கடந்த வாரம், நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் சில பிரச்சனைகள் குறித்து ஒரு கடிதம் எழுதினேன். வார்ரேன் பபடின் பரிந்துரையின் பெயரில் நான் அதை செய்தேன்- எது நன்றாக செயல்படுகிறது, எது சரியில்லை என்பதில் நேர்மையாக இருத்தல் மற்றும் அதை வருடம்தோறும் செயல்படுத்தல் வேண்டும். அந்த பிரச்சனைகளை சமாளிக்க மேலும் பலரை உள் ஈர்க்கலாம் என்பதே என் குறிக்கோள், ஏனென்றால் இயல்பாக தீர்க்க முடியாத சில முக்கியமான பிரச்சனைகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன் அதாவது, விஞ்ஞானிகளை , தொடர்பாளர்களை , சிந்தனையாளர்களை மற்றும் அரசாங்கத்தை நல்ல காரியம் செய்ய சந்தை தூண்டுவதில்லை. இந்த காரியங்களில் கவனம் செலுத்தல் மற்றும் இதில் அக்கறையும், மற்றவரை உள் ஈர்க்கும் தன்மையுடைய அறிவார்ந்தவர்களை சேர்த்தால் மட்டுமே நமக்கு தேவையான முன்னேற்றத்தை இதில் காண்பிக்க முடியும்.
ஆதலால், இக்காலை பொழுதில் , இந்த இரு பிரச்சனைகளை உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். மற்றும் அதில் அதன் நிலை பற்றியும் பேசப்போகிறேன். ஆனால் இதனை ஆரம்பிக்கும் முன், நான் கூற விரும்புவது என்னவென்றால் நான் ஒரு நன்னம்பிக்கையாளன். பெரிய பிரச்சனை என்றாலும்,அதற்கான விடையைக் காண முடியும் என்று நான் நினைக்கிறேன். கடந்த காலத்தை கவனிக்கும் பொழுதுதான் அந்த உணர்வு எனக்கு தோன்றியது. கடந்த நூற்றாண்டில், மனிதனின் சராசரி வாழும் காலம் இரட்டிப்பு ஆகியுள்ளது . எனக்கு விருப்பமான, இன்னொரு புள்ளி விபரம், பால்ய மரணங்கள் பற்றியது. 1960 வரை, 110 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், ஐந்து வயதை எட்டும் முன் 20 மில்லியன் குழந்தைகள் மடிந்துள்ளன. ஐந்து வருடங்களுக்கு முன், 135 மில்லியன் குழந்தைகள் பிறந்தன -- அதாவது, நிறைய-- இதில், ஐந்து வயதை கடக்காமல் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 10 மில்லியனுக்கு கீழாகும். ஆக, பால்ய இறப்புவிகிதம் இரண்டு மடங்கு குறைந்துள்ளது. இது ஒரு குறிப்பிடப்படவேண்டிய விஷயம். ஒவ்வொரு உயிரும் முக்கியமானது.
நம்மால் இது முடிந்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் வருவாய் ஏற்றம் மட்டும் அல்ல, சில சாதனைகளுக்கும் அதில் பங்கு உண்டு. பரந்தளவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள். உதாரணத்துக்கு , தட்டமையால் ஏற்பட்ட மரணங்கள் நான்கு மில்லியன் 1990-ஆம் ஆண்டு வரை ஆனால்,அது தற்பொழுது நான்கு மில்லியனைவிடக் குறைவு. ஆக, நாம் நிச்சயமாக மாற்றங்கள் செய்ய முடியும். அந்த 10 மில்லியனை மேலும் பாதியாக்குதலே அடுத்த சாதனையாகும். அதை இருபது வருடங்களுக்குள் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். ஏன்? பெருமளவில் உயிர்களை கொல்லும் நோய்களின் எண்ணிக்கை குறைவு: வயிற்றுபோக்கு, நுரையீரல் காய்ச்சல் மற்றும் மலேரியா போன்றவை.
ஆக, இக்காலைப் பொழுதில் நான் ஆராய போகும் முதல் பிரச்சனைக்கு வந்து விட்டோம். அது என்னவென்றால், நுளம்புகளால் பரவும் கொடூர நோய்களை தடுப்பது எப்படி?
