நான் இதை இரு காரணங்களுக்காக செய்தேன். முதல் காரணம் நான் உங்களுக்கு நல்ல ஒரு அபிப்ராயத்தை கொடுக்க வேண்டும் என்பது. இரண்டாவது முக்கிய காரணம், வெறுக்கத்தக்க இந்த லேடி காஃகா ஒலிப்பெருக்கியை அணிந்திருப்பதால் நான் அவ்வாறு செய்ய வற்புறுத்தப்பட்டேன்.
நான் ஒரே இடத்தில் நிற்கும் ஒலிவாங்கியில் பேசிப் பழகியவன். அதுவே பொது மேடைகளில் பேசுவதற்கு ஏற்றது.
இம்மாதிரியான ஒலிவாங்கியை என் தலையில் பொருத்தினால் (நடனமாடுகிறார்) நான் வெறுக்கத்தக்கவனாகின்றேன். (சிரிப்பொலி) மன்னிக்க வேண்டுகிறேன். என் உரையிலிருந்து நான் விலகிச்செல்கிறேன்.
நங்கயரே, நன்மகன்களே என் வாழ்க்கையின் 25 வருடங்களை புத்தக வடிவமைப்பிலேயே செலவிட்டுருக்கிறேன். ஆமாம், புத்தகங்கள் தான். மையிட்ட காகிதங்களை உள்ளடக்கிய தொகுப்பு. அதனை மின்விசை கொண்டு இயக்க இயலாது என்று உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இவை அனைத்தும் பெனிசிலினைக் கண்டுபிடித்ததைப் போல ஒரு நல்ல தவறினால் உருவானதே. (சிரிப்பொலி)
உண்மையில் என் விருப்பம் வரைபட வடிவமைப்பாளராக நியூயார்க்கில் உள்ள பெரிய வடிவமைப்பு நிறுவனமொன்றில் பணிபுரிவதே. அதற்காக நான் இலையுதிர் காலம் 1986-ல் அங்கு வந்ததிலிருந்து பல நேர்முகத் தேர்வுகளை சந்தித்தேன். இறுதியில் எனக்கு கிடைத்த வேலை என்னவோ ஆல்பர்ட் கேனாப் என்ற கலை இயக்குனரிடம் உதவியாளராகப் பணி புரிவதே. அவர் ஒரு புத்தகப் பதிப்பாளர். நான் ஒரு முட்டாளாக இருந்தேன். இந்த வேலை வேண்டாம் எனக்கூறும் அளவுக்கு மிக முட்டாளாக இல்லை.
நான் நினைக்கவில்லை இவ்விதமான அரிய வாய்ப்பு கிடைக்குமென்று. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. விரைவில் என் வேலை என்னவென்று எனக்குப் புரிந்தது. என் வேலை இந்தக் கேள்வியைக் கேட்பதே: இந்தக் கதைகள் எப்படிப் பட்டவை? ஏனெனில் கேனாப் அதைதான் செய்கிறது. அது உலகின் மிகச் சிறந்த கதைத் தொழிற்சாலை. நாங்கள் கதைகளை பொது மக்களுக்கு கொண்டு வருகிறோம்.
கதைகள் எதைப் பற்றியதாகவும் இருக்கலாம், அவற்றில் சில உண்மைக் கதைகள். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது: அவை அனைத்திற்கும் ஒன்று தேவைப்பட்டது. அவை அனைத்திற்கும் தேவை முகம். ஏன்? நீங்கள் எதனுள்ளே மூழ்கப் போகிறீர்களோ அதைப்பற்றிய நல்ல அபிப்ராயத்தை கொடுப்பதற்கே. புத்தக வடிவமைப்பாளர் அதன் உள்ளடக்கத்திற்கு ஒரு உரு கொடுக்கிறார். மேலும் அவை இரண்டையும் கவனமாக சமன்படுத்துகிறார்.
