இரண்டு வருடங்களுக்கு முன்பாக இங்கு கொடுத்த ஸ்லைடு ஷோவை சுமார் 2:00 முறைகள் கொடுத்திருக்கிறேன். இன்றைக்கு காலையில் ஒரு சுருக்கமான ஸ்லைடு ஷோவை கொடுக்கிறேன். அதை நான் முதன் முறையாகக் கொடுக்கிறேன், எனவே -- நான் இழுத்துக் கொண்டே செல்ல விரும்பவில்லை, உண்மையில் குறைக்கவே விரும்புகிறேன். ஏனென்றால் இந்த அமர்வின் சவால்களைச் சந்திக்க முயற்சி செய்வதற்கு நான் இதை ஒன்றாக கலக்கியிருக்கிறேன்.
மேலும் உண்மையாக முறையாக புரிந்துகொள்ளப்பட்ட மதம் என்பது நம்பிக்கையைப் பற்றியது அல்ல, ஆனால் அது நடத்தையைப் பற்றியது என நான் கேரன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் காட்சியிடுதலால் நினைவுபடுத்தப்பட்டிருக்கிறேன். ஒருவேளை இதையே தான் நாம் நேர்மறை எண்ணத்தைக் குறித்தும் சொல்ல வேண்டும். நேர்மறை எண்ணமுடையவர்களாக இருப்பதற்கு நமக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது? நேர்மறை எண்ணம் என்பது ஒரு நம்பிக்கை என்ற குணாதிசயமாக காண்பிக்கப்படுகிறது, ஒரு அறிவுசார்ந்த நிலைப்பாடு. மகாத்மா காந்தி பிரபலமாகச் சொல்வது போல, “நீங்கள் இந்த உலகில் காண விரும்புகிற மாற்றமாகவே நீங்கள் மாறிவிட வேண்டும்.” நாம் நேர்மறை எண்ணமுடையவர்களாக இருக்க விரும்புவதைப் பற்றிய வெளிப்பாடானது, அந்த நம்பிக்கையானது ஒரு புதிய நடத்தையைக் கொண்டுவராத வரையில், நம்பிக்கையினால் மட்டுமே உருவாக்கப் படப் போவதில்லை. ஆனால் “நடத்தை” என்ற அந்த வார்த்தையும் கூட, இந்த இடத்தில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதாக நான் நினைக்கிறேன். மின்சார பல்புகளை மாற்றிவிட்டு நவீன மின்சக்தி சேமிப்பு விளக்குகளையும், டிப்பர்களையும் வாங்குவதைக் குறித்த விஷயத்தில் நான் பெரிய அளவில் வாதாடுபவன் தான், மேலும் நான் 33 சூரிய சக்தி தகடுகளை என் வீட்டிற்கு மேலே வைத்தேன், புவி வெப்பக் கிணறுகளைத் தோண்டினேன், மற்ற அனைத்து வேலைகளையும் செய்தேன். ஆனால், மின்சார பல்புகளை மாற்றுவது எவ்வளவு முக்கியமானதோ, அதேயளவிற்கு சட்டங்களை மாற்றுவதும் முக்கியமானது. மேலும் நமது அன்றாட வாழ்வில் நமது நடத்தை முறையை நாம் மாற்றும் போது, நாம் சில நேரங்களில் நமது குடிமக்களின் பங்கையும் ஜனநாயகப் பங்கையும் விட்டுவிடுகிறோம். இதைப் பற்றி நேர்மறை எண்ணமுடையவராக இருப்பதற்கு, நமது ஜனநாயகத்தில் வலிமையாகச் செயல்படுகிற ஒரு குடிமக்களாக நாம் மாற வேண்டியுள்ளது. காலநிலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, நாம் ஜனநாயகப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியுள்ளது. மேலும் நமக்கு ஒன்றிருக்கிறது.
இந்தக் கதையை நீண்ட காலமாக சொல்லிக் கொண்டு வருகிறேன். அதைப் பற்றி சமீபத்தில் நான் உட்கார்ந்திருந்த மேசையைக் கடந்து செல்லும் போது அப்படியே என்னையே பார்த்துக் கொண்டே சென்ற ஒரு பெண்மணியால் நினைவுபடுத்தப்பட்டேன் அவருக்கு வயது 70 இருக்கும், அவருக்கு ஒரு அமைதியான முகம் இருந்தது. என்னைப் பார்த்துக் கொண்டே எதிர் திசையிலிருந்து நடந்து வருவதை எனது கண்களின் கடையோரங்களில் அவரைப் பார்க்கும் வரை நான் அதைப் பற்றி ஒன்றும் நினைக்கவில்லை. எனவே நான் கேட்டேன், “எப்படி இருக்கிறீர்கள்?” அவர் சொன்னார், “நீங்கள் மட்டும் உங்கள் தலைமுடிக்கு டை அடித்தீர்களென்றால் நீங்கள் அல் கோர் போன்றே தோற்றமளிப்பீர்கள்.” (சிரிப்பு).
