TED-இன் விருப்பங்களுக்கு ஏற்றவாறு சிந்திக்கும் பணிக்கு என்னை நானே தேற்றிக்கொள்ள விழைந்தேன். நான் செய்ய எத்தனிப்பதை ஒருமுகப்படுத்தும் முகமாக நான் முயற்சி செய்கிறேன். அது எவ்வாறு அவர்களது செயலுக்கு ஏற்றவாறு அமைகிறது என்று பார்ப்போம். நாம் வாழும் உலகிலே நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சார்ந்தவர்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது மூன்று வழிகளில் போதுமானதாக இல்லாமல் இருக்கிறது. முதன்மையாக, அது சமத்துவம் அளிக்காமல் இருத்தல் உலகிலுள்ள பாதி மக்கள் இரண்டு டாலருக்கும் குறைவான பணத்தில் அன்றாடம் வாழ்க்கை நடத்துகின்றனர். 1 பில்லியன் மக்களுக்கு தூய்மையான நீர் கிட்டுவதில்லை. இரண்டரை பில்லியன் மக்களுக்கு பொது சுகாதாரம் கிட்டுவதில்லை. ஒரு பில்லியன் மக்கள் அன்றாடம் பட்டினியுடன் தூங்குகின்றனர். ஆண்டுதோறும் நான்கில் ஒரு சாவு, எய்ட்ஸ், எலும்புருக்கி நோய் மற்றும் மலேரியாவால் நிகழ்கிறது. அசுத்தமான நீரினால் ஏற்படும் தோற்று மற்றொரு புறம் 80% - விகிதத்தினர் ஐந்து வயதிற்கு குறைவானவர்கள்.
பணக்கார நாடுகளில் கூட இன்றைக்கு சமமின்மை வளர்வதை பொதுவாக காண முடிகிறது. 2001-இலிருந்து, அமெரிக்க நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு நாம் பொருளாதார வளர்ச்சியை பார்த்தோம். வேலையிடத்தில் ஐந்து ஆண்டுக்கான உற்பத்தித்திறன் வளர்ச்சியை பார்த்தோம். ஆனால் நடுநிலை சம்பளம் தேக்கநிலையிலேயே உள்ளது. மேலும் வேலைக்கு செல்லும் குடும்பங்களின் விழுக்காட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே 4 விழுக்காட்டிற்கு சரிந்துள்ளது. காப்பீடு இல்லாமல் இருக்கும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களின் விழுக்காடு 4 விழுக்காடு உயர்ந்துள்ளது ஆக நமக்கு நல்லதாக இருந்த ஒருவருக்கொருவர் சார்ந்து இருக்கும் இவ்வுலகம் -- அதனால்தான் நாம் எல்லோரும் வடக்கு கலிபோர்னியாவில் இப்போது என்ன செய்துக்கொண்டு இருக்கின்றோமோ உயிர் வாழ்வதற்கும், இந்த இனிய மாலைப் பொழுதை அனுபவிப்பதிலும் -- எவ்வளவு சமமின்மை பொருந்தியதாய் உள்ளது. இது மிகவும் நிலையற்றதும் ஆனது. ஏன் நிலையற்றது என்றால், தீவிரவாத அச்சுறுத்தலாலும், பேரழிவு தரக்கூடிய ஆயுதங்களாலும், புவியெங்கும் பரவும் நோய்களினாலும், உள்ளூர, பல்லாண்டுகளாக இல்லாத வண்ணம், நாம் இக்கொடுமைகளுக்கு இறையாகிவிடுவோமோ என்ற உணர்வுந்துதல். எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் (புவியின்) ஏந்தும் தன்மை குறைந்துள்ளதனாலும், புவியின் கால நிலை மாற்றத்தாலும், இயற்கை வள நலிவுருதலாலும் மற்றும் பல உயிரினங்கள் அழிவதனாலும்.
நான் எந்த மாதிரியான உலகத்தை எனது மகளுக்கு மற்றும் நான் பெற விரும்பும் பேரப்பிள்ளைகளுக்கு விட்டுச்செல்வேன் என்று சிந்திக்கும்போது சமமற்ற, நிலையற்ற, புதுப்பிக்க இயலாத உலகிலிரிருந்து, அது ஒர்வருக்கொருவர் சார்ந்த மற்றும் ஒருங்கிணைந்த சமுதாயங்களையுடைய உலகாக -- உள்ளூர், நாடளாவிய மற்றும் உலகளாவிய மட்டத்தில் -- வெற்றிபெற்ற ஒரு சமுதாயத்தின் இயல்புகளை உள்ளடக்கிய உலகாக தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும். எல்லோரும் பகிர்ந்துக்கொள்ளக்கூடிய, வாய்ப்புகளின் தொகுப்புகளை அணுக்க வேண்டி நம்மில் பொதுவான வினைதிட்பங்களின் வெற்றிக்காக நாம் பகிரக்கூடிய பொறுப்புணர்வுக்காகவும் இதன் பால் எனது சொந்தம் உள்ளது என்ற உணர்வு உள்ளது என்பதற்காகவும். எல்லாம் சொல்வதற்கு சுலபமாகவும் செய்வதற்கு சற்று கடினமாகவும் தான் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் தீவிரவாத செயல்கள் சில நடைபெற்ற பொது நாம் நமது நாடான ஐக்கிய அமெரிக்காவில், 9/11-இன் போது இழந்த உயிர்களின் எண்ணிக்கையை விட சிறியதாக இருந்தபோதிலும்கூட பிரித்தானியர்களை மிகவும் கவலை கொள்ளச்செய்தது எது என்று நான் நினைக்கிறேன் என்றால் அத்தீவிரவாதச்செயல்களை செய்தவர்கள் வெளிநாட்டினர் அல்லாமல் உள்ளூர் குடிமக்களாய் இருந்ததுதான். அவர்களது சமய மற்றும் அரசியல் அடையாளங்கள், தங்களோடு வளர்ந்த மக்களை விட, தங்களோடு பள்ளிக்கு சென்றவர்களை விட, தங்களோடு வேலை செய்தவர்களை விட, தங்களோடு விடுமுறையை லழித்தவர்களை விட, தங்களோடு கூட்டாஞ்சோறு உண்டவர்களை விட, அவர்களது அந்த அடையாளங்கள் முக்கியமாக போய் விட்டது. வேறு மாதிரி சொல்லவேண்டும் என்றால், அவர்களது மாறுபாடுகள் பொதுவான மந்த நேயத்தை விட அவர்களுக்கு முக்கியமாக போய்விட்டது. இது 21-ஆம் நூற்றாண்டில் மனித இனத்திற்கு பீடித்த ஒரு கொடூரமான உளவியல் கொள்ளை நோய்.
