நான் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க இங்கு வந்துள்ளேன். சுமார் 20 ஆண்டுகளுக்கு சற்று முன்னதாக நான் வருத்தப்படுகின்ற ஒன்றை செய்துள்ளேன். ஏதோ ஒன்று நான் பெருமைப்படக்கூடியதல்ல, ஏதோ ஒன்று, பல வழிகளிலும் யாரும் தெரிந்திருக்க கூடாது என நான் விரும்புவது. ஆனால் இங்கு அதை வெளிப்படுத்த கடப்பாடு உள்ளதாக உணர்கிறேன். (சிரிப்பு) 1980 களின் பிற்பகுதியில், விவேகமற்ற வாலிப தருணத்தில் நான் சட்டக்கல்லூரிக்கு சென்றேன். (சிரிப்பு)
இப்போது, அமெரிக்காவில், சட்டம் ஒரு தொழில்சார் பட்டப்படிப்பு. நீங்கள் பல்கலைக்கழக படிப்பை முடித்தபின் சட்டக்கல்லூரிக்கு போகிறீர்கள். நான் சட்டகல்லூரியில் இருந்த போது, நான் நன்றாக செய்யவில்லை. மென்மையாக சொன்னால், நான் சிறப்பாக செய்யவில்லை. உண்மையில், சட்டக்கல்வியில் ஒரு பகுதியையே படித்து பட்டம் பெற்றேன் அது 90 சதவீதத்துக்கு மேல் சாத்தியமாக்கியது. (சிரிப்பு) உங்களுக்கு நன்றி. நான் என் வாழ்வில் ஒரு நாளும் சட்டத்தை பரீட்சித்ததில்லை. நான் அதை ஒருகாலும் அனுமதித்ததில்லை எனலாம். (சிரிப்பு)
ஆனால் இன்று, எனது மேன்மையான தீர்மானத்துக்கு எதிராக, எனது சொந்த மனைவியின் ஆலோசனைக்கு எதிராக, எனது சட்டத்திறமைகளில் சிலவற்றை தூசு தட்ட போகிறேன், சட்டத்திறமைகளில் மீதமுள்ள சிலவற்றை. நான் இங்கு கதை சொல்ல வரவில்லை. நான் ஒரு வழக்கை முன்வைக்கப் போகிறேன். உறுதியான தலைப்புள்ள, சாட்சிகள் அடிப்படையான, வழக்கறிஞர்களது வழக்கு என நான் துணிந்து கூறக்கூடியது, எமது தொழில்களை நடாத்துவது எப்படி என்பதை மீள்சிந்திப்பதற்காக.
நடுவர்களாகிய சான்றோர்களே பெண்மணிகளே, இங்கே சற்று கவனியுங்கள். இது மெழுகுதிரி புதிர் என அழைக்கப்படுவது. உங்களில் சிலர் இதை முன்னரே பார்த்திருக்கலாம். இது 1945 இல் கார்ள் டுண்கர் என்ற உளவியலாளரால் உருவாக்கப்பட்டது. கார்ள் டுண்கர் உருவாக்கிய இந்த பரிசோதனை நடத்தை விஞ்ஞானம் சார்ந்த பலவகைப்பட்ட பரிசோதனைகளுக்கு பயன்பட்டது. இது எப்படி வேலை செய்யும் எனப்பார்போம், இப்ப நான் தான் பரிசோதனையாளர் எனக்கொள்வோமாயின், நான் உங்களை ஒர் அறைக்குள் அழைத்துச்சென்று, ஒரு மெழுகுதிரியும், சில தட்டைதலை ஆணிகளும் சில தீக்குச்சிகளும் தருகிறேன். உங்கள் வேலை இந்த மெழுகுதிரியை சுவருடன் பொருத்த வேண்டும் ஆனால் மெழுகு உருகி மேசைமேல் விழக்கூடாது, எனின் நீங்கள் என்ன செய்வீர்கள்.
இப்ப பலர் தட்டைதலை ஆணியால் மெழுகுதிரியை சுவருடன் பொருத்த முயல்வார்கள். அது சரிவரமாட்டாது. யாரோ ஒருவர், சிலர், நான் பார்த்தேன் யாரோ ஒருவர் இதை செய்வது போல் இங்கே பாவணைகளைக் காட்டுகிறார். சிலர் சிறந்த யோசனை வைத்திருப்பார்கள், அவர்கள் தீக்குச்சியை பற்ற வைத்து, மெழுகுதிரியை பக்கவாட்டில் உருக்கி சுவருடன் ஒட்ட முயலவார்கள். இது அருமையான திட்டம். அதுவும் சரிவரமாட்டாது. கடைசியில், 5 அல்லது 10 நிமிடங்களில், பலர் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள், அதை நீங்கள் இங்கே பார்க்கமுடியும். இயல்பான செயல் நிலைத்திருத்தல் என்று அழைக்கப்படுவதை வெற்றிகொள்வதற்கான திறவுகோல். நீங்கள் அந்த பெட்டியை, ஆணிகள் வைப்பதற்கான பெட்டியாகவே பார்க்கிறீர்கள். ஆனால் இது இன்னொரு பாவனையையும் உடையது. மெழுகுதிரியை தாங்கும் தட்டாக.