சரி, இந்த நோயின் சரித்திரம் தான் என்ன? பல்லாயிரம் வருடங்களாக இது ஒரு கொடூர வியாதியாக வியாபித்திருக்கிறது . நாம் மரபணுக் குறியீட்டை உற்று நோக்கினால், இந்த நோய்க்கு மட்டும் தான், ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்தவர்கள், மலேரியா மூலமாக இறப்பதை தவிர்க்கும் பல காப்பு நிலைகளைக் கொண்டுள்ளனர். 1930-களில் ஐந்து மில்லியனுக்கு மேல் சென்று உச்சத்தை எட்டியது இந்நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை. அது முற்றிலும் அசுரத்தனமானது. மற்றும், இந்நோய் உலகம் முழுவதும் பரவி இருந்தது. கொடூரமான நோய். அமெரிக்காவில் இருந்தது. ஐரோப்பாவில் இருந்தது. இந்நோய் ஏற்படும் காரணம் தெரியாமல் 1900-களின் ஆரம்பம் வரை மக்கள் தவித்தனர், நுளம்புகள் தான் இந்நோயை ஏற்படுத்துகின்றன என்பதை ஒரு ஆங்கிலேய ராணுவ வீரர் கண்டறியும் வரை. ஆதலால், அது எங்கும் பரவியுள்ளது. சாவு எண்ணிக்கையை குறைத்தன இரண்டு கருவிகள். பூச்சிகொல்லிகளால்(DDT) நுளம்புகளை அழித்தல் ஒன்று. கொயினா மருந்து மூலம் நோய் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துதல் இன்னொன்று. அதனால் தான், சாவு எண்ணிக்கை குறைந்தது.
இதில் நடந்த வேடிக்கை என்னவென்றால், மிதவெப்ப மண்டலங்களில் இந்நோய் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது, பணக்கார தேசங்கள் பல அம்மண்டலத்தில் உள்ளன. ஆக,1900-களில், அது எங்கும் இருந்தது. 1945-இல், பல இடங்களில் இருந்தது. 1970-இல், அமெரிக்க மற்றும் ஐரோப்பா அதை துரத்திவிட்டன. 1990-இல், வட பகுதிகளில் இந்நோய் அறவே இல்லை. தற்பொழுது, இந்நோய் நிலநடுக்கோடு அருகே மட்டுமே இருக்கிறது.
ஆக, இதில் முரண்பாடு என்னவென்றால், இந்நோய் ஏழ்மையான தேசங்களில் இருப்பதால், இதற்கு தகுந்த முதலீடு கிடைப்பதில்லை. உதாரணமாக, வழுக்கைத்தலைக்கான மருந்தில் நிறைய பணம் செலவழிக்க படுகிறது , மலேரியாக்கு செலவாகும் பணத்தை விட. இப்போது வழுக்கைத்தலை, அது கொடுரமானது . (சிரிப்பொலி) பணக்காரர்கள் அல்லற்படுகின்றனர் இதனால். ஆகவே, இதற்கு முன்னுரிமை தரப்படுகிறது.
ஆனால்,மலேரியா -- மலேரியாவால் வருடத்திற்கு ஏற்படும் பல மில்லியன் இறப்புகள் அதன் பாதிப்பை குறைத்து கூறுகிறது. ஒரே நேரத்தில், 200 மில்லியன் மக்களுக்கு அதிகமாக இந்நோயால் அவதிபடுகிறார்கள். இந்த இடங்களுக்கு பண முதலீட்டை கொண்டு செல்ல இயலவில்லை ஏனென்றால் அவ்விடங்கள் பின்தங்கியுள்ளன. நுளம்புகளால் தான் மலேரியா பரப்பபடுகிறது. அதை நீங்கள் அனுபவிக்கவே, இங்கு சில நுளம்புகளை கொண்டு வந்துள்ளேன். இந்த அரங்கத்தை சுற்றிப்பார்க்க அதை விடுவிப்போமாக. (சிரிப்பொலி) ஏழை மக்கள் மட்டுமே இதை அனுபவிக்க வேண்டும் என்றில்லை. (சிரிப்பொலி) (கரகோஷம்) அந்த நுளம்புகளிடம் நோய் பரப்பும் கிருமிகள் இல்லை.
ஆக, நாம் புதிய கருவிகளுடன் வந்துள்ளோம். நுளம்பு வலைகள். நுளம்பு வலைகள் ஒரு மிகப்பெரும் கருவி. தாயும், சேயும் நுளம்பு வலைக்குள்ளே இரவு நேரம் தூங்கலாம், அதனால், இரவு நேரம் அவர்களை கடிக்கும் நுளம்புகள், இப்பொழுது கடிக்க இயலாது. பூச்சிகொல்லி(DDT) மருந்துகளை வீட்டிற்க்குள் உபயோகித்தல் மற்றும் இந்த நுளம்பு வலைகளின் மூலமாக சாவு எண்ணிக்கையை ஐம்பது சதவீதம் குறைக்க முடியும். இது தான் இப்போது, பல தேசங்களில் நடந்தேறியுள்ளது. இது மிகப் பெரிய விஷயம்.