முதல் நாள் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் என் வரைபட பயிற்சியின் போது லேன்னி சோம்மஸ் எனும் ஆசிரியர் எங்கள் அறைக்கு வந்து கரும்பலகையில் ஒரு ஆப்பிள் படத்தை வரைந்தார். ஆப்பிள் என்று அதன் கீழே எழுதினார். எங்களிடம் "சரி. பாடம் ஒன்று. கவனியுங்கள் என்றார்." அவர் படத்தை மட்டும் கையால் மறைத்துக் கொண்டு கூறினார், "ஒன்று நீங்கள் இதை மட்டும் கூறுங்கள்". என்றார். பின்பு வார்த்தையை மறைத்து விட்டு "இல்லையேல் இதை மட்டும் காண்பியுங்கள்" என்றார். ஆனால் இரண்டையும் காட்டாதீர்கள் என்றார். அது வாசகர்களை முட்டாளாக பார்ப்பதற்கு சமம். (சிரிப்பொலி) அவர்கள் இதைக்காட்டிலும் தகுதி உடையவர்கள்.
கவனியுங்கள். விரைவில், இந்தத் தத்துவத்தை கேனாப்பின் இரண்டு புத்தகங்களில் சோதிக்க எண்ணினேன். முதல் புத்தகம் கேத்ரீன் ஹெப்பர்ன்ஸ்-ன் நினைவுகள். இரண்டாவது புத்தகம் மார்லினா டீட்ரிக்-கின் வாழ்க்கை வரலாறு. ஹெப்பர்ன்ஸ்-ன் புத்தகம் உரையாடல் வடிவில் எழுதப்பட்டதாகும். அது மேசையின் ஒரு புறம் அவர் அமர்ந்து கொண்டு உங்களுக்கு கதை சொல்வதைப் போலிருக்கும். டீட்ரிக்-கின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் அவர் மகளால் சித்தரிக்கப்பட்டது. ஹெப்பர்ன்ஸ்-ன் புத்தகம் வார்த்தைகளாலும் டீட்ரிக்-கின் புத்தகம் புகைப்படங்களாலும் ஆனது. ஆகையால், நாங்கள் இவ்வாறு செய்தோம். முழுமையான பொருள் மற்றும் முழுமையான வடிவம். பக்கம் பக்கமாக. எந்த சச்சரவும் வேண்டாம் மங்கையரே.
ஜுராசிக் பார்க் என்றால் என்ன? இங்கு அதன் கதை என்ன? யாரோ ஒருவர் டயனோசரை திரும்பக் கொண்டுவர அதன் மரபணுக்களை தொல் பழங்காலத்து அம்பர் கல்லிலிருந்து எடுக்க விழைகிறார். மேதை! (சிரிப்பொலி)
நான் அதிர்ஷ்டசாலி. நான் தங்கி வேலை பார்க்கும் இடம் நியூயார்க் என்பதால் அங்கு நிறைய டயனோசரைப் பார்க்க இயலும். (சிரிப்பொலி) ஆகையால், அங்குள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்குச் சென்றேன். அவைகளின் எலும்புகளைக் கவனித்தேன். பின்பு பரிசுப்பொருள் கடைக்குச் சென்று ஒரு புத்தகத்தை வாங்கினேன். அதில் குறிப்பாக இந்த பக்கத்தை எடுத்துப் பார்த்தேன். அதிலும் குறிப்பாக வலப்பக்க கீழ் மூலையைக் கவனித்தேன்.
இந்தப் படத்தை எடுத்து நிழற்படவுரு கருவியில் பதிவு எடுத்தேன். (சிரிப்பொலி) பின்பு பிரதி எடுக்கும் காகிதத்தை எடுத்து அதை நேர்படியுருவம் மீது அசையாமல் வைத்து நாற்புறமும் பசை நாடாவை ஒட்டி - நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் (சிரிப்பொலி) பிறகு ஒரு தொழில்நுட்பம் மிக்க எழுதுகோலைக் கொண்டு -- பிள்ளைகளிடம் இதைக் விளக்கிக் கூறினால் --- (சிரிப்பொலி) நான் அந்த டயனோசரை நிர்மாணித்துக் கொண்டிருந்தேன்.
நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எங்கு செல்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நான் இதை நிறுத்திவிட்டேன். இதற்கு மேலே இதைத் தொடர்வது என்னை வேறு பாதையில் இட்டுச் செல்லும் என்பதால். இறுதியில் அதன் வரைபட உருவமைப்பைக் கொண்டுவந்தேன். நீங்கள் பார்க்கும் இவ்வரைபடமே அது. நாங்கள் இந்த நடைமுறையை செயல்படுத்திக் கொண்டிருந்தோம். அதன் பிறகு அதில் எழுத்துக்கலையையும் சேர்த்தேன். மிகவும் அடிப்படையான குறியீடுகள் தான். குறிப்பாக தெரிவிக்கின்ற குறியீடுகளைப் போன்றவை. (சிரிப்பொலி)
என்னுடன் பணி புரிந்தவர்களுக்கு அது பிடித்திருந்தது. மேலும் அந்த நூலாசிரியருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு, அப்போது மைக்கேல் நவீன தொழில்நுட்பத்தின் சிகரமாக விளங்கினார். மைக்கேல் கிரிக்டேன் எனக்கு தொலை நகல் ஒன்று அனுப்பினார். "ஆஹா, என்ன அருமையான நூலட்டை" (சிரிப்பொலி) (கைத்தட்டல்) அந்தக் கருவியிலிருந்து வெளிவந்த செய்தி எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. (சிரிப்பொலி) நான் அவரின் இன்மையை உணர்கின்றேன்.
சிறிது காலம் கழித்து MCA யூனிவர்சல் கலைக்கூடத்திலிருந்து எங்கள் சட்ட அலுவல் துறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த வரைபடத்திற்கு சட்டபூர்வமான உரிமம் வாங்க எண்ணினார்கள். அந்தப் படத்தை அவர்கள் பயன்படுத்த நினைத்தார்கள். ஆமாம். அவர்கள் அதை பயன்படுத்தினார்கள். (சிரிப்பொலி) (கைத்தட்டல்)
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. திகைப்பூட்டும் இந்தப் படம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே. இது பல மாற்றங்களை நிகழ்த்தியது. மேலும் இது பல சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், கலாச்சாரத்தையும் ஏற்படுத்தியது. அதற்கும் மேலே பல வித்தியாசமான திரிபு நிலைகளையும் காண இயலும். சிறிது காலம் முன்பு நான் இணையத்தில் இதைப் பார்த்தேன். ஆனால் அது நான் அல்ல. அது எவராக இருந்தாலும், இது மாயையாக இருக்கலாமோ என்று அவர் எண்ணுவார். "கடவுளே, நேற்றிரவு இது இங்கிருக்கவில்லையே!" என கூக்குரலிடலாம். அவர் அதிகமாக மது அருந்தி இருக்கலாம். (சிரிப்பொலி)
நீங்கள் என் எண்ண ஓட்டத்திலிருந்து அந்தக் கால்களைக் காண்பீர்களானால் ... (சிரிப்பொலி) அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை என்னால் இலேசாக எடுத்துக்கொள்ள இயலாது. புத்தக அட்டை வடிவைப்பாளரின் பொறுப்பு, அவை, படிப்பவர், வெளியீட்டாளர் மேலும் மிக முக்கியமான எழுத்தாளர் ஆகியோரை விட மும்மடங்கானது. ஒரு எழுத்தாளரின் புத்தகத்தைப் பார்த்து அதைப் படிக்க வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும் என்பதே என் விருப்பம்.
டேவிட் செடாரிஸ் என் மிக விருப்பமான எழுத்தாளர். நிர்வாணம் என்ற இந்தக் கட்டுரை அற்றம் மறைக்கக் வேண்டாதார் குடியேற்றதிற்கு அவர் பயணித்த அனுபவங்களை உள்ளடக்கியது. அவர் அங்கு சென்றதற்குக் காரணம் அவர் உருவத்தின் மேல் அவர் கொண்ட பயமும், உடலைக் கடந்த நிலையைக் கண்டறியும் ஆவலும் தான். என்னைப் பொறுத்தவரையில் இது நான் வடிவமைக்கும் இன்னொரு அட்டைதான். இவ்வளவு எளிதாக அதை நான் வடிவமைத்திருக்கலாம். ஆனால் நான் இவ்வாறு செய்திருந்தால், உங்கள் எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்யாது. மேலும் அது இவ்வாறு தவறாக கருதப்பட்டிருக்கலாம் டேவிட் இந்த வடிவமைப்பை மிகவும் விரும்பினார். அவருடைய புத்தகத்தில் அவர் கையெழுத்து இடும் போது, வேடிக்கையாக ஒரு வரைத்தூவளால் இப்படி செய்திருக்க முடியும். (சிரிப்பொலி) வணக்கம்! (சிரிப்பொலி)
அகஸ்டின் பாஃக்ரோஸ் ஒரு வரலாற்றுக் குறிப்பு புத்தகம் எழுதினார். அதன் பெயர் "Dry". அது அவர் மறுவாழ்வு காலத்தைப் பற்றியது. 20களில் அவர் திறமைவாய்ந்த நிர்வாகியாக இருந்தார். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை. அவருடன் பணிபுரிபவர்கள் அவரைக் குறுக்கிட்டு கூறியதாவது, ஒன்று நீ மறுவாழ்வு மையதிற்கோ, வேலையேவிட்டோ அல்லது இறந்தும் கூட போகலாம் என்று.
