இன்று நீங்கள் இங்கே இருக்கிறீர்களென்றால் – நீங்கள் இருப்பதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் – எப்படியாக நீடித்து நிலைக்கக்கூடிய வளர்ச்சியானது நம்மை நம்மிடமிருந்தே பாதுகாக்கும் என்பதை நீங்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இருந்த போதும், நாம் டிஈடி-யில் இல்லாத போது, ஒரு உண்மையான நிலைத்திருக்கும் தன்மைக் கொள்கை வடிவானது சாத்தியமானதல்ல என்பதாக நாம் அடிக்கடி சொல்லப்பட்டோம், குறிப்பாக நியூயார்க் நகரம் போன்ற ஊரகப் பகுதிகளில் பெருமளவிற்காக. அது ஏனென்றால் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ள பெரும்பாலான மக்கள், பொதுத் துறை மற்றும் தனியார் துறை இரண்டிலுமே, அவர்கள் ஆபத்தில் இருப்பது போல் உணர்வதில்லை.
இன்று நான் ஏன் இங்கிருக்கிறேனென்றால், அது ஒரு விதத்தில், ஒரு நாயினால் தான்: 1998-இறுதி வாக்கில், ஒரு மழையில் நான் கண்டுகொண்ட ஒரு கைவிடப்பட்ட நாய்க்குட்டி. நான் எதிர்பார்த்திருந்ததைவிட மிகவும் பெரியதாக அது மாறியது. அது என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகு, கிழக்கு ஆற்று நீர்நிலைக்காகத் திட்டமிடப்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய கழிவு அமைப்பிற்கு எதிராக நாங்கள் போராடிக் கொண்டிருந்தோம், நியூயார்க் நகரத்தின் எங்கள் சிறிய பகுதியானது நியூயார்க் நகரத்தின் வர்த்தகரீதியான கழிவுகளின் 40 சதவீதத்தைக் கையாண்டது என்ற உண்மைக்கு அப்பாற்பட்டு: ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு திவலையாக்கல் நிலையம், ஒரு கழிவுநீர் சாக்கடை நிலையம், நான்கு மின்னுற்பத்தி நிலையங்கள், உலகின் மிகப்பெரிய உணவு வழங்கல் மையம், அதே போன்று வாரத்திற்கு 60:00 டீசல் டிரக்குகளில் கொண்டு வந்து கொட்டும் மற்ற தொழிற்சாலைகள். இந்தப் பகுதிதான் நகரத்திலுள்ள மக்களுக்கு மிகக் குறைந்த வீதத்தில் பூங்காக்களைக் கொண்டுள்ளது.
எனவே பூங்காக்கள் துறையால் சுமார் $10:00 விதை மானிய முன்முயற்சிக்காக நீர்நிலைப் பூங்காத் திட்ட மேம்பாட்டிற்காக நான் தொடர்பு கொள்ளப்பட்டபோது, அவர்கள் உண்மையிலேயே அர்த்தத்தோடுதான் இருக்கிறார்கள் என நான் கபடமற்று நினைத்தேன். என் வாழ்க்கை முழுவதின் இந்தப் பகுதியிலேயே வாழ்ந்திருந்தேன், நான் முன்னதாக குறிப்பிட்டிருந்த அனைத்து அற்புதமான வசதிகளின் காரணமாக நீங்கள் அந்த ஆற்றிற்கு போய்ச்சேர முடியாது. அதன் பின்னாக, ஒரு நாள் காலையில் நான் எனது நாயோடு ஓட்டப்பயிற்சியில் இருந்த போது, நான் இன்னொரு சட்டவிரோத குப்பைமேடு என நினைத்த ஒன்றிற்குள் அது என்னை இழுத்தது. அங்கு களைகளும் குப்பைக் குவியல்களும் நான் இங்கு குறிப்பிட முடியாத மற்ற கூளங்களும் இருந்தது, ஆனால் அது என்னை இழுத்துக் கொண்டேயிருந்தது -- அந்தோபரிதாபம், அதன் முடிவில் பார்த்தால் அதுதான் அந்த ஆறு. இந்த மறந்துபோன சிறு தெருவின் -முனை, என்னை அங்கு கொண்டுசென்ற அந்தக் கைவிடப்பட்ட நாயைப் போன்றே, காப்பாற்றப்பட வேண்டியதாயிருந்தது என்பதை நான் அறிந்து கொண்டேன். நியூ சவுத் பிரன்ஸின் சமுதாயத்தால் நடத்தப்பட்ட புத்தெழுச்சியின் பெருமைக்குரிய ஆரம்பமாக வளரப் போகிறது என நான் அறிந்து கொண்டேன்.
எனது புதிய நாயைப் போன்றே, நான் கற்பனைசெய்திருந்ததை விட மிகப் பெரியதாகிவிட்ட ஒரு யோசனையாகும் அது. போகிற போக்கில் நாங்கள் மிகவும் அதிகமான ஆதரவைச் சேர்த்தோம். 60-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சவுத் பிரான்ஸ் கொண்டிருந்ததிலேயே முதலாவது நீர்நிலைப் பூங்காவாக ஹண்ட்ஸ் பாயிண்ட் ஆற்றோர பூங்கா மாறியது. நாங்கள் அந்த $10:00 விதை மானியத்தை 300 மடங்குகளுக்கும் அதிகமாக நீட்டித்து ஒரு $ 3 மில்லியன் பூங்காவாக மாற்றிவிட்டோம்.
முடிவில், உண்மையிலேயே நான் – எனது அன்பானவரோடு எனது திருமண வாக்குறுதியை பரிமாற்றிக் கொண்டேன். உங்களுக்கு மிக்க நன்றி. (கைதட்டல்). அது தான் அவர் எனது புட்டத்தைத் தட்டியபடி இருப்பது, அதை அவர் எப்போதுமே செய்கிறார். (சிரிப்பு). (கைதட்டல்).
