அடுத்த புதிய சகாப்தத்திற்கு செல்கிறோம் அங்கே கணக்கு செய்வது அன்றாட வாழ்வில் ஒன்றாகிவிடும் அவசரத்திற்கு சுவர் கிடைக்கவில்லையா இருக்கவே இருக்கிறது உங்கள் கை சில சிறிய வேலைகளுக்கு அதை உபயோகப்படுத்தி கொள்ளலாம் இங்கு நான் தொலைபேசி எண்ணை சுழற்றுகிறேன் எனது கையை உபயோகபடுத்தி புகைப்பட கருவி தங்களின் கைகளின் இயக்கத்தை மற்றும் பதிவு செய்யவில்லை மேலும் நாம் நம் கையில் என்ன வைத்து இருக்கிறோம் என்றும்
நாம் இங்கு என்ன செய்கிறோம் என்றால் உதாரணத்திற்கு இங்கு இந்த புத்தகத்தின் அட்டைபடம் பல ஆயிரம் லட்ச கணக்கான புத்தகங்களுடன் ஒப்பிடு செய்யப்பெற்று இது எந்த வகை புத்தகம் என்று அலசப்படுகிறது. அந்த செய்தி அதற்கு கிடைத்த பிறகு இந்த புத்தகத்தை பற்றி ஆய்ந்துரைகள் அனைத்தும் சொல்கிறது நியூ யார்க் டைம்ஸ் இதை பற்றி நல்ல பரிந்துரை கொடுத்து இருக்கலாம் அல்லது தங்கள் காதுகளால் கேட்கலாம் இந்த புத்தகத்தை பற்றிய பரிந்துரையை ஹார்வர்ட் பல்கலை கழகத்திடமிருந்து
இது ஒபமாவின் கடந்த வார பயணம் MIT க்கு இரண்டு தலை சிறந்த MIT ... நன்றி கூறுகிறேன் அதனால் இங்கு நான் ஒரு நிகழ்படத்தை செய்திதாளில் பார்க்கமுடியும் செய்திதாள் தற்போதைய வானிலை அறிக்கையை உடனுக்குடன் தெரிவிக்க முடியும் கணினியின் முன்பு உட்கார்ந்து தெரிந்து கொள்ளாமலேயே என்ன நான் சொல்வது சரி தானே
நான் திரும்பி செல்லும்போது எனது கடவு சீட்டை உபயோக படுத்தி விமானம் எவ்வளவு தாமதமாக வருகிறது என்று ஏனென்றால் அந்த நேரத்தில் நான் எனது இ- கைதொலைபேசியை எடுத்து உபோயோகபடுத்த தேவையில்லை இந்த தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்வில் புதிய பாதையை ஏற்படுத்தி தரும் ஆமாம் சிரிப்பொலி இது நாம் மற்றவர்களோடு எப்படி உறவாடுகிறோம் என்பதையும் மாற்றக்கூடியது இந்த அன்றாட உலகத்தில் இதில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் "நான் போசோன் மெட்ரோவில் செல்லும்போது ரயிலின் உள்ளே பின் பாங் விளையாட முடியும் தரையில், சரி தானே சிரிப்பொலி என்ன நம்மால் கற்பனை செய்ய முடியும் என்பது தான் இதற்கு எல்லை இந்த தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்வில் ஒன்றோடு ஒன்றாகும் போது
உங்களில் பலர் என்னுடன் வாதாடலாம் நாம் எப்போதும் பொருட்களுடன் மட்டும் வேலை செய்வதில்லை என்று நாம் பல சமயம் கணக்கு செய்கிறோம் மற்றும் காகிதத்தில் உள்ள விஷயத்தை தொகுக்கிறோம் இது போல் நிறைய விஷயங்கள், இதை எல்லாம் எப்படி செய்ய போகிறோம் உங்களில் பலர் சந்தைக்கு வர விருக்கும் அடுத்த தலைமுறை டாப்லட் கணினி பற்றி அறிந்திருப்பீர்கள் அதற்காக காத்திருக்காமல் நான் சொந்தமாக காகிதம் கொண்டு எனக்காக செய்தேன் இங்கு எனது புகைப்படக்கருவியை எடுத்துவிட்டு எல்லா