இப்போது நான் ஒரு பரிசோதனை பற்றி உங்களுக்கு கூறவேண்டும் இந்த மெழுகுதிரி புதிரை பாவித்து சாம் குளுக்ஸ்பெர்க் என்ற விஞ்ஞானியால் செய்யப்பட்டது, அவர் தற்போது அமெரிக்காவில் பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் இருக்கிறார். இது உற்சாகமூட்டலின் வலுவை காட்டுகிறது. அவர் செய்தது இதுதான், பரிசோதனையில் பங்குபற்றுபவர்களை சேர்த்தார். அவர்களிடம் சொன்னார், ”எவ்வளவு விரைவாக நீங்கள் இந்த புதிரை தீர்க்கிறீர்கள் என்பதை பார்க்க நான் உங்கள் நேரத்தை கணிக்கப்போறேன்?” ஒரு குழுவுக்கு அவர் சொன்னார், மாதிரிகளை உருவாக்க நான் உங்கள் நேரத்தை கணிக்கப்போறேன், சராசரியாக எவ்வளவு நேரம் இப்புதிரை தீர்ப்பதற்கு தேவைப்படுகிறது.
இரண்டாவது குழுவுக்கு அவர் சன்மானம் வழங்க முன்வந்தார். அவர் சொன்னார், ”நீங்கள் குறுகிய நேரத்துக்குள் முடித்தவர்களில் முதல் 25 வீதத்துக்குள் வந்தால் நீங்கள் 5 டொலரை பெறுவீர்கள். நீங்கள் இன்று சோதிக்கப்பட்ட எல்லோரிலும் பார்க்க விரைவாக செய்தால் நீங்கள் 20 டொலரை பெறுவீர்கள்.” இது பல வருடங்களுக்கு முன்னையது, இப்ப பணவீக்கத்துக்கமைய மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு சில நிமிடங்களுக்கான வேலைக்கான கண்ணியமான தொகைப்பணம். இது ஒரு அருமையான ஊக்குவிப்பு.
கேள்வி: எவ்வளவு விரைவாக இந்த குழு புதிருக்கு தீர்வு கண்டிருப்பார்கள்? விடை: அவர்கள் எடுத்துக்கொண்டது, சராசரியாக, மூன்றரை நிமிடங்கள் அதிகமாக. மூன்றரை நிமிடங்கள் அதிகம். இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? நான் ஒரு அமெரிக்கன். நான் திறந்த பொருளாதரத்தில் நம்பிக்கையுள்ளவன் என்ற வகையில் நான் கருதுவது இது இப்படி நடந்திருக்க கூடாது. சரியா? (சிரிப்பு) உங்கள் வேலை ஆட்கள் நன்றாக செயற்பட வேண்டுமானால், நீங்கள் அவர்களுக்கு பரிசளிக்கிறீர்கள் தானே? ஊக்குவிப்பு சம்பளம், தரகு, அவர்களது யதார்த்த நிகழ்ச்சிகள். என அவர்களை ஊக்கிவிப்பது. அப்படித்தான் தொழில்துறை செயல்படுகிறது. ஆனால் அது இங்கு நடப்பதில்லை. நீங்கள் கொண்டிருக்க வேண்டிய ஊக்குவிப்புகள் கூரிய சிந்தனைக்கும், விரைவான படைப்பாற்றலுக்கும் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது இங்கு எதிர்மறையாக நடைபெற்றுள்ளது. இது சிந்திப்பதை மந்தப்படுத்துவதுடன் படைப்பாற்றலை தடுக்கிறது.
இந்த பரிசோதனையின் சுவாரசியம் என்னவெனில், இது நேர்மாறான முடிவல்ல. இது மீண்டும் மீண்டும் பெறப்பட்டது திரும்பத் திரும்ப, 40 வருடங்களாக. இந்த உறுதியற்ற ஊக்குவிப்புகள், நீங்கள் இதைச் செய்தால், அதை பெறமுடியும் என்கிற வகையில், சில சந்தர்ப்பங்களில் வேலை செய்தன. ஆனால் பல பணிகளுக்கு அவைகள் ஒன்றில் வேலை செய்யாது அல்லது அநேகமாக தீங்கு ஏற்படுத்துகிறது. இது சமூகவியல் விஞ்ஞானத்தில் உறுதியான கண்டபிடிப்புகளில் ஒன்று மற்றும் அதிகமாக புறக்கணிக்கப்பட்ட விடயங்களில் ஒன்று.
