இருவதாம் நூற்றாண்டின் முதல் பகுதி மனித வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பின்னடைவையும், சீரழிவையும் ஏற்படுத்தின என்பது கசப்பான உன்மையாகும். முதலாம் உலக்போர், முதல் உலகப் பொருளாதார வீழ்ச்சி, இரண்டாம் உலகப்போர், மற்றும் கம்யூநிஸ நாடுகளின் எழுச்சி. இந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் மனிதர்களுக்குள் வேறுபாட்டையும், உலகில் பல்வேறு சீர்கேடுகளையும் ஏற்படுத்தின, உலக ஒருமைப்பாட்டை குலைத்தன என்பதே நிதர்சனமான உண்மையாகும். அவை மனிதர்களுக்கிடையே பல சுவர்களை எழுப்பின. அரசியல் சுவர்கள், வர்த்தக தடைகள், போக்குவரத்து தடைகள், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள இயலாத அளவிற்கு இரும்புத் திரைகள் போன்றவற்றால் பிரிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு பல்வேறு நாட்டு மக்களும் அவதிகுள்ளாயினார்.
இருவதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலே தான் நாம் இந்த திரைகளிலிருந்து மெதுவாக வெளி வந்து அவல நிலையை மாற்றி முற்போக்கு பாதையில் நடந்தோம். உலக நாடுகளுக்கிடையே வர்த்தக தடைகள் படிப்படியாக விலக ஆரம்பித்தன இதோ இறக்குமதி வரியை பற்றிய புள்ளி விவரங்களை பார்ப்போம்: ஆரம்பத்தில் 40 சதவிகிததமாக இருந்த இறக்குமதி வரி, படிப்படியாக குறைந்து 5 சதவிகிததமாக மாறியது. நாம் வர்த்தகத்தை உலகமயமாக்கிநோம். இதில் நமக்கு விளங்குவது என்ன? இதற்கு பொருள் என்னவென்றால் நமக்குள் ஒற்றுமையை சர்வதேச எல்லைகளை கடந்து விரிவுப்டுத்தி விட்டோம் என்பதாகும். இந்த உலகை மேலும் ஒற்றுமையுணர்வு கொண்டதாக மாற்றி விட்டோம் போக்குவரத்து தடைகள் பெரும்பாலும் அகற்றப்பட்டன. உங்களுக்கு தெரியுமா, ஆயிரத்தி தொளாயிரத்து ஐம்பதுகளில் சராசரியாக ஒரு கப்பல் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் டண் எடை கொண்ட சரக்குகளை கையாளும் திறன் கொண்டிருந்தன. ஆனால் இன்றைய சரக்கு கப்பல்கள் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் டண் வரையான சரக்குகளை ஏற்றி செல்கின்றன. அவற்றை இயக்க மிக குறைவான ஆட்களே போதுமானதாகவும், மற்றும் சரக்குகளை கையாள்வதில் முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு மிக குறைந்த நேரமே செலவாகிறது. தகவல் தொடர்பு தடை சுவர்கள், உங்களுக்கே தெரியும் இணைய ஊடகம் அதை எப்படி உடைத்தெரிந்தது என்று. அதற்கும் மேலாக மக்களை பிளவு படுத்தியிருந்த இரும்பு திரைகளும், அரசியல் அடக்குமுறைகளும் தகர்த்தெரியப்பட்டன.