ஆனால் சுற்றுச்சூழல் நீதிச் சமுதாயத்தில் வாழ்கிற நாம் நிலக்கரிச் சுரங்கத்திலுள்ள கேனரி பறவைதான். பிரச்சினைகளை நாம் இப்போதே உணர்கிறோம், நாம் அதை சில காலமாக கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் நீதி, இந்த வார்த்தையோடு அவ்வளவாக பழக்கமில்லாத உங்களில் சிலருக்கு, இப்படித்தான் ஆகிறது. எந்தச் சமுதாயமுமே மற்றதை விட அதிகமான சுற்றுச்சூழல் சுமைகளாலும் குறைவான சுற்றுச்சூழல் பலன்களாலும் சுமத்தப்படக் கூடாது.
துரதிஷ்டவசமாக, இனமும் வகுப்பும் நல்ல காரியங்களை ஒருவர் கண்டுகொள்ளும் வகையில், பூங்காக்களையும் மரங்களையும் போல, மேலும் மோசமான காரியங்களை ஒருவர் கண்டுகொள்ளும் வகையில், மின்னுற்பத்தி நிலையங்கள் மற்றும் கழிவு சதிகளைப் போல, மிக அதிகமாக நம்பக்கூடிய குறிப்பிட்டுக் காட்டுபவைகளாக உள்ளன. அமெரிக்காவில் ஒரு கருப்பின நபராக, எனது ஆரோக்கியத்திற்கு காற்று மாசானது மிகப்பெரிய ஆபத்தைக் காண்பிக்கிற ஒரு பகுதியில் வாழ்வதற்கான வாய்ப்பை, ஒரு வெள்ளையின நபரைப் போல இரண்டு மடங்கு அதிகமாகக் கொண்டுள்ளேன். நான் ஒரு மின்னுற்பத்தி நிலையம் அல்லது வேதிப்பொருள் தொழிற்சாலையின் நடைதூரத்திற்குள் ஐந்து மடங்கு அதிகமாக வாழ்வதற்கான வாய்ப்பை அதிகமாகக் கொண்டுள்ளேன் – அப்படித்தான் நான் வாழ்கிறேன். இத்தகைய நில-உபயோக முடிவுகள் உடல் பருமனாதல், நீரிழிவு மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்குக் கொண்டு சென்ற பயங்கரமான நிலைமைகளைத் தோற்றுவித்தன. எதற்காக ஒருவர் தங்களது வீட்டை விட்டுவிட்டு ஒரு விஷத்தன்மையுள்ள அண்டைப்பகுதியில் ஒரு சுறுசுறுப்பான நடைக்குச் செல்லவேண்டும்? நமது 27 சதவீத உடற் பருமன் வீதமானது அதிகம், இந்த நாட்டிற்குக் கூட, மேலும் நீரிழிவும் சேர்ந்தே வருகிறது. நான்கு சவுத் பிரான்ஸ் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆஸ்துமா உள்ளது. ஆஸ்துமாவிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நமது வீதமானது தேசீய சராசரியை விட ஏழு மடங்கு அதிகமானது. இத்தகைய தாக்கங்கள் ஒவ்வொருவரின் வழியிலும் வருகிறது. மேலும் திடக் கழிவுச் செலவு, மாசுபடுதல் மற்றும் மிகுந்த துர்நாற்றத்தோடு சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளுக்கு நாமனைவருமே அதிகமாகச் செலவிடுகிறோம், நமது இளம் கருப்பின மற்றும் லத்தீன் அமெரிக்க ஆண்களைச் சிறையிலிடுவதின் செலவு, அவர்கள் சொல்லமுடியாத அளவிற்கான கட்டவிழ்க்கப்படாத திறமைகளைக் கொண்டுள்ளார்கள். நம்மிடையே வசிப்பவர்களில் 50 சதவீதத்தினர் வறுமைக் கோட்டில் அல்லது அதற்குக் கீழே வசிக்கிறார்கள். நம்மில் 25 சதவீதத்தினர் வேலையில்லாதவர்கள். குறைந்த-வருவாய் கொண்ட குடிமக்கள் அடிக்கடி அவசர சிகிச்சையை அவர்களது முதன்மைக் கவனிப்பாகத் தேடுகிறார்கள். இதுவும் கூட வரி செலுத்துபவர்களுக்கு ஒரு உயர்வான கட்டணத்திலேயே கிடைக்கிறது மேலும் அது எந்த நேர்விகித பலன்களையும் உண்டாக்குவதில்லை. ஏழைமக்கள் இன்னும் ஏழையாக மட்டுமே இருப்பதில்லை, அவர்கள் சுகாதாரம் இல்லாமலும் இருக்கிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக, என்னைப்போன்று தீர்விற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிற நிறைய மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் குறுகிய காலத்தில் நிறத்தின் குறைந்த வருவாய் சமுதாய வாழ்வுகளை சமரசம் செய்து கொள்ளாதவர்கள், நீண்ட காலத்தில் நம்மை அழித்துவிட மாட்டார்கள். நம்மில் யாரும் அதை விரும்புவதில்லை, நாம் அதை நம்மிடையே பொதுவாகக் கொண்டுள்ளோம். எனவே வேறு எதை நாம் பொதுவானதாகக் கொண்டுள்ளோம்?
நல்லது, முதலாவதாக, நாமெல்லாருமே நம்பமுடியாத அளவிற்கு பார்வைக்கு அழகானவர்கள் – (சிரிப்பு)—உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, முதுகலை பட்டங்கள் ஆகியவற்றை நிறைவு செய்திருக்கிறோம், ஆர்வத்தைத் தூண்டுமிடங்களுக்கு பயணம் செய்திருக்கிறோம், உங்கள் இளம் வயதில் குழந்தைகளைக் கொண்டிராத, நிதிநிலையில் வலிமையான, ஒருமுறைகூட சிறையிலடைக்கப்படாதவர்கள். சரி. நல்லது. (சிரிப்பு).