நான் கடந்த சில வருடங்களாக மானிட ஊக்குவிப்பு பற்றிய விஞ்ஞானத்தை கவனித்துக்கொண்டிருக்கிறேன் குறிப்பாக மாற்றமடைகின்ற வெளிப்படையான ஊக்குவிப்புகளையும் உள்ளக ஊக்குவிப்புகளையும். நான் உங்களுக்கு சொல்லுகிறேன், இது அருகிலும் இல்லை. நீங்கள் அறிவியலூடக பார்த்தால், அங்கே ஒரு பொருந்தாமை விஞ்ஞானம் அறிந்ததுக்கும், தொழில்களில் செய்வதற்கும் இடையில் உள்ளது. எச்சரிக்கையானது என்னவென்றால், எங்கள் தொழில் நடைமுறை பொறிமுறை எங்கள் தொழில்களுக்குள் உள்ள அனுமானங்களையும் நடைமுறைகளையும் பற்றி சிந்தித்தால், எப்படி நாங்கள் மக்களை ஊக்கப்படுத்துகிறோம், எப்படி மனிதவளத்தை பாவிக்கிறோம் -- இவை முற்றுமுழுதாக வெளிப்படையான ஊக்குவிப்புகளை சுற்றி கட்டியமைக்கப்பட்டுள்ளது, கரட்களையும் கம்புகளையும் சூழவுள்ளது. அது உண்மையில் பலவகைப்பட்ட 20ம் நூற்றாண்டு பணிகளுக்கு சிறந்தது. ஆனால் 21ம் நூற்றாண்டு பணிகளுக்கு, சன்மானமும் தண்டனையும் அணுகுமுறை அவைற்றை இயந்திரமயமாக்கும் அது வேலை செய்யாது, அனேகமாக வேலை செய்யாது, அனேகமாக தீங்கு ஏற்படுத்தும். நான் என்ன செல்கிறேன் என்பதை உங்களுக்கு காட்டுகிறேன்.
குளுக்ஸ்பேர்க் இதேமாதிரி இன்னொரு பரிசோதனையைச் செய்தார் இங்கே அவர் இப்புதிரை சற்று வேறுவிதமாக செய்து காட்டினார், இங்கே மேலே இருப்பதுபோல். மெழுகு உருகி மேசை மேல் விழாதவாறு மெழுகுதிரியை சுவருடன் பொருத்தவும். அதே ஒப்பந்தம். நாங்கள் உங்கள் நேரத்தை மாதிரிகளுக்காக கணிக்கிறோம். நாங்கள் உங்களுக்கு சலுகைகள் அளிக்கிறோம். என்ன நடந்தது இந்த முறை? இந்த முறை, சலுகையளிக்கப்பட்ட குழு மற்ற குழுவை பின் தள்ளியது. ஏன்? ஏனென்றால் தட்டை ஆணிகள் பெட்டிக்கு வெளியில் இருந்தது. இது மிகவும் சுலபமானது அல்லவா? (சிரிப்பு)
அப்படியானால் சலுகையளிப்பது நன்றாக வேலை செய்கிறது இந்த மாதிரியான பணிகளுக்கு, எளிமையான விதிகள் உள்ள மற்றும் விளக்கமான முடிவுகளை அடைய வேண்டிய பணிகளுக்கு. சலுகைகள் அவற்றின் இயல்புக்கமைய, எங்கள் பார்வையை ஒடுக்குகிறது, மனதை ஒருமுகப்படுத்துகிறது. அதனால் தான் அவை பல விடயங்களில் வேலை செய்கிறது. அப்படியே இந்த மாதிரி பணிகளில், நீங்கள் அதில் உள்ள குறிக்கோளை குறுகிய பார்வையால் மட்டுமே பார்க்கிறீர்கள், நேராக அதன் முன்னால் பன்முகப்படுத்துதன் மூலம், அவை மிக நன்றாக வேலை செய்யும். ஆனால் நிஜ மெழுகுதிரி புதிருக்கு, நீங்கள் இந்த மாதிரி பார்க்க வேண்டியது இல்லை. தீர்வு அதன் மேல் இல்லை. தீர்வு அதை சுற்றி உள்ளது. நீங்கள் சுற்றுமுற்றும் பார்க்க வேண்டும். அந்த சன்மானம் உண்மையில் எங்கள் பார்வையை குறுக்குகிறது. மற்றும் சாத்தியக்கூறுகளை கட்டுப்படுத்துகிறது.
ஏன் இது மிக முக்கியமானது என்பதை சொல்கிறேன். மேற்கு ஐரோப்பாவில், ஆசியாவின் பல பகுதிகளில், வட அமெரிக்காவில், அவுஸ்ரேலியாவில், வெண்நிற கொலர் வேலையாட்கள் குறைவாக செய்யும் இந்த மாதிரி வேலை, அதிகமான இந்த மாதிரி வேலை. வழக்கமான, விதி சார்ந்த, இடது மூளை வேலை, நிச்சயமான கணக்கியல் வகைகள், நிச்சயமான கணக்கியல் பகுப்பாய்வுகள், கணனி புரோகிராம் வகைகள், இலகுவாக வெளியாட்களிடம் கொடுக்க கூடிய வேலைகள், மிக இலகுவாக தன்னியக்கப்படுத்தலாம். மென்பொருளால் விரைவாக செய்யகூடியது. உலகில் உள்ள சிக்கன வேலையாட்கள் மலிவாக செய்து முடிப்பார்கள். எனவே என்ன உண்மையில் முக்கியமானது என்றால் அதிக வலது மூளை படைப்பாற்றலுள்ள, தத்துவரீதியான திறமைகள்.
