எளிமை பற்றிய என்னுடைய கருத்தை `TED’ ஐ பார்ப்பதிலிருந்து ஆரம்பிப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறேன் நீங்கள் அனைவரும் இங்கிருக்கிறீர்கள், நாம் ஏன் இங்கிருக்கிறோம் என்ன நடக்கிறது என்பது எந்தக் கஷ்டமும் இல்லாமல் புரிந்திருக்கும். இந்த கிரகத்தில் உள்ள சிறந்த AI செயற்க்கையறிவு இதை சிக்கலானதாகவும், குழப்பத்திற்குரிதாகவும் அறிந்திருக்கும். எனது சிறிய நாய் வாட்சனுக்கு இது எளிதாகவும், புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்திருக்கும் ஆனால் முக்கியமானதை தவறவிட்டிருக்கும். (சிரிப்பு) அவர் நன்கு சந்தோஷமாக இருந்திருப்பார். ஹான்ஸ் ரோஸ்லிங்ஸ் போல நீங்கள் ஒரு பேச்சாளராக இங்கிருந்திருந்தால் அவர் கண்டிப்பாக இதை ஒரு சிக்கலானதாக அறிந்திருப்பார். ஆனால் ஹான்ஸ் ரோஸ்லிங்ஸின் விஷயத்தில் நேற்று அவர் ஒரு ரகசிய ஆயுதம் வைத்திருந்தார் நிஜத்திலேயே, அவருடைய வாள் விழுங்கும் செய்கை. நான் இன்னும் சில பொருட்களையும் நினைத்திருந்ததை இங்கு சொல்ல வேண்டும். நான் இன்று அவைகளை விழுங்க முயற்சித்திருக்கலாம் ஆனால் கைவிட்டு விட்டேன். ஆனால் அவர் செய்து முடித்தார். இது மிகவும் அற்புதமான விஷயம்
எனவே திறனாய்வு முறையில் பார்க்குபோது நாமெல்லாம் முட்டாள்கள் மட்டுமல்ல ஆனால் நம்மை எளிதாக முட்டாளாக்க முடியும். உண்மையில், ஷேக்ஸ்பியர் சொன்னது என்னவெனில், நாம் முட்டாளவாதற்காகத்தான் தியேட்டருக்குச் செல்கிறோம், ஆகவே, நாங்கள் இதையெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் முட்டாளவதெற்கென்றே மாஜிக் ஷோவிற்குச் செல்கிறோம். இது பலவற்றை வேடிக்கைக்குரியதாக்குகிறது ஆனால் இது நாம் வாழும் உலகம் பற்றியோ அல்லது நம்மைப் பற்றியோ ஒரு உண்மையான நிலவரத்தை அறிந்து கொள்வது கடினமாக உள்ளது.
நம்முடைய நண்பர், பெட்டி எட்வர்ட்ஸ், வரைபடத்தில் பிரெய்ன் லேடியின் வலது பக்கத்தில் உள்ளது, இந்த இரண்டு மேசைகளை அவர்களுடைய வரைபட வகுப்பில் காண்பித்து அது பற்றி கூறுகையில் வரைவதைக் கற்றுக் கொள்வதில் உங்களுக்குள்ள பிரச்சனை உங்கள் கைகளை அசைக்க முடியவில்லை என்பதல்ல ஆனால் உங்கள் மூளை இந்த பிம்பத்தைப் பற்றி தவறுதலாக பார்ப்பதுதான் இது பிம்பங்களை அப்படியேப் பார்ப்பதற்குப் பதிலாக பொருட்களாக பார்க்க முயற்சிக்கிறது. இதை நிரூபிப்பதற்காக அவர் சொல்கிறார், இந்த மேசை மேல்பலகைகளின் அளவும், வடிவமும் ஒன்றேதான் .அதைதான் நான் இப்பொழுது உங்களுக்கு நிரூபித்துக் காட்டபோகிறேன். அவர் இதை ஒரு கார்ட்போர்ட் அட்டை மூலம் செய்கிறார். ஆனால் நான் விலைமதிப்பற்ற கம்யூட்டர் இங்கிருப்பதால் அதைக்கொண்டு இந்த மேல்பலகை பயலை ஒரு சுற்று சுற்றுகிறேன் நான் இதை நூறு தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன், ஏனென்றால் நான் இதை எனது ஒவ்வொரு பேச்சிலும் உபயோகித்திருக்கிறேன் - ஆனால் நான் இதை அதே அளவிலும், வடிவத்திலும் பார்த்ததில்லை. நீங்களும் அவையிரண்டையும் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.