இந்த கலவையில், பொது வாழ்வில் இல்லாத நம்மை போன்றவர்கள் வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு நன்மை செய்திட ஆற்றல் நிலவுகிறது. ஏனென்றால் உலகில் பாதிக்கும் மேற்பட்டோர் தாங்கள் தேர்ந்தெடுத்த மற்றும் தூக்கி எறிய நினைக்கும் அரசுகளின் கீழ் வாழ்கிறார்கள். ஜனநாயகமில்லாத அரசுகளையுடைய அரசுகளும் பொதுக் கருத்துக்கு செவி சாய்க்கும் நிலை உள்ளது. இது இணையத்தின் ஆற்றலினால் முதற்க்கண் ஏதுவாகிறது. சாதாரண மக்கள் ஒன்றிணைந்து பெரும் செல்வம் குவிக்க வழி செய்கிறது. இது அவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டால், ஓரளவு பொது நன்மைக்கு உலகை மாற்ற வழி செய்கிறது. பேரலை (சுனாமி) தெற்காசிய மண்டலத்தை தாக்கிய பொது, அமெரிக்கா 1.2 பில்லியன் டாலர்களை கொடை அளித்தது. நமது குடும்பங்களில் 30 விழுக்காட்டினர் பங்களித்தனர். அதில் பாதி பேர் இணையத்தின் வாயிலாக பங்களித்தனர். அந்த பங்களிப்பின் நடுநிலை மதிப்பு 57 டாலருக்கு அருகில் இருந்தது. மூன்றாவதாக, அரசு சாரா நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகியதால். அவர்கள், தொழில்கள் மற்றும் ஏனைய குடிமக்கள் சங்கங்கள், நமது சக மனிதர்களின் வாழ்கையில் பங்காற்ற நிறைய ஆற்றல் பொருந்தியவர்கள். நான் 1993-ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசுத்தலைவராக பதவியேற்ற பின், ரஷ்ய நாட்டில் இவற்றில் ஒன்று கூட இருந்திருக்கவில்லை. இப்போது சில நூறாயிரம் நிறுவங்கள் உள்ளன. இந்தியாவிலும் ஒன்றும் இருந்திருக்கவில்லை. இப்போது 5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன. சீனாவிலும் ஒன்றும் இருந்திருக்கவில்லை. இப்போது 2,50,000 நிறுவனங்கள் அந்த அரசோடு பதிவு பெற்றிருக்கின்றன. ஒருக்கால் அதிலும் இரு மடங்கு இருந்திருக்கக்கூடும். ஆனால் சில பல அரசியல் காரணங்களுக்காக அவ்வளவு இல்லை.
நான் எனது நிறுவனத்தை தொடங்கியபோது, இப்போது இருக்கும் உலக நிலையையும், நான் எனது அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல விழையும் உலக நிலையையும் எண்ணிப்பார்க்கிறேன். நான் எனது வாழ்நாள் முழுவதும் எதனைப்பற்றி மட்டுமே கவனம் செலுத்தலானேன் என்று யதார்த்தமாக சிந்தித்து அந்த விஷயம் என் மேல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சிந்தித்தேன். நான் எந்த மாதிரி செயல்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றால், வறுமை ஒழிப்பில், நோயை குணப்படுத்துவதில், காலநிலை மாற்றத்தை தடுப்பதில், சமய மற்றும் இனம் சார்ந்த, இவ்வுலகை உலுக்கும் பிளவுகளுக்கு உறவுப்பாலம் இடுவதில் என்பதில் தான். நான் செய்யும் செயல்கள் எவ்வழியில் செய்யப்படவேண்டும் என்றால், ஒரு குழுவாக நாம் செயல்படும்போது, நமது குறிப்பிட்ட திறமைகளை உள்ளடக்கி ஒரு பொது நலனை மாற்றி அமைத்த பெருமையோடு அது இவ்வுலகம் முழுமையும் பேசப்பட்டு செயல்படுத்துவது போல் அமைய வேண்டும்
அப்படி ஒரு உதாரணமாக ஏமமிலி (எய்ட்ஸ்) நோய்க்கு மருந்து வேண்டி நாம் செய்த செயல்களை குறிப்பிடலாம். மேலும், நமது ஏமமிலிக்கு மருந்து குறித்த முயற்சிக்கு தலைமை தாங்கிய மற்றும் நான் இந்த இரவு பொழுதில் கூற விரும்பும் விஷயத்தில் முதன்மையாக தன்னை முன்னிறுத்திக் கொண்டவரான இரா மகசினர், இப்போது என்னோடு உள்ளார், அவர் செய்த எல்லாவற்றிற்கும் அவருக்கு முதற்க்கண் நன்றி கூற விரும்புகிறேன். அவர் அங்கு உள்ளார் கைதட்டல் நான் அலுவலகத்திலிருந்து வெளியேறும் பொது, முதலில் கரிபியன் தீவுகளில் பணியினை தொடங்குமாறு என்னை கேட்டுக்கொண்டதன் பேரில். ஏமமிலி (எய்ட்ஸ்) ஏற்படுத்திய பேரழிவிலிருந்து உலகினை காப்பற்ற உதவும் பொது, ஒரு மனிதனுக்கு ஒரு ஆண்டிற்கு சராசரியாக $500 என்ற விலையில் மருந்துகள் கிடைக்கப் பெற்றன. நீங்கள் அவற்றை கூடுதலான எண்ணிக்கையில் வாங்கினால் $400-க்கு சற்று குறைவான விலையில் அதனை வாங்கியிருக்கலாம். நாங்கள் முதலில் வேலை செய்யச் சென்ற நாடான, பஹாமாஸ் தீவுகளில், இந்த மருந்தை வாங்க அங்கு அவர்கள் $3500 செலவு செய்தனர். இந்த மருந்தின் சந்தை ஒழுங்கு படுத்தப்படாமல் இருந்தது. இந்த மருந்தினை இரண்டு முகவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டு இருந்தனர். அவர்கள் ஏமமிலி பாதித்தவர்களை 7 மடங்கு விலை வைத்து விற்று ஏமாற்றிக் கொண்டு இருந்தனர். ஆக, நாங்கள் வேலையை தொடங்கிய முதற் வாரத்திலேயே, மருந்தின் விலையை $500 அளவிற்கு குறைத்தோம். திடீரென்று, அவர்களால் 7 மடங்கு உயிர்களை அதே விலையில் காப்பற்ற முடிந்தது.