உங்கள் சொந்த வேலையைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் சொந்த வேலையைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் முகம் கொடுப்பது இப்படியான பிரச்சனைகளா, அல்லது பிரச்சனைகள் நாங்கள் இங்கு கலந்துரையாடியது போலவா, இந்த வகையான பிரச்சனைகள் -- அவை விளக்கமான விதிகள் கொண்டவையா, மற்றும் தனி தீர்வு உண்டா? இல்லை. விதிகள் புரியாதவைகளாக இருக்கின்றன. தீர்வுகள், அப்படி ஏதாவது இருந்தால், ஆச்சாரியமானதாகவும் தெளிவற்றதாகவும் உள்ளன. இந்த அறையில் இருக்கின்ற எல்லோரும் அவர்களது சொந்த பதிப்பிலான மெழுகுதிரி புதிரை கையாளுகிறார்கள். ஏதாவது ஒரு வகை மெழுகுதிரி புதிர், ஏதாவது ஒரு களத்தில், அப்படி என்றால் இந்த சன்மானங்கள், அதைச் சுற்றி நாங்கள் கட்டியெழுப்பிய பலவகை தொழில்கள், வேலை செய்யாது.
இப்போது, இது என்னை குழப்புகிறது. இது இல்லை -- இங்கே ஒரு விடயம் இது ஒரு உணர்வல்ல. சரியா? நான் ஒரு வழக்கறிஞன். நான் உணர்வுகளை நம்புபவனல்ல. இது தத்துவம் அல்ல. நான் அமெரிக்கன். நான் தத்துவத்தை நம்புபவனல்ல. (சிரிப்பு) இது ஒரு தகவல். அல்லது, நாங்கள், எனது நகர் வேசிங்டன் டி.சி. இல் சொல்வது போல, ஒரு உண்மை தகவல். (சிரிப்பு) (கைதட்டல்) நான் என்ன சொல்கிறேன் எனபதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் இங்கு சாட்சிகளை ஒழுங்குபடுத்த விரும்புகிறேன். ஏனென்றால் நான் உங்களுக்கு கதை சொல்லவில்லை. நான் ஒரு வழக்கை உருவாக்குகிறேன்.
நடுவர்களாகிய பெண்மணிகளே, சான்றேர்களே, சில சாட்சிகள்: டண் அறிலே, எங்கள் காலத்திலுள்ள சிறந்த பொருளியளாலர்களில் ஒருவர், அவரும் ழூன்று சகாக்களும், எம்ஐடி மாணவர்களில் சில ஆய்வுகளை செய்தார்கள். அவர்கள் சில விளையாட்டுகளை அந்த மாணவர்களுக்கு கொடுத்தார்கள். அந்த விளையாட்டுகள் படைப்பாற்றலுடனும், இயக்க திறமையும், ஒருமுகப்படுத்தலும் சம்பந்த்தமுள்ளவை. அவர்களது செயற்திறனுக்காக மூன்று நிலைகளில் சன்மானங்கள் வழங்கப்பட்டது. சிறிய, மத்திய தரத்திலான மற்றும் பெரிய சன்மானங்கள். நீங்கள் உண்மையில் நன்றாக செய்தால், பெரிய சன்மானம், அப்படியே இறங்குமுகமாக. சரியா? என்ன நடந்தது? பணிகள் இயந்திரவியல் திறமை சம்பந்தமானதாக இருந்த மட்டும் ஊக்குவிப்பு கொடுப்பனவு எதிர்பார்த்த மாதிரி வேலை செய்தது: கொடுப்பனவு உயர, செயற்திறனும் சிறப்புற்றது. சரியா? ஆனால் ஆரம்ப நிலையிலுள்ள அறிவாற்றலுடன் கூடிய திறமைக்கான பணிக்கு, பெரிய சன்மானம் குறைந்த செயற்திறனுக்கு வழிகோலியது.