இவை யாவும் உலகத்திற்கு அதி அற்புதமான மாறுதல்களை கொண்டு வந்தன. வர்த்தகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதோ சில புள்ளி விவரங்கள் உங்கள் பார்வைக்கு. ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறாம் ஆண்டு சீனாவின் அமெரிக்க ஏற்றுமதி பதினைந்து பில்லியன் டாலர். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு அது முந்நூறு பில்லியன் டாலர் என உயர்ந்துள்ளது. அதை விட ஆச்சரியமாக இருபத்தி ஓறாம் நூற்றாண்டின் தொடர்ச்சியிலேயே நவீன உலக சரித்திரத்தில் முதல் முறையாக உலகின் எல்லா நாடுகளும் பரவலாக வளர்ச்சி அடைந்தன. நான் முன்பே கூறியவாறு சீனா 1978-இல் மாவோ சேடாங்கின் மறைவிற்கு பிறகு அதன் வளர்ச்சி ஆண்டிற்கு பத்து சதவிகிததமாக இருந்து வந்தது. ஒவ்வொரு ஆண்டும் இதே வளர்ச்சி விகிதம்! மிகவும் அற்புதமான விஷயம். மனித வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமானோர் கொடுமையான வறுமையிலிருந்து விடுபட்டனர். இதிலும் சீன நாடே முன்னோடியாக இருந்தது. சீன நாடே உலக அளவில் மிகப்பெரிய வறுமை ஒழிப்பு திட்டத்தை நிறுவி முப்பது ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல் படுத்தி வருகிறது. இந்தியா, சற்று தாமதமாக துவங்கினாலும் 1990-இல் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைத்தது. அச்சமயங்களில் ஒரு இந்தியரின் சராசரி ஆண்டு வருமானம் 1000 டாலருக்கு குறைவாகவே இருந்தது. அதற்கு பிந்தைய 18 ஆண்டுகளில் அது கிட்டத்தட்ட மூன்று மடங்காக பெருகியது. ஆண்டிற்கு ஆறு சதவிகிதம் வளர்ச்சி. மிகவும் பெருமைக்குறியது. தற்போது ஆப்பிரிக்க மற்றும் ஸப்-ஸஹார ஆப்பிரிக்க நாடுகளே உலக அளவில் குறைந்த வளர்ச்சி அடைந்த பகுதிகளாக உள்ளன. ஆப்பிரிக்காவின் பொருளாதார மந்த நிலையை இதோ முதல் சில கட்டங்களில் நாம் கண் கூடாக காண்கிறோம். வளர்ச்சி கீழ் நோக்கி செல்கிறது. மக்கள் தங்கள் பெற்றோரை விட ஏழ்மையானவர்களாக மாறியுள்ளனர். சில சமயம் தங்கள் மூதாதையர்கலைவிட ஏழ்மையான நிலை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இருவத்தி ஓறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாம் ஆப்பிரிக்காவில் வளர்ச்சியை கண்டோம். நீங்கள் கண்டவாறு, நம்பிக்கையான முற்போக்கான எதிர் காலத்திற்கு பல காரணிகளை நானும் யோசிக்கிறேன். ஏனென்றால் இதை விட சிறப்பான எதிர் காலம் இன்னும் நமக்கு வரவுள்ளது என நான் கூறுவேன். இப்போது சிந்தியுங்கள்.
இன்றைய அதி நுட்பமான விஞ்ஞான உலகில் முற்போக்கு சிந்தனையும் செயல்பாடுமே வளர்ச்சக்கு வித்தாக அமைகின்றன. என் கருத்து என்னவென்றால் ஒரு பொருளையோ மருந்தையோ ஆராயவும், கண்டுபிடிக்கவும் ஆகும் செலவு மிகவும் அதிகம், ஆனால் அதை கண்டுபிடித்த பிறகு உற்பத்தி செய்யும் செலவு குறைவாகும். முன்பு எப்போதும் இல்லாதது போல் இவை போன்ற யோசனைகளும், முற்போக்கு சிந்தனைகளுமே வளர்ச்சிக்கு அடிகோலாக இருந்து வருகின்றன. முற்போக்கு சிந்தனைகளுக்கு ஒரு அபூர்வமான குணம் உண்டு. தாமஸ் ஜெபர்சன் இதனை தெளிவாக எடுத்துரைக்கிறார். அவர் கூற்று: "எவன் ஒருவன் என்னிடமிருந்து ஒரு யோசனையை பெறுகிறானோ, அவன் அதை சற்றும் குறைக்காமல் தனக்குள் சுயமாக அதை புரிந்து உள்வாங்கி கொள்கிறான். எவன் ஒருவன் தன் அறிவு விளக்கை என்னிடம் ஏற்றி கொள்கிறானோ, அவன் என் ஒளியை சற்றும் குறைக்காமல் தனக்குள் சுயமாக ஒரு ஒளியை பெறுகிறான்." சற்று வேறு விதமாக சொல்ல வேண்டும் என்றால், நம்மிடம் ஒரு கனி இருந்தால் ஒரு மனிதனின் பசியை போக்க இயலும், ஆனால் ஒரு நல்ல யோசனை இருந்தால் இந்த உலகின் பசியையே நம்மால் போக்க முடியும். இந்த TED மாநாட்டில் கலந்து கொள்ளும் உங்களுக்கு இது போன்ற யோசனைகள் ஒன்றும் புதிதல்ல. மாநாட்டின் அடிப்படை சாரம் இது போன்ற யோசனைகளும், முற்போக்கு கருத்துகளுமேயாகும். இவ்வகையான முற்போக்கு சிந்தனைகளின் அதீத குணம் என்னவென்றால் அவை நமது வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் புதிய உயரத்தை எட்ட வைக்கும் கருவிகளாகும். இதனாலேயே தடையில்லா வர்த்தகமும், உலகமயமாக்கலும் முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு நமது வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.