ஆனால், மலேரியாவிடம் நாம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் -- ஏனென்றால் இதில் நோய்கிருமியும் பரிணமிக்கிறது மற்றும் நுளம்புகளும் பரிணமிக்கிறது. ஆக,முன்பு நாம் உபயோகித்த கருவிகள் அனைத்தும் தற்பொழுது செயலிழந்து விட்டன. ஆதலால், நமக்கு இரண்டு விருப்பதேர்வுகளே உள்ளன. ஒரு தேசத்துக்கு சரியான கருவிகளோடு சரியான வழியிலும் சென்று, அங்கே விறுவிறுப்பாக செயல்பட்டால் , அங்கு முற்றிலும் நோயை அழிக்கலாம். அவ்வழியில் தான் மலேரியா வரைப்படம் சுருங்குவதை நாம் கண்டோம். அல்லது, அரை-மனதுடன் ஒரு இடத்துக்கு சென்று, நோய் பளுவை குறிப்பிட்ட காலத்துக்கு குறைக்கலாம் , எனினும், அக்கருவிகள் செயலற்று போகும், மற்றும் சாவு எண்ணிக்கை மீண்டும் உயரும். உலகம் இதை கடந்து வந்திருக்கிறது, அது அக்கறை கொண்ட இடங்களில் மற்றும் அக்கறை காண்பிக்காத இடங்களிலும்.
தற்பொழுது, நாம் ஏறுமுகத்தில் இருக்கிறோம். நுளம்பு வலைக்கான நிதியுதவி அதிகரித்துள்ளது. புதிய மருந்துக்கான கண்டுபிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது . மூன்றாம் கட்ட சோதனையில் உள்ள ஒரு தடுப்பூசியை எங்கள் அறக்கட்டளை ஊக்குவிக்கிறது. இது சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும். அது பயனுள்ளதாக இருந்தால், மூன்றில் இரண்டு பங்கு உயிர்களை காப்பாற்றும். ஆக, நம்மிடம் அப்புதிய கருவிகள் இருக்கப் போகிறது.
ஆனால்,அது மட்டுமே நாம் செல்லவேண்டிய பாதைக்கான வரைபடம் ஆகாது. ஏனென்றால், இந்நோயை அழிக்க உதவும் வரைப்படம் பல விஷயங்களை சார்ந்தது. நிதியுதவி அதிகமாக்க, கண்ணால் காண கூடிய வளர்ச்சியை பெரிதாக்க, மற்றும் வெற்றிக்கதைகளை எடுத்துகூற தொடர்பாளர்கள் வேண்டும். இதில் சமூக அறிவியலாளர்களுக்கும் பங்கு உள்ளது, 70 சதவீதம் மக்கள் மட்டுமே உபயோகிக்கும் நுளம்பு வலைகள் , எப்படி 90 சதவிகித மக்களுக்கு எடுத்து செல்லலாம் என தெரிந்து கொள்ள. உருவகப்படுத்த கணித வல்லுனர்கள் நமக்கு தேவை, இக்கருவிகள் எப்படி இணைந்து செயல்படுத்தலாம் என்று கணினி மூலமாக உருவகப்படுத்திப் புரிந்துகொள்ள. நிச்சயமாக, மருந்து நிறுவனங்களின் திறன்வாய்ந்த கருத்துக்கள் நமக்கு தேவை. இதற்கு நிதி அளிப்பதில் மிகவும் தாராள மனமுடைய பணக்கார தேசங்கள் நமக்கு தேவை. ஆக, இந்த மூலகங்கள் இணைந்து வந்தால், நான் மிகவும் நன்நம்பிக்கையுடன் கூறுகிறேன் நாம் மலேரியாவை முற்றிலுமாக அழிக்க முடியும் என்று.