பிறகு, ஏமமிலி மருந்து தயாரிப்பாளரிடம் சென்று வேலை செய்தோம். அதில் ஒருவர் இந்த காணொளியில் குறிப்பிடப்படுகிறார். நாம் அவரோடு மிகவும் மாறுபட்ட தொழில் உத்தியை பகிர்ந்துக் கொண்டோம். ஏனென்றால் $500-இல் கூட, இந்த மருந்துகள் அதிக லாபம் வைத்தும், சிறிய அளவிலும், பணம் கிடைப்பதில் உள்ள உறுதியற்ற நிலை என்று இருந்தது. அதனால் மருந்து தயாரிப்பு பணியில் உற்பத்தித் திறனை கூடுவதிலும், விநியோகச் சங்கிலி சீராக செயல் படுவதிலும் கவனம் செலுத்தினோம். மேலும் குறைவான லாபம் வைத்தும், உற்பத்தி பெருக்கியும், பணம் கிடைப்பதில் உறுதியான நிலையையும் ஏற்படுத்தினோம். எங்களது பங்களிப்பை, நான் எப்படி நகைப்பாக குறிப்பிட்டேன் என்றால், ஏமமிலி நோய்க்கு எதிரான எமது போரில், மருந்து தயாரிப்பளர்களது மன நிலையை நகைக்கடை வைத்திருப்பவர்களிலிருந்து, மளிகைக்கடை வைத்திருப்பவர்களைப் போல் மாறச் செய்தது. இப்போது மருந்தின் விலை $500-இலிருந்து $140-க்குக் கீழே சென்றது. விரைவாக, மருந்தின் சராசரி விலை $192-க்கு நிலை பெற்றது. இப்போது $100 விலைக்கு மருந்தினை வாங்க முடியும் குழந்தைகளுக்கான மருந்தின் விலை $600 என்று இருந்தது. யாரும் வாங்க முடியாத விலையில் இருந்ததால், அதன் விலையை $190-க்கு குறைவாக இருக்குமாறு பேரம் பேசி படிய வைத்தோம் பிறகு, பிரெஞ்சு அரசாங்கம் மிகவும் சிந்தித்து செயல்படுத்திய வான்பயண வரி, UNITAID உருவாக வழி செய்தது. ஏனைய நாடுகள் உதவிக்கு வர அழைத்தோம். இப்போது குழந்தைகளுக்கான மருந்து வெறும் $60-ஆக (ஒரு மனிதனுக்கு ஒரு ஆண்டுக்கு) குறைந்துவிட்டது.
எங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது, உயிர்களை காப்பாற்றத் தேவையான மருந்துகள் இருந்தும், முறையாக நோயை கண்டறிந்து, பண்டுவம் செய்து கவனம் செலுத்தி இந்த மருந்தினை மக்களிடம் எடுத்துச்செல்ல முடியவில்லை. அமெரிக்காவில் "இதய கூட்டமைப்பு" என்ற அமைப்போடு, சிறார்களிடம் உள்ள பருமன் குறித்த ஒரு முனைப்பில் ஈடுபட்டோம் இதிலும், நியாயமான தொழிலுக்கு ஏற்ற வகையில் அதே முயற்சிகளில் ஈடுபட்டோம். இம்முயற்சி குளிர்பான மற்றும் நொறுவை தயாரிப்பு நிருவனங்களிடத்தில், அவற்றில் உள்ள கலோரி மதிப்பினையும், மற்ற ஆபத்தான பொருட்களையும் அந்த தயாரிப்புகலிளிருந்து நீக்குவது குறித்து பேசினோம். அதன் சந்தையினை சிறிது மாற்றி அமைத்தோம். அரசு சாரா அமைப்புகள் கோலோச்சும் இந்த காலத்தில், யாராவது பொது விநியோகப்பொருட்களின் சந்தை குறித்தும் அதனை முறைப்படுத்துவது குறித்தும் சிந்திப்பார்களேயானால், அதைத்தான் இப்போது நாங்கள் செய்ய முயற்சி செய்கிறோம். புவிவெப்பநிலை மாறுதலை ஈடு செய்வது குறித்து, பெரிய பெரிய நகரங்களில் உள்ள அமைப்புகளோடு பெரிய அளவில் அவதானித்து, பெரிய பேரங்கள் படியச் செய்து , உலகின் 75% பைங்குடில் வளிக்கு காரணமான நகரங்கள், விரைவாகவும், முனைப்பாகவும் பைங்குடில் வளி உமிழ்வு குறைக்க உதவும் ஒரு வகையில் அதுவே நல்ல பொருளாதார முயற்சியும் கூட. மேலும் இந்த பெரிய அவதானிப்பு ஏதோ ஒரு பெரிய பொருளாதார சுமை போல சித்தரிக்கப்படுவது எனக்கு வியப்பளிக்கிறது அது ஒன்றும் பெரிய விடயமாக எனக்குப்படவில்லை
அல் கோர், தனது ஆஸ்கார் விருதினை "Inconvenient Truth" என்ற படத்திற்கு வென்றபோது நான் பெரிதும் உவகை அடைந்தேன். ஆனால் நான் அவரை உடனே இரண்டாவதாக ஒரு திரைப்படம் எடுக்க கேட்டுக்கொண்டேன். "Inconvenient Truth" படம் பார்த்தவர்கள் எல்லோருக்கும் கோரின் நீதிகளில் உள்ள மிக முக்கியமான கடைசிக் காட்சியான இங்கு தான் பைங்குடில் வளி செல்கிறது என்றும், நாம் இதற்கு ஏதும் செய்யவில்லை என்றால், இந்த இடத்திற்கு தான் அவை செல்லும் என்றும் காட்டியது சிந்திக்கத்தூண்டுகிறது. மேலும் அவைகளில் 6 வகைப்பாடுகளாக, அதன் போக்கை மாற்ற நாம் செய்ய வேண்டியிருக்கும். நாம் அந்த 6 வகைப்பாடுகளில் செயல்பட்டாக வேண்டிய அவசரத்தில் உள்ளோம். மேலும் இது எல்லோரது மனத்திலும் ஆழ பதிய வேண்டும். நாம் இதனை சுற்றி ஒரு அமைப்பாக செயல்பட வேண்டும். நாம் அதைத்தான் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறோம்.