என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு புத்தக அட்டை வடிவமைக்கும் பணியே. இதை நான் Type 101-க்கு எதிர் பதமாகவே கருதுகிறேன். அப்படி என்றால் என்ன? எழுத்துக்கலையில் முதல் அறிமுக வகுப்பில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியானது, ஒரு வார்த்தையை தேர்ந்தெடுப்பது. பின்பு அதன் பொருளுக்கேற்றார்போல் அதை வடிவமைப்பது. மிகவும் சுலபம் அல்லவா? ஆனால் இது அந்த விஷயத்திற்கு எதிர் மறையானது. இந்தப் புத்தகம் உங்களிடம் பொய்யான தோற்றத்தை உருவாக்க நான் விரும்புகிறேன். நம்பிக்கை இல்லாமல் ஆனால் துணிச்சலாக எப்படி ஒரு குடிகாரன் இருப்பானோ அதைப் போல.
இதன் பதில் நீங்கள் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு எளியது. இதற்கு ஒரு மாதிரியை தேர்வு செய்து அதை எப்சான் அச்சுக் கருவியில் தண்ணீரில் கரையக் கூடிய மையால் அச்சடித்தேன். காயவைத்தேன். மீண்டும் அதில் ஒரு வாளி நீரைக் கொட்டினேன். அவ்வளவுதான். பின்பு அச்சகத்திற்கு அதைக் கொண்டு சென்றோம். அட்டை மீது பளபளக்கும் புள்ளிகளை அச்சடித்தோம். உண்மையில் தண்ணீர் வழிவதைப் போல இருந்தது.
இப்புத்தகம் வெளியாகி சில காலம் கழித்து அகஸ்டின் விமான நிலையமொன்றில் பலரின் கண்களிலிருந்து தப்பிக்க புத்தக கடையில் ஒளிந்து கொண்டிருந்தார். தான் எழுதிய புத்தகங்களை யார் வாங்குகிறார்கள் என்பதை உளவு பார்த்தார். ஒரு பெண்மணி புத்தகத்தின் அருகில் வந்து அதை உற்றுப் பார்த்துவிட்டு கடைக்காரரிடம் சென்றார், பின்பு அவரிடம் "இப்புத்தகம் நனைந்துள்ளது" என்றார். (சிரிப்பொலி) அந்தக் கடைக்காரர் அப்பெண்ணிடம் "ஆமாம். எல்லாப் புத்தகங்களும் அவ்வாறே வந்துள்ளன" என்றார். (சிரிப்பொலி) இது ஒரு நல்ல அச்சுக்கலை என்றே நான் நினைக்கிறேன்.
புத்தக அட்டை என்பது புத்தகத்தின் வடிகட்டிய சாரமாகும். அது கதையைப் பற்றிய ஹைக்கூ என்றே கூறலாம். குறிப்பாக இந்த புத்தகம் ஒசாமா டெசுக்கா-வால் எழுதப்பட்ட புத்தரைப் பற்றிய வீரகாவியமாகும். மொத்தம் 8 தொகுதிகளை உள்ளடக்கியது. உங்கள் புத்தக அலமாரியில் அவை இருக்கும் போது புத்தரின் ஒவ்வொரு பருவத்தையும் பார்ப்பது போலிருக்கும். இவ்வடிவமைப்புகள் அனைத்தும் புத்தகத்தின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவையே. அட்டை வடிவைப்பாளர் புத்தகத்தை படித்தவுடன், அவர் ஒரு மொழி பெயர்ப்பாளராகவும் பொருள் விளக்குபவராகவும் மாறுகிறார்.
இக்கதை உண்மையில் ஒரு புதிரானது. புத்தகம் இதைப் பற்றியதே. "16-ம் நூற்றாண்டு கிரேக்கப் பேரரசுக் கலைஞரின் உட்சதி மற்றும் கொலை".