கை தொலைபேசியிலும் ஒலிவாங்கி இருக்கும் அந்த ஒலிவாங்கியை எடுத்து அதை காகிதத்தோடு கவ்வி இணைத்தேன் நீங்கள் பார்க்கும் எந்த காகிததொடும் இணைக்க முடியும் இப்போது உங்கள் தொடுதலின் சத்தம் எனக்கு தாங்கள் எங்கு காகிதத்தை தொடுகிர்கள் என்று எனக்கு உணர்த்தும் எனக்கு தாங்கள் எங்கு காகிதத்தை தொடுகிர்கள் என்று எனக்கு உணர்த்தும் ஆனால் புகைப்படக்கருவி எனது விரல்கள் தடத்தை பின் தொடரும்
உங்களால் திரைப்படங்களும் காண முடியும் (மதிய வணக்கங்கள் "எனது பெயர் ரஸ்ஸல்") (நான் ஒரு வன மற்றும் பழங்குடி ஆராய்ச்சியாளர்)
மேலும் நீங்கள் விளையாட முடியும் (கார் என்ஜின் சத்தம்) இங்கு இந்த புகைப்படக்கருவி தங்கள் எப்படி இந்த காகிதத்தை பிடித்து இருக்கிறிர்கள் என்று தெரிந்து கொண்டு கார் பந்தய விளையாட்டு விளையாட முடிகிறது கரவொலி
உங்களில் பலர் வலையில் உலாவ முடியும் என்று அறிந்திருப்பீர்கள், உலாவ முடியும் அமாம் வலையில் எந்த வலைபக்கதிற்கும் சென்று பார்க்க முடியும் அல்லது அணைத்து கணக்குகளையும் ஒரு சிறு காகிதத்தில் போட்டு விட முடியும் தங்களுக்கு எங்கு தேவை படுகிறதோ இதை மேலும் ஆர்வப்படுத்த நான் இதை எப்படி அன்றாட வாழ்வில் நமது செயல்களோடு இணைக்க முடியும் என்று ஆர்வம் கொண்டேன் என்னுடைய மேஜைக்கு மறுபடி வரும்போது நான் அந்த செய்தியை எனது விரல்களால் எடுத்து எனது மேஜை தளத்திற்கு எடுத்து சென்று எனது கணினியை உபயோகிக்க முடியும்
ஏன் கணினி மட்டும் ? நாம் காகிதத்தோடு விளையாடலாம் காகித உலகம் மிகவும் ஆர்வமானது இங்கு நான் ஒரு ஆவணத்தின் பகுதியை எடுத்து இங்கு இட்டு இரண்டாவது பகுதியை வேறு ஒரு ஆவணத்தில் இருந்து எடுத்து நான் இந்த ஆவணத்தில் உள்ள செய்தியை மாற்றுகிறேன் ம்ம்ம்ம்... இது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது சரி இதை அச்சுப்ரதி எடுக்கலாம் இப்போது அந்த அச்சுப்ரதி என் கையில் எனது வேலை மிகவும் உள்ளுணர்வு மிக்கதாக உள்ளது இருபது வருடங்களை காட்டிலும் தற்போது இந்த இரு உலகங்களின் இடையே உறவாடுவதற்கு.
கடைசியாக ஒரு சிந்தனை அன்றாட வாழ்வியல் பொருட்களோடு தகவலையும் ஒருங்கினைப்பது நமக்கு மின்னணு உலகத்துடன் உள்ள தூரத்தை குறைக்கும் மேலும் இது இன்னொருவகையில் நமக்கு உதவியாக இருக்கும் நாம் மனிதனாக இருக்க எப்போதும் அன்றாட வாழ்வியல் பொருட்களோடு தொடர்புடன் இருக்க இது நம்மை ஒரு இயந்திரம் இன்னொரு இயந்திரம் முன் அமர்ந்து இருக்கும் இயந்திரமாக அல்லாமல் பார்த்து கொள்ளும்
கிரிஸ் ஆண்டேர்சொன்: பிரணவ் முதலில் தங்கள் ஒரு மாமேதை உண்மையாக இது ஒப்பில்லாதது உயர்ந்தது இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறிர்கள் ? எதாவது நிறுவனம் தொடங்க போகிறிர்களா? அல்லது இது ஆராய்ச்சிக்காக மட்டும் தானா?