இது ஏன் என்று விவரிப்பதற்கு முன்னர் உங்களுக்கு ஒரு கேள்வி உங்களை 2 வியாதிகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்ய சொல்கிறார்கள். அதில் ஒன்று மிக அரிதான வியாதி, மற்றொன்று பரவலான வியாதி ஆனால் சிகிச்சை அளிக்காமல் போனால் இரண்டுமே சமமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை இந்த இரண்டில் எதற்கு நீங்கள் மருந்து தயாரிப்பீர்கள் பரவலான வியாதியா அல்லது அரிதான வியாதியா? ஆம் பரவலான வியாதி! அதுவே சரியான தேர்வு! ஏன்? காரணம் பரவலான வியாதிக்கே சந்தையில் அதிக மருந்துகள் தயாறாகிங்றன! அவற்றை விட அரிதான மருந்துகளுக்கு மருந்துகள் குறைவு! இதற்கு காரணம் சலுகைகளே. இந்த இரண்டு வியாதிகளுக்கும் மருந்து தயாரிப்பதற்கு ஒரே செலவே ஆகிறது. அந்த மருந்து ஆயிரம் மக்களை குணப்படுத்துகிறதோ, ஒரு லட்சமோ அல்லது பத்து லட்ச நோயாளிகளை குணப்படுத்தினாலும் அதனை தயாரிப்பதற்கு ஆகும் செலவு ஒன்று தான். ஆனால் மருந்து அதிக மக்களை குணப்படுத்தினால் அதனால் வரும் வருமானமும் அதிகம் அவ்வகையான மருந்துகளை தயாரிக்க சலுகைகளும் அதிகம் இதை வேறு விதமாக சொல்ல வேண்டுமானால், சந்தை மதிப்பு அதிகம் கொண்ட மருந்துகள் அதிக உயிர்களை காப்பாற்றும். ஒரு வியாதி கூட அதிக மக்களுக்கு வந்தால் தான் அதற்கு மருந்தும் பரவலாக கிடைக்கும்
சரி இப்போது வேறு விஷயத்தை பார்ப்போம் இன்று சீனாவும் இந்தியாவும், அமெரிக்காவை போல் வளர்ந்த நாடாக இருந்திருந்தால் புற்று நோய் மருந்துகளின் சந்தையும் இன்றிருப்பதை விட எட்டு மடங்காக இருந்திருக்கும். அந்த நிலையை விரவில் நாம் எட்ட போகிறோம். மற்ற நாடுகளும் வளர்ச்சி பெற்றுவிட்டால் மருந்துகளின் சந்தை மிக வேகமாகவும் பெரிதாகவும் வளரும் என்பதில் ஐயமில்லை. அது நடக்குமானால் மருந்துகளின் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பிர்கான சலுகைகளும் உயரும். இதனால் உலக மக்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகும். சந்தை விரிவடையுமானால் சலுகைகளும் அதிகரிக்கும். அதனால் ஆராய்ச்சி முறைகளும் மேம்படும். அது கணினி மென்பொருளாகட்டும் அல்லது சில்லுகளாகட்டும் புதிய வடிவமைப்புகளாகட்டும் இக்கோட்பாடுகளுக்குட்பட்டவையே. ஹாலிவுட் துறையிலிருந்து இங்கு சிலர் வந்திருக்கலாம் உங்களுக்கு நன்றாகவே தெரியும் ஏன் சண்டை படங்களுக்கு நகைச்சுவை படங்களை விட அதிக பணம் செலவு செய்ய படுகிறது என்று. காரணம் சண்டை படங்கள் பிற உலக மொழிகளில் பெயர்பது சுலபமாகும். அந்த படங்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய சந்தையும் உண்டு. அதனாலேயே அப்படங்களுக்கு முதலீடும் செலவீணமும் அதிகமாக உள்ளது.