ஆக, சந்தைகளை சீரமைப்பது இந்த வகைப்பாட்டில் ஒரு வகை. இப்போது நாம் இரண்டாவது வகைப்பாட்டிற்கு செல்வோம், இது எனது நினைப்பிற்கு ஒத்துப்போவது வளர்ந்து வரும் நாடுகளில் பணி செய்வது எனது அனுபவத்தில் ஒன்று அங்குள்ள முக்கிய தலைப்புகளில் எல்லாம் - அநேகமாக அது தோல்வி மனப்பான்மையை காட்டும் விதமாக அதை, இதை எல்லாம் எங்களால் இங்குள்ள ஊழலின் காரணமாக செய்ய முடியாது என்பார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்றால், வளர்ந்து வரும் நாடுகளில் திறமையின்மையே ஊழலை விட மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. இந்த மனநிலை தான் ஊழலை வளர்தெடுக்கிறது. இந்த குறைவான விலையை காணும்போது, இப்போது நம்மிடம் பணத்திற்கு குறைவில்லை. உலகெங்கிலும் உள்ள நம்மால் எட்ட இயலாத மக்களுக்கு ஏமமிலி நோய்க்கு மருந்தினை விநியோகிக்க நம்மால் இப்போது முடியும். நாம் வேலை செய்யும் 25 நாடுகளில் இந்த விலை குறைந்த மருந்துகள் கிடைக்கின்றன. மேலும் மொத்தமாக 62 நாடுகளில் இந்த மருந்து கிடைக்கிறது. ஏறக்குறைய 5, 50,000 மக்களுக்கு அந்த பயன்கள் கிடைக்கின்றன. மற்றவர்களுக்கும் கிடைக்க பணம் இருக்கிறது. ஆனால் அது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வழி தான் இல்லை.
ஆக, நாங்கள் என்ன செய்ய முயற்சி செய்கிறோம் என்றால், முதலில் ருவாண்டா நாட்டிலும், பிறகு மலாவி நாட்டிலும் பிறகு மற்ற நாடுகளிலும் வேலை செய்கிறோம் - ஆனால் இன்று மாலை நான் ருவாண்டா நாட்டை பற்றி நான் பேச விரும்புகிறேன் - மிகவும் ஏழ்மையான பகுதிகளில், ஊரக சுகாதாரச் சேவையின் மாதிரி ஒன்றினை உருவாக்குவதற்கு - அம்மாதிரியைக் கொண்டு ஏமமிலி, எலும்புருக்கி, மலேரியா மற்றும் இதர தோற்று நோய்களில் கவனம் செலுத்தலாம். தாய் - சேய் நலம், மற்றும் அனைத்து விதமான உடல் நல விவகாரங்களிலும், வளர்ந்து வரும் நாடுகளில் ஏழை எளிய மக்கள் சந்திக்கும் சிக்கல்கள் என, மொத்த ருவாண்டா நாட்டிற்கும் ஒருங்கே ஒப்பளவு செய்யலாம். பிறகு இந்த மாதிரியையே உலகின் மற்ற ஏழை நாடுகளிலும் செயல்படுத்தலாம்.
இதில் சோதனை என்னவென்றால்; ஒன்று, இது செயல்படுமா, இது மேம்படுமா - உயர் தர சேவையை அளிக்குமா? இரண்டு, இதன் செயல்பாட்டு விலை அந்த நாட்டின் உடல் நல அமைப்பினை நிலைத்து இருக்க வைக்குமா என்பது. 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு கொடையுதவி எதுவும் இல்லாமலும் செயல்படுவது போலவும் இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த சிக்கலை நான் தொடர்ந்து தீர்க்க பார்க்கும்பொது, என்னை மிகவும் நம்பவைப்பது என்னவென்றால், அது பொருளாதாரம் சார்ந்தோ, நலத்தை சார்ந்தோ, கல்வியை சார்ந்தோ, எதுவாக இருந்தாலும், நாம் சில அமைப்புகளை கட்டி எழுப்ப வேண்டும். இவ்வாறான இயங்கும் அமைப்புகள் இல்லாது போனால் உங்களை இந்த மாலை பொழுதில் இங்கு வரவழைத்திருப்பது நிகழ்ந்து இருக்காது. உங்கள் வாழ்கை எப்படி இருந்தாலும் அதைப் பற்றி யோசிக்கிறீர்கள், வாழ்வில் எந்த மாதிரியான தடைக்கற்களை தாண்டி வந்தீர்கள் என்பதை, இக்காட்டான அந்த தருணங்களை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். யூகிக்கக்கூடிய ஒரு இணைப்பு, நீங்கள் அளித்த முயற்சிக்கும், கிட்டிய பயனுக்கும் இடையே உள்ளதை நீங்கள் அறிவீர்கள் ஓர் அமைப்பு இல்லாத குழப்பமான உலகத்தில், எல்லாம் கொரில்லா போராட்டமாகி, இவை குறித்த யூகிக்கும் தன்மை இல்லது போய்விடும். அதற்குப் பிறகு உயிர்களை காப்பது, குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது, பொருளாதாரத்தை முன்னேற்றுவது, என்று எல்லாம் முடியாது போய்விடும்.
