நாட்டின் நிலப்பகுதியில் கிராமங்களில் குடிசை பகுதிகளில், எந்தவொரு வெளிப்புற உதவியில்லாமல், தத்தம் நுண்ணறிவினால் அவர்களது பிரச்சினைகளை தீர்த்து கொள்ளும் பல்லாயிரக் கணக்கான மக்களிடம் இருந்து ஒரு செய்தியை கொண்டு வந்துள்ளேன். சில வாரங்களுக்கு முன்னால், எங்களது உள்துறை அமைச்சர், சுமார் 200 ஆட்சி செலுத்த இயலாத மாவட்டங்களை சுட்டி காட்டி, மூன்றில் ஒரு பங்கு இந்தியாவின் மேல் போர் அறிவிக்கும் பொழுது, நாங்கள் 21 வருடங்களாய் அழுத்தி கூறி வந்த முக்கிய கருத்தை, அவர் விட்டு விட்டார் மக்கள் பொருளாதார அடிப்படையில் வறுமையால் வாடலாம், ஆனால் அவர்கள் புத்தி வறுமையால் வாடவில்லை என்ற கருத்து. அதாவது, எளியவர்களின் புத்தியை குறைவாக மதிப்பிட முடியாது. அந்த செய்தியை தான் நாங்கள் 31 வருடங்களுக்கு முன்னாள் துவங்கினோம். மற்றும், அது என்ன தொடங்கியது?
விரிவாக, என்னை இக்கணம் வரை கொண்டு வந்த எனது பயணத்தை இங்கு நான் பகிர்ந்து கொள்கிறேன். 85 to 86, நான் பங்களாதேசத்தில், அங்குள்ள அரசாங்கத்திற்கும் ஆராய்ச்சி கூடத்திற்கும், எப்படி விஞ்ஞானிகள் ஏழைகளின் நிலங்களில் உழைக்கலாம் என்பது பற்றியும், எப்படி மக்களின் அறிவு சார்ந்த தொழில்நுட்ப அறிவியலை வளர்க்கலாம் என்பது சம்பந்தமாகவும் அறிவுரை கூறி கொண்டிருந்தேன். நான் 86'ல் திரும்பினேன். 60 சதவிதம் நிலமில்லாத அந்த நாட்டின் அறிவையும், கற்பனை திறனையும் கண்டதில், நான் மிகவும் உற்சாகமுடன் இருந்தேன். ஆனால் வியக்கத்தக்க கற்பனைத்திறன். நான் என்னுடைய வேலைகளை கூர்ந்து நோக்கினேன். ஏறக்குறைய ஒவ்வொரு முறையும், கடந்த 10 வருடங்களில் நான் செய்த வேலைகளில், மக்கள் என்னிடம் பகிர்ந்து கொண்ட அறிவின் பதிவுகள் இருந்தன.
இப்பொழுது, ஆலோசனை சொல்பவராய், நான் டாலர்களில் சம்பாதித்து கொண்டிருந்தேன், மற்றும் வருமான வரி சான்றிதழை கவனித்து பார்த்தேன். மற்றும், நானே என்னை கேட்டு கொள்ள முயற்சித்தேன் : எனது சான்றிதழில் அறிவை பகர்ந்து எனது வேலைகளை முடிக்க உதவியவர்களுக்கு எனது வருமானத்தில் எவ்வளவு போகின்றது என்பதை காண்பிக்கிறதா? நான் திறமை வாய்ந்தவன் என்பதால், இந்த பாராட்டுகள் எனக்கு கிடைக்கிறதா? இல்லை நான் நன்றாக எழுதுவேன் என்பதாலா? இல்லை நான் நன்றாக பேசுவேன் என்பதாலா? இல்லை நான் செய்திகளை நன்றாக ஆராய்வேன் என்பதாலா? இல்லை நான் ஒரு பேராசிரியர், எனவே, இந்த பாராட்டுகள் எனக்கு கொடுக்கப்பட வேண்டுமா? நான் என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன் - " இல்லை, இல்லை, நான் திட்ட மாற்றங்களுக்கு வாக்களிப்பேன். மக்களுக்கான திட்டங்கள் ஏழைகளின் தேவைகளை மேலும் அறிந்து பூர்த்தி செய்யும். எனவே அது சரி என்று நினைக்கிறேன்." ஆனால் எவ்வளவு வருஷங்களாக, நான் சுரண்டல்களிலேயே வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நிலவுரிமையாளரின் சுரண்டல், கடன் கொடுப்பவர்கள் மற்றும் வியாபாரிகளின் சுரண்டல், அது நானும் ஒரு சுயநலவாதியாக இருந்தேன் என்று எனக்கு புரிய வைத்தது. ஏனெனில், என்னை பொறுப்பானவனாக நம்பி அவர்களது அறிவை என்னுடன் பகிர்ந்த அந்த மக்களின் திறமையினால், நான் திரட்டிய வருமானம், என்னுடைய வருமான வரி சான்றிதழில் காட்டப்படவில்லை. மேலும் அவர்களுக்கு ஒன்றும் போய் சேரவில்லை. அது எந்த அளவிற்கு என்றால், நான் பணியாற்றிய பெரும்பான்மையான ஆராய்ச்சிகள் ஆங்கிலத்திலேயே இருந்தது.