ஆனால், ஒரு கருப்பினப் பெண்ணாக இருப்பதற்கு அப்பாற்பட்டு, வேறு ஏதோ ஒரு வழியில் நான் உங்களில் பெரும்பாலானோரைவிட வித்தியாசமானவள். நான் எனது அண்டைப்பகுதியில் இருக்கும் கட்டிடங்களில் பாதி எரிந்து விழுவதைக் கவனித்திருக்கிறேன். எனது பெரிய அண்ணன் லென்னி வியாட்னாம் போரில் சண்டையிட்டார், எங்கள் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் சுட்டுத் தள்ளுவதற்காக மட்டுமே. இயேசுவே. சாலையோரத்திலுள்ள ஒரு விரிசலுள்ள வீட்டில் நான் வளர்ந்தேன். ஆமாம், நான் சேரியிலிருந்து வந்த ஒரு ஏழை கருப்பினக் குழந்தை. இத்தகைய காரியங்கள் என்னை உங்களிடமிருந்து வித்தியாசமானவளாக ஆக்குகின்றன. ஆனால் நாம் பொதுவாகக் கொண்டுள்ள காரியங்கள் என்னுடைய சமுதாயத்திலுள்ள பெரும்பாலானவர்களிடமிருந்து என்னை தள்ளி வைக்கிறது, மேலும் நான் இந்த இரண்டு உலகங்களுக்குமிடையே இருக்கிறேன், ஒவ்வொன்றிலும் நியாயத்திற்காகப் போரடுகிற போதுமான இதயத்தோடு.
எனவே எப்படியாக காரியங்கள் நமக்கு வித்தியாசமாகிப் போகின்றன? 40 களின் கடைசியில், எனது தந்தை – ஒரு அடிமையின் மகன், இழுத்துக் கொண்டு செல்லும் ஒரு சுமை தூக்கி – சவுத் பிரான்ஸின் ஹண்ட்ஸ் பாயிண்ட் பகுதியில் ஒரு வீட்டை வாங்கினார், அதன் பின் சில ஆண்டுகளுக்குப் பின்பாக எனது தாயை மணம் முடித்தார். அந்த நேரத்தில், சமுதாயம் பெரும்பாலும் வெள்ளையினத்தவரான, பணியாளர் வகுப்பைச் சார்ந்த அண்டை வீட்டார்கள். எனது தந்தை தனியானவராக இருக்கவில்லை. அவரைப் போன்றே மற்றவர்களும் அமெரிக்கக் கனவின் அவர்களது விதத்தைத் தொடர்ந்தபோது வெள்ளையினச் சண்டையானது சவுத் பிரான்ஸிலும் நாடுமுழுவதிலுமுள்ள பல நகரங்களிலும் பொதுவானதாகிவிட்டது. வங்கிகளால் சிவப்புக்-கோடு உபயோகப்படுத்தப்பட்டது, அதில் நகரத்தின் ஒருசில பிரிவுகள், எங்களுடையது உட்பட, எவ்வித மூலதனத்தையும் செய்வதற்கு உரிமையில்லாததாக ஆக்கப்பட்டது. பல நில உரிமையாளர்கள், அவர்களது கட்டிடங்களை தீவைத்து கொளுத்தி விட்டு காப்பீட்டுப் பணத்தைப் பெற்றுக் கொள்வது அது போன்ற நிலைமைகளின் கீழ் விற்பதை விட மிகவும் இலாபமானது என்பதாக நம்பினார்கள் – மரித்தவர்கள் அல்லது காயம்பட்ட முன்னாள் குடியிருந்தவர்களைப் பொருட்படுத்தாமல்.
ஹண்ட்ஸ் பாயிண்டானது முன்பாக, வேலை-செய்ய-நடந்து செல் சமுதாயமாகும், ஆனால் இப்போது குடியிருப்பவர்களுக்கு வேலையுமில்லை நடந்து செல்வதற்கு வீடுமில்லை. ஒரு தேசீய பெருவழிச்சாலை கட்டுமான வளர்ச்சியும் எங்கள் பிரச்சினைகளை அதிகமாக்கியது. நியூயார்க் மாநிலத்தில், ரோபெர்ட் மோசஸ் ஒரு முனைப்புடைய பெருவழிச்சாலை விரிவாக்க பிரச்சாரத்தை முனைந்து நடத்தினார். அதன் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்று, வெஸ்ட்செஸ்டரிலுள்ள வசதியான சமுதாயத்தின் குடியிருப்போர் மான்ஹட்டன் செல்வதற்கு எளிதானதாக்குவதாகும். சவுத் பிரான்ஸ், இடையில் இருப்பதால், எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. பெரும்பாலும் குடியிருப்போருக்கு அவர்களின் கட்டிடங்கள் தரைமட்டமாவதற்கு முன்பாக ஒரு மாதத்திற்கும் குறைவான அறிவிப்பு கொடுக்கப்பட்டது. 600:00 மக்கள் இடபெயர்ந்தனர். சவுத் பிரான்ஸிலிருந்து வந்தவர்களெல்லம் மாமா வேலைசெய்பவர்களும், போதையடிமைகளும், வேசிகளும் தான் என்பது பொதுவான உணர்வு. உங்கள் இளம் வயதில் உங்க்ள் சமுதாயத்திலிருந்து எந்த நன்மையும் விளையப்போவதில்லை என்பதாக உங்களிடம் சொல்லப்பட்டால், அது மோசமானதும் கேவலமானதுமாகும், அது உங்களில் எப்படியாகப் பிரதிபலிக்கும்? எனவே இப்போது, எனது குடும்பச் சொத்து மதிப்பில்லாததாகிவிட்டது, நாங்கள் கொண்டிருந்ததெல்லாமே அந்த வீடுதான் என்பதைத் தவிர. அதிர்ஷ்டவசமாக எனக்கு, அந்த வீடும் அதற்குள்ளிருந்த அன்பும், போகிற போக்கில் எனது ஆசிரியர்கள், என்னை ஆக்கியவர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்தான உதவியோடு கூட, போதுமானதாக இருந்தது.