பல ஆண்டுகளுக்கு முன்பாக, நான் ஒரு இளம் பேச்சாளராக இருக்கும் போது, அணுஆயுத கட்டுப்பாட்டின் சவால்களோடு போராடுவதில் கடுமையான அளவிற்கு அதிக நேரத்தைச் செலவிட்டேன் -- அணுஆயுதப் போட்டி. அந்தக் கலந்துரையாடலின் போது இராணுவ வரலாற்று ஆசிரியர்கள் இராணுவச் சண்டைகளானது மூன்று வகைகளில் வகைப்படுத்தப்படுவதாக எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். உள்ளூர் சண்டைகள், பிராந்திய அல்லது பகுதிசார்ந்த போர்கள், மற்றும் அரிதாக ஆனால் அனைத்து-முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய, உலகப் போர். வியூகச் சண்டைகள். அனைத்து ஒவ்வொரு நிலையிலான சட்டைகளுக்கும் வித்தியாசமான வளங்களின் ஒதுக்கீடுகள் வெவ்வேறு அணுகுமுறைகளில், வித்தியாசமான ஸ்தாபனரீதியான மாதிரியில் அவசியமாகிறது. சுற்றுச்சூழல் சார்ந்த சவால்களும் அதே போன்ற மூன்று வகைகளுக்குள் விழுகின்றன, நான் நினைப்பவைகளில் பெரும்பாலானவை உள்ளூர் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள்: காற்று மாசுபடுதல், நீர் மாசுபடுதல், தீங்குவிழைவிக்கும் கழிவுக் குவியல்கள். ஆனால் மத்தியமேற்கிலிருந்து வடகிழக்கு வரையில், மேற்கு ஈரோப்பிலிருந்து ஆர்க்டிக் வரையில், மத்திய மேற்கிலிருந்து மிஸ்சிசிப்பிக்கு வெளியே மெக்ஸிக்கோ வளைகுடாவின் மரணப் பிராந்தியம் வரைக்குள்ளாக பெய்யும் அமில மழை போன்ற பிராந்திய அளவிலான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளும் உள்ளன. மேலும் அதைப் போன்ற நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் காலநிலைப் பிரச்சினை என்பது ஒரு அரிதான ஆனால் அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய, அல்லது வியூக ரீதியான, ஒரு சச்சரவு. எல்லாமே பாதிக்கப்படுகிறது. மேலும் நாம் நமது பதிலை உரியமுறையில் ஒழுங்கபடுத்த வேண்டியுள்ளது. மரபுசாரா ஆற்றல், பாதுகாப்பு, திறம்பாடு மற்றும் குறைந்த – கார்பன் பொருளாதாரத்திற்கான உலகளாவிய மாற்றம் ஆகியவற்றிற்கு நமக்கு ஒரு உலக முழுவதிலுமான, உலகளாவிய இயக்கம் தேவைப்படுகிறது. நாம் செய்வதற்கான வேலையுள்ளது. மேலும் நாம் வளங்களையும் அரசியல் நோக்கங்களையும் திரட்ட முடியும். ஆனால் வளங்களை திரட்ட வேண்டுமென்றால் அந்த அரசியல் விருப்பமானது திரட்டப்பட வேண்டும்.
இந்த ஸ்லைடுகளை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன். நாம் இந்த முத்திரையோடு ஆரம்பிக்கலாம் என்பதாக நான் நினைத்தேன். இங்கு எது காணாமல் போயிருக்கிறது, ஆம் உண்மையிலேயே, அது அந்த வடக்கு தூந்திர பனிக் முகடுதான். கிரீன்லாந்து அப்படியே இருக்கிறது. 28 ஆண்டுகளுக்கு முன்பாக, இது தான் அந்த தூர்ந்திரப் பனி முகடு-- வடக்குத் தூந்திர பனி முகடு– கோடைகாலத்தின் இறுதியில் இரவுபகல் சமமாக இருக்கும் காலநிலையில் காணப்படுகிறது. இந்தக் கடைசி பனிப்பொழிவில், நான் கொலராடோ, போல்டீரில் உள்ள பனிமூட்டம் மற்றும் பனிக்கட்டித் தரவு மையத்திற்குச் சென்றேன், மேலும் இங்கே கடற்படை முதுகலை ஆய்வுக்கூடத்தில் மோண்டேரியிலுள்ள ஆராய்சியாளர்களோடு பேசினேன். கடந்த 28 ஆண்டுகளின் என்ன நடந்திருக்கிறதோ அது தான் இது. அதை உணரக்கூடிய வகையில் கொணர்வதற்கு, 2005 தான் முந்தைய பதிவு. ஆராய்ச்சியாளர்களை உறையச் செய்கிற வகையில், கடந்த பனிப்பொழிவின் போது என்ன நடந்ததோ அது தான் இது புவியியல் சார்ந்து வடக்குத் தூந்திரப் பனி முகடானது அதேயளவில் உள்ளது. கொஞ்சம் அதேயளவாகக் காணப்படவில்லை, ஆனால் தோராயமாக அரிசோனா மாநிலத்திற்குச் சமமான பகுதி நீங்கலான ஐக்கிய நாடுகளைப் போன்ற மிகச்சரியாக அதேயளவு. 2005-ல் காணாமற் போன அளவானது மிஸ்சிசிப்பிக்குக் கிழக்கேயுள்ள அனைத்திற்கும் சமமானது. கடந்த பனிப்பொழிவின் போது காணப்பட்ட கூடுதல் அளவானது இந்தளவிற்குச் சமமானது. அது குளிர்காலத்தில் திரும்பவும் வந்துவிடுகிறது, ஆனால் நிரந்தரமான பனிக்கட்டியாக அல்ல: ஒரு மெலிதான பனிக்கட்டியாக. பாதிக்கப்படக்கூடியது: ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகவே கோடைகாலத்தில் மீதமுள்ள அளவும் முழுமையாக போய்விடக்கூடும். அது கிரீன்லாந்தின் மீது அதிகப்படியான அழுத்தத்தை வைக்கிறது. ஏற்கெனவே, ஆர்க்டிக் வளையத்தைச் சுற்றி -- அலாஸ்காவில் இது ஒரு பிரபலமான கிராமம். நியூபவுண்ட்லான்ந்தில் இது ஒரு நகரம். அண்டார்டிக்கா. நாசாவிலிருந்தான சமீபத்திய ஆய்வுகள். கலிஃபோன்ரியாவிற்குச் சமமான பகுதியின் நடுத்தரத்திலிருந்து- கடுமையான பனி உருகுவதின் அளவு.