பிறகு அவர்கள் சொன்னார்கள், ”சரி இது கலாச்சாரம் சார்ந்ததாக இருக்குமா என பார்ப்போம். நாங்கள் இந்தியாவில் மதுரைக்கு போய் பரிசோதிப்போம்.” குறைந்த வாழ்க்கைத்தரமுள்ள மதுரையில். வட அமெரிக்காவில் சாதாரணமான தரத்திலான சன்மானம் கூடிய அர்த்தமுள்ளதாக இருக்கும். அதே ஒப்பந்தம். சில விளையாட்டு தொகுதிகள், மூன்று நிலைகளில் சன்மானங்கள். என்ன நடந்தது? மத்திய தர சனமானம் வழங்கப்பட்டவர்கள் சிறிய தர சன்மானம் வழங்கப்பட்டவர்களிலும் எந்த விதத்திலும் சிறப்பாக செய்யவில்லை. ஆனால் இந்த முறை, பெரிய சன்மானம் வழங்கப்பட்டவர்கள், எல்லோரிலும் பார்க்க மிக கீழ்த்தரமாக செய்தார்கள். நாங்கள் செய்த மூன்று பரிசோதனைகளுள் 9இல் 8 பணிகளில், உயர் சன்மானமே மட்டமான செயற்திறனை வெளிப்படுத்தியது.
இது ஏதாவது கோபமுள்ள உணர்வா சமூகவியல் சதித்திட்டம் ஏதாவது நடக்கிறதா? இல்லை. இவர்கள் எம்ஐரி இலிருந்து, கானேகி மெல்லனிலிருந்து, சிக்காகோ பல்கலைகழகத்திலிருந்து வந்த பொருளியளாலர்கள். மற்றும் யார் இந்த ஆராய்ச்சிக்கு நிதியுதவி அளித்தது என உங்களுக்கு தெரியுமா? ஐக்கிய அமெரிக்காவின் பெடரல் ரிசேவ் வங்கி. அதுதான் அமெரிக்க அனுபவம்.
நாங்கள் கடலுக்கு அப்பால் இலண்டன் பொருளியல் கல்லூரிக்கு போவோம். எல்.எஸ்.ஈ இலண்டன் பொருளியல் கல்லூரி. பொருளியலுக்காக நோபல் பரிசுபெற்ற 11 பேர் கல்வி கற்ற இடம். சிறந்த பொருளியல் சிந்தனையாளர்களுக்கான பயிற்சிக்களம். ஜோர்ஜ் சோரஸ், மற்றும் பெரடிர்ச் கயேக் மாதிரி, மற்றும் மிக் ஜாக்கர் (சிரிப்பு) கடந்த மாதம், சரியாக கடந்த மாதம், எல்.எஸ்.ஈ இல் பொருளியளாலர்கள் 51 ஆய்வுகளை செயற்திறனுக்கான கொடுப்பனவு திட்டங்கள் சம்பந்தமாக கம்பனிகளில் செய்தார்கள். அந்த பொருளியளாலர்கள் சொன்னது இதுதான், ”நாங்கள் கண்டுபிடித்தது, பணசம்பந்தமான ஊக்குவிப்புகள் ஒட்டுமொத்த செயற்திறனில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
அங்கே ஒரு பொருந்தாமை, விஞ்ஞானம் அறிந்ததுக்கும் தொழிலகங்கள் செய்வதற்கும் உள்ளது. என்னை கவலைக்குள்ளாக்குவது என்னவென்றால், இந்த பொருளாதார சரிவின் குவியலில் நின்றுகொண்டு அநேகமான நிறுவனங்களில் திறமைகளையும் மக்களையும் பற்றி எடுக்கும் தீர்மானங்களும் கொள்கைகளும் காலம் கடந்த பரீட்சிக்கப்படாத அனுமானஙகளின் அடிப்படையிலும் அறிவியலற்ற கட்டுக் கதைகளின் படியும் எடுக்கப்படுகின்றனவே. உண்மையில் இந்தப் பொருளாதாரச் சிக்கலில் இருந்து நாங்கள் மீளவேண்டுமாயின், மற்றும் 21ஆம் நூற்றாண்டு வரையறுத்த பணிகளில் உயர் செயற்திறன் வேண்டுமாயின், பிழையான செயல்களைத் தொடர்ந்து செய்வதல்ல தீர்வு. இனிப்பான கரட்டால் ஆட்களை இணங்க வைப்பது அல்லது கடின தடியால் அவர்களை மிரட்டுவது போன்றவை. எங்களுக்கு முற்றுமுழுதான புது அணுகுமுறை தேவை.
இவை எல்லாம் பற்றிய நற் செய்தி என்னவெனில், ஊக்கவியல் பற்றி கற்றுக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் இந்தப் புதுவழிமுறையைத் தந்துள்ளனர். இந்த அணுகுமுறை உள்ளக ஊக்கவியலைச் சுற்றி கட்டியமைக்கப்பட்டுள்ளது. வேலையை செய்வதற்கான விருப்பத்தை சூழ்ந்துள்ளது ஏனென்றால் அவை முக்கியமானவை. ஏனென்றால் நாங்கள் அதை விரும்புகிறோம். ஏனென்றால் அவை சுவாரஸ்யமானவை. ஏனென்றால் அவை முக்கியமான சிலவற்றின் பகுதிகள். எனது மனத்தில், எங்கள் வர்த்தகத்துக்கான புதிய செயல்முறை. மூன்று எளிய மூலகங்களைச் சுற்றியுள்ளதாகப்படுகிறது: சுய அதிகாரம், நிபுணத்துவம் மற்றும் நோக்கம். சுயஅதிகாரம் எமது வாழ்க்கையை வழிநடத்துவதற்கான ஆர்வம். நிபுணத்துவம், முக்கியமான விடயங்களில் மேலும் மேன்மையை ஏற்படுத்துவதற்கான விருப்பம். நோக்கம், நாம் என்ன செய்கிறோம் என்பதிலுள்ள ஆவல் ஏற்படுத்துவதற்காக எங்களுக்கும் மேலான ஏதேனும் ஒன்றுக்கான சேவைகளுக்காக. இப்புதிய செயல்முறைக்கு இவைகள் முற்றுமுழுதான கட்டுமானங்கள். எமது தொழில்துறைகளுக்காக.