இப்போது, நான் இரண்டாவது வினாவிற்கு செல்கிறேன். முற்றிலும் மாறுப்பட்ட வினா ஆனபோதிலும் முக்கியமானதே. அது என்னவென்றால்: தலைசிறந்த ஆசிரியரை உருவாக்குதல் எப்படி? மக்கள் நிறைய நேரம் செலவழிக்கும் வகையான கேள்வி இது, இதை நாம் நன்றாக புரிந்துகொள்வோம். ஆனால்,உண்மையில், அதை நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை. இது ஏன் முக்கியம் என்பதிலிருந்து நான் ஆரம்பிக்கிறேன். இங்குள்ள அனைவருக்கும் தலைசிறந்த ஆசிரியர்கள் கிடைத்திருப்பார்கள். நம் அனைவருக்கும் நல்ல கல்வி கிடைத்துள்ளது. இன்று நாம் இங்கு இருப்பதற்கு ஒரு காரணமும் அதுவே, நாம் வெற்றியாளர்களாக இருப்பதற்கு ஒரு காரணமும் அதுவே. இதை நான் சொல்வேன், கல்லூரி படிப்பை முழுதாக முடிக்காதவனாக இருப்பினும். எனக்கு தலைச்சிறந்த ஆசிரியர்கள் இருந்தார்கள் .
அமேரிக்காவில், பாடம் நடத்தும் முறைமை நன்றாகவே வேலை செய்தது. நன்றாகவே வேலை செய்ய கூடிய ஆசிரியர்கள் மிக சில இடங்களிலே இருந்தார்கள். ஆக, மேல் 20 சதவீத மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைத்தது. அந்த 20 சதவீத மாணவர்கள் உலகின் சிறந்தவர்களானார்கள் , மற்றொரு மேல் 20 சதவீத மாணவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால். அவர்களே மென்பொருள் மற்றும் உயிரியல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி செய்தனர், அமெரிக்காவை முன்னிலையில் தங்க வைத்தனர் .
தற்பொழுது, அந்த மேல் 20 சதவீதத்தினரின் பலம் குறையத் தொடங்கியுள்ளது , ஆனால் இதில் கவனிக்க படவேண்டியது, மற்ற சதவிகித மக்களுக்கு கிடைக்கும் கல்வித்தரம் தான். அது பலவீனமாக மட்டும் இல்லை; மேலும் பலவீனமாகி கொண்டிருக்கிறது. மேலும் தற்பொழுதைய பொருளாதார சூழல், நல்ல கல்வி கற்ற மக்களுக்கே வாய்ப்புக்களை அளிக்கிறது. இதை நாம் மாற்றியாக வேண்டும். மக்களுக்கு சரிசமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் இதை நாம் மாற்ற வேண்டும். நம் தேசம் வலுப்பெற வேண்டும் மற்றும் கணிதம், அறிவியல் போன்ற மேம்பட்ட கல்விகளினால் செலுத்தப்படும் விஷயங்களில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றால், இதை நாம் மாற்றியாக வேண்டும்.
முதன்முதலில் நான் புள்ளிவிவரங்களை படித்த பொழுது நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று அதிர்ந்து போனேன். 30 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர் பள்ளிப்படிப்பை முடிப்பதில்லை. இதுவே பல வருடங்களாக கருதபடுகிறது. ஏனெனில் அவர்கள் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர் பள்ளி ஆரம்பத்தில் சேர்ந்தவர்களில் இருந்து பள்ளி படிப்பு முடிப்பவர்களை கழித்து கணக்கிடுகிறார்கள் ஏனென்றால் அதற்கு முன் சிறுவர்கள் எங்கிருந்தார்கள் என்பதை அவர்கள் கணக்கில் எடுத்து கொள்வதில்லை . ஆனால், நிறைய படிப்பு-நிறுத்தங்கள் அதற்கு முன்னரே நடந்தேறிவிடுகிறது. அந்த சிறுவர்களின் தடம் அறிந்து உடனுக்குடன் படிப்பு-நிறுத்த சதவீதத்தை 30 சதவீதத்திற்கு மேல் உயர்த்தி உள்ளனர். சிறுபான்மையுனர்களுக்கோ , அது 50 சதவீதத்திற்கு மேல். உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆயினும், நீங்கள் குறைந்த வருமானம் மட்டுமே ஈட்டினால், கல்லூரி படிப்பை முடிப்பதில் 25 சதவீதத்திற்கே குறைவான வாய்ப்பே உள்ளது. அமெரிக்காவில் நீங்கள் குறைந்த வருவாய் ஈட்டுபவர் என்றால், நான்கு வருடம் பட்டம் வாங்குவதை விட, சிறைச்சாலைக்கு செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. இது சரியான விடமாகப் படவில்லை.