“அவைகள் தான் காலங்களில் சிறந்தவை, அவைகள் தான் காலங்களில் மோசமானவை”: ஆங்கில இலக்கியத்தில் மிகவும் பிரசித்தமான முகப்பு வாக்கியம். நான் “இரண்டு கோள்களின் கதை”-யை சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பூமியும் சுக்கிரனும் மிகச் சரியாக ஒரே அளவுள்ளவை. பூமியின் விட்டமானது சுமார் 400 கிலோமீட்டர்கள் பெரியது, இருந்தும் போதுமான அளவிற்குச் சமமானதுதான். அவைகள் மிகச்சரியான அளவிற்கான கார்பனைக் கொண்டுள்ளன. ஆனால் வித்தியாசமென்னவின்றால், பூமியில், காலப்போக்கில் பெரும்பாலான கார்பனானது வளிமண்டலத்திலிருந்து இழுக்கப்பட்டு, பூமியில் நிலக்கரி, எண்ணை, இயற்கை எரிவாயு, இன்னும் பலவாக படிமானமாக்கப்பட்டுவிட்டது. சுக்கிரனில், அதன் பெரும்பாலானவை இன்னும் வளி மண்டலத்திலேயே உள்ளது. வித்தியாசமென்னவென்றால் நமது வெப்பநிலையானது சராசரியாக 59 டிகிரிகள். சுக்கிரனில், அது 855. இது பூமியிலிருந்து முடிந்த அளவிற்கான கார்பனை எடுத்து கூடிய விரைவில் அதை வளிமண்டலத்திற்குள் விடுவது என்ற நமது தற்போதைய வியூகத்திற்குச் சார்புடையது. அது சுக்கிரன் கொஞ்சம் சூரியனுக்கு அருகாமையில் இருப்பதினால் அல்ல. சூரியனுக்கு அடுத்துள்ள புதன் கிரகத்தை விட மூன்று மடங்குகள் வெப்பமானது. இப்போது சுருக்கமாக, நீங்கள் பார்த்திருக்கிற பழமையான படங்களில் ஒன்றே ஒன்றான ஒரு படம் இங்குள்ளது, ஆனால் உங்களுக்குச் சுருக்கமாக சிஎஸ்ஐ-யைக் கொடுக்க விரும்புவதால் தான் இதை நான் காண்பிக்கிறேன்:
காலநிலை. உலக அறிவியற்பூர்வ சமுதாயம் சொல்கிறது, வளிமண்டலத்தில் போடப்பட்ட, மனிதனால் உண்டாக்கப்பட்ட உலக வெப்பமயமாக்கல் மாசு, இதைத் தடிக்கச் செய்து, வெளிச்செல்கிற பெரும்பாலான அகச்சிவப்புக் கதிர்களைப் பிடித்துக் கொள்கிறது. அது உங்களனைவருக்கும் தெரியும். கடந்த ஐபிசிசி கூட்டத்தில், அறிவியலார்கள் சொல்ல விரும்பினது, “நீங்கள் எந்தளவிற்கு உறுதியானவர்கள்?” அவர்கள் பதிலளிக்க விரும்பினது “99 சதவீதம்.” சீனர்கள் எதிர்த்ததினால் அந்த சமரசமானது “90 சதவீதத்திற்கும் அதிகமாக.” இப்போது மறுத்துப் பேசுபவர்கள் சொல்கிறார்கள், “கொஞ்சம் பொருங்கள், அது மாற்றங்களினால் – சூரியனிடமிருந்து வருகிற சக்தியிலான மாற்றங்களினால் இருக்கமுடியும்”. அது உண்மையாக இருந்தால், வளிமண்டலக் கீழடுக்கைப் போன்றே அதன் மேலடுக்கும் சூடாக்கப்பட வேண்டும், அது அதிகம் உள்ளே வருகிறதென்றால். வெளிச்செல்கிற வழியில் அது பிடிக்கப்படுமானால், பின் அது இங்கே சூடாகவும் இங்கே குளிராகவும் இருப்பதற்கு நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். இங்குதான் குறைந்த வளிமண்டலம் உள்ளது. இங்குதான் மேல் வளிமண்டலம்: குளிர்ச்சியான. சிஎஸ்ஐ: காலநிலை.