என் பார்வையில், ஒரு மனிதர், நலத்திட்டங்கள் குறித்து, சிறந்த முறையில் பணியாற்றி ஏழைகளுக்கு ஒரு அமைப்பை உருவாக்கினார் என்றால் அது Dr. பால் ஃபார்மர் ஆவார். அவருடைய குழுவில் அவர் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவரது குழு "பார்ட்னர்ஸ் இன் ஹெல்த்"-இல் அவர் முதன்மையாக ஹைட்டி நாட்டில் தொடங்கினார் என்பது தெரியும். அவர்கள் ரஷ்யா, பெரு மற்றும் உலகின் இதர இடங்களிலும் வேலை செய்துள்ளார்கள். ஃபார்மரின் மருத்துவகம் எந்த துறையில் சுறுசுறுப்பாக இருக்கிறதோ - அந்த துறையில் ஹைட்டி நாடு பின்தங்கியுள்ளது ஒரு புறம் இருந்தாலும், ஒரு பெரிய கூட்டத்திற்கு அவர்கள் சேவை செய்கிறார்கள் என்பதும், அதுவும் மிகப்பெரிய எண்ணிக்கையில் தேவைப்படும் மருத்துவ வல்லுனர்கள் இல்லாமல் அவர்கள் சேவை புரிந்து, 1988-இலிருந்து இன்றுவரை, ஒருவரைக் கூட காசநோய்க்கு இழக்கவில்லை என்பதையும் உற்று நோக்க வேண்டும். அது மட்டும் இன்றி ஏனைய வியக்கத்தக்க மருத்துவ அதிசயங்களை அவர்கள் செய்து முடித்திருக்கிறார்கள். நாங்கள் ருவாண்டாவில் வேலை செய்ய முடிவு செய்த பொது, மிகப்பெரிய அளவில் வருவாயை பெருக்கி, எய்ட்ஸ் நோயை எதிர்க்கும் பொருட்டு, ஒரு உடல் நலப்பாதுகாப்பு பிணையத்தை உருவாக்க நினைத்தோம், ஏனெனில் 1994-இல் நடந்த இனவழிப்பில் அது முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதும், தலை விகித வருவாய் ஒரு நாளுக்கு ஒரு டாலருக்கும் குறைவாக உள்ளதென்பதும் காரணங்களாகும். பால் ஃபார்மருக்கு தொலைபேசி, அவரால் உதவ முடியுமா என்று கேட்டேன். ஏனென்றால் எனக்கு தெரிந்தவரை, ஹைட்டி நாட்டிற்கு ஒரு மாதிரி மற்றும், ருவாண்டா நாட்டிற்கும் ஒரு மாதிரி உண்டென்று நிரூபித்தால், அதனை நாட்டின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் எடுத்துக்கொண்டு போகமுடியும். முதலாவது காரணம், அது அந்நாட்டிற்கு அருமையானதாகவும், இந்த புவியில் கடந்த 15 ஆண்டுகளாக மிகவும் அல்லலுற்ற நாடென்ற முறையில் அமையும். இரண்டாவது காரணம், நம்மிடம் உள்ள ஒரு மாதிரி, உலகில் உள்ள மற்ற ஏழை நாடுகளுக்கும் பொருந்தச் செய்வது போல் அமையும். ஆகா நாம் அதனை செய்வது போல் நிறுவினோம்.
இப்போது, நாம் 18 மாதத்திற்கு முன்பிலிருந்து கூடி பணி செய்யத் தொடங்கினோம். நாங்கள் பணி செய்யும் இடத்தின் பெயர் தெற்கு கயோன்சா, அது ருவாண்டா நாட்டின் ஒரு ஏழ்மையான பகுதியாகும். 4,00,000 மக்களை உள்ளடக்கிய ஒரு குழுவோடு பணி செய்கிறோம். பால் ஃபார்மர் ஹைட்டி நாட்டில் என்ன செய்தாரோ, அதனை செயல்படுத்திக்கொண்டு இருந்தோம். அதில் சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட சமூக நலப் பணியாளர்களுக்கு அவர் பயிற்சி அளித்து உருவாக்குகிறார். அவர்களால் உடல் நலக் குறைபாடுகளை கண்டுபிடிக்கவும், எய்ட்ஸ் மற்றும் காச நோய் உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு நோய் கண்டரிதலை முழுமையாக செய்து முடிக்கவும், மேலும் அவர்கள் மருந்துகளை தவறாது உட்கொள்வதை உறுதி படுத்தவும், உடல் நலம், தூய்மையான நீர் மற்றும் சுகாதாரத்தைப் பற்றிய அறிவை புகட்டவும், ஊட்ட சேர்க்கைகள் வழங்கவும், மக்களது உடல் நலத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திக்கொண்டு போகுதல் என்று, அவர்களுடைய பிரச்னைகளின் தீவிரம் உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வைப்பது. இந்த செயல்களைச் செய்யும் அவர்களது செயல்முறை, நான் சொன்னதைப் போல, பால் ஃபார்மர் மற்றும் அவருடைய குழுவினரால், நாட்டுப்புற ஹைட்டியில் அவர்களது 20 ஆண்டு வேலையின் மூலமாக கச்சிதமாக்கிவிட்டனர். ருவாண்டாவில், முதல் 18 மாதங்களாக நாங்கள் எடுத்த முயற்சிகளை மதிப்பீடு செய்து பார்த்தோம். முடிவுகள் மிகவும் நன்றாக இருந்ததால், ருவாண்டா அரசே அந்த மாதிரியை மொத்த நாட்டிற்கும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது மட்டுமின்றி, உறுதியுடன் அதனை ஆதரித்து மொத்த அரச வளத்தையும் அதற்கென முடுக்கிவிட்டுள்ளது.