இன்று நான் சுய அதிகாரம் பற்றி மட்டுமே பேச உள்ளேன். 20ஆம் நூற்றாண்டில், நாங்கள் முகாமைத்துவ கருத்துககளை கொண்டுவந்தோம். முகாமைத்துவம் இயற்கையிலிருந்து எழவில்லை. முகாமைத்துவம் என்பது ஒரு மரம் போன்றதல்ல. அது ஒரு தொலைக்காட்சிப் பெட்டி. சரியா? யாரோ அதைக் கண்டுபிடித்தார்கள். அதன் அர்த்தம், அது எப்போதும் வேலை செய்யுமென்பதல்ல. முகாமைத்துவம் சிறந்தது. முகாமைத்துவத்தின் பாரம்பரியக் குறியீடுகள் உயர்ந்தது, நீங்கள் அவற்றுடன் இணங்க போக வேண்டுமாயின். ஆனால் உங்களுக்கு ஈடுபாடு வேண்டுமானால், தன்நெறிப்படுத்தல் சிறப்பாக வேலை செய்யும்.
உங்களுக்கு சில உதாரணங்கள் செல்ல விரும்புகிறேன் தன்நெறிப்படுத்தல் சம்பந்த சிலவகை தீவிர குறியீடுகள் பற்றி. இது எதை சொல்கிறது -- நீங்கள் இதைப்போல் பலவற்றை பார்க்கமாட்டீர்கள். ஆனால் உண்மையில் சுவாரசியமான ஏதோ ஒன்றின் முதல் எழுச்சியை உங்களால் பார்க்க முடியும். இது கருதுவது என்னவெனில் ஆட்களுக்கான கொடுப்பனவுகள் போதுமானதாகவும் நியாயமானதகவும் மற்றும் பூரணமானதாகவும் இருக்கும் என்பதை. பணம் சார்ந்த சிக்கல்களை அகற்றுகிறது. மற்றும் ஆட்களுக்கு கூடிய சுய அதிகாரத்தை வழங்குகிறது. உங்களுக்கு சில உதாரணங்களை சொல்கிறேன்.
எத்தணை பேர் அட்லாசியான் என்ற கம்பனியைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்கள்? பார்க்கும் போது அரைவாசிக்கும் குறைவானவர்களே. (சிரிப்பு) அட்லாசியன் ஒரு அவுஸ்ரேலியாவின் மென்பொருள் கம்பனி. அவர்கள் ஆச்சரியப்படகூடிய வகையில் சிலவற்றை செய்கிறார்கள். வருடத்தில் சில தடவைகள் அவர்களது பொறியியளாலர்களுக்கு சொல்வார்கள், ”அடுத்த 24 மணி நேரத்துக்கு நீங்கள் உங்களுக்கு விரும்பிய ஏதாவது வேலையை செய்யமுடியும், அவை உங்கள் வழமையான வேலையாக இல்லாமல் இருந்தால் சரி. உங்களுக்கு வேண்டிய எதையாவது செய்யுங்கள்.” எனவே அந்த பொறியியளாலர்கள் அந்த நேரத்தை பாவித்து சீர்செய்த மென்பொருள் தொகுப்பு, நேர்த்தியான கக்கிங் போன்றவற்றுடன் வருவார்கள். பிறகு அவர்கள் உருவாக்கியவற்றை அறிமுகப்படுத்துவார்கள் அவர்களது சகாக்களுக்கும் கம்பனியில் உள்ள மற்றவர்களுக்கும், அந்த நாள் கடைசியில் எல்லோரும் சேர்ந்த இந்த கட்டுபாடற்ற விதிவிலக்கான சந்திப்பு நிகழும். பிறகு எல்லோரும் அவுஸ்ரேலியர்களாக பீர் குடிப்பார்கள்.
அதை அவர்கள் பெடெக்ஸ் நாள் என அழைப்பார்கள். ஏன்? ஏனென்றால் நீங்கள் இரவுக்குள் ஏதாவது ஒப்படைக்க வேண்டும். இது அழகானது. இது கெட்டதல்ல. இது வர்த்தக அடையாளத்தின் பெரிய அத்துமீறல். ஆனால் இது அழகான கெட்டிக்காரத்தனம். (சிரிப்பு) அந்த ஒரு நாள் அதிகமான சுய அதிகாரம் முழு அளவிலான மென்பொருள் திருத்தங்களை உருவாக்கியுள்ளது அவை எப்பவுமே இருந்திருக்காதவை.