சரி. சந்தை விரிவடையும் போது ஆராய்ச்சிக்கான சலுகைகளும் அதிகரிக்கப்படுகின்றன. இந்த சலுகைகளை எப்படி அதிகப்படுத்துவது? பல்வேறு உலக சந்தைகளை ஒருங்கிணைத்தால், உலகமயமாக்கல். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒருமித்த கருத்தும், கருத்துக்கள் பரிமாற்றமும் அவசியம். ஒரே உலகம், ஒரே சந்தை, அதை இயக்க ஒருமித்த கருத்துடன் செயல் படுவது அவசியம். ஒரே கொள்கை, ஒரே உலகம், ஒரே சந்தை. இல்லையெனில் புதிய விஷயங்களை எவ்வாறு நம்மால் உலகமயமாக்க முடியும்? இது ஒரு முக்கிய காரணம். உலகமயமாக்கல்! தடையில்லா வர்த்தகம்! வேரெவ்வாரு நம்மால் புதிய ஆக்கப்பூர்வமான கருத்துக்களை செயல் படுத்த முடியும்? ஆக்கப்பூர்வமான சிந்தனையாளர்கள் தேவை. சிந்தனையாளர்கள் சமூகத்தின் பல்வேறு அங்கத்திலிருந்து வருகின்றனர். கலைஞர்ககள், விஞ்ஞானிகள் மற்றும் இம்மேடையில் நீங்கள் இது வரை கண்டவர்கள். இப்போது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை பற்றி பார்ப்போம். ஏனெனில் அவர்களை பற்றிய புள்ளி விவரம் என்னிடம் உள்ளது. நான் அவற்றை சேகரிப்பததில் மிகுந்த நாட்டம் கொண்டவன்.
இன்று, இங்கு உலக மக்கள் தொகையில் ஒரு சதவிகிததத்திற்கு பத்தில் ஒரு பங்கே விஞ்ஞானிகளாகவும் பொறியாளர்களாகவும் உள்ளனர். (சிரிப்பு) அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தலை நகரமாக விளங்கியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்களே ஆவர். ஆனால் அமெரிக்கா மெதுவாக அத்தனிப் பெருமையை இழக்கின்றது என கூறலாம். நான் ஒரு வகையில் அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். அது ஒரு வகையில் நல்ல விஷயமாகும். ஒரு கோணத்தில் சிந்தித்தால் அது அமெரிக்காவிற்கு அதிர்ஷ்டமான விஷயமாகும். காரணம் வெகு நாட்களாக அமெரிக்கா மற்றும் குறிப்பிட்ட சில வளர்ச்சி பெற்ற நாடுகளே விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிக்கான அநேக பொறுப்புகளையும் செலவுகளையும் சுமந்துள்ளன. இதனை சற்று யோசியுங்கள்: உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இன்றுள்ள அமெரிக்காவைப்போல் வளமையுடன் இருக்குமாயின் இன்று இருப்பதை போல் ஐந்து மடங்கு விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இருந்திருப்பர். அவர்களின் ஆற்றலும் சிந்தனையும் மேலும் இவ்வுலகிற்கு பலன் அளித்திருக்கும், மேலும் பலர் அதனால் பலன் அடைந்திருப்பர். நான் இந்திய கணித மேதை திரு. ராமாநுஜம் அவர்களை பற்றி யோசிக்கிறேன். இன்று இந்தியாவில் ராமானுஜத்தை போல் எத்தனை கணித மேதைகள் வறுமையில் வாடி ஒரு வேளை உணவிற்கே திண்டாதிக்கொண்டிருக்கின்றனர். இந்த உலகிற்க்கே உனவளிக்கும் திறன் படைத்தும் இவ்வாறு கஷ்டப்படுகின்றனர். அந்த நிலையை அவர்கள் எட்டும் காலம் வரும் இந்த நூற்றாண்டிலேயே அவர்கள் மேன்மை அடைவர். கடந்த நூற்றாண்டின் மிக கொடுமையான விஷயத்தை இப்போது பார்ப்போம்: இந்த உலகின் மொத்த மக்கள் தொகையின் மூளைத்திறனை ஒரு பெரிய கணிணியாக எண்ணிக்கொள்வோம். அதில் துக்ககரமான விஷயம் என்னவென்றால் அந்த கணினியின் பெரும்பாலான திறன் இந்த உலகிற்கு பயன்படாமலேயே போய் விட்டது. ஆனால் இந்த நூற்றாண்டில் சீன மக்களின் அறிவுத்திறன் அதிகமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இந்தியர்களும் தங்கள் திறனை வெகுவாக வெளி கொண்டு வந்துள்ளனர். ஆப்பிரிகர்களிடமும் முன்னேற்றம். இந்த நூற்றாண்டில் நாம் ஆப்பிரிக்காவில் ஒரு ஐன்ஸ்டிணை கண்டிப்பாக பார்க்க போகிறோம்.