நான் எனது குழுவைப் பற்றி கொஞ்சம் கூறுகிறேன் ஏனென்றால் நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதனை எடுத்துக் கூறும். உலகெங்கும் எங்களிடம் ஏறக்குறைய 500 பேர், எங்களது எய்ட்ஸ் பணியில் வேலை செய்கிறார்கள், அதில் சில பேர் ஒன்றும் செய்வதில்லை - அவர்கள் வெறும் போக்குவரத்து, அறைகள் மற்றும் தங்குவது என்று வேலை செய்கிறார்கள். பின் வெகு சிலர் மற்ற தொடர்புடைய திட்டங்களில் பணி செய்கிறார்கள். ருவாண்டாவில் எங்களது பணித்திட்டம், டயானா நோபல் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது. அவர் அசாத்தியமான திறமை வாய்க்கப்பெற்ற பெண்மணி, ஆனால் இது போன்ற பணிகளை செய்யும் துணிவு பெற்றவர்களிடமிருந்து அவர் வேறுபடவில்லை. தனது 20-களில், லண்டனில் உள்ள ஷ்ரோடேர் வென்சர்சில் அவர் தான் மிகவும் இளமையான பங்குதாரர். வெற்றிக்கனியை எட்டிய ஒரு மின்-நிறுவனத்தின் தலைமை செயலாட்சி அலுவலராக பணியாற்றியவர் -- அவர் ரீட் எல்செவியர் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதனை கட்டியெழுப்பினார் -- பின்னர் தனது 45-வது வயதில் எதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று முடிவு செய்தார். அதனால் இப்போது இந்த திட்டப்பணியில் குறைவான சம்பளத்திற்கு முழுநேரமும் தன்னை அற்பநித்துக்கொண்டுள்ளார். அவரும் அவரது தொழிலில் பங்குகொண்ட குழுவினரும் ஒரு திட்டவரைவினை, மொத்த நாட்டிற்கும் செயல்படுத்துவதுபோன்று பெருக்கக்கூடிய ஒரு நலத்திட்டத்தை உருவாக்கினர். அந்த செயல்திட்டம் ஒரு தனியார் நிறுவனச் சிறப்போடு, அவர் முன்பு நிறைய பொருளீட்டியது போன்ற சிறப்பம்சம் பொருந்தியது போன்று விளங்குகிறது.
நாங்கள் இந்த ஊரகப்புறத்திற்கு வந்தபோது, ஐந்து வயதிற்கு குறைந்த குழந்தைகளில் 45 விழுக்காட்டினர், ஊட்டச்சத்துகுறையினால், வளர்ச்சி குன்றி இருந்தனர். குழந்தைகளில் 23 விழுக்காட்டினர் ஐந்து வயதை எட்டுவதற்கு முன்பாகவே இறந்துபட்டனர். பிறக்கும்போதே இறக்கும் குழந்தைகளின் விழுக்காடு 2.5% ஆக இருந்தது. இறப்பு விகிதத்தில் 15 விழுக்காட்டிற்கும் மேல் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையில், அசுத்தமான நீரினாலும் வசதியற்ற கழிப்பிடங்கள் இல்லாததனால் ஏற்படுகின்ற குடற்புழுக்கள் மற்றும் வயிற்றுப்போக்கினால் விளைகிறது. இவை எல்லாம் முற்றிலும் சிகிச்சை அளிக்கக்கூடியதும், வரும் முன் காக்க முடிவதுமான நோய்கள். இறப்பு விகிதத்தில் 13 விழுக்காடு சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களினால் ஏற்படுவது. இவை எல்லாம் கூட முற்றிலும் சிகிச்சை அளிக்கக்கூடியதும், வரும் முன் காக்க முடிவதுமான நோய்கள். வியப்பளிக்கும் வகையில், இங்குள்ள ஒரு உயிர்க்கும் எய்ட்ஸ் மற்றும் காச நோய்க்கான சிகிச்சை கொடுக்கப்படவே இல்லை.