பி மி : நிறைய நிறுவனங்கள் உண்டு மீடியா லேப் நிறுவன ஆதரவாளர்கள் இதை வேறு விதமாக எடுத்து செல்ல முயற்சிகிறார்கள் கை தொலைபேசி இயக்குனர்கள் வேறு விதமாகவும் மேலும் இந்திய தொண்டு நிறுவனங்கள் வேறு விதமாகவும் நமக்கு ஏன் ஆறாம் அறிவு? ஓரறிவு குறைந்த மக்களுக்கு நாம் ஐந்தாம் அறிவு தரவேண்டும் பேசமுடியதவர்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை உபயோகபடுத்தி வேறு விதமாக ஒரு ஒலிபெருக்கியை வைத்து அவர்களை பேச வைக்க வேண்டும்
கி ஆ:உங்களுடைய சொந்த செயல் திட்டம் என்ன? தங்கள் MIT இல் தங்க போகிறிர்களா? அல்லது தங்கள் இதை வைத்து வேறு எதாவது செய்ய போகிறிர்களா?
பி மி : இதை நான் நிறைய மக்களுக்கு கிடைக்ககூடியதாக செய்யவிருக்கிறேன் அதை கொண்டு அவர்கள் ஆறாவது அறிவு கருவியை செய்ய முடியும் ஏனென்றால் கணினி வன்பொருள் செய்வதற்கு மிகவும் சுலபமானது அல்லது தாங்களே செய்து கொள்ளலாம் நங்கள் அனைவருக்கும் திறந்த மூலநிரலை அனைவருக்கும் வழங்க இருக்கிறோம் அடுத்த மாதத்திலிருந்து
CA: திறந்த மூலநிரல்... வாவ் !!
CA:தங்கள் இந்தியாவிற்கு மறுபடி திரும்பி வர உத்தேசம் இருக்கிறதா?
CA: தங்களுடைய திட்டம் என்ன? MIT? இந்தியா? தங்களுடைய நேரத்தை எப்படி பயன் படுத்த போகிறீர்கள்
PM: இங்கு நிறைய சக்தி இருக்கிறது, நிறைய கற்க இருக்கிறது நீங்கள் பார்த்த என்னுடைய அணைத்து படைப்புகளும் நான் இந்தியாவிலிருந்து கற்றது தான் தற்போது இதன் விலையை பற்றி நாம் பார்த்தோமானால் இது 300 அமெரிக்க டாலர் தான் ஆகிறது ஒப்பிட்டு பார்த்தால் மேசை தளம் போல இருக்கும் சாதனங்கள் 20,000 அமெரிக்க டாலர் வரை செலவாகிறது சுட்டி வைத்து செய்த சாதனம் தற்போது 2 டாலர் செலவாகிறது ஆனால் முன்பு 5000 அமெரிக்க டாலர் வரை செலவாகும் அதனால் முன்பு ஒரு கருத்தரங்கில் அதை காண்பித்தேன் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு அவர் இதை டாக்டர் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறினார் அதனால் நான் இந்த தொழில்நுட்பத்தை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்று மிகவும் ஆவலாக இருக்கிறேன் இதை ஆய்வுகூடத்திலியே வைத்திருக்காமல்
CA:TED இல் நாங்கள் பார்த்த மக்களில் மிக சிறந்த இரண்டு மூன்று உலக கண்டுபிடிப்பாளர்களில் நீங்கள் ஒருவர். தங்களை இங்கு TEDல் பார்ப்பதில் மிகுந்த பெருமை அடைகிறோம் தங்களுக்கு மிக்க நன்றி மிக அருமை
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
TEDஇந்தியா-வில், பிரணவ் மிஸ்த்ரி நாம் வாழும் உலகமும், கணினி உலகமும் இணைந்து செயல்பட உதவும் பல விதமான ஆய்வுகள் செய்து காட்டினார் - மிக முக்கியமாக அவரது "ஆறாவது அறிவு" சாதனம் மற்றும் புதிய புரட்சி கரமான தாள் வடிவ கணினியாகும். மேடையில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, "ஆறாவது அறிவின்" மென்பொருள் அனைவரும் பயன் படும்வகையில் இலவசமாக்க கிடைக்கப்படும் என்று கூறினார்.
Pranav Mistry is the inventor of SixthSense, a wearable device that enables new interactions between the real world and the world of data. Full bio »
Translated into Tamil by saibhuvi bhaavik
Reviewed by vidya raju
Comments? Please email the translators above.
08:42 Posted: Mar 2009
Views 6,979,574 | Comments 672
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.