சரி, எப்படி கல்வித்தரத்தை மேம்படுத்துவது?
கடந்த ஒன்பது வருடங்களாக, எங்கள் அறக்கட்டளை இதில் முதலீடு செய்து வருகிறது. இதில் பலர் வேலை செய்கின்றனர். சிறிய பாடசாலைகளில் பணியாற்றினோம், படிப்புதவி தொகைகளை அளித்தோம், மற்றும் நூலகங்களை சீரமைத்தோம். இதனால் நல்ல விளைவுகள் ஏற்பட்டன. ஆனால்,ஒன்றை மட்டும் நன்றாக அறிந்தோம், சிறந்த ஆசிரியர்களை பணியமர்த்தல் தான் இதில் முக்கியமாக செய்யப்பட வேண்டிய காரியம். ஆசிரியர்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகள் , அதாவது உயர்ந்த கால்மானம்-- மிக சிறந்த-- மற்றும் கீழ் கால்மானம் மத்தியில் உள்ள வேறுப்பாடுகளை ஆய்வு செய்யும் சிலருடன் சேர்ந்து பணியாற்றினோம், அதே பள்ளிக்குள் மற்றும் பள்ளிகளுக்கு மத்தியில் எத்தனை வேறுபாடுகள்? இந்த வேறுபாடுகள் முற்றிலும் நம்பமுடியாதவையாக இருந்தன என்பது எங்களுக்கு கிடைத்த விடை. ஒரு மேல் கால்மான ஆசிரியர், அவர்கள் வகுப்பின் செயல்திறனை -- தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் -- ஒரே வருடத்தில் பத்து சதவீதத்திற்கு மேல் உயர்த்துகிறார். இதற்கு அர்த்தம் என்ன? இதே அமெரிக்காவிடம் மேல் கால்மான ஆசிரியர்கள், இரண்டு வருடங்கள் இருந்திருந்தால், நமக்கும் ஆசியாவிற்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் காணாமல் போயிருக்கும். நான்கு வருடங்களில், நாம் உலகில் உள்ள அனைவரையும் ஊதி தள்ளியிருப்போம்.
ஆக, இது எளிமையானது. உங்களுக்கு தேவையெல்லாம் மேல் கால்மான ஆசிரியர்கள். ஆக, நீங்கள் கூறுவீர்கள், "ஆஹா , அவர்களுக்கு நாம் பரிசுகள் கொடுக்க வேண்டும். அவர்களை நம்மிடம் தக்கவைத்து கொள்ள வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்து, அந்த திறமையை மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டும். ஆனால், நான் கண்டிப்பாக் சொல்வேன், அது இன்றைய காலகட்டத்தில் நடப்பதில்லை.
இந்த மேல் கால்மானத்தின் சிறப்பியல்பு தான் என்ன? அது எப்படி இருக்கும்? அவர்கள் முதுநிலை ஆசிரியர்கள் என்று நீங்கள் எண்ணலாம். ஆனால், அது சரியான விடை அல்ல. ஒருவர் மூன்று வருடங்கள் பாடம் நடத்தினால், அவர்களது கற்பிக்கும் திறன் அதன் பின்பு மாறுவதில்லை. வேறுபாடு என்பது மிக மிக குறைவே. அவர்கள் உயர்கல்வி பட்டம் பெற்றவர்கள் என்று நீங்கள் யோசிக்கலாம். அவர்கள் திரும்ப சென்று கல்விக்கான உயர் பட்டபடிப்பை பெற்றிருக்கலாம். இந்த அட்டவணையில் நான்கு வெவ்வேறு காரணிகள் உள்ளன. இது ஆசிரியர் தரத்தை விளக்குகிறது. அந்த கீழ் பகுதி, ஒரு மாற்றமும் செய்வதில்லை என்று காண்பிக்கும் பகுதி, உயர்பட்டபடிப்பை சேர்ந்தது.