முதல் 18 மாதங்களில், கீழ்கண்டவை நிகழ்ந்தன: சுழியத்திலிருந்து 2000 பேர்களாக எய்ட்ஸ் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களாக எண்ணிக்கை உயர்ந்தது. அது இந்த பகுதியில் அந்த சிகிச்சையை வேண்டுவோரில் 80 விழுக்காடு ஆகும். இதனைக் கேளுங்கள்: சிகிச்சையை எடுத்துக்கொள்பவர்களின் ஒரு விழுக்காட்டில் பத்தில் நான்கு பங்கினரே தங்கள் மருந்தை உட்கொள்ள நிறுத்தியவர்கள் அல்லது சரியாக எடுத்துக் கொள்ளாதவர்கள். இதன் படி ஐக்கிய அமெரிக்காவை விட இந்த புள்ளிவிவரம் குறைவு. ஒரு விழுக்காட்டில் பத்தில் மூன்று பங்கிற்கும் குறைவானவர்களே விலை கூடுதலான, இரண்டாம் கட்ட மருந்துகள் உட்கொள்ளும் நிலைக்கு மாறியவர்கள் ஆவர். 400,000-க்கும் மேற்பட்ட கருவுற்ற தாய்மார்கள், கலந்தாய்வுக்கு வரவழைக்கப்பட்டு, முதன் முதலில் ஒழுங்குபடுத்தப்பட்ட நலத்திட்ட அமைப்பிற்குள் குழந்தை பெற்றுக்கொள்ளுவர். அது மொத்த மகப்பேறில் 43 விழுக்காடு. மொத்த மக்களில் 40 விழுக்காட்டினர் - நான் 4 லட்சம் பேர் என்று சொன்னேன். அதாவது 40, 000 பேர். மொத்த மக்களில் 40 விழுக்காட்டினருக்கு தேவைப்படும் காசநோய்க்கான சிகிச்சை தற்போது கிடைக்கிறது -- நாங்கள் ஒன்றுமில்லாது தொடங்கி வெறும் 18 மாதங்களில் இது சாத்தியமாயிற்று. குழந்தைகளுக்கான உணவு முறை தேவைப்படுகின்ற 43 விழுக்காடு குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இறப்பு இவற்றை தடுக்க அவர்கள் உயிர் வாழ தேவைப்படும் உணவும், அவர்கள் வளரத் தேவைப்படும் உணவும் வழங்கப்படுகின்றது.
அவர்களுக்கு இதுவரை கிடைக்கப்பெறாத மலேரியாவை குணப்படுத்தப்படும் முறைமையை நாங்கள் தொடங்கினோம். இனவழிப்பின்போது சிதைக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட ஒரு மருத்துவமனை மற்றும் இதர பண்டுதம் அளிக்கும் நான்கு நிலையங்களில் முழுமையாய் கட்டிமுடிக்கப்பட்ட இவை, சூரிய ஒளியினால் இயங்கும் மின்னாக்கியுடனும் , நல்ல ஆய்வக தொழில்நுட்பத்துடனும் இயங்குகின்றன. இப்போது நாங்கள் ஒரு மாதத்தில் 325 பேர்களுக்கு பண்டுதம் பார்க்கிறோம். உண்மை என்னவெனில் ஏமமிலி பாத்தித்த 100 விழுக்காட்டினருக்கு வீட்டில் வைத்தே பண்டுதம் பார்க்கப்படுகிறது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாங்கள் பால் பார்மர் அவர்களின் சமூக நலப்பணியாளர்களைக்கொண்டு செயல்படும் மாதிரித்திட்டத்தை செயல்படுத்தியதால், இந்த திட்டத்தை ருவாண்டா நாட்டின் எல்லா பகுதிகளிலும் செயல்படுத்த முடியும் என்று உத்தேசித்துள்ளோம். ஏனெனில், 5 அல்லது 6 விழுக்காட்டுக்கு இடைப்பட்ட பொருளாதார வளர்ச்சியில், அரசாங்கத்தால், அன்னிய உதவி ஏதுமின்றி இந்த திட்டத்தை தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு தொடர இயலும். அடிப்படை நல்வாழ்வு குறித்த பொருளாதாரத்தை புரிந்துகொள்பவர்களுக்கு, எல்லா பணக்கார நாடுகளும் பொருளாதாரத்தில் ஒன்பதிலிருந்து பதினொன்று விழுக்காட்டை அடிப்படை நல்வாழ்விற்கு செலவு செய்கின்றன என்று தெரிந்திருக்கும். இதில் அமெரிக்க நாடு மட்டும் விதிவிலக்கு, நாம் 16 விழுக்காடு செலவு செய்கிறோம். அந்த கதையை இன்னொரு நாள் பார்க்கலாம். (சிரிப்பு)
இப்போது நாம் நலக்கூட்டாளிகளுடனும், ருவாண்டா நாட்டின் நலவாழ்வு அமைச்சகத்துடனும் இணைந்து பணியாற்றுகிறோம். இந்த முறைமையை விரிவுபடுத்த எமது அமைப்பு விரும்புகிறது. மலாவி மற்றும் லெசோத்தோ நாடுகளில் இதே போன்று செயல்பட தொடங்கியுள்ளோம். இதே மாதிரியான திட்டங்கள் தான்சானியா மற்றும் மொசாம்பிக் நாடுகளிலும் எம்மிடம் உள்ளன. கென்யா மற்றும் எத்தியோப்பிய நாடுகள் ஏனையவர்களுடன் இணைந்து இதனை போலவே திட்டத்தில் வெற்றி பெற விழைகின்றன. எத்தனை உயிர்களை எவ்வளவு விரைவாக காப்பாற்ற முடியுமோ அத்தனை உயிர்களை காப்பாற்றுவதே நோக்கம் என்றாலும், ஆனால் அதனை செயல்படுத்துவது என்பது திட்டமிட்டபடி செயல்பட்டு, திட்டத்தினை நாடளாவி செயல்படுத்துதலே நோக்கம். இந்த மாதிரியைக்கொண்டு உலகின் எந்தவொரு நாட்டிலும் செயல்படுத்தும் வண்ணம் இருத்தல் வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், நலப்பணியாளர்கள் போன்றவர்களுக்கு போதுமான பயிற்சியை அளிக்க தேவையான முதலீடு எங்களுக்கு தேவைப்படுகிறது. மேலும் தகவல் தொழில்நுட்பம், சூரிய ஆற்றலை பயன்படுத்துதல் இவற்றை செயல் படுத்துதல், நீர் மற்றும் சுகாதார வசதிகள் மேம்பாடு, போக்குவரத்து கட்டமைப்பு நிறுவுதல் என்று இத்தனைக்கும் முதலீடுகள் தேவைப்படுகின்றன. ஆனால் ஐந்திலிருந்து பத்தாண்டுகாலத்திற்கு, வெளியிலிருந்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொண்டு, படிப்படியாக அந்த உதவிகளை குறைத்துக்கொள்வதே குறிக்கோள்.