அட்லாசியான் அடுத்த நிலைக்கு எடுத்து சென்றமையால் இது மிக நன்றாக வேலை செய்தது. 20 வீதமான நேரத்துடன் பிரபலமாக குகிலில் செய்ததை. அங்கே பொறியியளாலர்கள் அவர்களது 20 வீதமான நேரத்தை அவர்களுக்கு விரும்பிய எதையாவது செய்ய செலவிட முடியும். அவர்களுக்கு அவர்கள் நேரம், அவர்கள் பணிகள், அவர்கள் குழு, அவர்கள் செயல்முறை சார்ந்த சுய அதிகாரம் வழங்கப்பட்டது. சரியா? சுய அதிகாரத்தின் தீவிரமான அளவு, உங்களில் அதிகமானவர்களுக்கு தெரிந்தது போன்று, எடுத்துக்காட்டாக ஒரு வருடத்தில் குகிலில், சுமார் அரைவாசியான புதிய பொருட்கள் இந்த 20 வீதமான நேரத்திலேயே பிறக்கின்றன. ஜிமெயில், ஓர்குட், குகில் நியுஸ் போன்ற பொருட்கள்.
உங்களுக்கு இதைவிட தீவிரமான உதாரணம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பலன் மாத்திரமேயான வேலைச் சூழல் என அழைக்கப்படுவது. றோ என சுருக்கமாக. இரு அமெரிக்க நிபுணர்களால் உருவாக்கப்பட்டது, வட அமெரிக்காவில் டசின் கம்பனிகள் சூழவுள்ள இடத்தில். றோ ஆட்களுக்கு நேர அட்டவணை இல்லை. அவர்களுக்கு வேண்டிய நேரத்தில் அவர்கள் வரலாம். அவர்கள் வேலை நிலையத்தில் குறித்த நேரத்தில் இருக்கவேண்டும் என்பதில்லை. அல்லது எந்த நேரத்திலும் இருக்கவேண்டியதில்லை. அவர்கள் அவர்களது வேலையை முடித்தால் போதும். எப்படி செய்வது, எப்போது செய்வது, எங்கே செய்வது எல்லாம் அவர்களைப் பொறுத்தது. இந்த மாதிரியான் சூழலில் சந்திப்புகள் எல்லாம் அவர்கள் விருப்பம்.
என்ன நடக்கிறது? அநேகமாக எல்லா நிலைகளிலும் உற்பத்தித் திறன் உயர்கிறது, வேலையாட்கள் ஈடுபாடு கூடுகிறது, வேலையாட்கள் திருப்தி அதிகரிக்கிறது, விலகிச்செல்லல் குறைகிறது. சுய அதிகாரம், நிபுணத்துவம் மற்றும் நோக்கம், இவைதான் புதிய வழியில் விடயங்களை செய்வதற்குரிய கட்டுமானங்கள். இதைப் பார்த்து உங்களில் சிலர் சொல்லலாம், ”ம்ம், இது நல்லது. ஆனால் கற்பனையானது.” நான் சொல்வேன், ”இல்லை, என்னிடம் சான்று உள்ளது.”
1990 நடுப்பகுதியில், மைக்கிரொ செவ்ட் நிறுவனத்தால் என்கார்ட்டா என்ற கலைக்களஞ்சியம் தொடங்கப்பட்டது. அவர்கள் எல்லா சரியான ஊக்குவிப்புகளையும் ஏற்படுத்தினார்கள். எல்லாம் சரியான ஊக்குவிப்புகள். ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதவும் பதியவும் நிபுணர்களுக்கு பணக்கொடுப்பனவு செய்தார்கள். எல்லாவற்றையும் நல்ல கொடுப்பனவு வழங்காப்பட்ட முகாமையாளர்கள் மேற்பார்வையிட்டார்கள். எல்லாம் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட செலவுக்குள் செய்யப்படுகிறதா என்பதற்காக. சில வருடங்களுக்கு பிறகு இன்னொரு கலைக்களஞ்கியம் தொடங்கப்பட்டது. வித்தியாசமான மாதிரி, வேடிக்கைக்காக செய்வதற்காக. யாருக்கும் எந்த வித பணமும் வழங்கப்படமாட்டாது. உங்களுக்கு இதை செய்ய விருப்பம் என்றால் செய்யுங்கள்.