இப்போது, இது தான் நல்ல செய்தி. 68% அமெரிக்கர்கள் தற்போது மனித செயல்பாடு தான் உலக வெப்பமயமாக்கலுக்குப் பொறுப்பு என நம்புகிறார்கள். 69 சதவீதத்தினர் பூமியானது ஒரு குறிப்பிடத்தக்க வழியில் வெப்பமாகிக் கொண்டிருக்கிறது என நம்புகிறார்கள். முன்னேற்றம் இருந்து கொண்டுதானிருக்கிறது, ஆனால் சாவி இங்குதான் உள்ளது: எதிர்த்துப் போராடுவதற்கான சவால்களை ஒரு பட்டியலாகக் கொடுத்தபோது, உலக வெப்பமயமாக்கலானது இன்னமும் அடியிலேயே வரிசையிடப்பட்டது. எது காணப்படவில்லையென்றால் ஒரு அவசர உணர்வுதான். உண்மை சார்ந்த பகுப்பாய்வை நீங்கள் ஏற்றுக் கொண்டு, ஒரு அவசரத்தின் உணர்வை நீங்கள் உணரவில்லையானால், அது உங்களை எங்கு கொண்டுபோய் விடும்? நல்லது, கரண்ட் டிவி-யோடு கூட்டாக நான் தலைமை வகித்த காலநிலைப் பாதுகாப்பிற்கான கூட்டமைப்பு -- இந்த உதாரத்துவத்தைச் செய்தது, இதை எப்படி பரப்புவது என்பதின் மீதான விளம்பரங்களை செய்வதற்கு உலகளாவிய ஒரு போட்டியை நடத்தியது. இது அந்த வெற்றியாளர்.
என்பிசி -- அனைத்து நெட்வொர்க்குகளையும் நான் இங்கு காண்பிப்பேன் -- என்பிசி-க்கான முதல்நிலை பத்திரிக்கையாளர் ஜனாதிபதி வேட்பாளர்களின் 2007-ல் 956 கேள்விகளை கேட்டார்: அவைகளில் இரண்டு தான் காலைநிலைப் பிரச்சினை பற்றியது. ஏபிசி: 844 கேள்விகள், இரண்டு தான் காலைநிலைப் பிரச்சினை பற்றியது. ஃபாக்ஸ்: இரண்டு. சிஎன்என்: இரண்டு. சிபிஎஸ்: பூஜ்ஜியம். சிரிப்பிலிருந்து கண்ணீருக்கு. பழமையான புகையிலை விளம்பரங்களில் ஒன்று இது. எனவே நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது இங்குள்ளது. இது இத்தகைய அனைத்து நாடுகளிலுமான பெட்ரோல் நுகர்வு. இது நாம். ஆனால் அது வளர்ந்த நாடுகள் மட்டும் தான் என்றில்லை. வளரும் நாடுகளும் நம்மைப் பின்பற்றி அவர்களது வேகத்தைக் கூட்டியிருக்கிறார்கள். மேலும் உண்மையாகவே, இந்த ஆண்டிற்கான அவர்கள் அனைவரின் ஒட்டு மொத்த உமிழ்வானது நாம் 1965-ல் எங்கிருந்தோமோ அதற்குச் சமமானது. மேலும் அவர்கள் மிகவும் வேகமாக பிடித்துக்கொண்டு வருகிறார்கள். மொத்த உற்று நோக்கங்கள்: 2025 வாக்கில், நாம் 1985 எங்கிருந்தோமோ அங்கு அவசியமான அளவிற்கு அவர்கள் வந்துவிடுவார்கள். இந்தக் காட்சியிலிருந்து பணக்கார நாடுகள் முற்றிலுமாக காணாமற் போனாலும் கூட, நாம் இன்னமும் பிரச்சினையைக் கொண்டிருப்போம். ஆனால் நாம் வளரும் நாடுகளுக்கு இந்தப் பிரச்சினையை உருவாக்கும் தொழிற்நுட்பத்தையும் அதைப் பற்றி யோசிக்கும் வழிகளையும் கொடுத்திருக்கிறோம். இது தான் பொலிவியா. முப்பது -- முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக.
இது தான் சில நொடிகளிலான உச்சகட்ட சாராம்சம். 60-கள். 70-கள். 80-கள். 90-கள். நாம் இதை நிறுத்த வேண்டியுள்ளது. மேலும் நல்ல செய்தி என்னவென்றால் அது நம்மால் முடியும் என்பதே. நம்மிடம் அந்தத் தொழிற்நுட்பம் உள்ளது. இதைக் குறித்து நாம் எப்படிச் செல்ல வேண்டும் என்பதின் ஒரு ஒன்றாக்கப்பட்ட பார்வையை நாம் கொண்டிருக்க் வேண்டும்: உலகிலுள்ள வறுமைக்கு எதிரான போராட்டம் மற்றும் பணக்கார நாடுகளின் உமிழ்வுகளைக் குறைப்பதின் சவால் ஆகியவை அனைத்தும், ஒரு ஒற்றை, மிக எளிதான தீர்வைக் கொண்டுள்ளன.
மக்கள் கேட்கிறார்கள், “அந்தத் தீர்வு என்ன?” இது தான் அது. கார்பன் மீது விலை வையுங்கள். நமக்கு பிஸ்மார்க்-ஆல் கண்டுபிடிக்கப்பட்ட -- வேலைவாய்ப்பின் மீதான வரிவிதிப்பை இடமாற்றுவதற்கு --வருமான-நடுநிலை -- ஒரு CO2 வரி தேவை, மேலும் 19-ம் நூற்றாண்டிலிருந்து சில விஷயங்கள் மாறியிருக்கின்றன. ஏழை நாடுகளில், நாம் வறுமைக்கான பதிலளிப்புகளை காலநிலை பிரச்சினைக்கான தீர்வுகளோடு ஒன்றிணைக்க வேண்டியுள்ளது. நாம் காலநிலைப் பிரச்சினையைத் தீர்க்கவில்லையானால் உகாண்டாவில் வறுமையை எதிர்த்து போராடுவதற்கான திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன.