இதோ சீணவை பற்றி சில தகவல்கள் உங்கள் கவனத்திற்கு. 1996இல் ஒரு மில்லியனுக்கும் குறைவான புதிய மாணவர்களே பல்கலைக்கழகங்களில் பயின்று வந்தனர். அந்த எண்ணிக்கை 2006இல் ஐந்து மில்லியனை தாண்டியது. இதை சற்று சிந்தியுங்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் அண்டை நாடுகள் வளர்ச்சி அடைந்தால் நமக்கும் அதில் ஆதாயம் உண்டு என்பதாகும். பிற நாடுகளின் வளர்ச்சியை கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. அது ஒரு வரவேற்கத்தக்க விஷயமாகும். வளமையான சீனம்! வளமையான இந்தியா! வளமையான ஆப்பிரிக்கா! முற்போக்கு சிந்தனைகளுக்கும், யோசனைகளுக்கும் மிகப்பெரிய தேவை உருவாக வேண்டும். அதே போல் பெரிய ஒருங்கினைக்கப்பட்ட உலகளாவிய சந்தையும், அதிக அளவில் ஆகபூர்வமான சிந்தனையாளர்களும் உருவாக வேண்டும். நான் இவ்வளவு நம்பிக்கையுடன் ஏன் பேசுகிறேன் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். உலகமயமாக்கல் ஆக்கப்பூர்வ யோசனைகளுக்கான (சிந்தனைகளுக்கான) தேவையையும், அவ்வகையான சிந்தனைகளுக்கான சலுகைகளையும் உயர்த்துகின்றது. கல்வியில் செய்யப்படும் முதலீடு ஆக்காப்பூர்வமான சிந்தனைகளை பெருக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
உலக வரலாற்றின் ஏடுகளை சற்று புரட்டினீர்களானால் எனது நம்பிக்கைகான காரணத்தை தெளிவாக உணர்வீர்கள். மனித வரலாற்றின் தொடக்கம் முதல் ஆயிரத்தி ஐந்நூராம் ஆண்டு வரை பொருளாதார வளர்ச்சி சூனியமாகும். 1500ஆம் ஆண்டு முதல் 1800ஆம் ஆண்டு வரை சிறிது வளர்ச்சி. ஆனால் அந்த காலத்திய ஒரு நூற்றாண்டின் வளர்ச்சி தற்காலத்திய ஓராண்டு வளர்ச்சியை விட குறைவாகவே இருந்தது. 1900இல் ஒரு சதவிகித வளர்ச்சி இருவதாம் நூற்றாண்டில் அது இரண்டு சதவிகிதத்தை விட சற்று அதிகமாகவே இருந்தது. இருபத்தி ஓறாம் நூற்றாண்டில் வளர்ச்சி 3.3 சதவிகிதத்திற்க்கும் அதிகமாகவே இருந்தது. அதே வேகத்தில் வளர்ச்சி இருந்தால் கூட 2100ஆம் ஆண்டில் உலக சராசரி ஜீ.டீ.பீ. பெர் கேப்பிட்டா 200 ஆயிரம் டாலர்களாக இருக்கும். அச்சமயத்தில் அமெரிக்கர்களின் சராசரி ஜீ.டீ.பீ. பெர் கேப்பிட்டா ஒரு மில்லியன் டாலரை தாண்டி இருக்கும். உலக ஜீ.டீ.பீ. அளவே ஆயிரம் டாலரை தொட்டிருக்கும் அது சீக்கிரமாகவே நடக்க போகிறது. நாம் அதை செய்யப்போவதில்லை. ஆனால் நமது வருங்கால சந்ததியினர் அதை செய்யவுள்ளனர். அது மிகவும் சாத்தியமான விஷயம் என்றே நம்புகிறேன். கூற்சுவேலியன் பார்வையில் இது சற்று இருளான பாதையாகவே பார்க்கப்படுகிறது. அவர்களின் கண்ணோட்டத்தில் என் பேச்சு நம்பிக்கை அற்றதாகவே கருதப்படுகிறது. (சிரிப்பு)