ஆகவே கலைஞர்கள் என்ன செய்வார்கள்? நல்லது. கலைஞர் என்ன செய்வார்களெனில் அதை அளவிடுவார்கள். அவர்கள் அதை மிக, மிக கவனமாக அளவிடுவார்கள். நீங்கள் அதை இறுக்கமான கையுடனும், நேரான விளிம்பிலும் மிக, மிகக் கவனமாக அளவிடும்போது நீங்கள் இந்த இரண்டு வடிவங்களும் ஒரே அளவில் இருப்பதை அறிவீர்கள். இதை நீண்ட காலத்திற்கு முன்பே தல்முத் பார்த்துவிட்டு கூறுகிறார் நாம் எப்படியிருக்கிறோமமோ அப்படியாகத்தான் பொருட்களை பார்க்கிறோமே தவிர அது எப்படியிருக்கிறது எனப் பார்ப்பததில்லை என்று. அந்த மனிதருக்கு என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்வது எனக்கு மிகவும் அவசியமாகயிருக்கிறது அப்பொழுதே இந்த மாதிரியான உள்ளறிவு கொண்ட அவர்கள் இதை உண்மையிலேயே தொடர்ந்திருந்தால் ஒரு முழுமையான முடிவை அடைந்திருக்கக்கூடும்.
ஆக எப்படி உலகம் நமக்குத் தோன்றுவது போல இருப்பதில்லையோ மேலும் எப்படி நம்மைப் போலவே பொருட்களையும் பார்க்கிறோமோ, என்பனவற்றால் நாம் நிதர்சனம் என நினைப்பது ஒரு வகையான மாயையாகிறது அது இங்கு உள்ளுக்குள் நடக்கிறது. இது ஒரு விழிப்பில் காணும் கனவு. இதில் புரிந்துகொள்ளுதல் என்னவெனில் உண்மையில் இதில்தான் நாம் இருக்கிறோம் இது மனித வரலாற்றில் அவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளக்கூடியத் துறையில் உள்ள மிகப் பெரிய அறிவார்த்த தடையாகும். இதற்கு அர்த்தமென்னவெனில், “எளிமையும், புரிந்துகொள்ளுதலும்” உண்மையில் எளிமையானதாகவும், புரிந்துகொள்ளுதலுமமாக ஆக இருக்க முடியாது, எதை நாம் சிக்கலானது என நினைக்கிறோமோ அதை எளிமையானதாகவும், புரிந்து கொள்ளுவதாகவும் உருவாக்க முடியும். எப்படியாவது நாம் நம்மைச் சுற்றியுள்ள தவறுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நம்மை ஒரு சத்தம் நிறைந்த வடிகாலாக நினைத்துக் கொள்ள வேண்டும். நான் நினைப்பதுபடி, நாம் ”பார்ப்பதற்கு” க் கற்றுக் கொள்ளமுடியாது நாம் குருடர்கள் என்று சம்மதிக்கும்வரை இந்த எளிமையான நிலையில் நீங்கள் ஆரம்பித்தால் பிறகு நீங்கள் பொருட்களை பலவேறு கோணங்களில் பார்க்க ஆரம்பிப்பீர்கள் குறிப்பாக கடந்த 400 வருடங்களுக்கு மேலாக என்ன நடந்தது என்றால் மனிதர்கள் மூளைநுணுக்கங்களை `பிரெய்ன்லெட்’களைக் கண்டுபிடித்தார்கள் இது நமது மூளையினுடைய மிகுதிப் பாகங்கள் நமக்கு உதவுவதற்காக மிகுந்த சக்தி வாய்ந்த யோசனைகளால் உருவாக்கப்பட்டது இந்த உலகத்தை வேறு விதமாகப் பாருங்கள் இவைகள் எல்லாம் `உணரக்கூடிய’ இந்திரிய கருவிகள் வடிவில் உள்ளது டெலஸ்கோப், மைக்ரோஸ்கோப் - ஞாயவாத கருவிகள் வெவ்வேறு வழியிலான சிந்தித்தலும், மிகவும் முக்கியமாக, பொருள்கள் பற்றிய அறிதல்கோணத்தை மாற்றக்கூடியது
இது பற்றி நான் சிறிது பேசுகிறேன். இது என்னவெனில் இந்த அறிதல் கோணம் பற்றிய மாற்றம் நாம் எண்ணுவதையே அறிகிறோம் கடந்த 400 ஆண்டுகளாக நமது முன்னேற்றத்திற்கு இது உதவியிருக்கிறது மனித வரலாற்றிலேயே இதுவரையிலூம் எற்படாத முன்னேற்றம் ஆனால் அமெரிக்காவில் எனக்குத் தெரிந்தமட்டில் இது (அறிதல் கோணம்) எந்தக் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப்பிரிவுகளிளும் கற்றுக் கொடுத்ததாகத் தெரியவில்லை.