இப்போது, ஏன் இந்தக் கதை முக்கியமானதாக ஆகிறது? ஏனென்றால் ஒரு திட்டமிடும் நோக்கத்தில், பொருளாதாரச் சீரழிவு சுற்றுச் சூழல் சீரழிவாகிறது, அது சமுதாயச் சீரழிவாகிறது. 1960 களில் தொடங்கிய மூலதனக் களைப்பு வரவிருக்கிற அனைத்து சுற்றுச் சூழல் அநியாயங்களுக்குமான மேடையை அமைத்தது. எனது அண்டைப்பகுதிகளில் மாசு உண்டாக்கும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு, பழமையான இடமாக அறிவிப்பதும் நில-உபயோக ஒழுங்குமுறைகளும் இன்னமும் இன்றைய நாளிலும் கூட உபயோகிக்கப்படுகின்றன. நில-உபயோக திட்டம் முடிவுசெய்யப்பட்ட போது இத்தகைய காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டனவா? இத்தகைய முடிவுகளோடு எவ்வளவு செலவுகள் சம்பந்தப்பட்டுள்ளன? யார் அதைச் செலவழிக்கிறார்கள்? யார் பலனடைகிறார்கள்? உள்ளூர் சமுதாயம் என்ன சிரமங்களையடைகிறது என்பதை ஏதாவது நியாயப்படுத்துகிறதா? இது தான் “திட்டமிடுதல்” – நமது சிறந்த நலத்தை மனதில் கொள்ளாத- ஏலங்களில்.
அதை நாங்கள் உணர்ந்தவுடன், அது தான் எங்கள் சொந்த திட்டமிடுதலுக்கான நேரம் என்பதை முடிவு செய்தோம். முன்னதாக நான் உங்களுக்குச் சொன்ன அந்தச் சிறிய பூங்கா தான் சவுத் பிரான்ஸில் ஒரு பசுமைவழி இயக்கத்தை கட்டுவதின் முதல் படி. சாலையோர இருசக்கர வாகன வழிகளோடு கூடிய திறந்த வெளி நீர்நிலைப் பூங்கா திட்டத்தை வடிவமைப்பதற்காக நான் ஒரு ஒன்றே-கால்-மில்லியன் மத்திய போக்குவரத்து மானியத்தைற்காக எழுதினேன். பொருள்சார்ந்த மேம்பாடுகள் போக்குவரத்துப் பாதுகாப்பு, கழிவுகள் மற்றும் மற்ற வசதிகளை வைப்பது போன்றவற்றைக் குறித்த பொதுத் திட்டங்களைத் தெரிவிப்பதற்கு உதவுகிறது, அது சரியாகச் செய்யப்படும் பட்சத்தில், ஒரு சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை சமரசம் செய்து கொள்வதில்லை. அவைகள் உடற்பூர்வமாக அதிகம் செயல்பாடுள்ளவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது, அதே போல உள்ளூர் பொருளாதார மேம்பாட்டிற்கும். இருசக்கர வாகனக் கடைகள், பழரச நிலையங்கள் பற்றி யோசித்துப் பாருங்கள். முதல் கட்ட திட்டங்களைக் கட்டுவதற்கு நாங்கள் $20 மில்லியன்களை ஏற்பாடு செய்தோம். இது லேஃபெய்ட்டே அவின்யூ – இது ஆர்க்கிடெக்டுகளால் மறுவடிவமைப்பு செய்யப்பட்டபடி மேத்யூஸ்-நீல்சென் லேண்ட்ஸ்கேப். இந்த வழி கட்டி முடிக்கப்பட்டவுடன், இது சவுத் பிரான்ஸை ரேண்டால்ஸின் தீவுப் பூங்காவின் 400 ஏக்கர்களுக்கும் அதிகமான பகுதிகளோடு இணைக்கும். தற்போது நாங்கள் சுமார் 25 அடி தண்ணீரால் பிரிக்கப்பட்டிருக்கிறோம், ஆனால் இந்த இணைப்பு அதை மாற்றிவிடும்.
மேலும் நாங்கள் இயற்கைச் சூழலை வளப்படுத்துகிறோம், அதன் வளமை அதைவிட அதிகமானதை எங்களுக்குத் திரும்பக் கொடுக்கும். நாங்கள் பிரான்ஸ் சூழல்சார்ந்த பாதுகாப்பாளர் பயிற்சி என்றழைக்கப்படுகிற ஒரு திட்டத்தை நடத்தி வருகிறோம், அது சூழல் சார்ந்த மீட்புகள் துறையில் வேலைவாய்ப்புப் பயிற்சியை வழங்குகிறது, எங்களது சமுதாயத்திலிருந்தான அநேகர் இத்தகைய நன்கு-சம்பளமளிக்கும் வேலைகளிக்கு போட்டிபோடும் திறமையைக் கொண்டிருக்கும் வகையில். கொஞ்சம் கொஞ்சமாக, நாங்கள் பசுமை நிறைந்த வேலைகளால் அந்தப் பகுதியை நிரப்பி வருகிறோம் – அதன் பின் மக்கள் அவர்களது சுற்றுச்சூழலில் நிதிசார்ந்த மற்றும் தனிப்பட்ட பங்கைக் கொண்டிருப்பார்கள். ஷெரிடன் எக்ஸ்பிரஸ்வே என்பது ரோபெர்ட் மோசஸ் காலத்தின் சரியாக உபயோகப்படுத்தப்படாத நினைவிடமாகும், அது அதனால் பிரிக்கப்பட்ட அண்டைப்பகுதியச் சார்ந்தவர்களுக்கு எவ்வித கரிசனையும் கொள்ளாமல் கட்டப்பட்டது. போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் கூட, அது முற்றிலுமாக உபயோகப்படுத்தப்படாமற் போய்விடுகிறது. சமுதாயமானது அந்த பெருவழிச்சாலையை நீக்குவதற்கான ஒரு மாற்று போக்குவரத்துத் திட்டத்தை உருவாக்கியது. நாங்கள் இப்போது இந்த 28 ஏக்கர்களானது எப்படியாக பூங்கா நிலமாக சிறப்பாக உபயோகப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை எதிர்நோக்குவதற்காக அனைத்து பங்களிப்பவர்களையும் ஒன்றாகக் கொண்டுவருவதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்தோம்.