ஆனால் ஏழைநாடுகளில் பதிலளிப்புகள் உண்மையிலேயே மிகப் பெரிய வித்தியாசங்களை உண்டாக்க முடியும். இது மிக ஒரு முன்வைப்புதான். அதைப் பற்றி ஈரோப்பில் நிறையவே பேசியாகிவிட்டது. இது நேச்சர் பத்திரிக்கையிலிருந்தானது. இவைகள் ஒருமுகப்படுத்தும் சூரிய மரபுசாரா-ஆற்றல் உற்பத்தி மையங்கள், சூப்பர் கிரிடு எனப்படுகிற ஈரோப்பின் அனைத்து மின் சக்தி தேவைக்கும் வழங்கும் அமைப்பில் இணைக்கப்பட்டது, இவைகள் பெருவாரியாக வளரும் நாடுகளிலிருந்து. உயர்-மின்னழுத்த டிசி மின்சாரங்கள்.
இது “வானத்திலுள்ள துண்டு” அல்ல, இது செய்யப்பட முடியும். நமது சொந்தப் பொருளாதாரத்திற்காக நான் செய்ய வேண்டியுள்ளது. பழைய மாதிரிகள் வேலைசெய்வதில்லை என்பதை புதிய புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன. நீங்கள் செய்யக்கூடிய பெரிய முதலீடுகள் நிறையவே உள்ளன. நீங்கள் தார் மணல்களிலோ அல்லது ஷேல் எண்ணைகளிலோ நீங்கள் முதலீடு செய்தால், அப்புறம் நீங்கள் துணை-முக்கிய கார்பன் சொத்துக்களோடு சரியக்கூடிய ஒரு போர்ட்போலியோவைக் கொண்டிருப்பீர்கள். மேலும் அது ஒரு பழைய மாதிரியின் அடிப்படையிலானது. ஜங்கிகள் தங்கள் கைகள் மற்றும் கால்களிலுள்ள இரத்தக் குழாய்கள் அழிந்துபோனவுடன் அவர்களின் பாதங்களில் இரத்தக் குழாய்கள் இருப்பதைக் காண்கிறார்கள். தார் மணல்களையும் நிலக்கரி ஷேலையும் உருவாக்குவது தான் அந்த சமநிலை. நான் பொருளுள்ளதாக இருக்குமென சொந்தமாக நினைத்த மூலதங்களில் சில இங்குள்ளன. நான் இவைகளில் கொஞ்சம் பங்கு கொண்டுள்ளேன், எனவே நான் அங்கு ஒரு பொறுப்பு அறிவிப்பையும் கொண்டிருப்பேன். ஆனால் புவிவெப்பம் சார்ந்த, சூரியசக்தியில் கவனம் செலுத்துகிற, நவீன ஒளிமின்சாரங்கள், திறம்பாடு மற்றும் பேணிப் பாதுகாத்தல்.
நீங்கள் இந்த ஸ்லைடை முன்னமே பார்த்திருக்கிறீர்கள், ஆனால் ஒரு மாற்றமுள்ளது. ஆதரிப்பு கொடுக்காத இரண்டே நாடுகள் -- தற்போது ஒன்றே ஒன்றுதான். ஆஸ்திரேலியாவில் ஒரு தேர்தல் இருந்தது. மேலும் அங்கிருக்கும் மக்களுக்கான அவசரத்தின் உணர்வில் அதிகரிப்பை மேலும் அங்கிருக்கும் மக்களுக்கான அவசரத்தின் உணர்வில் அதிகரிப்பை ஈடுபடுத்திய ஒரு தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் வானொலி விளம்பரம் கொண்ட பிரச்சாரம் ஆஸ்திரேலியாவில் இருந்தது. மேலும் ஆஸ்திரேலியாவிலுள்ள ஒவ்வொரு நகரம் கிராமம் மற்றும் பெருநகரங்களில் இந்த ஸ்லைடு ஷோவைக் கொடுக்கச் சொல்லி நாங்கள் 250 பேர்களுக்குப் பயிற்சியளித்தோம். அதற்கு அனேகக் காரியங்கள் பங்களித்தன, ஆனால் அந்தப் புதிய பிரதம மந்திரி அவரது முதல் முன்னுரிமையானது கியோட்டோவின் மீது ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை மாற்றுவதே என்று அறிவித்தார், அதையும் செய்து முடிதார். இப்போது, அவர்கள் கொண்டிருந்த படுபயங்கர வறட்சியின் காரணமாக பாதியளவிற்கான ஒரு விளிப்புணர்விற்கு அவர்கள் வந்தார்கள். இது தான் லேனியர் ஏரி. எனது நண்பர் ஹெய்டி கல்லின்ஸ் சொன்னார் சூறாவளிகளுக்கு நாம் பெயரிடுவது போல வறட்சிகளுக்கும் நாம் பெயர் கொடுத்திருந்தோமானால், இப்போது தென்கிழக்கில் இருக்கும் ஒன்றை காத்தரினா என்று அழைத்திருப்போம், மேலும் அது அட்லாண்டாவை நோக்கிப் போய்கொண்டிருக்கிறது என்றும் சொல்லுவோம் நமது அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கு ஆஸ்திரேலியா கொண்டிருந்த வறட்சி போன்ற ஒன்றிற்காக நாம் காத்திருக்க முடியாது. அதிகமான நல்ல செய்திகளும் இங்குள்ளன. யூஎஸ்-சில் கியோட்டோவை ஆதரிக்கும் நகரங்கள் 780 வரையுள்ளன -- இதைப் புரிந்து கொள்வதற்காக நேராகச் சென்று ஒன்றைப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.