நான் முதலில் அந்த ஓவியங்களை எல்லாம் சேகரித்தேன். அவைகளை நன்றாக கவனித்து மறுநிர்மாணம் செய்தேன். மீண்டும் அவற்றை ஒன்றாக சேர்த்தேன். அந்த வடிவமைப்பு தான் இது. சரியா? இதுதான் தட்டையான அதன் மேற்பக்கம். இதன் உண்மையான கதை அலமாரியிலிருந்து இப்புத்தகத்தை எடுக்கும் போதுதான் தெரியும்
ஆ!! நாம் இதைப் பார்க்கிறோம். கல்லக்காதலர்களை. அவர்களை வெளிக்கொணர்வோம். அடடா! அவர்களை இந்த சுல்தான் பார்த்துவிட்டான். அவர் இதை விரும்ப மாட்டார். அடடா!! இப்போது சுல்தானும் அபாயத்தில் மாட்டி விட்டார். இப்போது தான் இந்த புத்தகத்தை நாம் திறக்க வேண்டும், மேற்கொண்டு என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள. உங்களால் இவ்வனுபவத்தை கிண்டில் (Kindle)-ல் பெற இயலுமா? (சிரிப்பொலி)
அவற்றைப் பற்றி எனக்கு பேச விருப்பமில்லை. உண்மையாகத்தான். மின்னூல் வாசிப்பான் நமக்கு பலவகையில் வசதியாக உள்ளது. அவை எளிமையானது, சௌகர்யமானது, கையடக்கமானது. ஆனால் முக்கியமான ஒன்று அதில் இல்லை. அது : பாரம்பரியம். உணர்வுப்பூர்வமான அனுபவம், வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு வகையில் மனிதாபிமானம் எனலாம்.
உங்களுக்கு ஜான் அப்டைக்-கிற்கு என்ன பழக்கம் என்று தெரியுமா? அவருடைய முதல் புத்தகப் பிரதியை ஆல்பர்ட் கேனாப்-பிலிருந்து பெற்றவுடன் அவர் முதலில் செய்வது என்ன தெரியுமா? அதை முகர்ந்து பார்ப்பார். பின்பு காகிதங்களினூடே விரல்களை நுழைத்துப் பார்ப்பார். மையை முகர்வார். கூர்மையான விளிம்புகளைப் பார்ப்பார். இத்தனை வருடங்கள் அவருடைய எல்லா புத்தகங்களிலும் இதை அவர் செய்ய மறந்ததில்லை. ஆனால் நாம் இப்போது ஐபேடு யுகத்தில் உள்ளோம். அதை நுகர்வதென்பதை முயற்சிக்கக் கூடாதது. (சிரிப்பொலி) ஆப்பிள் நிறுவனம் இப்போது நறுமணம் வெளியிடும் செயல் திறனை கண்டுபிடிக்க முயல்கின்றனர். (சிரிப்பொலி)
நான் கடைசியாக சொல்லப் போகும் கதை உண்மையில் சுவாரஸ்யமானது. ஒரு பெண்மணி. 1984-ல் ஜப்பானைச் சேர்ந்த அயோமாமி என்ற அவர், நெடுஞ்சாலையை ஒட்டிய சுருள் வடிவ படிக்கட்டுகளில் உரையாடியபடி இறங்கி வருகிறார். கீழே இறங்கியவுடன் திடீரென ஒரு வித அனுபவத்தில் ஆழ்கிறார். அவர் இருந்த யதார்த்தத்திற்கு சிறிது மாறுபட்ட வேறொரு உண்மையான உலகத்தில் நுழைகிறார். மிகவும் ஒத்த ஆனால் அதே சமயம் மாறுபட்டது அவ்வுலகம். அதனால் நாங்கள் சமாந்தரமான இரு வேறு தளங்கள் இருக்குமா என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அது ஒரு புத்தகத்தையும் அதன் அட்டையையும் குறிப்பதாக இருந்தது.