நான் கற்றுக் கொண்ட அந்த மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு ஆங்கிலமே தெரியாது. அப்படியானால், எந்த மாதிரியான பங்கேற்ப்பாளி நான்? நான் சமூக நியாயத்தை பற்றி பேசி கொண்டிருந்தேன், இங்கு நான் ஒரு தொழிலாளியாக மிக பெரிய அநியாயம் செய்துக் கொண்டிருந்தேன், மக்களின் அறிவை எடுத்துக் கொண்டு, அவர்களின் பெயரை மறைத்து, மற்றவர்களுக்கு பகிர்ந்து, ஆலோசகம் செய்து, ஆராய்ச்சி கட்டுரை எழுதி, அந்த அறிவின் மூலம் உயர்வு பெற்று, அந்த கட்டுரைகளை பிரசுரித்து, மாநாடுகளுக்கு அழைக்கப்பெற்று, ஆலோசகம் மூலம் மேலும் வருமானம் பெற்று கொண்டிருக்கிறேன். அப்பொழுது, எனது மனதில் ஒரு குழப்பம் வந்தது, நானும் சுரண்டுபவனாக இருந்தால், இது சேரி அல்ல; வாழ்க்கை எப்படியே போய் கொண்டிருக்க முடியாது. மேலும் அந்த நொடி நேரம் மிகவும் வலியுடையதாக இருந்தது ஏனெனில் என்னால் அந்த சிந்தனையுடன் வாழ முடியவில்லை. எனவே, நான் படித்த, எழுதிய 100 கட்டுரைகளை மறுபறுசீலனை செய்தேன். ஆராய்ச்சி செய்தேன் என்று நினைக்கறேன். நான் ஒரு முடிவிற்கு வந்தேன். இந்த குழப்பம் தனித்துவமாக இருந்தாலும், அதற்க்கான பதில் தனித்துவமாக இருக்க வேண்டும்.
ஒரு நாள் - என்ன நடந்தது என்று தெரியவில்லை - பணியில் இருந்து வீடு திரும்பும் பொழுது, தேனீ ஒன்றை பார்த்தேன் என்று நினைக்கிறேன், அல்லது, இந்த தேனீ போல் இருந்தால் வாழ்கை அற்புதமாய் இருக்கும் என்று எனக்கு தோன்றியது. தேனீ என்ன செய்கிறது? அது மகரந்த சேர்க்கை ஏற்படுத்துகிறது, ஒரு மலரில் இருந்து தேன் எடுத்து, மற்ற மலருடன் மகரந்த சேர்கை ஏற்படுத்தும். அப்படி தேன் எடுக்க படும் பொழுது, மலர்கள் ஏமாற்றமடைவது கிடையாது. உண்மை என்னவென்றால், தனது வண்ணங்கள் மூலம் தேனீக்களை மலர்கள் அழைக்கிறது. மற்றும், தேனீக்கள் அனைத்து தேனையும் அவையே வைத்து கொள்வதில்லை. இவைத்தான் இந்த தேனீக்கள் வலைப்பின்னலின் முன்று வழிகாட்டும் கொள்கைகள் - அதாவது, எப்பொழுதெல்லாம் நாம் மக்களிடம் இருந்து கற்று கொள்கிறோமோ, அதனை அந்த மக்களின் மொழியில் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் இருக்க கூடாது.
20 வருடங்களுக்கு பிறகும், இந்த தொழில்முறை கலையில் ஒரு சதவீத மாற்றம் கூட நான் செய்யவில்லை என்று நான் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அந்த சோக சங்கதியை நான் இன்னமும் மனதில் சுமக்கிறேன், மேலும், இங்குள்ள அனைவரும் எந்த சிந்தனையை சுமந்து செல்வீர்கள். அதாவது இந்த தொழில், ஒருவருக்கு அங்கீகாரம் அளிக்காமல், அவரின் பெயரினை குறிப்பிடாமல், அவரின் அறிவை சட்டப்படி பிரசுரிக்க அனுமதி அளிக்கிறது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் கலைக்கழகம் அல்லது ஐக்கிய ராச்சியமின் ஆராய்ச்சி ஆலோசனை சபை அல்லது இந்திய அறிவியல் ஆராய்ச்சி ஆலோசனை சபைகளின் ஆராய்ச்சி வழிகாட்டி, நாம் யாரிடம் கற்றுக்கொள்கிறோமோ அவர்களுக்கு அதை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சொல்லுவதில்லை. நாம் ஒரு பொறுப்புடைய சமூகத்தை பற்றி பேசுகிறோம், நேரிய, நியாயமான சமூகம். நாம் அறிவு சார்ந்த தொழிலிலேயே நேர்மையாக இருக்கவில்லை. மேலும் இந்திய அறிவு சமூகமாய் மாற விரும்புகிறது. எப்படி அது அறிவு சமூகமாய் ஆகா முடியும்? எனவே, தெளிவாக, நீங்கள் இரட்டை நியாங்களுடன் இருக்க முடியாது, உங்களுக்கு ஒன்றும், அடுத்தவர்களுக்கு ஒன்றும். அது ஒன்றாக இருக்க வேண்டும். பாரபட்சமாய் இருக்க கூடாது. நீங்களே மதிக்கும் நீதிகள் சாராத உங்களின் நீதிகளுக்கு நீங்கள் பாரபட்சம் பார்க்க கூடாது. நியாயங்களை ஒவ்வொருவருக்கும் வகுக்க முடியாது.