இப்போ, சம்பளம் தரும் அமைப்பு, இரு விஷயங்களை சார்ந்தது. ஒன்று பணி மூப்பு. ஏனென்றால் உங்கள் சம்பளம் ஏறுகிறது மற்றும் உங்கள் ஓய்வு ஊதியம் பெருகுகிறது . இரண்டாவது, உயர்பட்ட படிப்பை முடித்தவர்களுக்கு அதிக ஊதியம் தரப்படுகிறது. ஆனால், இது ஒருபொழுதும் நல்ல ஆசிரியருடன் ஒற்றுபோகும் விஷயம் அல்ல. அமெரிக்காவிற்காக கற்பித்தல்: சிறிய விளைவு. கணிதத்தில் உயர் கல்வி பெற்ற கணித ஆசிரியர்களால் ஓரளவு விளைவு உள்ளது. ஆனால்,பேரளவிலானது, உங்கள் முந்தைய செயல்திறனே. இதில் சிறந்தவர்கள் சிலர் உள்ளனர். அது என்ன என்பதை படிக்க, அதில் ஆட்களை சேர்க்க மற்றும் திரும்ப பெருக்க, சராசரி திறனை உயர்த்த -- அல்ல அமைப்பிலேயே மக்களை தங்க வைக்க நாம் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை
நீங்கள் சொல்லலாம், "நல்ல ஆசிரியர்கள் தங்குகிறார்கள் மற்றும் தகுதியில்லாத ஆசிரியர்கள் விலகி செல்கிறார்களா?" விடை என்னவென்றால், சராசரியாக, சற்று சிறந்த ஆசிரியர்கள் அமைப்பிலிருந்து விலகுகிறார்கள். இதுவோ அதிக கொள்முதல் ஆகும் அமைப்பாகும்.
நல்ல ஆசிரியர்களை உருவாக்கும் இடங்கள், மிக குறைவே--மிக மிக குறைவே. இதற்கு நல்ல உதாரணம், KIPP என்ற பட்டய பள்ளி குழுமம். KIPP என்றால் Knowledge is Power (அறிவே பலமானது.) இது ஒரு நம்பமுடியாத விஷயம். அவர்களிடம் 66 பள்ளிகள் உள்ளது -- நிறைய நடுநிலைபள்ளிகள், சில உயர்நிலை பள்ளிகள் -- அங்கு நடப்பதோ சிறந்த வகுப்புகள். அவர்கள் ஏழை சிறுவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள், அவர்கள் உயர் நிலை பள்ளி மாணவர்களில் 96 சதவீதத்தினர் கல்லூரிக்கு நான்கு ஆண்டு பட்டம் பயில செல்கிறார்கள். அந்த பாடசாலைகளில் உள்ள சக்தி மற்றும் மனோபாவம், மற்ற சாதாரண பொது பாடசாலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அவர் குழு கற்பித்தல் முறையை கையாளுகிறார்கள். தங்கள் ஆசிரியர்களை நிரந்தரமாக முன்னேற்றி வருகிறார்கள். தரவு மற்றும் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்து, "நீங்கள் இவ்வளவு முன்னேற்றம் தந்தீர்கள்" என்று ஒரு ஆசிரியரிடம் கூறுவார்கள். கற்பித்தலை மேம்படுத்த முற்றிலுமாக முயல்கிறார்கள்.
அங்கு உள்ள ஒரு வகுப்பில் சென்று அமர்ந்தால், முதலில் தமாஷாக இருக்கும். "என்னையா நடக்குது இங்க ?" என்று நான் உட்கார்ந்து யோசித்து கொண்டிருந்தேன். ஆசிரியர் அங்கும்-இங்கும் ஓடி கொண்டிருக்கிறார் மற்றும் அங்கு ஆற்றல் நிலைகள் மிக பெரியதாக இருந்தது. "என்னையா நடக்குது? நான் என்ன விளையாட்டு மைதானத்திலா உள்ளேன்" என்று யோசித்தேன். எந்த மாணவர் கவனம் செலுத்தவில்லை, எந்த மாணவருக்கு சலிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஆசிரியர் கூர்ந்து கவனிக்கிறார், பின்பு அந்த மாணவர்களை அதிரடியாக அழைத்து , பலகையில் உள்ளவற்றை விளக்க சொல்கிறார். அது ஒரு ஆற்றல் மிகுந்த சூழல், ஏனெனில், நடுநிலை பள்ளிக்காலங்களில் -- குறிப்பாக ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளவர்களை -- ஈடுபாட்டுடன் வைப்பது மற்றும் சுருசுருப்பாக்குவது, மற்றும் வகுப்பிலுள்ள அனைவரும் கவனம் செலுத்த வைப்பது என்பதை , யாரும் கேலியாக எடுத்து கொள்ளவில்லை, மற்றும் அங்கு இருத்தல் பிடிக்காத எந்த மாணவரும் இல்லை. எல்லாரும் தம்மை தாமே ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதை தான் KIPP செய்து கொண்டிருக்கிறது.