இதை நாங்கள் எப்படி காண்பிப்பது? நாங்கள் ஹெப்பர்ன்ஸ் மற்றும் டீட்ரிக் காலத்தில் செய்ததை இப்போது ஒன்றிணைக்க வேண்டும். அந்த வெவ்வேறு தளங்களை வெவ்வேறு காகிதங்களில் எப்படி கொண்டு வருவது? இது மேலுறையின் மீதுள்ள பாதி தெளிந்த திரை படலம். இது மொத்தப் படைப்பில் ஒரு பகுதியே ஆகும். இதுவே ஒரு வெள்ளைத் தாள் இருந்தால் எப்படி எதிர்மறையாக இருக்குமோ அது தான் திரையில் தெரிகிறது. உங்களுக்கு இப்புத்தகத்தைப் பற்றி எதுவும் தெரியாதிருந்தாலும், ஒரு நபர் இப்படி வெவ்வேறு நிலைகளுக்குக்கிடையில் மாட்டித் தவிப்பதைச் சிந்திக்க வற்புறுத்தப்படுவீர்கள். ஒரு பொருள் அதுவாகவே வந்து உங்களை ஆராயவும், ஊடாடவும், பரிவு கொள்ளவும் மற்றும் தொடவும் செய்துள்ளது.
இப்புத்தகம் நியூயார்க் சிறந்த புத்தக விற்பனை பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இது அப்புத்தக ஆசிரியரும் வெளியீட்டாளரும் கேட்டறியா ஒன்று. 900 பக்கங்களைக் கொண்ட காண்பவரை வசீகரிக்கக் கூடிய, கற்பனை நிகழ்வுகளை கண்முன் கொணரக் கூடிய, உறங்கும் பெண்ணின் வாயிலிருந்து சிறிய மனிதர் வருவதைப் போன்ற விந்தையை நிகழ்த்தும், கடைசியில் எல்லாம் அழிந்து போகும் என்ற மாயத்தை கூறும் ஒரு புத்தகத்தைப் பற்றி பேசுகிறோம். (சிரிப்பொலி) நான் ஜேக்கீ காலின்-ஐ குறிப்பிடவில்லை. 14 வாரங்கள் சிறந்த புத்தக விற்பனை பட்டியலில் இருந்தும், 8 முறைக்கு மேலாக இன்னும் பிரசுரிக்கப்படுகிறது
நாங்கள் அச்சுத் தொழிலை கலையென விரும்பினாலும் அதன் வியாபாரச் சந்தையை நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் அந்த பணியை சரிவர செய்தும், கொஞ்சம் அதிர்ஷ்டசாலியாகவும் இருந்தால் அது எங்களுக்கு மிகப் பெரிய வருமானத்தை உருவாக்கும்.
இதுவே என் கதை. இன்னும் தொடரும். இவை பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது? ஆமாம். இதனால் இப்பொழுதும் எப்பொழுதும் சிறப்பாக செயலாற்ற இயலும். ஆனால் இந்த புத்தக வடிவமைப்பாளருக்கு, காகிதங்களை எந்நாளும் திருப்பிக்கொண்டிருப்பவனுக்கு, கந்தலாகிப்போன ஒரு புத்தக குறியின் பிரதிநிதிக்கு, புத்தக விளிம்பில் குறிப்பு எடுப்பவனுக்கு மையை எந்நாளும் நுகர்பவனுக்கு, இக்கதை இதுபோலத்தான் இருக்கும்.
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
சிப் கிட் புத்தகங்களை அவற்றின் அட்டைகளை வைத்து மதிப்பிடுவதில்லை. அவர் புத்தகத்தின் பொருள் உள்ளடங்கிய நகைச்சுவை ததும்பும் அட்டைகளை வடிவமைக்கிறார். TED2012-ன் நகைச்சுவையான தனது உரையின் மூலமாக நூலட்டை வடிவமைப்புக் கலையையும் அதன் ஆழமான சிந்தனையையும் விளக்குகிறார். (சி பிர்ல்மன் மற்றும் டேவிட் ராக்வெல் ஆகியோரால் நெறியாளப்பட்ட TED2012 வடிவமைப்புக் கூட்டத்தொடரிலிருந்து.)
Chip Kidd's book jacket designs spawned a revolution in the art of American book packaging. Full bio »
Translated into Tamil by Poongothai Subramanian
Reviewed by Tharique Azeez
Comments? Please email the translators above.
16:40 Posted: Oct 2008
Views 787,584 | Comments 95
18:02 Posted: Jan 2008
Views 1,475,221 | Comments 190
22:52 Posted: Apr 2009
Views 531,062 | Comments 129
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.