என்னுடைய ஆவல், TED எம்முடைய பணியில் உதவி புரிந்தும், ருவாண்டா போன்ற ஏழை நாடுகளில் உயர் தர ஊரக நலவாழ்வினை செயல்படுத்த உதவி செய்தும், மொத்த ஆப்ரிக்க கண்டத்திற்கும் மாதிரியாக திகழ வேண்டும் என்பதே. ஆப்ரிக்கா மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து ஏழை நாடுகளுக்கும் ஆகும். என்னுடைய நம்பிக்கை என்னவெனில் இந்த நம் முயற்சி, ஒருங்கிணைந்த உலகினை கட்டமைக்க உதவும் முகமாகவும், நிறைய கூட்டாளிகளையும், குறைவான எண்ணிக்கையிலேயே தீவிரவாதிகளையும் உருவாக்கும் முகமாகவும், நிறைய நல்ல குடி மக்களையும், குறைவான எண்ணிகையிலேயே வெறுப்பவர்களை உருவாக்கும் முகமாகவும், நம்முடைய குழந்தைகளும், பேரப்பிள்ளைகளும் மகிழ்ச்சியுடன் வளரக்கூடிய இடமாகத் திகழ வேண்டும் என்பதே. எனக்கு ருவாண்டாவில் வேலை செய்ததில் பெருமிதம் உண்டு. அங்கே பெரிய பொருளியல் சார்ந்த முன்னேற்றத் திட்டங்கள், ஸ்காட் நாட்டு கொடையாளர், சர். டாம் ஹண்டர் என்பவருடன் கூட்டாக செயலாக்கம் பெற்று, கடந்த ஆண்டு எய்ட்ஸ் மருந்துக்கு செய்ததைப் போல, உர விலையையும், சிறு கடன்களின் மேல் உள்ள வட்டி விகிதத்தையும் 30% வரை குறைத்தும், 300 இலிருந்து 400 விழுக்காடு வரை அதிகமான மகசூலை விவசாயிகளிடமிருந்து கிடைக்கச் செய்தோம்.
இந்த மக்கள் மோசமான நிகழ்வுகளை சந்திக்கும் போது, யாருமே (நான் உட்பட) அவர்கள் தம்மை தாமே அழித்துக்கொண்டு சாக முற்படும் போது உதவ முன்வரவில்லை. அதனை இப்பொது நாம் களைந்துக் கொண்டும், வாழ்வை அவர்கள் நம்பிக்கையோடும் எதிர்நோக்குகின்றனர். அதனை சூழலுக்கு உகந்தவாறு பொறுப்புடன் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். மின்சார இணைப்பே இல்லாத 35% மக்களுக்கு, மின் தொகுப்பை இயக்க வேண்டாம் என்று பெரு முயற்சி எடுத்து அவர்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறேன். முன்னேற்ற திட்டங்களை தூய ஆற்றலிலிருந்தும், பொறுப்பான காடு வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லிவருகிறேன். திரு. வில்சன் அவர்களே, ருவான்டர்கள் உண்மையில் மிகத் திறமையானவர்கள். குறிப்பாக நாட்டின் மண்வளம் குறித்து மேல் மண்ணை பேணுவதில் அக்கறை செலுத்துகின்றனர். தெற்கில் உள்ள சில விவசாயக் குடும்பங்களில் சிலர் உள்ளனர் - அந்த இடத்திற்கு நான் சென்ற போது, நான் முதலில் செய்தது, நிலத்தில் இறங்கி முழங்கையால் மண்ணை எடுத்து, அவர்கள் அதில் என்ன செய்துள்ளார்கள் என்று பார்த்தது.
இப்போது நமக்கு ஒரு வாய்ப்பாக, இருப்பிற்கே சில காலங்களுக்கு முன் வேட்டு வைத்துக்கொண்ட ஒரு நாடு, எப்படி இணக்கத்துடனும், மறு ஒழுங்கிற்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டும், நாளைய தன் எதிர்காலத்தை, குறைந்த வெளிநாட்டு உதவியுடன், தரமான உடல் நலத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுகிறது என்று காணக்கிடைக்கிறது. இந்த பரிசிற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவன் ஆகின்றேன். இதனை நான் உள்ளவரை பயன்படுத்துவேன். இதனை செய்ய நாம் சற்று அதிகமான உதவிகளை பயன்படுத்தலாம். உலகிலேயே சிறந்த நலத் திட்டங்கள் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவான தனி நபர் வருமானம் உள்ள ருவாண்டா போன்ற நாடுகளில் இத்திட்டங்கள் நூறாயிரம் உயிர்களைக் காக்க வல்லது என்பதுடன், அடுத்த பத்தாண்டுகளில் ருவாண்டா போன்ற நாடுகளில் இதனை செயல்படுத்தினால் மேலும் சில நூறாயிரம் உயிர்களைக் காக்கும் என்பதில் ஐயம் இல்லை. இதனை முயற்சி செய்து பார்ப்பது ஒரு நல்ல முயற்சியே. மேலும் இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி பெரும் என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன். நன்றி. கடவுளின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும். (கைத்தட்டல்)
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
2007 TED பரிசினை ஏற்றுக்கொண்டு, ருவாண்டா நாட்டில் நலத்திட்டப் பணிகளை கொணர உதவுமாறு பில் கிளிண்டன் கோருகிறார் - நலத்திட்டப் பணிகள் ஏனைய நாடுகளுக்கும் தான்.
Through his William J. Clinton Foundation, former US President Bill Clinton has become a vital and innovative force for world change. He works in four critical areas: health, economic empowerment, citizen service, and reconciliation. Full bio »
Translated into Tamil by Ganesh Arunadann
Reviewed by vidya raju
Comments? Please email the translators above.
27:52 Posted: Oct 2006
Views 337,513 | Comments 106
20:13 Posted: May 2007
Views 334,038 | Comments 108
14:23 Posted: May 2008
Views 127,944 | Comments 35
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.