சரி இப்போது பிரச்சனைகளை பற்றி பார்ப்போமா? முதல் பெரிய பொருளாதார வீழ்ச்சியை பற்றி யோசிப்போமா? அத்தனை சற்று உற்று கவனிப்போம் இதோ தனி நபர் ஜீ.டீ.பீ. 1900 முதல் 1929 வரை 1929இல் நீங்கள் ஒரு பொருளாதார நிபுணர் என வைத்து கொள்வோம். அமெரிக்காவின் வளர்ச்சியை கணிக்க முயல்கிறீர்கள் எனக்கொள்வோம். பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை அடையாப்போகிறது என நீங்கள் அறியவில்லை. நீங்கள் இதையும் அறிந்திருக்கவில்லை, நாம் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய பொருளாதார மந்த நிலையை அடையாப்போகிறோம் என்று. இந்த அறியாமையில் உங்கள் கணிப்பு எவ்வாறு இருந்திருக்கும். சராசரியாக உங்கள் கணிப்பு 1900ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு வரையிலான வளர்ச்சி புள்ளி விவிரங்களை முன்வைத்து இவ்வாறு இருந்திருக்கும். கடந்த கால வளர்ச்சியின் ஊக்கத்தால் சற்று நம்பிக்கையுடன் கணித்திருப்பீர்களானால் உங்கள் யூகம் இவ்வாறு இருந்திருக்கும். ஆனால் நடந்தது என்ன? நாம் மிகப்பெரிய பொருளாதார சறிவை சந்தித்தோம், ஆனால் அதிலிருந்து மீளவும் ஆரம்பித்தோம். இன்னும் சொல்லப்போனால் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் நாம் யாரும் கணித்திராத அளவிற்கு வளர்ச்சியை கண்டோம் என்பதே உண்மை. முதல் பாதியை விட மிக அதிகமாகவே வளர்ச்சியை கண்டோம். ஆகவே வளர்ச்சி என்பது மிகப்பெரிய சரிவின் பாதிப்பையும் சீர் செய்து விடும்.
சரி, வேறு என்ன? எண்ணெய்! ஆம் எண்ணெய்! மிகப்பெரிய விஷயம். நான் இந்த உரையை தயாரித்த போது ஒரு பீப்பாய் எண்ணெய் விலை நூற்றி நாற்பது ரூபாய் ஆகும். மக்களிடம் ஒருமித்த கேள்வி எழுந்தது. அது: "நமது உழைப்பின் பலனை சீனா உறிஞ்சிகொண்டு இருக்கிறதா?" (சிரிப்பு) இதில் சற்று உண்மையும் உள்ளது. அதாவது நம்மிடம் கணிசமான அளவே நாட்டின் வளம் எஞ்சியுள்ளது. நமது வளர்ச்சி பெருக பெருக அந்த வளததிற்கான தேவையும் அதிகரிக்கும். இது உங்களுக்கு சொல்லாமலேயே புரியக்கூடிய விஷயம். அதாவது எண்ணெய் விலை உயர்ந்தால் அது கெடுதல் என நினைக்க வேண்டாம். அதற்கும் மேலாக எல்லாரும் அறிந்த விஷயம். எண்னெயை விட மின்சாரமே நாம் சேமிக்க வேண்டிய விஷயம் ஆகும். எண்ணெய் விலை உயருமனால் மின்சாரம் மற்றும் எறி சக்திக்கான ஆராய்ச்சிக்கு சலுகைகளும் உயர்த்தப்படும். இது சம்பந்தப்பட்ட தகவலையும் பாருங்கள். எண்ணெய் விலை உயருமனால், மின்சாரம் மற்றும் எறி சக்தி சம்பந்தப்பட்ட உரிமங்களும் அதிகமாகும். இந்த உலகம் மென்மேலும் ஆற்றல் கொண்டதாக மாறியுள்ளது. எண்ணெய் விலை உயர்வை சமாளிக்கும் அளவிற்கு மாற்று ஏறி சக்தி வளம் நிறைந்துள்ளது. அதுவும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு. அதற்கான காரணத்தையும் முன்பே பார்த்தோம். ஒருமித்த சிந்தனை! ஒருமித்த உலகம்! ஒருமித்த சந்தை!