இதை எவ்வாறு சாதாரண பாடசாலையுடன் ஒப்பிடலாம்? சாதாரண பள்ளியில் ஆசிரியர்களின் தரம் மதிப்பீடு செய்யபடுவதில்லை. தகவல்கள் சேகரிக்கபடுவதில்லை. ஆசிரியரின் ஒப்பந்தத்தின் படி, தலைமை ஆசிரியர் ஒரு வகுப்புக்கு வரும் தடவைகளை குறைக்க முடியும் -- சில சமயம் வருடத்துக்கு ஒரு முறைக்கு கூட. அதுவும் முன்னதாகவே அறிவிக்கப்படவேண்டும். வேலை ஏதும் செய்யாத சில தொழிலாளர்களை கொண்ட ஒரு தொழிற்சாலையை யோசித்து பாருங்கள், அங்குள்ள நிருவாகத்திடம் தொழிலாளர்கள் கூறுவது என்னவென்றால், "நாங்கள் வேலை செய்யும் இடத்துக்கு நீங்கள் வருடம் ஒரு தடவை மட்டும் தான் வர வேண்டும், அதுவும் எங்களுக்கு முன்னரே அறிவித்து விட்டும் வரவேண்டும், ஏனெனில் அப்போதுதான் உங்களை ஏமாற்ற முடியும், மற்றும் அந்த சமயம் மட்டுமே ஒரு நல்ல வேலையை முயன்று செய்ய முடியும்"
முன்னேற நினைக்கும் ஆசிரியர்க்கு தகுந்த கருவிகள் இல்லை. தேர்வு மதிப்பெண்கள் அவர்களிடம் இல்லை, மற்றும் தகவலை மறைக்கும் முயற்சிகள் வேறு அரங்கேறி வருகிறது. உதாரணமாக, நியூ யோர்க்கில் ஒரு சட்டம் நிறைவேறியது அதாவது ஆசிரியரின் பணிக்காலத்தை நிர்ணயம் செய்யும் பொருட்டு ஆசிரியர் முன்னேற்றத்துக்காக சேகரிக்கப்படும் தகவல்கள் யாருக்கும் கிடைக்க கூடாது மற்றும் அதை உபயோகிக்கவும் கூடாது . இது எதிர்த்திசையில் வேலை செய்வது போல் ஆகும். ஆனால் நான் இதில் நன்னம்பிக்கையோடு உள்ளேன். நம்மால் சில நல்ல காரியங்கள் செய்ய முடியும் என்று எனக்கு தோன்றுகிறது.
இதில் பல சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது, அதுவே நாம் எங்கிருக்கிறோம் என்பதை நமக்கு எடுத்து காட்டுகிறது. மற்றும் யார் சரியாகச் செயல்படுகிறார்கள் என்பதை நமக்கு புரிய வைக்கிறது , அவர்களை அழைத்து, அந்த நுணுக்கங்களை நாம் கண்டு பிடிக்க வேண்டும். ஐயத்திற்கு இடமின்றி, டிஜிட்டல் காணொளி (Video) தற்பொழுது மலிவு விலையில் கிடைக்கிறது. வகுப்புகளில் சில படக்கருவிகளை பொருத்தி கற்பித்தலை பதிவு செய்வது என்பது அனைத்து பொது பாடசாலைகளிலும் சாத்தியமே. சில வாரங்களுக்கு ஒரு முறை, ஆசிரியர்கள் ஒரு குழுவாக அமர்ந்து "சரி, நான் நன்றாக பணியாற்றிய வகுப்பு நடப்பின் பதிவு இதோ" என்று விவாதிக்கலாம் "நான் தரக்குறைவாக நடத்திய வகுப்புகளின் சிறிய பதிவு இதோ அறிவுரை தாருங்களேன் -- அச்சிறுவன் அப்படி நடந்துகொண்டதினால், நான் எவ்வாறு அதை சமாளித்திருக்க வேண்டும்?" அந்த பிரச்சனைகளை சமாளிக்க அனைவரும் சேர்ந்து செயல்படவேண்டும். நீங்கள் அதில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களை பற்றி விவரித்து, அந்த ஆசிரியர் நடத்திய வகுப்பின் பதிவை எல்லாரும் காணும் படி செய்யலாம்.