இந்த புகைப்படத்தை பாருங்கள். இது எங்கே எடுக்கப்பட்டது என்று யாரவது கூற முடியுமா? மற்றும் எதற்காக எடுக்கப்பட்டது என்று தெரியுமா? யாராவது? நான் ஒரு பேராசிரியர். நான் உங்களை கேள்வி கேட்க வேண்டும். உங்களில் யாரவாது யூகிக்க முடிகிறதா? மன்னிக்கவும்? (அவையில் ஒருவர்: ராஜஸ்தானம்) அணில் குப்தா: ஆனால் இது எதற்காக உபயோகப் படுத்தப்படுகிறது? எதற்காக உபயோகப் படுத்தப்பட்டது? (முணுமுணுக்கிறார்கள்) மன்னிக்கவும்? உங்களுக்கு தெரியுமா? நீங்கள் மிக செரியாக சொன்னீர்கள். நாம் அவருக்கு கைத்தட்ட வேண்டும். ஏனெனில் இந்த மனிதருக்கு நமது அரசு எவ்வளவு உணர்ச்சியற்று இருக்கிறது என்று தெரியும். இதனை பாருங்கள். இது இந்திய அரசின் வலைத்தளம். இது சுற்றுலா பயணிகளை நமது நாட்டின் அவமானத்தை காண அழைக்கிறது. எப்படி சொல்வதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இது ஒரு அழகான புகைப்படம் - அல்லது இது ஒரு கோரமான புகைப்படமா? அது நீங்கள் மக்களின் வாழ்கையை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்தது. இந்த பெண்மணி பல மைல்கள் தூரம் தண்ணீரை தலையில் சுமந்து செல்கிறார் என்றால், அதனை நீங்கள் கொண்டாட முடியாது. நாம் அதற்காக ஏதாவது செய்தாக வேண்டும். மேலும், நான் என்ன கூற விரும்புகிறேன் என்றால் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உங்கள் கை அசைவில் இருக்கும் பொழுதும், பல்லாயிரம் பெண்மணிகள் தலையில் தண்ணீர் சுமந்து செல்கின்றனர். மேலும் நாம் இந்த கேள்வியை கேட்பது இல்லை.
நீங்கள் காலையில் தேநீர் பருகி இருப்பீர்கள். ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். தேநீர் இலைகள் புதர்களில் இருந்து பறிக்கப்படுகிறது. அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? இது தான். பெண்மணி இலைகளை பறித்து, பின்னால் இருக்கும் கூடையில் போடுவார். பத்து முறை செய்து பாருங்கள்; நீங்கள் இந்த தோள்ப்பட்டையில் எவ்வளவு வலிக்கும் என்பதை அறிவீர்கள். அவர் பல ஆயிரம் முறை அந்த செய்கையை செய்கிறார், தினமும். நீங்கள் மதிய உணவிற்கு உட்கொண்ட , தினமும் உட்கொள்ள போகும் அரிசியை, அசௌகரியமான குனிந்த நிலையில் பல்லாயிரம் பெண்களால் நாற்று நடப்படுகிறது, ஒவ்வொரு பருவ நிலையிலும், தண்ணீரில் கால்களை ஊன்றி, அவர்கள் நாற்று நாடுகிறார்கள். மேலும் அதனால் அவர்களின் பாதம் நோய் கிருமிகளால் புண்ணாகிப் போகும். அந்த புண்ணான இடம் மேலும் வலிக்கும், ஏனெனில் அங்கு மற்ற பூச்சிகளும் கடிக்கும். ஒவ்வொரு வருடமும், 99.9 சதவீத நெல் கைகளாலேயே நாற்று நடப்படுகிறது. எந்த ஒரு எந்திரமும் உண்டாக்கப்படவில்லை.
ஆகையால், விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள், பொது நல செயல் திட்டமிடுபவர்கள், மாறுதலின் கர்த்தா ஆகியோரின் மௌனம் எங்களின் கவனத்தை ஈர்த்தது - இது இப்படி இருக்க கூடாது. சமூகம் இப்படி இயங்க கூடாது. இது நமது நாடாளுமன்றத்தின் வேளை அல்ல, உங்களுக்கும் தெரியும். நம்மிடம் வேளை வாய்ப்புகளுக்கு ஒரு செயல் திட்டம் உள்ளது. இந்த அருமையான நாட்டில், 10, 25 கோடி மக்களுக்கு 100 நாட்களுக்கு வேளை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எதற்காக? கல் உடைப்பதற்கும், பூமியை குடைவதர்க்கும். ஆகையால் நாடாளுமன்றத்தில் நாங்கள் கேள்வி ஒன்றை எழுப்பினோம், ஏழைகளுக்கு தலை இருக்கிறதா? ஏழைகளுக்கு கைக்கால்கள் வாய் தவிர தலை இல்லையா?
ஆகையால் தேனிக்கள் வலைபின்னல் ஏழைகளின் இந்த வளமையான செல்வத்தை கொண்டு வளர்கிறது. ஆதலால் என்ன நடந்தது? பெயரில்லாத முகமில்லாத நபர்கள் எங்களது வலைப்பின்னலை தொடர்பு கொண்டு ஓர் அடையாளத்தை பெற்றனர். இது தான் தேனிக்கள் வலைபின்னல். இதனை பலர் முன்வந்து வளர்த்தனர், மற்றும் வளர்த்து கொண்டிருக்கின்றனர். இந்தியில் மற்றும் உலகின் வெவ்வேறு நாடுகளில் உள்ள கற்பனைதிறனுள்ள புத்தியுடைய பல ஆயிரம் நபர்களை அடையாளம் காண முனைகிறோம். அவர்கள் கல்வி மூலம் கற்பனையுடையவர்களாக இருந்திருக்கலாம்; அல்லது பண்பாட்டின் மூலம் கற்பனையுடையவர்களாக இருந்திருக்கலாம்; அல்லது சங்கங்களின் மூலம் கற்பனையுடையவர்களாக இருந்திருக்கலாம், ஆனால் பெரும்பான்மையான எங்களது உழைப்பு தொழில்நுட்ப அறிவியல் சார்ந்த கற்பனை சம்பந்தமானது: சம காலத்து புதுமைகள் அல்லது மரபு சார்ந்த அறிவு சம்பந்தப்பட்டது. மற்றும் இது அனைத்தும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தொடங்கும். இது அனைத்தும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தொடங்கும்.