ஆக ஒரு பொருளானது எளிமையிலிருந்து சிக்கலுக்குச் செல்வது என்பது நாம் அதை அதிகமாக செய்யும் போது ஏற்படுகிறது. அதை நாம் அதிகமாக விரும்புவோம். நாம் முட்டாள்த்தனமான வழியில் ஒன்றை அதிகம் செய்தால் (அதை நாம் அதிகமாக விரும்புவோம்.) எளிமையாக உள்ளது சிக்கலாகி விடும் உண்மையில், இதை நாம் வெகுகாலமாக செய்து வருகிறோம் ஆனால் முர்ரே கெல்-மான் நேற்று பேசுகையில் வளர்ந்துவரும்/வெளிப்பட்டுவரும் அதீத குணாதிசியங்கள் பற்றிக் கூறினார். இதற்கு இன்னொரு பெயர், “கட்டுமானம்” (“கட்டுமானம்”)ஒரு குறியீடு அதாவது, அதே பழைய பொருள்களை எடுத்துக் கொண்டு அவற்றை சாதாரண அறிவுக்கு அப்பாற்ப்பட்டும், எளிமையில்லாத வழிகளிலும் இணைப்பதை பற்றி சிந்திப்பது. ஆனால் முர்ரே நேற்று எதைப்பற்றி பேசினார் என்றால் இயற்கையின் உள்ளொளுங்கு அழகு சம்பந்தமாக ஒழுங்கு விவரங்கள் இருப்பதை பற்றி வெவ்வேறு கட்டத்தில் ஆனால் ஏறக்குறைய ஒரே மாதிரியான எல்லா யோசனைகளும் அடிப்படை துகள்கள் பற்றிய அழமான கருத்தை நோக்கியே செல்கின்றன. அவைகள் (அடிப்படை துகள்கள்)ஒட்டும் மற்றும் தூரத்திலேயே நிறுத்தும் இரண்டு தனமைகளையம் கொண்டவைகளாக உள்ளன மேலும் அவைகள் எல்லாம் மிகவும் மூர்க வேகத்தில் உள்ளன. இந்த மூன்றும் (ஒட்டுதல், தூர நிறுத்துதல், மூர்க வேகம்) எல்லாவற்றையும் உருவாக்கும் அளவில் வெவ்வேறு அளவுகளுக்கு உயரக்கூடியது இது உலகத்தில் மிகவும் சிக்கலானதாக தோன்றுகிறது
ஆனால் எவ்வளவு எளிமையானது? ஆக, நான் சில வருடங்களுக்கு முன்பு ரோஸ்லிங்க்ஸின் `கேப் மைண்ட’ரைப் பார்த்தபோது நான் மிகப் பெரிய விஷயத்தைப் மிகவும் எளிதாக கூறமுடியும் என நினைத்தேன். ஆனால், ஓ பயேல, இது மிகவும் எளிதான ஒன்றுதான் என்று அதற்குப் பிறகுதான் நினைத்தேன் எனவே நான் முயற்சித்து அதை பரிசீலித்துப் பார்க்க எண்ணினேன். பன்னெடுங்காலமான எதிர்காலப்போக்குகளை (ட்ரண்ட்) காட்டும் இந்த எளிய விவரணங்கள் எப்படி உண்மையிலேயே சில யோசனைகளுடன் ஒத்துப் போகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க நினைத்தேன் அதற்குப் பிறகுதான் தெரிந்தது இது மிகவும் நன்றாக ஒத்து இருக்கிறது என்பது. எனவே ரோஸ்லிங்ஸினால் புள்ளி விவரங்களின் முக்கியத்துவத்தைக் அகற்றாமல் எளிமையாக அதை வெளிப்படுத்தமுடியும்.