நாங்கள் நகரத்தின் - நியூயார்க் நகரத்தின் முதல் பசுமை மற்றும் குளுமையான கூரை திட்டத்தை எங்கள் அலுவலகங்களின் மேல்மடியில் அமைத்துக் காண்பித்தோம். குளுமையான கூரைகள் என்பன அதிகமாகப் பிரதிபலிக்கக் கூடிய மேற்புரங்கள் அவைகள் சூரிய வெப்பத்தை உறிஞ்சிக் கொள்ளாமல் அதை கட்டிடத்திற்கோ அல்லது வளிமண்டலத்திற்கோ கடத்தி விடுகிறது. பசுமைக் கூரைகள் என்பன மண் அல்லது உயிருள்ள தாவரங்களாகும். வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டு, ஊரக “வெப்பத் தீவுகள்” விளைவிற்கு பங்களித்து சூரிய வெளிச்சத்தில் வீணாகிப் போகும், பின்பு அவைகளை நாமே சுவாசிக்கிறோம், பெட்ரோலியம்-அடிப்படையிலான கூரைப் பொருட்களுக்குப் பதிலாக இவை இரண்டுமே உபயோகப்படுத்தப்பட முடியும். பசுமைக் கூரைகள் 75 சதவீதம் வரையிலான மழையைத் தக்கவைத்துக் கொள்கிறது, எனவே அவைகள் செலவு அதிகமான குழாய்களில் நீர் கொண்டுசெல்லும் தீர்வுகளைக் குறைக்கின்றன – அது போன்ற திட்டங்கள் பெரும்பாலும், என்னுடையதைப் போன்ற சுற்றுச்சூழல் நீதிச் சமுதாயங்கள் அமையக் காரணமாகிறது. மேலும் அவைகள் நமது குட்டி நண்பர்களுக்கு வசிப்பிடங்களையும் தருகின்றன! மிகவும் – (சிரிப்பு)—மிகவும் குளிர்ச்சி! எப்படியாயினும், மறுபக்கம், செய்துகாட்டுகிற திட்டம் எங்களது பசுமைக் கூரை அமைத்துத் தரும் வர்த்தகத்தை மேம்படுத்தியது, அப்படியாக சவுத் பிரான்ஸிற்கு வேலைகளையும் நீண்டநாள் நிலைக்கக் கூடிய பொருளாதாரச் செயல்பாடுகளையும் கொண்டுவந்தது. (சிரிப்பு). (கைதட்டல்). நான் அதையும் விரும்பினேன் தான்.
எப்படியாயினும், எனக்குத் தெரியும் கிரிஸ் எங்களிடம் சொன்னார், கூடாரங்களைப் போடாதீர்கள் என்று, ஆனால் உங்கள் அனைவரின் கவனத்தையும் நான் கொண்டிருப்பதால்: எங்களுக்கு முதலீட்டாளர்கள் தேவைப்படுகிறார்கள். கூடாரங்களை முடிவுக்குக் கொண்டுவர. அனுமதிக்குக் கோரிக்கை விடுவதைவிட மன்னிப்பிற்குக் கோருவது சிறந்தது. எப்படியோ -- (சிரிப்பு). (கைதட்டல்).
சரி, காத்தரினா. ஹிப்-ஹாப்பையும் ஜாஸையும் நினைத்துப் பாருங்கள். இரண்டுமே நீர்நிலைச் சமுதாயங்கள், ஒன்றின் கண்ணுக்கெட்டும் தொலைவில் மற்றொன்றின் தொழிற்சாலைகளையும் குடியிருப்புகளையும் ஏற்படுத்தின. காத்தரினாவிற்குப் பின்னான காலத்தில், நாங்கள் இன்னமும் அதிகமானவைகளைப் பொதுவாகக் கொண்டுள்ளோம். நாங்கள் தான் மேலும் மோசத்திலும் மோசமாக, அலட்சியமான ஒழுங்குமுறை முகமைகளால், பேரழிவுண்டாக்கும் பகுதிகளாலும், கடுமையில்லாத அரசாங்கத்தின் பொறுப்புணர்ச்சி ஆகியவற்றாலும் அலட்சியப்படுத்தப்பட்டவர்கள், சிறுமைப்படுத்தப்பட்டவர்கள், தவறாக உபயோகப்படுத்தப்பட்டவர்கள். ஒன்பதாவது வார்டின் இடிப்போ அல்லது சவுத் பிரான்ஸின் இடிப்போ தவிர்க்கமுடியாததாக இருந்தது. நாங்கள் எங்களை நாங்களே எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற மதிப்புமிக்க பாடங்களோடு எழுந்து வெளிவந்தோம். நாங்கள் ஊரக சாயம் வெளுத்துப் போவதின் தேசிய அடையாளங்களை விட உயர்ந்தவர்களாகவே இருந்தோம். ஜனாதிபதிகளின் வெற்றுப் பிரச்சார வாக்குறுதிகளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் வந்து போய்விட்டன. இப்போது சவுத் பிரான்ஸ் புலம்பிக் கொண்டிருந்ததைப் போன்றே வளைகுடாக் கடற்கரையும் ஒரு பத்தாண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலாக புலம்பிக் கொண்டிருக்க அனுமதிக்க வேண்டுமா? அல்லது நாம் பலன் தரக்கூடிய நடவடிக்கைகளை எடுத்து, என்னைப் போன்ற சமுதாயங்களில் கைவிடப்பட்ட நிலையில் பிறந்திருக்கிற அடிமட்ட சேவகர்களின் உள்ளாகவே வளர்க்கப்பட்ட வளங்களிலிருந்து கற்றுக் கொள்ளப் போகிறோமா?