இந்த நபர் - இவரை வலைதளத்திலும் நீங்கள் காணலாம் - சொஷிடோடோ அர்சி, ஒரு பழங்குடி இனத்தை சார்ந்தவர். அவருக்கு ஓர் ஆசை. மற்றும் அவர் கூறியது - "எனது ஆசை பூர்த்தியானால் - யாரோ ஒருவர் குணமில்லாமல் இருக்க, இவர் அவரை பார்த்து கொள்ள வேண்டும் - "கடவுளே - இவரை குணமாக்குங்கள். அப்படி குனமாக்கினால், நான் எனது சுவரை சாயம் அடித்து கொள்கிறேன்." இது தான் அவர் சாயம் அடித்து கொண்டது. நேற்று ஒருவர் மாஸ்லோவின் தேவை படியமைப்பு பற்றி பேசினார். மாஸ்லோவின் தேவை படியமைப்புப் போல தவறான ஒன்று வேறோன்றும் இருக்க முடியாது. ஏனெனில் இந்த நாட்டின் ஏழை மக்களுக்கு மோட்சம் கிடைக்கும். கல்வி, ரஹீம் மற்றும் பலர் மிக சிறந்த சுபி அருட் தொண்டர்கள், அவர்கள் அனைவரும் வறுமையில் வாடினர், மற்றும் அவர்களுக்கு நல்ல பொது அறிவு இருந்தது. தயவு கூர்ந்து சரீரம் சார்ந்த தேவைகள் மற்றும் இதர தேவைகள் பூர்த்தியானால் தான் ஆத்மார்த்தம் சார்ந்த தேவைகள் பற்றி யோசிப்பீர்கள் என்று நம்பாதீர்கள். எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு மனிதரும், என்னால் ஏதாவது சாதிக்க முடியும் என்ற உறுதி மூலம், அந்த ஆத்மார்த்த நிலையை அடைந்து விட முடியும்.
இதனை பாருங்கள். நாங்கள் இதனை பார்த்திருக்கிறோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை, நாங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்திருக்கிறோம். நான் கடந்த 12 வருடங்களில் 4000 km நடந்திருக்கிறேன். வரும் வழியில், சாண வரட்டிகள் எரிபொருளாக உபயோகப்படுத்துவதை நாங்கள் கண்டோம். அந்த பெண்மணி வரட்டி காயவைக்கும் அந்த சுவரில் சித்திரம் தீட்டி இருந்தார். அவரது கற்பனை திறனை அவர் அங்கு மட்டும் தான் வெளிபடுத்த முடியும். மற்றும் அவர் மிகவும் சிறப்பாக செய்திருந்தார். இந்த பெண்மணி ராம் திமரி தேவியை காணுங்கள், சம்பரனில் இருக்கும் நெல் கொட்டி வைக்கும் தொட்டி மீது. பங்குராவில் உள்ள புருலியாவில் இண்டிகோ செடியை வளர்க்கும் பாபி மகாடோ அவர்களின் துயரத்தை கேட்க காந்திஜி சென்ற இடத்திற்கு நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அவர் செய்ததை பாருங்கள். சுவர் முழுவதும் அவரது இரட்டு. அவர் துடைபத்துடன் கீழே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இவர் தொழில் நிபுணரா அல்லது ஓவியரா? தெளிவாக அவர் ஒரு ஓவியரே; அவர் கற்பனை திறன் உடையவர். இவர்கள் விற்பதற்கு நாம் ஒரு மார்க்கத்தை உண்டு பண்ணினால், அவர்களை நாம் பூமியை தோண்டுவதற்கும், கல் உடைப்பதற்கும் உபயோக படுத்த தேவை இல்லை. அவர்கள் எது சுமாராக செய்கிறார்களோ அதை விடுத்து, சரியாக செய்கிறார்களோ அதற்கு சம்பளம் வாங்குவார்கள். (கைதட்டல்)
ரோஜாதீன் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள். சம்பரனில் மொடிஹரியில், நிறைய மக்கள் குடிசையில் தேனீர் விற்பார்கள் தெளிவாக, தேனிருக்கு வரையறுக்கப்பட்ட எண்களில் தான் வாங்குபவர்கள் இருப்பார்கள், ஒவ்வொரு காலையும் நீங்கள் காபி மற்றும் தேனீர் அருந்துவீர்கள். ஆகவே நான் ஏன் ஒரு சுட்டடுப்பை காபி தயாரிக்கும் இயந்திரமாய் மாற்ற கூடாது என்று அவர் எண்ணினார். ஆகையால் இதோ காபி தயாரிக்கும் இயந்திரம். இதற்கு சில நூறு ரூபாய்களே ஆகும். மக்கள் அவர்களின் சுட்டடுப்பை கொண்டு வந்தால், இவர் நீராவி குழாயையும் ஒருபோக்கியும் பொருத்தி, எச்ப்ரச்சோ காபியை கொடுப்பார். இது மிக மலிவான வாயுவினால் ஆன காபி வடிகட்டி. (கைதட்டல்) ஷேக் ஜகாங்கீர் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள். நிறைய ஏழை மக்களுக்கு விவசாயம் செய்ய போதுமான நெல் இல்லை. ஆகையால் இந்த மனிதர் மாவு அரைக்கும் இயந்திரத்தை இரு சக்கர வாகனத்தில் கொண்டு வருகிறார். உங்களிடம் ஒரு கிலோ அல்லது அரை கிலோ இருந்தால், இவர் அரைத்து தருவார்; மாவு அரைப்பவர் அவ்வளவு சிறிய அளவை அரைத்து தர மாட்டார்.