ஆனால் நேற்று நாம் பார்த்த திரைப்படத்தில் திசுக்களுக்குள்க்குள் நடப்பவைகளை செயற்கைக்காட்சிகளாகக் காட்டப்பட்டது நான் ஒரு முன்னாள் அனுத்தொகுதி உயிரியியலாளர் என்பதனால் இதை விரும்பவில்லை. அது அழகாக இல்லை என்பதனால் அல்ல; ஆனால், பெரும்பாலான அனுத்தொகுதி உயிரியல் மாணவர்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயம் இதில் இல்லை என்பதால் அனுத்தொகுதி உயிரியல் சம்மந்தமான அது எது என்றால், இரண்டு சிக்கலான வடிவங்கள் எந்த சந்தர்ப்பங்களின் அடிப்படையில் ஒன்றை ஒன்று சரியான வழிகளில் கண்டு கொண்டு, இணைந்து ஒன்றுக்கொன்று உதவிக்கொள்கின்றன. நாம் நேற்று என்ன பார்த்தோமென்றால், ஒவ்வொரு எதிர்வினையும் அதிர்ஷ்டத்தால் நிகழ்வது அவைகள் காற்றோடு அடித்துச் சென்றதால் ஏதோ ஒன்று நடந்தது ஆனால் உண்மையில் இந்த அனுத்தொகுதிகள் எல்லாம் வினாடிக்கு கிட்டத்தட்ட பத்து லட்சம் சுற்றுக்களைக் கொண்டது அவைகள் எல்லாம் ஒவ்வொரு `நானோ’ வினாடிக்கும் முன்னும் பின்னுமாக அடித்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் எல்லாம் ஒரு கூட்டமாக உள்ளது. அவைகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருக்கின்றன. அவைகள் ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் உங்களுடைய மனநிலையில் அதை புரிந்து கொள்ளவில்லையென்றால் அந்த `செல்’லின் உள்ளே நடப்பது முற்றிலும் மாயமானதாகவும், அதிர்ஷ்டமானதாகவும் தெரிகிறது இந்த தவறான உருவகம் . நீங்கள் அறிவியல் சொல்லிக் கொடுக்க முயற்சிக்கும்போது ஏற்பட்டுவிடுகிறது என்று நான் நினைக்கிறேன்
ஆக நாம் பண்ணக்கூடிய இன்னொரு விஷயம் என்னவெனில் வளந்தவர்களின் மிகசரியான நுண்மையான புரிதல்களை குழப்பிவிடுவது சில விதிகளின் உண்மையான புரிந்து கொள்ளலை எனவே ஒரு உயர்நிலைப்பள்ளியில் உள்ள 14 வயதுக் குழந்தை பித்தாகரஸ் தியரத்தின் பகுதியைப் பெற்றால் அது உண்மையில் மென்மையான மற்றும் விருப்பமானதற்கான ஆதாரமாகும் ஆனால் அது கணிதம் கற்றுக் கொள்வதற்கான சரியான வழியல்ல எனவே மிகவும் நேரிடையான ஒன்று, கணிதம் என்கிற உணர்வைக் கொடுக்கக்கூடியது பிதாகரஸ் தியரத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. எனவே, நமக்கு இங்கு ஒரு முக்கோணம் உள்ளது, அந்த சி ஸ்கொயரை இன்னும் மூன்று முக்கோணங்களுடன் இணைத்து நாம் காப்பி செய்தால் அந்த முக்கோணத்தை கீழ்நோக்கி இப்படி நகர்த்த முடியும் அப்படி செய்யும் பட்சத்தில் அது இரண்டு திறந்தவெளிகளை விட்டுவிடும் மற்றும் பிங்கோ. இதை மட்டும்தான் நாம் செய்ய வேண்டும். இது மாதிரியான ஆதாரம்தான் ஆதாரம் நீங்கள் கணிதம் கற்று கொள்ளும்போது நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால் யோசனை என்றால் என்ன என்பதன் பொருளை 12 அல்லது 1500 ஆதாரங்களைப் பார்ப்பதற்கு முன்பு பித்தாகரஸ் தியரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு
சரி நாம் இளங்குழந்தைகளை எடுத்துக் கொள்வோம் இவர் வழக்கத்திற்கு மாறான ஒரு ஆசிரியர் அவர் ஒரு கிண்டர் கார்ட்டன் மற்றும் முதல் கிரேடு ஆசிரியர் ஆனால் ஒரு இயற்கையான கணிதவியலாளர் எனவே அவர் இசை பற்றி படிக்காத ஒரு `ஜாஸ்’ வாசிக்கும் நண்பனைப் போல ஆனால் ஒரு அற்புதமான இசைக் கலைஞன் அவர் கணிதம் உணர்வை அடைகிறார் இங்கே அவளுடைய் ஆறு வயது குழந்தைகள் அவர்களை வடிவத்திலிருந்து வடிவம் உருவாக்கச் சொல்கிறாள் அவர்கள் டயமண்ட், சதுரம் போன்ற வடிவங்களைத் தெரிவு செய்கிறார்கள் முக்கோணம் அல்லது டிரப்பீசியம் - அதற்குப் பிறகு அவர்கள் அந்த வடிவத்திலிருந்து அதற்கடுத்தப் பெரிய வடிவத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள், அதற்குப் பிறகு இன்னும் பெரிய வடிவம் ஆனால் டிரப்பிசியம்தான் கொஞ்சம் சவாலுக்குரியது என்பதை நீங்கள் பார்க்க முடியும்
ஒவ்வொரு திட்டத்திலு இந்த ஆசிரியர் என்ன பண்ணுகிறார் என்றால் அந்த குழந்தைகளை இது ஒரு கிரியேட்டிவ் கலை சம்பந்தப்பட்டத் திட்டம் போல அவர்களை செயல்பட வைக்கிறார் அதற்கு பிறகு அறிவியல் போல அவர்கள் கலைப் பொருட்களைப் படைக்கிறார்கள் இப்பொழுது அவைகளை அவள் பார்க்கிறாள் அதன் பின் இந்த கடினமான வேலை நான் இதை அதிக நேரமாக நினைத்துக் கொண்டிருந்தேன், அவள் இது குறித்து என்னிடம் விளக்கம் சொல்வது வரை, இது மெதுவாகும் என அவர்கள் சிந்திப்பார்கள் எனவே அவர்கள் சிறிய துண்டுகளாக கார்ட்போர்ட் அட்டையைக் வெட்டுகிறார்கள் பிறகு அதை ஒட்டுகிறார்கள்
ஆனால் இதன் அர்த்தம் என்னவெனில் இவைகளைப் பார்த்து அதை நிரப்பிக் கொள்ளவேண்டியதுதான் நீங்கள் செய்தது பற்றி நீங்கள் என்ன கவனித்தீர்கள்/ அந்த ஆறு வயது லாரெனும் ஒன்றை கவனித்து அதை எடுத்தாள் அதற்குப் பிறகு மூன்று எடுத்தாள் ஆக மொத்தம் இதையும் சேர்த்து நான்கு. ஆக மூன்றாவதாக ஐந்து எடுக்க ஆக மொத்தம் ஒன்பது ஆனது அதற்குப் பிறகு அடுத்த ஒன்று அவள் நீங்கள் அதிகமாக சேர்த்த அந்த `டைலை’ப் பார்த்தாள் விளிம்புகளைச் சுற்றி அவைகள் எப்பொழுதும் இரண்டாக வளரும். ஆக்வே அவள் அந்த எண்களை எப்படி உருவாக்கினாள் என்பது பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருந்தாள் அவள் இவையெல்லாம் ஆறு வரையான ஸ்கொயர் எண்கள். அவள் எதில் நம்பிக்கை இல்லையென்றால், ஆறு முறை ஆறு ஏழு முறை ஏழு என்றால் என்ன என்பதில்தான். ஆனால் அவள் மீண்டும் தன்னம்பிக்கையுடன் இருந்தாள் அதுபோலவே லாரெனும் செய்தாள்
அதற்குப் பிறகு ஆசிரியர் கிலியன் இஸிஜ்மா குழந்தைகள் அனைவரும் தங்களது திட்டங்களைக் கொண்டுவந்து அவைகளைத் தரையில் வைத்தனர். எல்லோரும் கழிந்தனர்! என்ன வடிவத்தில் இருந்தது என்பதல்ல கருத்து, அதனுடைய வளர்ச்சியெல்லாம் ஒன்றுதான். இந்தக் கூட்டத்தில் உள்ள கணிதவியலாளர்கள் மற்றும் அறிவியலறிஞர்கள் அவர்கள் இந்த இரண்டு `புரொகிரஷனையும்’ புரிந்து கொண்டனர். அதாவது `முதல் ஆர்டர் டிஸ்கிரிட் டிஃப்ரண்சியல் ஈக்குவேஷன்’ அதன் பின் `செகண்ட் ஆர்டர் டிஃபரண்சியல் ஈக்குவேஷன்’ ஆறு வயது குழந்தைகளால் கண்டுபிடிக்கப்பட்டது நல்லது. இது மிகவும் வியப்பிற்குரியது வழக்கமாக ஆறு வயதினருக்குக் கற்றுக் கொடுப்பது இது இல்லை.