இப்போது கவனியுங்கள், அது அவர்களது உரிமை அல்லது கடமை என்பதால், தனிப்பட்ட நபர்கள், பெருநகர நிர்வாகம், அல்லது அரசாங்கமானது இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்ற வேண்டுமென நான் எதிர்பார்க்கிறதில்லை. இந்த காட்சியளிப்பு இன்று நான் கடந்து வந்திருக்கிற சிலவற்றை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஒரு சிறிய குட்டித் துண்டைப் போன்று. உங்களுக்கு எவ்விதமான சிறிய யோசனையுமே இல்லை. ஆனால் நீங்கள் விரும்பினால், நான் உங்களுக்கு அப்புறமாகச் சொல்வேன். ஆனால், இது கடைமுனையில் உள்ள மக்களை ஊக்குவிக்கும், ஒரு அடிப்படையான வேலைதான், அல்லது அதுபோன்ற ஒருவரின் அபிமானம் தான் என்பதை நான் அறிவேன். நீண்ட நாள் நிலைக்கக் கூடிய வளர்ச்சி உண்டாக்கக் கூடிய “மும்மடங்கு அடிக்கோடு” என்பதாக அழைக்க விரும்புகிறதில் நான் ஆர்வமுடையவளாக இருக்கிறேன். உரியவர்கள் அனைவருக்கும் நேர்மறையான பலன்களை உண்டாக்கக் கூடிய திறனைக் கொண்டுள்ள வளர்ச்சிகள்: மேம்பாட்டாளர்கள், அரசாங்கம் மற்றும் இத்தகைய திட்டங்கள் சென்றடைகிற சமுதாயம். தற்போது, நியூயார்க் நகரத்தில் அது நடந்துகொண்டிருக்கவில்லை. மேலும் நாம் ஒரு கூட்டு ஊரகத் திட்டக் குறைபாட்டோடு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தின் தொடர்ச்சியான தள்ளுபடிகள் சௌத் பிரான்ஸிலுள்ள திட்டமிடப்பட்டிருக்கிற ஆனால் அதிகரிக்கப்பட்ட போக்குவரத்து, மாசு, திடக்கழிவு மற்றும் திறந்த வெளியின் மீதான தாக்கம் ஆகியவற்றின் ஒட்டு மொத்த விளைவுகளை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதின் மீது நகர முகமைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மிகக் குறைந்தளவே உள்ளது. உள்ளூர் பொருளாதார மற்றும் வேலை உருவாக்கத்திற்கான அவர்களது அணுகுமுறையும் கூட மிகவும் நொண்டியாகத்தான் உள்ளது, அவைகள் ஆச்சரியப்படுத்தக் கூட செய்யவில்லை. ஏனென்றால் அதற்கு மேலாக, மிகவும் விரும்பப்பட்ட சமுதாயப் பூங்காக்களை இடித்துவிட்டு ரூத் கட்டிய வீட்டை இப்போது உலகின் மிகவும் பணக்கார விளையாட்டுக் குழு இடமாற்றுகிறது. இப்போது, நான் முன்னதாக உங்களுக்குச் சொன்ன அந்த புள்ளிவிபரங்களைவிட மிகக் குறைவானதையே நாம் கொண்டிருப்போம். சவுத் பிரான்ஸின் 25 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களே கார்களைக் கொண்டிருந்தாலும், இத்தகைய திட்டங்கள் ஆயிரக்கணக்கான வாகன நிறுத்த இடங்களை உட்கொண்டிருக்கிறது, பொதுமக்கள் போக்குவரத்தின் அடிப்படையில் விரைவான போக்குவரத்தும் உள்ளது. இப்போது, அந்தப் பெரிய விவாதத்திலிருந்து எது இல்லாமல் இருக்கிறதென்றால், சுகாதாரமற்ற, சுற்றுச்சூழல் ரீதியாக சவால்களையுடைய சமுதாயத்தை அமைப்பதற்கும் அதற்கெதிராக கட்டமைப்பு, நீண்ட நாள் நிலைக்கக் கூடிய மாற்றாங்களை அமைப்பது இவை இரண்டிற்குமான ஒரு கூட்டு முயற்சியான செலவு-பலன் பகுப்பாய்வு தான். இத்தகையப் பிரச்சினைகளின் மீது தெளிவுண்டாக்குவதற்காக எனது முகமையானது கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் மற்றவர்களோடு நெருக்கமாகப் பணியாற்றிவருகிறது.