தயவு கூர்ந்து ஏழை மக்களின் சிக்கல்களை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் தேவைகள் திறமையான முறையில் சக்தி, விலை மற்றும் தரத்தை கருத்தில் கொண்டு பூர்த்தி செய்ய பட வேண்டும். அவர்களுக்கு இரண்டாம் பட்சமான தரமில்லா வெளியீடு தேவை இல்லை. ஆனால் தரமுள்ள வெளியீடு தருவதற்கு, தொழில்நுட்பத்தை சார்ந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதை தான் ஷேக் ஜகாங்கீர் செய்தார். அவர் செய்தது அது மட்டுமல்ல. இதனை பாருங்கள். உங்களிடம் துணிமணி இருந்தால், மற்றும் உங்களிக்கு அதனை துவைக்க அளவான நேரம் இல்லையானால், அவர் துணி துவைக்கும் பொறியை, இரு சக்கர வாகனத்தில், உங்கள் வாசப்படிக்கு கொண்டு வந்தார். இதோ இரு சக்கர துணி துவைக்கும் பொறியின் முன்மாதிரி. அவர் உங்களின் துணிமணிகளை உங்கள் வாசப்படியிலேயே துவைத்து காய வைக்கிறார். (கைதட்டல்) நீங்கள் உங்களின் தண்ணீரையும், உங்கள் சவுக்காரத்தையும் கொண்டு வாருங்கள். நான் உங்களுக்கு 50 பைசா அல்லது ஒரு ரூபாய்க்கு ஓர் அளவு துணிகளை தவித்து தருகிறேன். ஒரு புது வியாபார முன்மாதிரி வெளிப்படலாம். இப்பொழுது நமது தேவை என்னவென்றால், இதனை வளர்க்க மக்கள் தேவை படுகிறார்கள்.
இதனை பாருங்கள். இது ஒரு அழகான புகைப்படம் போல இருக்கிறது. ஆனால் இது என்ன தெரியுமா? யாரவது யூகிக்க முடிகிறதா? ஐயத்திற்கிடமின்றி இந்தியர்களுக்கு இதனை அறிவார்கள். இது தவா. இது களிமண்ணால் ஆன சூடேற்றும் தட்டு. ஆனால், இதில் என்ன பெரிய அழகு இருக்கிறது? ஒரு ஒட்டா தவாவை எடுத்து கொண்டால், அது சுமார் 250 ரூபாய் அல்லது ஐந்து ஆறு டாலர்கள் விலையில் விற்கபடுகிறது. இதன் விலை ஒரு டாலருக்கு குறைவானதே. மேலும் இது ஒட்டாது. இது உணவு தர பொருளால் மேல் பூச்சு போடப்பட்டது. மிக சிறந்த பகுதி என்னவென்றால், அந்த விலையுயர்ந்த தவாவை உபயோக படுத்தும் போது, நீங்கள் டெப்லான் அல்லது டெப்லான் போன்ற பொருளையும் நீங்கள் உண்ணுகிறீர்கள். ஏனெனில், சில காலத்திற்கு பிறகு, அது மறைந்து விடுகிறது, அது எங்கே சென்றது? அது உங்களின் வயிற்றிற்குள் சென்றுள்ளது. ஆனால் அது அதற்காக செய்யப்பட்டது அல்ல. ஆனால், நீங்கள் அறிவீர்கள், இந்த களிமண்ணால் ஆன சூடேற்றும் தட்டில், அது உங்களின் வயிற்றிற்குள் போகாது, ஆகவே இது மேலானது; பாதுகாப்பானது; விலை மலிவானது; ஆற்றலளிப்பது; வேறு விதமாய் கூற வேண்டுமானால், ஏழைகளின் விடைகள் தரகுறைவானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இடைப்பட்ட ஏற்பாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
அவை மேலானதாக இருக்க வேண்டும். ஆற்ற மிக்கதாக இருக்க வேண்டும். எளிதாக வாங்கி உபயோக படுத்தும் அளவில் இருக்க வேண்டும். இதை தான் மனசுக் பாய் பிரஜாபதி செய்துள்ளார். அவர் இந்த தட்டை கைபிடியுடன் வடிவமைத்துள்ளார். இப்பொழுது ஒரு டாலரில், நீங்கள் சந்தையில் உள்ளதை விட மேலான ஒரு பொருளை வாங்கி உபயோக படுத்த முடியும். இந்த பெண்மணி ஒரு வன்சரக்கு பூச்சு கொள்ளி சூத்திரத்தை கண்டு பிடித்துள்ளார். நாங்கள் அவருக்காகக காப்புரிமை பெற்றுள்ளோம் தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம். மற்றும், யார் அறிவார், யாராவது இந்த தொழில்நுட்பத்திற்கு உரிமம் பெற்று, இதனை விளம்பர படுத்தினால், இவருக்கு வருமானம் கிடைக்கும். இப்பொழுது நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நமக்கு பன்மையம் முன்மாதிரியுள்ள முன்னேற்றம் தேவை என்று நினைக்கிறேன், அங்கே உலகின், நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் முனைப்புகள் வட்டார தேவைகளை திறமையான பொருத்தமான முறையில் பூர்த்தி செய்ய முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு வட்டாரத்திற்கு பொருந்துகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதனை வளர்ப்பது எளிது.