எனவே நாம் இப்பொழுது இதற்காக கம்ப்யூட்டர் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம். இங்கு முதல் யோசனை என்னவெனில் சாதாரணமாக குழந்தைகள் என்ன மாதிரியெல்லாம் செய்வார்கள் என்பதைக் காண்பிக்க வேண்டும் நான் உபயோகிக்கும் மென்பொருளை இந்த 100 டாலர் `லாப்டாப்’பில் இன்ஸ்டால் செய்வோம் நான் இங்கு ஒரு சிறிய காரை வரைகிறேன். நான் சற்று வேகமாக செய்கிறேன். இங்கே ஒரு சின்ன பொருள் இருக்கிறது நான் அதற்கு உள்ளாகப் பார்க்கிறேன். நான் அதை கார் என அழைக்கிறேன். இங்கே காரை முன்னால் செலுத்துவது ஒரு நடவடிக்கை ஒவ்வொரு முறை நான் க்ளிக் செய்யும்போதும் கார் திரும்புகிறது இதை நான் திரும்பத் திரும்ப செய்ய வேண்டுமெனில் இவைகளை நான் சற்றே இழுத்து அவைகளை போகும்படி செய்ய வேண்டும் மேலும் நான் காரை இங்கே ஓட்ட முயற்சிக்கிறேன் - கார் ஐந்து முறை இங்கு திரும்புவதை பார்க்கமுடிகிறதா? நான் இதை `பூஜ்யத்திற்கு’ குறைத்தால் என்ன நடக்கும்? இது நேராகப் போகும். இது ஒன்பது வயதுக் காரர்களுக்கு ஒரு வெளிப்பாடு இதை வேறொரு திசைக்குப் போக வைப்போம் ஆனால் இது ஏறக்குறைய உங்கள் சகோதரியை முத்தமிடுவது போல இந்த கார் ஓட்டுவதும். எனவே குழந்தைகள் ஸ்டீயரிங் பண்ண விரும்புகிறார்கள். எனவே அவர்கள் ஸ்டீயரிங் சக்கரத்தை இழுக்கிறார்கள். இதை நாம் சக்கரம் என்று அழைப்போம். மேலும் பாருங்கள் இந்த சக்கரம் எது நோக்கி செல்கிறதென்று? இந்த சக்கரத்தை நான் திருப்பினால் நீங்கள் அந்த நம்பர் `மைனஸ்’ஸிற்கு சென்று `பாஸிட்டி’விற்கு செல்வது தெரியும் இந்த மாதிரியான அழைப்புகள் அந்த மாதிரியான் எண்கள் வெளிவருகின்றன. இதை இங்கேயே விட்டுவிடுங்கள் இப்பொழுது நான் காரை ஸ்டீயரிங் சக்கரம் கொண்டு ஸ்டீயரிங் செய்கிறேன்.
இது மிகவும் விரும்பத்தக்கதாக உள்ளது. உங்களுக்குத் தெரியுமா இந்த `வேரியபிள்’ களினால் குழந்தைகளுக்கு எவ்வளவு சிரமம் என்று ஆனால் இந்த முறையில் கற்றுக்கொள்வது என்பது அவர்கள் இதை எப்பொழுதும் மறக்கமாட்டார்கள் இந்த வேரியபிள் என்ன? அதை எப்படி உபயோகிப்பது? இதை நாம் கில்லியன் இஷ்ஜிமா செய்ததுபோல் செய்வோம். ஆகவே நீங்கள் இங்கே உள்ள சிறிய விவரணத்தைப் பார்த்தால் இதனுடைய வேகம் எப்பொழுதும் 30ல் தான் இருக்கும். நாம் காரை இதன்படிதான் திரும்பத் திரும்ப நகர வைக்க இருக்கிறோம் நான் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சிறிய புள்ளியை கீழே விடுகிறேன். இவைகள் எல்லாம் சீராக இடைவெளி விடப்பட்டிருக்கிறது ஆறு வயது குழந்தை செய்தது போன்று நான் இதை `தூண்டினேன்’ என்றால் இதனுடைய வேகத்தை ஒவ்வொருதடவையும் இரண்டாக அதிகரிக்கிறேன். அதற்குப் பிறகு இதனுடைய வேகத்தை ஒவ்வொரு முறையும் அதிகரிக்க இருக்கிறேன் அங்கே சென்றால் எனக்கு என்ன கிடைக்கும்? இந்த ஒன்பது வயதுக் காரர்கள் சொல்வது போல `ஆக்சிலரேஷன்’ உடைய விஷுவல் பேட்டர்ன் கிடைக்கும்
ஆக குழந்தைகள் எப்படி அறிவியல் செய்வார்கள்?