நாம் இதை நேரடியாகவே அடைவோம். நான் வளர்ச்சிக்கு எதிரானவளல்ல. நம்முடையது ஒரு நகரம், பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு காடு அல்ல. எனது உள்ளார்ந்த முதலீட்டாளரைத் தழுவிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை நீங்கள் அனைவரும் அதைக் கொண்டிருக்கலாம், அப்படி ஒன்றைக் கொண்டிருக்க வில்லையானால், உங்களுக்கு ஒன்று தேவை. (சிரிப்பு). மேம்படுத்துபவர்கள் பணம் சம்பாதிப்பதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை. ஒரு நீண்ட நாள் நிலைக்கக் கூடிய, சமுதாய-நட்பான மேம்பாடானது இன்னமும் அதிர்ஷ்டத்தை உண்டாக்கக் கூடும் என்பதற்கு போதுமான முந்தைய நடைமுறைகள் உள்ளன. உடன் டிஈடி-யாளர்களான பில் மெக்டொனஃப் மற்றும் எமரி லோவின்ஸ் – அப்படியாக எனது ஹீரோக்கள் – நீங்கள் உண்மையிலேயே அதைச் செய்ய முடியும் என்பதைக் காண்பித்திருக்கிறார்கள். அதிகபட்சமாக-தவறாக உபயோகிக்கிற அரசியல் ரீதியாக பாதிக்கப்படக்கூடிய சமுதாயங்கள் சுயலாபத்திற்காக செய்யும் மேம்பாடுகளோடு எனக்கு பிரச்சினையுண்டு தான். அது தொடர்கிறது என்பது நாமனைவருக்கும் வெட்கக்கேடானது, ஏனென்றால் நாம் உருவாக்கும் எதிர்காலத்திற்கு நாமனைவருமே பொறுப்பானவர்கள். அதிகமாக நடக்கச் சாத்தியமானவைகளைக் குறித்து என்னை நானே நினைவுபடுத்துக் கொள்ளும் காரியங்களில் ஒன்று, மற்ற நகரங்களில் உள்ள தீர்க்கதரிசிகளிடமிருந்து கற்றுக் கொள்வது. இது தான் என்னைப் பொறுத்த உலகமயமாக்கல்.
நாம் பகோட்டாவை எடுத்துக் கொள்வோம். ஏழ்மையான, லத்தினோ, சுட்டுவிட்டு ஓடும் வன்முறை மற்றும் போதை மருந்து கடத்தலால் சூழப்பட்டது. சவுத் பிரான்ஸைப் போன்றதல்லாத ஒரு பெயர். இருந்த போதும், 1990 களின் இறுதிவாக்கில் இந்த நகரம் உயர்ந்த அளவில் அதிகாரமுடைய மேயரான என்ரிக் பெனலோசா அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது. அவர் புவியியல் அமைப்புகளைப் பார்வையிட்டார். சில பகோட்டோ மக்கள் தான் கார்களை வைத்திருந்தார்கள், இருந்தும் அந்த நகரத்தின் மிக அதிகமான பங்கானது அவர்களுக்கு சேவையளிப்பதிலேயே அற்பணிக்கப்பட்டிருந்தது. நீங்கள் ஒரு மேயரால், நீங்கள் அதைக் குறித்து சிலவிஷயங்களைச் செய்ய முடியும். அவரது நிர்வாகம், முக்கிய முனிசிபல் போக்குவரத்து வழிகளை நெருக்கியது, ஐந்து வழிச் சாலைகளிலிருந்து மூன்றாகக் குறைத்தது, அத்தகைய தெருக்களில் வாகனம் நிறுத்துவதைச் சட்ட விரோதமாக்கியது, நடைபாதைகளையும் இருசக்கர வாகனங்கள் போகும் சாலைகளையும் அகலப்படுத்தியது, பொது வணிக வளாகங்களை உருவாக்கியது உலகிலேயே மிகவும் திறமையான பேருந்து பொதுமக்கள் போக்குவரத்து அமைப்புகளை உருவாக்கியது. அவரது புத்திசாலித்தனமான முயற்சிகளுக்காக, அவர் கிட்டத்தட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினால் துரத்தப்பட்டார். ஆனால் மக்கள் அவர்களது அன்றாட வாழ்க்கைகளில் பிரதிபலிக்கும் பிரச்சினைகளில் அவர்கள் முதலாவதாக வைக்கப்படுவதைக் காண ஆரம்பித்தார்கள், நம்பமுடியாத காரியங்கள் நடந்தன. மக்கள் குப்பை போடுவதை நிறுத்திக் கொண்டார்கள். குற்ற வீதங்கள் குறைந்து போயின. ஏனென்றால் தெருக்கள் மக்களால் உயிரோட்டமாக இருந்தன. அவரது நிர்வாகம் பலவிதமான சரியான ஊரகப் பிரச்சினைகளைத் தாக்கியது, மேலும் ஒரு மூன்றாம்-உலக நிதிநிலையிலேயே. இந்த நாட்டில் நமக்கு மன்னிப்பே கிடையாதே. நான் வருந்துகிறேன். இதில் அடிப்படியான விஷயம் என்னவென்றால், அவர்களது மக்கள்-முதல் என்ற கொள்கையானது யார் உண்மையிலேயே கார் வைத்துக் கொள்ள முடியுமோ அவர்களைத் தண்டிப்பதற்காக கொண்டுவரப்பட்டதல்ல, அதைவிட அவைகள் பகோட்டோ மக்கள் அனைவருக்கும் நகரத்தின் புத்தெழுச்சியில் வாய்ப்பையளிப்பதற்கே கொண்டுவரப்பட்டன. வளர்ச்சியானது பெரும்பான்மை ஜனங்களின் சிரமத்தின் மீது வரக்கூடாது என்பது யூஎஸ்ஸில் ஒரு அடிப்படையான யோசனையாகவே இன்னமும் கருதப்படுகிறது. ஆனால் பகோட்டாவின் மாதிரியானது அதை மாற்றுவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது.