ஒன்றை வளர்க்கும் பொழுது, இடஞ்சார்ந்த தேவைகளை நீங்கள் அணுவளவில் பூர்த்தி செய்யும் பொழுது உள்ளார்ந்த பற்றாக்குறை ஏற்படும். அப்பொழுது ஏன் மக்கள் அந்த பொருத்தமில்லாமையை சகித்து கொள்கிறார்கள்? சில விஷயங்கள் வளரலாம். மற்றும் அவை வளர்ந்து விட்டது. உதரணத்திற்கு, கைபேசிகள்: 40 கோடி கைபேசிகள் இந்த நாட்டில் உள்ளன. இப்பொழுது, ஒரு கைபேசியில் இரண்டே பொத்தான்களை, மூன்றே விருப்பங்களை மட்டும் உபயோக படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் 300 விருப்பங்கள் உள்ளது. 300 க்கு நான் பணம் செலுத்துகிறேன். நான் முன்று மட்டுமே உபயோக படுத்துகிறேன். ஆனால் 300 விருப்பங்கள் உள்ளது. 300 க்கு நான் பணம் செலுத்துகிறேன். நான் முன்று மட்டுமே உபயோக படுத்துகிறேன். ஆனால், எனக்கு மிக பொருத்தமாய் வேண்டுமானால், தெளிவாக, எனக்கு வேறு வடிவமைப்புள்ள கைபேசி வேண்டும். நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்றால், வளர்வது வாழ்வாதாரத்திற்கு பகைவனை இருக்க கூடாது. நிதியளிக்க கூடிய இடஞ்சார்ந்த தீர்வுகளுக்கு இந்த உலகில் ஒரு இடம் இருக்க வேண்டும்.
நாங்கள் பயின்றதில் மிகவும் மேலானது என்னவென்றால் பலமுறை முதலீட்டார்கள் கேட்பது என்னவென்றால் - எது அதிகரிக்க கூடிய முன்மாதிரி? கால நேர அளவு கோல் உள்ள சமூகத்தில் உள்ள தேவை மற்றும் அங்கே இடஞ்சார்ந்த தேவைகள், அவற்றை இலவசமாக பெறுவதற்கு எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லை. ஏனெனில் அவர்கள் பெரிய சமூக சந்தையின் அங்கமல்ல. ஆகையால், நீங்கள் உங்களது தேவையை அந்த பெரிய சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி கொள்ளுங்கள். அல்லது, தனியாய் இருங்கள். இப்பொழுது, பிரபலமான முன்மாதிரி, நீள-வால் சொல்வது என்னவென்றால் நிறைய புத்தகங்களின் குறைவான விற்பனை கூட லாபகரமான முன்மாதிரியாக இருக்க முடியும். மக்கள் பங்களித்து நிதியளிப்பதற்கு, நாம் முதலீடு செய்வதற்கு ஏதுவாய் ஒரு வழிமுறையை நாம் காண வேண்டும்; அங்கே வெவ்வேறு புதிய கண்டுபிடிப்புகள் குறைந்த எண்ணிக்கையினால் ஆன அப்பகுதி மக்களை சென்றடையும். எனினும் அந்த முன்மாதிரி சாத்தியமாகும்.
இவர் என்ன செய்கிறார் என்று பாருங்கள். சையதுள்ள சாஹிப் ஒரு அருமையான மனிதர். 70 வயதில், அவர் கற்பனையான ஒன்றை இணைக்கிறார்.
சையதுள்ள சாஹிப்: நான் படகிற்காக காத்திருக்க முடியவில்லை. நான் என்னுடைய காதலியை சந்திக்க வேண்டும். எனது இக்கட்டான சூழ்நிலை என்னை படைப்பாளியாகியது. காதலுக்கு கூட தொழில் நுட்ப உதவி தேவை படுகிறது. நூதனம் எனது துணைவி நூர் அவர்களின் உரிமை. புதிய கண்டுபிடிப்புகள் எனது வாழ்கையின் அதீத விருப்பம். எனது தொழில் நுட்பம்.
அ.கு.: சையதுள்ள சாஹிப் அவர்களும் மொடிஹரியில் சம்பரனில் உள்ளார். அருமையான மனிதர், ஆனால் இந்த வயதிலும், அவரது மிதிவண்டியில் தேன் விற்று அவரது வாழ்க்கையை நடத்துகிறார். ஏனெனில் எங்களால் தண்ணீர் விளையாட்டு பூங்கவினர் மற்றும் ஏரி மக்களை சம்மதிக்க வைக்க முடியவில்லை. மேலும், சில வருடங்களுக்கு முன் வெள்ளம் புகுந்து மக்கள் 20 கிலோமீட்டர் வர நடந்த மும்பை தீயணைப்பு படையினரை இந்த மிதிவண்டியை உபயோக படுத்த எங்களால் சம்மதிக்க வைக்க முடியவில்லை, ஏனெனில் இதனை கொண்டு, பேரூந்து செல்ல முடியாத சந்துகளில் கூட செல்ல முடியும். ஆகவே, நாங்கள் அதனை மீட்பு வாகனமாய் கிடைக்ககூடிய சிக்கலில் இருந்து, கிழக்கு இந்தியாவில் பல்வேறு தீவுகளுக்கு வெள்ள நேரங்களில் பல்வேறு இடம் செல்ல கூடிய ஊர்தியாய் கிடைக்க செய்ய வேண்டும். ஆனால் அந்த யோசைனைக்கு மதிப்பு உள்ளது.