இதில் எனக்கு பலத்த நம்பிக்கை இருக்கிறது. பின்வரும் விஷயங்களை நாம் மறக்காமல் பின்பற்றுவோமாக: சந்தைகளை உலகமயமாக்கல் வேண்டும். தேச எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நமது ஒற்றுமையையும் ஓத்துழைப்பையும் பலப்படுத்த வேண்டும். கல்விக்கு மேலும் அதிக முதலீடு செய்ய வேண்டும். இவ்விஷயங்களில் அமெரிக்காவிற்கு என ஒரு தனி பொறுப்பு உள்ளது. அதாவது கல்வி கட்டமைப்பை உலகமயமாக்குவது கல்வி முறையை உலகு மாணவர்கள் அனைவருக்கும் பொதுவாக அமைப்பது. ஏனென்றால் நமது கல்வி முறை என்பது ஒரு மெழுகை போலாகும். பன்னாட்டு மாணவர்கள் இங்கு வந்து அதில் ஒளியை பெற்று கொள்கின்றனர். இது பற்றி ஜெஃபர்ஸசன் என்ன கூறுகிறார் என பார்ப்போம்: "அவர்கள் இங்கு வந்து நமது ஒளியில் அவர்கள் அறிவு விளக்கை ஏற்றும் பொழுது, அவர்கள் ஒளியை பெறுகிறார்கள். அதனால் நாம் இருளை அடைவதில்லை" ஆனால் ஜெஃபர்சன் அதை இன்னும் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். சரியா? உண்மை என்னவெனில், மற்றவர் நம்மிடம் வந்து மெழுகை ஏற்றி கொள்ளும் பொழுது, வெளிச்சம் இரண்டு மடங்காக மாறுகிறது என்பதே உண்மை. ஆகவே என் கருத்து என்னவெனில் வருங்காலத்தை பற்றி நம்பிக்கையுடன் இருங்கள், செயல்படுங்கள். ஆகபூர்வமான கருத்துகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள ஒளியை உலகத்தாரிடம் பரப்புங்கள். ஞான ஒளியை ஏற்றுங்கள். நன்றி கைதட்டல்
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
பொருளாதார நிபுணரான அலெக்ஸ் டபாரக்கின் பேச்சில் நம் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருந்த பல விஷயங்களை தெளிவாக ஆராய்ந்துள்ளார். பல விஷயங்களில் வேறுபபட்டிருந்த இந்த உலக மக்களை, தடையில்லா வர்த்தகமும் உலகமயமாக்கலும் யாருமே சிந்தித்திராத அளவுக்கு ஒரு அறிவு சார் சமூகமாக மாற்றியுள்ளது என தீர்ககமாக சொல்கிறார் இவர்.
With the hit economic blog MarginalRevolution.com, co-author Alex Tabarrok generates more hits than a summer hailstorm, and sheds light into the darkest corners of the dismal science. Full bio »
Translated into Tamil by Arun Kumar Mani
Reviewed by vidya raju
Comments? Please email the translators above.
19:01 Posted: Jan 2007
Views 629,881 | Comments 84
16:41 Posted: Jan 2007
Views 524,415 | Comments 381
16:23 Posted: Mar 2009
Views 1,247,788 | Comments 222
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.