இருந்த போதும் நீங்கள் அதிகாரம் என்ற பரிசால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அதனால் தான் நீங்கள் இங்கிருக்கிறீர்கள் மேலும் நாம் பகிர்ந்து கொள்ளும் தகவல்களுக்கு நீங்கள் மதிப்பளிக்கிறீர்கள். உங்கள் அதிகாரத்தை நீங்கள் எங்கும் ஒட்டுமொத்த நீண்ட காலம் நிலைக்கிற மாற்றத்திற்கான ஆதரவில் உபயோகியுங்கள். டிஈடி –யில் அதைப் பற்றி பேசமட்டுமே செய்யாதீர்கள். இது நான் கட்ட விரும்புகிற தேச அளவிலான கொள்கைத் திட்டம், நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிறபடி, அரசியல் என்பது தனிப்பட்டது. புதிய கருப்பினத்தை பசுமையாக மாற்ற உதவுங்கள். நீண்ட காலம் நிலைக்கிறதை கவர்ச்சிகரமானதாக்க உதவுங்கள். உங்கள் உணவு வேளை மற்றும் மதுவேளை உரையாடல்களின் ஒரு பகுதியாக அதை மாற்றுங்கள். சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நீதிக்காகப் போராடுவதற்கு எனக்கு உதவுங்கள். மூன்றுமடங்கு-அடிப்படை-நிலை இலாபத்தோடு கூடிய மூலதனங்களுக்கு ஆதரவளியுங்கள். ஒவ்வொருவரையும் மேசைக்குக் கொண்டுவருவதின் மூலமாகவும் ஒட்டுமொத்த திட்டமிடுதலானது எங்கும் நிறைவேற்றப்பட முடியும் என்பதை வலியுறுத்துவதின் மூலமாக நீண்டநாள் நிலைப்பதை ஜனநாயகப்படுத்த எனக்கு உதவுங்கள். ஓ நல்ல விஷயம், இன்னும் கொஞ்சம் நேரம் கொண்டிருப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கவனியுங்கள் -- நான் அன்றொரு நாள் காலையுணவிற்குப் பின்னாக திரு. கோர் அவர்களிடம் பேசும் போது, அவரது புதிய சந்தைப்படுத்தல் வியூகத்திற்குள்ளாக எப்படி சுற்றுச்சூழல் நீதிச் சேவகர்கள் உள்ளாக்கப்படப் போகிறார்கள் என்பதாக அவரிடம் கேட்டேன். அவரது பதிலளிப்பானது ஒரு நிதித் திட்டம். நான் நிதியுதவிக்காக கேட்டுக்கொண்டிருக்கவில்லை என்பதை அவர் புரிந்து கொண்டார் என நான் நினைக்கவில்லை. நான் அவரையே ஒரு காணிக்கையாக்கிக் கொண்டிந்தேன். (கைதட்டல்).
என்னைச் சஞ்சலப்படுத்தியது என்னவென்றால் இந்த மேல்-கீழ் அணுகுமுறையானது இன்னமும் நம்மைச் சுற்றியுள்ளது. இப்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள், நமக்குப் பணம் தேவைப்படுகிறது. (சிரிப்பு). ஆனால் முடிவு-எடுக்கும் நடைமுறையில் அந்த மேசையில் கடைமட்ட குழுக்கள் தேவைப்படுகிறார்கள். திரு. கோர் அவர்கள் நமக்கு நினைவூட்டிய, நாம் ஒவ்வொரு நாளும் வீணாக்குகிற 90 சதவீத ஆற்றலில், நமது ஆற்றல், புத்திசாலித்தனம் மற்றும் கஷ்டப்பட்டு சம்பாதித்த அனுபவம் ஆகியவைகளை அந்தக் கணக்கோடு சேர்க்காதீர்கள். (கைதட்டல்).
இது போல் உங்களை நான் சந்திப்பதற்கு நான் வெகு தொலைவிலிருந்து வந்திருக்கிறேன். தயவுசெய்து என்னை வீணடித்து விடாதீர்கள். ஒன்றாக இணைந்து பணியாற்றுவதின் மூலம், அந்த சிறிய, வேகமாக வளர்ந்து வரும் தனிப்பட்டவர்களின் குழுக்களில் ஒன்றாக நாமும் மாறிவிட முடியும், அவர்கள் உண்மையிலேயே நாம் உண்மையாகவே உலகை மாற்றிவிட முடியும் என நம்புவதற்கு தைரியத்தையும் ஊக்கத்தையும் கொண்டுள்ளார்கள். வாழ்க்கையிலுள்ள மிக, மிக வித்தியாசமான நிலைகளில் இருந்து இந்தக் கூட்டத்திற்கு நாம் வந்திருக்கலாம், ஆனால் என்னை நம்புங்கள், நாமனைவரும் நம்பமுடியாத அளவிற்கு ஆற்றலுள்ள காரியத்தை பகிர்ந்து கொள்கிறோம் – நமக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை எல்லாமே இலாபமாக அடைவதற்கே. சியோ பெல்லோஸ்! (கைதட்டல்) Notes: 21. word missing 38. meaning improved 52. word missing 69. word missing 72. word improvement 81. meaning missing 224. spelling mistake
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation, or join one of these:
ஒரு உணர்ச்சியூட்டப்பட்ட பேச்சில், மெக்ஆர்த்தர்-வென்ற சமூக சேவகியான மெஜோரா கார்டர் அவர்கள் சவுத் பிரான்ஸில் சுற்றுச் சூழல் நீதிக்காகப் போராடிய அவரது போராட்டத்தை விவரிக்கிறார் –- மேலும் எப்படியாக அவரது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அயலகத்தார் பெரும்பாலும் குறைபாடுடைய ஊரகக் கொள்கைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் காண்பிக்கிறார்.
Majora Carter redefined the field of environmental equality, starting in the South Bronx at the turn of the century. Now she is leading the local economic development movement across the USA. Full bio »
18:00 Posted: Jan 2008
Views 2,346,576 | Comments 413
20:34 Posted: Oct 2007
Views 240,469 | Comments 57
15:43 Posted: Feb 2008
Views 383,260 | Comments 52
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.