அந்த சிறந்த பயிற்சி வகுப்பினை அனைவருக்கும் கிடைக்கும் படி செய்யலாம் அதனால், மாணவர் அந்த இயற்பியல் வகுப்பினை கண்டு கற்கலாம். சற்று பின்தங்கிய மாணவர் என்றால், அவருக்கு அந்த படத்தை காண்பித்து , அதன் அர்த்தத்தை விவரிக்க சொல்லலாம். அந்த இலவச பயிற்சி வகுப்பு படங்களை இணையத்தளம் மட்டும் அன்றி, டிவிடி -க்களிலும் கிடைக்க கூடியதாக்கலாம். இதனால் டிவிடி-இல் பார்க்கும் வசதி உள்ளவர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் அமைவார்கள். இதில் பணியாளர்களையும் அமர்த்தும் அமைப்பாக கருதினால், இன்னும் நன்றாக மாற்றலாம்.
KIPP-ஐ பற்றி ஒரு புத்தகம் உள்ளது -- அது நடக்கும் இடத்தை பற்றி -- ஜே மத்த்யுஸ் என்ற செய்தியாளர் எழுதிய -- "Work Hard, Be Nice"என்ற புத்தகம். இது ஒரு அருமையான புத்தகம். ஒரு நல்ல ஆசிரியர் எப்படி செயல்படவேண்டும் என்பதை இது விவரிக்கிறது. எல்லாருக்கும் இந்த புத்தகத்தின் நகலை இலவசமாக அனுப்பி வைக்க போகிறேன். (கரகோஷம்)
நாம் கல்வியில் அதிக முதலீடு செய்கிறோம், இந்த தேசத்திற்கு வலுவான எதிர்காலம் அமைய வேண்டும் என்றால், கல்வியை சீர்படுத்த வேண்டும் என்பது என் கருத்து. நமக்கு Stimulus மசோதா உள்ளது-- வேடிக்கையானது அது-- House பதிப்பில் இந்த தகவல் கட்டமைப்புக்கான பணம் இருந்தது,♪ எனினும் Senate-இல் அது நிறைவேற்றப்படவில்லை. ஏனென்றால் அதை கண்டு அஞ்சியவர்கள் பலர்.
ஆனால், நான்-- நான் நன்னம்பிக்கையாளன். இது எத்துனை முக்கியம் என்பதை மக்கள் அறிய ஆரம்பித்து விட்டனர், இதை சரி செய்தால், நிச்சயமாக பல மில்லியன் மக்களுக்கு ஒரு பயனுள்ள மாற்றமாக அமையும். இந்த இரு பிரச்சனைகளை பற்றி ஆராயவே எனக்கு நேரம் இருந்தது. இதை போல் பல பிரச்சனைகள் உள்ளன -- AIDS, நுரையீரல் காய்ச்சல் -- நீங்கள் இதை கேட்கும் பொழுதே, கிளர்ச்சி அடைவதை என்னால் காண முடிகிறது. இந்த விஷயங்களை சமாளிக்க தேவையான திறன் மிக பெரியது. இந்த விடயங்கள் தானாக நடக்கும் அமைப்புகளல்ல. இதைச் சரியான முறையில் அரசுகளும் தேர்ந்தெடுப்பதில்லை. தனியார்த்துறை இதில் தன் வளங்களை உபயோகபடுத்துவதில்லை .
ஆதலால், இந்த விஷயங்களை படிக்க, மற்றவர்களை இதில் செயல்படுத்த உங்களை போன்ற அறிவார்ந்தவர்கள் தேவைப்படுகிறார்கள் -- நீங்களும் தீர்வுகளுடன் உதவி செய்ய முனைகிறீர்கள். இதெல்லாம் சேர்ந்து, பெரிய விஷயங்கள் வெளி வரும் என நான் நினைக்கிறேன்.
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
தன் புதிய வகை அருளுடைமையால், உலகின் பெரிய பிரச்சனைகளுக்கு விடை காணலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் பில் கேட்ஸ். தன் அதீத ஆர்வமுடைய மற்றும் குறும்பான 18 நிமிடம் பேச்சு மூலம், இரு வினாக்களை எம்மிடம் எழுப்பி, அதற்கான விடைகளை தருகிறார்.
A passionate techie and a shrewd businessman, Bill Gates changed the world once, while leading Microsoft to dizzying success. Now he's set to do it again with his own style of philanthropy and passion for innovation. Full bio »
Translated into Tamil by Srivatsan S
Reviewed by Tharique Azeez
Comments? Please email the translators above.
12:15 Posted: Mar 2009
Views 334,511 | Comments 53
16:41 Posted: Jan 2007
Views 522,506 | Comments 381
25:50 Posted: Jul 2006
Views 223,655 | Comments 43
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.