அப்பச்சன் என்ன செய்தார்? துரதிர்ஷ்டவசமாக அவர் இப்பொழுது இல்லை. ஆனால், அவர் ஒரு செய்தியை விட்டு சென்றுள்ளார், மிகவும் வலுவான செய்தி
அப்பச்சன்: நான் உலகம் எழுவதை தினமும் பார்க்கிறேன்.
இந்த யோசனை எனக்கொன்றும் தேங்காய் தலையில் விழுந்து வரவில்லை. படிப்பதற்கு வசதியில்லாமலேயே, நான் புதிய உயரங்களை தொட்டேன். இப்பொழுது இவர்கள் என்னை இப்பகுதி சிலந்தி மனிதன் என்று அழைக்கிறார்கள். எனது தொழில் நுட்பம்.
அ.கு.: உங்களில் பலர் நம்ப மாட்டீர்கள். நாங்கள் இந்த பொருளை உலகம் முழுவதும் விற்கிறோம் - இதனை நான் ஜி2ஜி முன்மாதிரி என்று அழைக்கிறேன் உள்ளூரில் இறந்து உலகம் வரை. ஒரு மச்சசுசெத்ஸ் பல்கலைகழக விலங்கியல் பேராசிரியர் இந்த கருவியை வாங்கினார், ஏனெனில் அவருக்கு மரங்களின் விதானத்தில் பூச்சிகளின் வேற்றுமையை படிப்பதற்கு. இந்த கருவி சில பனை மரங்கள் விடுத்து பல்வேறு பனையில் இருந்து மாதிரிகள் எடுக்க உதவுகிறது. ஏனெனில் இக்கருவி இல்லாமல் அவர் ஒரு மரத்தில் இருந்து இறங்கி, அடுத்த மரத்திற்கு ஏற வேண்டும். (தெளிவாக இல்லை) எனவே, இந்த முறையாவது, நாம் அறிவியலின் எல்லையில் நிற்கிறோம்.
ரேம்யா ஜோஸ் கண்டுபிடித்தது - நீங்கள் யுட்யூபில் இந்திய கண்டுபிடிக்கிறது என்ற தலைப்பில் தேடினால், நீங்கள் இந்த நிகழ்படத்தினை காண முடியும். அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்தது: துணி துவைக்கும் உடற்பயிற்சி கருவி. திரு காரை ஒரு மாற்று திறனாளி. ஒன்றரை அடி உயரம் உள்ளவரே. ஆனால் தன்னியக்கம், சுதந்திரம் மற்றும் இளக்கத்திற்காக தனது இரண்டு சக்கர வாகனத்தை மாற்றியமைத்துள்ளார். இந்த கண்டுபிடிப்பு ரியோ குடிசை பகுதியில் இருந்து வந்தது. நாம் பேசிகொண்டிருக்கும் இந்த மனிதர் உபிரஜரா, பிரேசிலில் இருந்து எனது நண்பர், இந்த முன்மாதிரியை பிரேசிலுக்கும் சீனாவிற்கும் இப்படி எடுத்து செல்வது என்பதை பற்றி பெசிகொண்டிருக்கிறோம். மற்றும் எங்களுக்கு முக்கியமாக சீனாவில் மிக ஆர்வமிக்க பிணையம் உள்ளது, பிரேசில் மற்றும் உலகில் பல்வேறு இடங்களிலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. முன்சக்கரத்தின் மேல் உள்ள இந்த நிறுத்தம் வேறு எந்த மிதிவண்டியிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. இந்திய மற்றும் சீனாவில் தான் நிறைய மிதிவண்டிகள் உள்ளது. ஆனால் இந்த கண்டுபிடிப்பு பிரேசிலில் நிகழ்ந்தது.
நான் சொல்ல வருவது என்னவென்றால், நாம் குறுகிய மனதுடன் இருக்க கூடாது, எல்லா எண்ணங்களும் நமது நாட்டில் இருந்தே வரும் என்று நம்மில் யாரும் தேசியவாதத்துடன் என்ன கூடாது. எந்த நாட்டில் இருந்தாலும், பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் மக்களின் அறிவில் இருந்து கற்று கொள்வதற்கு நம்மிடம் அடக்கம் தேவை. மற்றும் இந்த மிதிவண்டி சார்ந்த கண்டுபிடிப்புகளின் தொகுப்பை பாருங்கள்: மருந்து தெளிக்கும் மிதிவண்டி; நிலா அதிர்வில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மிதிவண்டி. சாலைகளை என்னால் சேரி செய்ய முடியாது; எனது மிதிவண்டியை வேகமாக செல்ல வைக்க முடியும். இது தான் செய்ய பட்டிருக்கிறது. (தெளிவில்லை) மற்றும், தென் ஆப்ரிக்காவில், நமது படைப்பாளிகளையும் அழைத்து சென்றோம், அவர்கள் தங்களது தென் ஆப்ரிக்க சகாக்களுடன் எவ்வாறு புதுமைகள் மக்களின் அடிமைத்தனத்தில் இருந்து விமோசனம் தரும் என்பதை பகிர்ந்து கொண்டனர். இது தான் மாற்றி வடிவமைத்த கழுதை வண்டி. அங்கு 30,40 கிலோவில் அச்சாணி ஒன்று உபயோகமில்லாமல் இருந்தது. அதனை எடுத்து விட்டால் இந்த வண்டிக்கு ஒரு கழுதை குறைவாக தேவைப்படும்.