அது நல்ல செய்தி தான். நிறைவுசெய்வதற்கு, தனிப்பட்ட வீராவேசத்தை ஒரு அனுசரிப்பாகவோ அல்லது வழக்காகவோ மாறும் வகையில் அதை எங்கும் உருவாக்குவதைக் குறித்து ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பாக நாங்கள் கேள்விப்பட்டோம். நமக்கு என்ன தேவையென்றால் மற்றொரு வீரச் சந்ததி. குறிப்பாக இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உயிரோடிருக்கிற நாம், ஆனால் மீதமுள்ள உலகனைத்திலும், வரலாறானது நமக்கு ஒரு வாய்ப்பை அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறது என்பதை நாம் எப்படியாகிலும் புரிந்து கொண்டிருக்கிறோம் – எப்படியாக ஜில் போல்ட் டெய்லர் அவர் ஊடாகச் சென்று கொண்டிருந்த வியத்தகு அனுபவத்தினால் பாதைமாறிச் செல்கையில் அவரது உயிரை எப்படியாகக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைக் கான்பித்ததைப் போல. பாதைமாறிச் செல்வதின் ஒரு கலாச்சாரத்தை நாம் இப்போது கொண்டுள்ளோம். ஆனால் நமக்கு ஒரு கோள் சார்ந்த அவசரம் உள்ளது. மேலும் இன்று உயிரோடிருக்கிற சந்ததியில், ஒரு சந்ததி சார்ந்த சேவையின் உணர்வை உருவாக்குவதற்கு நாம் ஒரு வழியைக் காண வேண்டியுள்ளது. இதை தெரிவிப்பதற்கான வார்த்தைகளை நான் கண்டுகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தக் கிரகத்திற்கு ஜனநாயகத்தைக் கொண்டுவந்த மற்றொரு வீராவேசச் சந்ததி இது. அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மற்றொன்று. பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. நாம் இதைச் செய்ய முடியும். அதைச் செய்வதற்கான சக்தி நமக்கில்லை என்று சொல்லாதீர்கள். ஈராக் போரில் நாம் செலவு செய்ததில் ஒரு வாரத்திற்குரியது மட்டும் இருந்தால் போதும், நாம் இந்தச் சவாலை தீர்ப்பதுற்குரிய வழிகளுக்குள் வந்திருக்க முடியும். அதைச் செய்வதற்கான ஆற்றல் நம்மிடமுள்ளது.
ஒரு கடைசி குறிப்பு. நான் நேர்மறைச் சிந்தனையுள்ளவன் ஏனென்றால், மிகப்பெரிய சவால்களின் நேரத்திலும், வழிவிலகிப்போவதின் காரணங்களைப் புறம்பே தள்ளுவதற்கும் வரலாறு நமக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிற சவால்களுக்கு எதிர்த்து நிற்கவுமான அந்த ஆற்றல் நாமக்கு உள்ளதென்று நான் நம்புகிறேன். சில நேரங்களில் “ஓ இது படுபயங்கரம், நமக்கு எவ்வளவு பெரிய சுமையுள்ளது” என்பதாகச் சொல்லி, காலநிலைப் பிரச்சினைகளின் சஞ்சலப்படுத்துகிற உண்மைகளுக்கு மக்கள் பதிலளிப்பதை நான் கேள்விப்படுகிறேன். நீங்கள் அதை மறுபடியும் உங்கள் மனதில் கொண்டுவர நான் விரும்புகிறேன். மனித வரலாறு அனைத்திலும் எத்தனை சந்ததிகளுக்கு நமது மிகச் சிறந்த முயற்சிகளுக்கு மதிப்புள்ள சவாலுக்கு எதிர்த்து நிற்கும் வாய்ப்பு இருந்தது? நம்மால் செய்யமுடியும் என்று நாம் அறிந்திருக்கிறதை விட அதிகமாக நம்மிடமிருந்து இழுத்துக்கொள்ளும் ஒரு சவால்? இப்போதிருந்து ஆயிரம் ஆண்டுகளில், திறமையான இசைக்கலைஞர்களும், புலவர்களும் பாடகர்களும், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர்களுக்குள்ளாகவே தீர்வைக் கண்டுகொண்டு, ஒரு பிரகாசமான மற்றும் நேர்மறைச் சிந்தனையுள்ள மனித எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்த சந்ததி இவர்கள்தான் என்று நம்மைப் பற்றி கொண்டாடுவார்கள் என்ற ஒரு உச்சிதமான சந்தோஷ மனநிலையோடும் நன்றியுணர்வோடும் நாம் இந்தச் சவாலை அணுகவேண்டுமென்று நான் நினைக்கிறேன்.
நாம் அதைச் செய்வோம். உங்களுக்கு மிகவும் நன்றி.