ஆசிரியர்: எந்த பொருள்கள் விரைவில் பூமியை அடையும்
ஆசிரியர்: எந்த அளவிலும் (பிறர் மீது) கவணம் செலுத்தாதீர்கள் பிறர் எண்ண செய்கிறார்கள் என்று கவணிக்காதீர்கள் யார் ஆப்பிளை வைத்திருக்கிறார்கள்
ஆலன் கே: அவர்கள் சிறு நிறுத்தக்கடிகாரத்தை வைத்திருக்கின்றனர். உனக்கு என்ன கிடைத்துள்ளது? உனக்கு என்ன கிடைத்துள்ளது? ஆலன் கே: நிறுத்தக்கடிகாரங்கள் தேவையானளவு துல்லயமாக இயங்கவில்லை.
ஆசிரியர்: ஆக இப்பொழுது பஞ்சுபந்தை போடு
சிறுபெண்: இரும்பு பந்து மற்றும் பஞ்சு பந்து வெவ்வேறு எடைகளில் இருக்கின்றன. அவைகளை ஒரே சமயத்தில் கீழே போடுகிறபொழுது, ஒரே வேகத்தில் கீழே விழக்கூடும்.
ஆகே: அரிஸ்டாட்டில் குழந்தையை எப்பொழுதும் கேட்டதில்லை முக்கியமாக இந்தக் குறிப்பைப் பற்றி ஏனென்றால் அவர் இது சம்பந்தமாக சோதனை எதுவும் செய்ய வேண்டுமென்று கவலைப்பட்டதில்லை செயிண்ட். தாமஸ் அக்யூனாஸும் செய்ததில்லை கலிலியோ இதை செய்வது வரை குழந்தைபோல வயது வந்தவர்கள் சிந்தித்தனர். 400 வருடங்களுக்கு முன்பு நமக்கு முப்பது மாணவர்கள் உள்ள வகுப்பறையில் இந்த மாதிரி ஒரு குழந்தைதான் கிடைக்கும் அது நேராக முன்னேறிச் செல்லும்
இப்புழுது, இதை நாம் மிகவும் பக்கத்தில் பார்க்க நினைத்தால்..? நாம் என்ன நடக்கிறது என்று இந்தத் திரைப்படத்திப் பார்போம் நாம் இந்த திரைப்படத்தை ஒரு படி அதிகரித்தாலும் அதில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் சூட்சுமமான ஒன்று.. எனவே நாம் என்ன செய்யமுடியுமென்றால், இந்த பிரேம்களை பக்கவாட்டாக வைக்கலாம் அல்லது ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கலாம். எனவே, குழந்தைகள் இதைப் பார்க்கும்போது , ஹே, `ஆக்சிலரேஷன்’ என்பார்கள் நான்கு மாதங்களுக்கு முன்பு காரை பக்கவாட்டில் செய்ததை அவர்கள் நினைவுகூறுவார்கள் இது எந்தவிதமான ஆக்சிலரேஷன் என்று அளவிட ஆரம்பிப்பார்கள் ஆகவே நான் இதை கீழிருந்து அளவிடவிருக்கிறேன். அடுத்த இமேஜின் கீழ் வரை, கிட்டத்தட்ட வினாடியின் ஐந்தில் ஒரு பங்காக, இப்படியாக அவர்கள் ஒவ்வொரு முறையும் விரைவார்கள் நான் இவர்களை அடுக்கினால், நமக்கு இதில் உள்ள வித்தியாசம் தெரியவரும், வேகத்தில் இந்த அதிகரிப்பு என்பது நிரந்தரமானது. இதுபற்றி அவர்கள் சொல்வார்கள், ஓ, நிரந்தர ஆக்சிலரேஷன். நாம் இதை ஏற்கனவே செய்துவிட்டோம். நாம் இதை செய்துவிட்டோம் என்று எப்படி பார்ப்பது? ஆகவே, ஒரு பந்தை தவறவிடுவதிலிருந்து நாம் இதை அறிந்து கொள்ள முடியாது ஆனால், பந்தைத் தவறவிட்டும் திரப்படத்தையும் ஒரே நேரத்தில் ஓடவிட்டால் நாம் சரியான பெளதிக உதாரணத்தை அறிந்து கொள்ள முடியும்.