10 வருடங்களுக்கு முன் இந்த மாதிரியை நீங்கள் வைத்திருந்தால். எங்காவது ஒரு பொருளியளாலரிடம் நீங்கள் அதை எடுத்துச் சென்று, ”நான் ஒரு கலைக்களஞ்சியம் உருவாக்க இரு வித்தியாசமான மாதிரிகளை வைத்திருக்கிறேன்” என்று சொன்னால், ”அவைகள் நேருக்கு நேர் மேதினால், யார் வெற்றி பெறுவார்கள்?” என்று கேட்டால், 10 வருடங்களுக்கு முன்னால் எந்த ஒரு நிதானமான பொருளியலாளரும் எங்கேயும், இந்த பூமியில் விக்கிபீடியா மாதிரி தான் வெற்றிபெறும் என எதிர்வு கூறியிருக்கமாட்டார்கள்.
இதுதான் இந்த இரு வழிமுறைக்குமான ஒரு மிகப்பெரிய சண்டை. இதுதான் ஒரு ஊக்கவியலின் அலி-பிரெஸியர் (Ali-Frazier). சரியா? இது மனிலாவில் நடந்த திரில்லா (Thrilla' in Manila). எல்லாம் சரி? உள்ளக ஊக்கவியல்கள் எதிர் வெளிப்படை ஊக்கவியல்கள். சுய அதிகாரம், நிபுணத்துவம் மற்றும் நோக்கம், எதிர் கரட்டும் தடியும். எது வெல்லும்? உள்ளக ஊக்கவியல், சுய அதிகாரம், நிபுணத்துவம் மற்றும் நோக்கம், நான் இதை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இங்கே விஞ்ஞானத்துக்கு தெரிந்ததுக்கும் தொழிற்துறை செய்வதற்கும் ஒரு பொருந்தாதன்மை உள்ளது. இதுதான் விஞ்ஞானம் அறிந்தது, ஒன்று: அந்த 20ம் நூற்றாண்டு சன்மானங்கள், நாங்கள் தொழில்களின் இயற்கை பகுதிகள் என நினைக்கும் ஊக்குவிப்புகள், வேலை செய்யும், ஆனால் ஆச்சரியப்படகூடிய வகையில் குறுகிய சூழல்களில் மட்டுமே. இரண்டு: அப்படியானால் இந்த சன்மானங்கள் படைப்பாற்றலை இல்லாதொழிக்கும். மூன்று: உயர் செயற்திறனின் இரகசியம் சன்மானங்களும் தண்டனைகளும் அல்ல, ஆனால் அந்த தெரியாத உள்ளார்ந்த இயக்கம். அவர்களின் சொந்த தேவையின் பொருட்டு செய்வதற்கான முயற்சி. அவைகள் முக்கியமானவை என்ற காரணத்தால் விடயங்களை செய்வதற்கான முயற்சி.
உன்னதமான பகுதி இதுதான். இது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். எங்கள் மனதுக்கு தெரிந்ததை விஞ்ஞானம் உறுதிப்படுத்துகிறது. எனவே நாங்கள் இந்த பொருந்தாமையை திருத்தியமைத்தால், அதாவது விஞ்ஞானம் அறிந்ததுக்கும் தொழில்கள் செய்வதற்கும் இடையேயானதை, எங்களது ஊக்குவிப்புகள், ஊக்குவிப்புகளுக்கான குறிகள் என்பனவற்றை 21ம் நூற்றாண்டுக்கு எடுத்துவந்தால், இந்த கரட்டும் தடியும் என்ற சோம்பேரித்தனமான, ஆபத்தான கருத்தியலை விட்டுச்சென்றால், நாங்கள் எங்கள் வர்த்தகத்தை வலுவாக்க முடியும், எங்களால் நிறைய மெமுகுதிரி புதிர்களை தீர்க்கமுடியும், சில வேளை, சில வேளை, எங்களால் உலகையும் மாற்ற முடியும். நான் எனது வழக்கை முடிக்கிறேன். (கைதட்டல்)
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
ஊக்கவியலில் உள்ள குழப்பம் பற்றி வாழ்க்கைத் தொழில் ஆய்வாளரான டண் பிங்க் விசாரணை செய்கிறார், சமூகவியல் விஞ்ஞானிகளுக்கு தெரிந்த ஆனால் அநேக முகாமையாளர்களுக்கு தெரிந்திருக்காத தகவல்களுடன்: நாங்கள் நினைப்பது போல பாரம்பரிய சனமானங்கள் எப்போதும் பயனளிப்பதில்லை என்பதற்கான தெளிவுபடுத்தும் கதைகளையும் கேளுங்கள் -- இது ஒரு முன்னோக்கிய பாதையாக கூட அமையலாம்.
Bidding adieu to his last "real job" as Al Gore's speechwriter, Dan Pink went freelance to spark a right-brain revolution in the career marketplace. Full bio »
Translated into Tamil by Balachandran Ramesh
Reviewed by Suthanthirapalan Gowrishankar
Comments? Please email the translators above.
17:26 Posted: May 2009
Views 2,216,773 | Comments 225
16:51 Posted: Jul 2009
Views 2,066,788 | Comments 368
33:38 Posted: Dec 2008
Views 1,399,816 | Comments 185
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.