இது சீனாவில் நடந்தது. இந்த சிறுமிக்கு சுவாசிக்கும் கருவி தேவைப்பட்டது. கிராமத்தில் உள்ள இந்த முன்று பேர் உட்கார்ந்து "எவ்வாறு அந்த சிறுமியின் வாழ்நாளை அதிகிரிப்பது?" என்று யோசித்தனர். அவர்களுக்கும் அந்த சிரிமிக்கும் எந்த சொந்தமும் இல்லை, இருப்பினும் ஆவர்கள் முயற்சித்தனர். துவைக்கும் இயந்திர குழாயயை இப்படி உபயோகிக்க முடியும், அவர்கள் மிதிவண்டியை உபயோகித்து, சுவாசிக்கும் கருவியை தயாரித்தனர். இந்த சுவாசிக்கும் கருவி கொண்டு அந்த சிறுமியை காப்பாற்றினர். அவள் மகிழ்ச்சியாய் இருக்கிறாள்.
பல்வேறு வகையான புதுமைகள் நம்மிடம் இருக்கிறது. ஆறு பைசாவில் ஒரு கிலோமீட்டர் செல்லும், அழுத்த காற்று மூலம் இயங்கும் தானூந்து. அசாம், கனக் கோகாய். இந்த தானூந்து அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ளது. இந்த பெண்மணி பொச்சம்பள்ளி புடைவை நெய்ய நூல் சுற்ற வேண்டும். இரண்டு புடைவை தயாரிக்க ஒரு நாளில் 18000 முறை இவ்வாறு சுற்ற வேண்டும். ஏழு வருட கடுமையான உழைப்பிற்கு பிறகு, இதனை அவரது மகன் தயாரித்துள்ளார். "உனது தொழிலை மாற்றி கொள்" என்று அவர் சொன்னார். அவர் சொன்னார் - " என்னால் முடியாது. இது ஒன்று தான் எனக்கு தெரியும். ஆனால் என்னால் உங்கள் பிரச்சினையை தீர்க்கும் ஒரு கருவியை கண்டு பிடிக்க முடியும்." இது தான் அவர் கண்டுபிடித்தார். ஓர் தையல் இயந்திரம், உத்திர பிரதேசத்தில். ஆகையால், இதை தான் சிருஷ்டி கூறுகிறார் - "எனக்கு நிற்க இடம் தாருங்கள். இந்த உலகையே நான் நகர்த்துகிறேன்."
மற்றும் நாங்கள் குழந்தைகளிடம் கற்பனை திறனுக்காக ஒரு போட்டி நடத்துகிறோம். நாங்கள் எதியோபியாவில் துவங்கி துருக்கி முதல் அமெரிக்க வரை உலகம் முழுவதும் விற்றுள்ளோம். சில பொருட்கள் வியாபார சந்தையையும் அடைந்துள்ளது. இந்த மக்களின் அறிவினால் தான் படை நோய்க்கு மூலிகை களிம்பு கண்டுபிடிக்க முடிந்தது. இந்த மூலிகை சூத்திரத்தை உபயோக படுத்தும் நிறுவனம் அந்த படைப்பாளியின் புகைப்படம் பொட்டணத்தில் இருப்பதால், ஒவ்வொரு முறையும் நுகர்வோர் அந்த பொருளை பயன்படுத்தும் பொழுதும், "நீங்களும் படைப்பாளி ஆகலாம். உங்களிடம் யோசனை இருந்தால், எங்களிடம் அனுப்புங்கள்" என்று அவரை கேட்கும். ஆகவே, கற்பனை திறன் முக்கியமானது; பயன்பாட்டு அறிவு பொருட்டில் கொள்ள வேண்டும்; புதுமைகள் உருமாற்றும்; ஊக்குவிப்பு ஊக்கமூட்டும். ஊக்குவிப்பு, பொருள் சார்ந்தது மட்டுமல்ல, பொருள் சாரா ஊக்குவிப்பும் தான்.
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
அணில் குப்தா வளரும் நாடுகளின் போற்றப்படாத கண்டுபிடிப்பாளர்களை தேடும் பணியில் இருக்கிறார் - பலரது வாழ்கையை மாற்ற கூடிய புத்தி கூர்மையுடைய , வறுமையால் மறைந்துள்ள, தத்தம் நாட்டு தொழில் முனைவர்கள். அவர் எப்படி தேனிக்கள் வலைபின்னல் அவர்களின் தொடர்புக்கும் அவர்களுக்கான அங்கீகாரத்தை அடைவதற்கும் உதவுகிறது என்பதை காண்பிக்கிறார்.
Anil Gupta created the Honey Bee Network to support grassroots innovators who are rich in knowledge, but not in resources. Full bio »
Translated into Tamil by Santhosh Kumar Subramanian
Reviewed by vidya raju
Comments? Please email the translators above.
17:14 Posted: Dec 2009
Views 478,875 | Comments 136
05:59 Posted: Sep 2009
Views 1,096,359 | Comments 244
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.