கிரிஸ் ஆண்டர்ஸன்: டிஈடி-யிலுள்ள அநேக மக்களுக்கு, ஒரு ஆழமான வலியுள்ளது அடிப்படையாக ஒரு வடிவமைப்புப் பிரச்சினை -- நாளின் முடிவில், வாக்குப் படிவத்தின் மீதான வடிவமைப்புப் பிரச்சினை – ஒரு மோசமான வடிவமைப்பு பிரச்சினை சொன்னது உங்கள் குரலானது நீங்கள் இந்தக் காரியங்களை நடைமுறைக்குக் கொண்டுவரும் நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளில் இருந்ததைப் போன்று கேட்கப்படுவதில்லை என்பதே. அது வேதனைப்படுத்துகிறது.
அல் கோர்: உங்களுக்கு ஒன்றும் தெரியாது. (சிரிப்பு).
சிஏ: உங்கள் சொந்தக் கட்சியிலுள்ள முன்னணி வேட்பாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கும் போது – நான் சொல்வது, அங்கு -- உலக வெப்பமாதலின் மீதான அவர்களின் திட்டங்களினால் நீங்கள் ஆச்சரியப்பட்டீர்களா?
ஏஜி: இந்தக் கேள்விக்கான பதிலானது எனக்கு மிகவும் சிரமமானது ஏனென்றால், ஒரு பக்கம், உண்மையிலேயே குடியரசுக்கட்சி வேட்பாளர் – நிச்சையமான வேட்பாளர் – ஜான் மெக்கெயினும், ஜனநாயகக் கட்சி நியமனத்திற்கான இரண்டு இறுதியாளர்கள் -- அனைத்து மூவரும் காலநிலை பிரச்சினையின் மீது முற்றிலும் வித்தியாசமான மற்றும் முற்போக்கான நிலைகளைக் கொண்டுள்ளார்கள் என்பதைக் குறித்து நாம் உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். அனைத்து மூவரும் தலைமைத்துவத்தைக் கொடுத்திருக்கிறார்கள், மற்றும் அனைத்து மூவருமே தற்போதைய நிர்வாகம் எடுத்திருக்கிற அணுகுமுறையிலிருந்து மிகவும் வித்தியாசமானவர்கள். மேலும் திட்டங்களையும் முன்வடிவுகளையும் முன்னிறுத்துவதில் அனைத்து மூவரும் பொறுப்புள்ளவர்களாயிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அந்த பிரச்சார உரையாடல் -- கேள்விகளால் தெளிவாக்கப்பட்ட படி -- பழமைவாதியான வாக்காளர்களின் முன்னணியால் ஒன்றாக இணைத்து வைக்கப்பட்டது, அப்படியாக, அனைத்துக் கேள்விகளின் பகுப்பாய்வு – அப்படியாக, அந்த விவாதங்கள் அனைத்தும் ஓர்வெல்லியன் லேபிள், “தூய நிலக்கரி” என்பதோடு செல்லும் ஒன்றால் ஆதரிக்கப்பட்டது. யாராவது அதைக் கவனித்தார்களா? ஒவ்வொரு ஒற்றை விவாதமும் “தூய நிலக்கரி”-யால் ஆதரிக்கப்பட்டு வந்தது. “இப்போது, இன்னும் குறைவான உமிழ்வுகள்!”
நமது ஜனநாயகத்திலுள்ள பேச்சுவார்த்தையின் வளமும் முழுமையும் உண்மையிலேயே தேவைப்படுகிற ஒருவகை தைரியமான முன்முயற்சிக்கான அடிப்படையை அமைத்திருக்கவில்லை. எனவே அவர்கள் சரியான காரியங்களை சொல்கிறார்கள் மேலும் அவர்கள் – அவர்களில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் – சரியான காரியத்தைச் செய்யலாம், ஆனாலும் நான் சொல்கிறேன்: நான் அங்கு வெற்றியைப் பெற்றுவிட்டோம் என்ற மிகுந்த சந்தோஷத்தோடு கியோட்டோவிலிருந்து 1997-ல் திரும்பி வந்தபோது, அதன் பின் ஐக்கிய நாடுகளின் செனேட்டோடு சச்சரவு செய்தோம், அந்த மசோதாவை ஏற்றுக் கொள்வதற்கு, 100-ல் ஒரு செனேட்டர் மட்டுமே உறுதி செய்வதற்கு வாக்களிக்க் விருப்பமுள்ளவராயிருந்தால். வேட்பாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதை மக்கள் என்னசொல்கிறார்களோ
அதன் ஓரத்தில் போடவேண்டியுள்ளது. இந்த சவாலானது நமது முழு நாகரீகத்தின் நெசவின் ஒரு பகுதியேயாகும். வெளிப்படையாகச் சொல்வோமானால், CO2 என்பது நமது நாகரிகத்தின் வெளிவிடும் சுவாசம் தான். மேலும் இப்போது நாம் அந்த நடைமுறையை எந்திரமாக்கி இருக்கிறோம். அந்த நடைமுறையை மாற்றுவதற்கு ஒரு திட எண்ணம் தேவைப்படுகிறது, ஒரு அளவீடு, நாம் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கிறோமோ அதைவிட அதிகமான மாற்றத்தின் ஒரு வேகம். அதனால் தான் நீங்கள் செய்வதில் நேர்மறை சிந்தனையுள்ளவர்களாக இருங்கள் என்று சொல்லி நான் ஆரம்பித்தேன், ஆனால் ஒரு செயலுள்ள குடிமக்களாக இருங்கள், கோரிக்கை எழுப்புங்கள் – மின்சார பல்புகளை