கலிலியோ இதை மிகவும் புத்திசாலித்தனமாக செய்தார். பந்தை ஒரு ஸ்டிரிங்கின் பின்புறத்திலிருந்து இந்த ஆப்பிள்களை நான் இழுப்பதிலிருந்து நான் எனக்கே திரும்பச் சொல்லிக் கொள்கிறேன் இது ஏறக்குறைய நியூட்டன் - ஆப்பிள் கதை போல... ஆனால் இது ஒரு மகத்துவமான கதை ஒன்று செய்யலாம் என நினைக்கிறேன் இது வேலை செய்யுமென்று இந்த 100 டாலர் லாப்டாப்பின் மூலம் செய்து பார்க்கலாம். ஆக, உங்களிடம் புவியீர்ப்பு இருந்தது எனில், இங்கே, எதன் மூலமாவது வேகத்தை அதிகரியுங்கள் கப்பலின் வேகத்தை அதிகரியுங்கள் இந்த குழந்தைகள் செய்தது போல ஒரு சிறிய விளையாட்டை ஆரம்பித்தோமென்றால் இந்த ஆகாயக் கப்பல் `கிராஷ்’ ஆகிவிடும் ஆனால் நான் புவியீர்ப்பை அதிகரிக்கும் பட்சத்தில் - ஊப்ஸ்.. (சிரிப்பு) மீண்டும் ஒரு முறை நல்லது, இதோ இன்னொரு முறை, சரியா?
இதை இரண்டு மேற்கோள்கள் சொல்லி முடிப்பது நல்லது மார்ஷல் மெக்லுகான், ”குழந்தைகள்தான் நாம் எதிர்காலத்திற்கு அனுப்பும் செய்தி” ஆனால், உண்மையில் நீங்கள் நினைத்துப் பார்த்தீர்கள் என்றால், குழந்தைகள்தான் நாம் எதிர்காலத்திற்கு அனுப்பும் எதிர்காலம் செய்திகளை மறந்து விடுங்கள் குழந்தைகள்தான் எதிர்காலம் மேலும் முதல் மற்றும் இரண்டாம் உலகத்தில் உள்ள குழந்தைகள் அதிலும் சிறப்பாக மூன்றாவது உலகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவை பயிற்றுவிப்பவர்கள் (ஆலோசனையாளர்கள்) இந்த கோடை காலத்தில் நாங்கள் இந்த 100 டாலர் லாப்டாப் 5 மில்லியன் செய்யவிருக்கிறோம் அடுத்த வருடம் 50 மில்லியன் ஆகலாம் ஆனால் நமது வாழ்வைப் பாதுகாக்க ஆயிரம் ஆசிரியர்களை நாம் இந்த கோடை காலத்தில் உருவாக்க முடியாது அப்படியெனில் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டும் எங்கே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவேண்டுமென்று ஆனால் பயிற்றுவிப்பது என்பது எளிதான் `ஐ சேட்’ உடனடித் தகவல் முறையிலுருந்து ஆழம் இங்கு இழக்கிறது. இதை வேறுவகையிலான உபயோகிப்பாளர் தொடர்பு மூலம் செய்யலாம் என நான் நம்புகிறேன். இந்த புதியவிதமான உபயோகிப்பாளர் தொடர்பை சுமாராக 100 மில்லியன் டாலர்கள் செலவில் செய்ய முடியும். இது அதிகம் போல் தெரிந்தாலும் உண்மையில் நாம் ஈராக்கில் 18 நிமிடங்களுக்குச் செலவழிப்பது இதுதான். நாம் மாதத்திற்கு 8 பில்லியன் டாலர் செலவழிக்கிறோம். 18 நிமிடங்களுக்கு 100 மில்லியன் டாலர். ஆக இது உண்மையிலேயே மலிவானது. ஐன்ஸ்டீன் கூறியிருக்கிறார், ”விஷயங்கள்/பொருட்கள் கூடியமட்டும் எளிதாக இருக்க வேண்டும் ஆனால் மிகவும் எளிதானதாக அல்ல” நன்றி
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
தனக்கே உரித்தான ஆழ்ந்த அறிவுத்திறத்துடன் ஆலன் கே சோதனைகளை குழந்தைகளுக்குக் கணித ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் கம்ப்யூட்டர் மூலம் பயிற்றுவிக்க - அதனால் மட்டுமே முடியும் - சிறந்த செயல் முறை உத்திகளை தொலை நோக்கு ஆற்றலுடன் சிந்திக்கிறார்.
One of the true luminaries of personal computing, Alan Kay conceived of laptops and graphical interfaces years before they were realized. At XeroxPARC, Apple, HP and Disney, he has developed tools for improving the mind. Full bio »
Translated into Tamil by siddharthan sundaram
Reviewed by Sundaram Rangasamy
Comments? Please email the translators above.
17:37 Posted: Aug 2006
Views 188,982 | Comments 93
17:43 Posted: May 2008
Views 462,273 | Comments 54
17:57 Posted: Mar 2008
Views 972,084 | Comments 176
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.