மாற்றுங்கள், அதேநேரம் சட்டங்களையும் மாற்றுங்கள். உலக மசோதாக்களை மாற்றுங்கள். நாம் பேச வேண்டியுள்ளது. நாம் இந்த ஜனநாயகத்தைத் தீர்க்க வேண்டியுள்ளது – இந்த – நமது ஜனநாயகத்தில் ஸ்க்ளீரோசிஸ் நோயுள்ளது. மேலும் நாம் அதை மாற்ற வேண்டியுள்ளது. இணையத்தை உபயோகியுங்கள். இணையம் வழியே செல்லுங்கள். மக்களோடு இணையுங்கள். குடிமக்களாக மிகவும் செயலுள்ளவர்களாக மாறுங்கள். ஒரு தடைகாலத்தைக் கொண்டிருங்கள் – CO2-வை பிடித்து சேமித்து வைக்க இயலாத எந்த நிலக்கரி நெருப்பு உண்டாக்கும் தொழிற்சாலைகளையும் நாம் கொண்டிருக்கக் கூடாது. அதன் அர்த்தமென்னவென்றால் நாம் இத்தகைய மரபுசாரா வளங்களை நாம் விரைவாக கட்டிமுடிக்க வேண்டும். இப்போது, யாருமே அந்த அளவீட்டில் பேசிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் இப்போதிருந்து நவம்பருக்குள் அது சாத்தியம் என்று நான் நம்புகிறேன். காலநிலைப் பாதுகாப்பிற்கான இந்தக் கூட்டணி ஒரு தேசீய அளவிலான பிரச்சாரத்தைத் துவக்கப் போகிறது – அடிமட்ட ஆதரவு திரட்டல், தொலைக்காட்சி விளம்பரங்கள், இணைய விளம்பரங்கள், வானொலி, செய்தித்தாள் – பெண்குழந்தைகளின் ஸ்கவுட்ஸிலிருந்து வேட்டைக்காரர்கள் மற்றும் மீனவர்கள் வரை ஓவ்வொருவரின் கூட்டோடும். நமக்கு உதவி தேவைப்படுகிறது.
சிஏ: உங்கள் தனிப்பட்ட பங்கானது முன்னேறிச் செல்லும் வகையில், அல், நீங்கள் இன்னும் அதிகமாக செய்ய விரும்புகிற வகையில் ஏதேனும் உள்ளதா?
ஏஜி: அந்தக் கேள்விக்கான பதிலை நான் பெற்றுக் கொள்ள இயல வேண்டும் என்பதற்கான நான் ஜெபித்திருக்கிறேன். நான் என்ன செய்யமுடியும்? பக்மின்ஸ்டர் புல்லர் ஒரு முறை எழுதினார், “அனைத்து மனித நாகரீகத்தின் எதிர்காலமே என்னைச் சார்ந்திருந்தால், நான் என்ன செய்வேன்? நான் எப்படியாக இருப்பேன்?" அது நம்மேல் தான் சார்ந்திருக்கிறது, ஆனால் மறுபடியும், மின்சார பல்புகளோடு மட்டுமல்ல. நான், இங்கிருக்கிற பெரும்பாலானோர், அமெரிக்கர்கள். நாம்மிடம் ஜனநாயகம் உள்ளது. நாம் காரியங்களை மாற்றியிருக்கிறோம், ஆனால் நாம் சுறுசுறுப்பாக மாற்ற வேண்டும். உண்மையிலேயே எது தேவைப்படுகிறதென்றால் ஒரு உயர்ந்த அளவிலான மனசாட்சிதான். மேலும் அது கடினமானதும் கூட – அதை உருவாக்குவதற்குக் கடினமானது தான் – ஆனால் அதுவந்து கொண்டிருக்கிறது. ஒரு பழைய ஆப்ரிக்க பழமொழியுள்ளது உங்கள் சிலருக்குக் கூடத் தெரியும், அது சொல்கிறது, “நீங்கள் விரைவாகச் செல்ல விரும்புகிறீர்களானால் தனியாகச் செல்லுங்கள், நீங்கள் தொலைதூரம் செல்ல விரும்புகிறீர்களானால், சேர்ந்து செல்லுங்கள்.” நாம் தொலைதூரம் வேகமாகப் போக வேண்டியுள்ளது. எனவே நமது மனசாட்சியில் ஒரு மாற்றத்தைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. அற்பணிப்பில் ஒரு மாற்றம். ஒரு புதிய அவசர உணர்வு. இந்த சவாலை நாம் கையிலெடுத்திருக்கிறோம் என்ற அனுகூலத்திற்கான புதிய நன்றியுணர்வு.
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
இந்தப் புத்தம் புதிய ஸ்லைடு ஷோவில் (டிஈடி.காமில் முதன்மையானது), காலநிலை மாற்றத்தின் வேகமானது விஞ்ஞானிகள் சமீபத்தில் முன்னறிவித்ததை விட மோசமானதாக இருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரங்களை அல் கோர் அவர்கள் சமர்பிக்கிறார்கள்.
Once the US Vice President, then star of An Inconvenient Truth, now Nobel Peace Prize winner, Al Gore found a way to focus the world's attention on climate change. In doing so, he has invented a new medium -- the Keynote movie -- and reinvented himself. Full bio »
17:52 Posted: May 2007
Views 342,289 | Comments 150
15:58 Posted: Nov 2007
Views 527,476 | Comments 235
17:34 Posted: Apr 2007
Views 537,733 | Comments 94
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.